தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 8

செப்டம்பர் 7, 2022

தேவனுடைய வழியில் நடந்து செல்ல வேண்டும்: தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்க்க வேண்டும்

நீங்கள் கவனிக்க வேண்டிய பழமொழி ஒன்று உள்ளது. இந்தப் பழமொழி மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரையில், அது ஒவ்வொரு நாளும் எண்ணற்ற முறை நினைவுக்கு வருகிறது. ஏன் வருகிறது? ஏனென்றால், ஒவ்வொரு முறையும் நான் ஒருவரைப் பார்க்கிறேன், ஒவ்வொரு முறையும் ஒருவரின் கதையை நான் கேட்கிறேன், ஒவ்வொரு முறையும் ஒரு மனிதனுடைய அனுபவம் அல்லது தேவனை நம்புவதற்கான சாட்சிகளைக் கேட்கும்போது, தேவன் விரும்பும் மனிதனின் வகையில் மற்றும் தேவன் நேசிக்கும் மனிதனுடைய வகையில் இந்த மனிதன் இருக்கிறானா என்பதை என் இருதயத்தில் தீர்மானிக்க நான் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகிறேன். இந்நிலையில்: அது எத்தகைய சொற்றொடர்? நான் இப்போது உங்கள் அனைவரையும் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய மிகவும் ஆர்வப்படுத்தியிருக்கிறேன். நான் இந்த வார்த்தையை வெளிப்படுத்தும்போது, ஒருவேளை நீங்கள் ஏமாற்றமடைவீர்கள், ஏனென்றால், பல ஆண்டுகளாக உதட்டளவிலான ஊழியக்காரர்கள் சிலர் உள்ளனர். எவ்வாறாயினும், நான் ஒருபோதும் உதட்டளவில் ஊழியம் செய்யவில்லை. இந்தச் சொற்றொடர் என் இருதயத்தில் ஜீவிக்கிறது. எனவே, எத்தகைய சொற்றொடர் அது? அது: "தேவனுடைய வழியில் நடக்க வேண்டும்: தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்க வேண்டும்." அது மிகவும் எளிமையான சொற்றொடர் அல்லவா? எனினும், எளிமையாக இருந்தபோதிலும், இந்த வார்த்தைகளைப் பற்றி உண்மையிலேயே ஆழமான புரிதல் உள்ளவர்கள் தாங்கள் அதிக கனம் கொண்டிருப்பதாகவும், இந்தச் சொல் ஒருவரின் நடைமுறைக்கு மிகவும் மதிப்புமிக்கது என்றும், அது சத்தியத்தின் யதார்த்தத்தைக் கொண்ட ஜீவனின் மொழியிலுள்ள ஒரு வரி என்றும் உணருவார்கள். அதாவது அது தேவனைத் திருப்திப்படுத்த விரும்புவோரின் ஜீவகால குறிக்கோளாகும் மற்றும் அது தேவனுடைய நோக்கங்களைக் கருத்தில் கொள்ளும் எவரும் பின்பற்ற வேண்டிய ஜீவகாலம் முழுமைக்குமான வழியாகும். எனவே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: இந்தச் சொற்றொடர்கள் சத்தியமல்லவா? அது முக்கியத்துவம் கொண்டது அல்லவா? மேலும், உங்களில் சிலர் இந்தச் சொற்றொடரைப் பற்றிச் சிந்தித்து, அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறீர்கள். ஒருவேளை உங்களில் சிலர் இதைப் பற்றிய சந்தேகத்தையும் உணரலாம்: அது மிகவும் முக்கியமான சொற்றொடரா? அது மிகவும் முக்கியமானதாகுமா? அதை இவ்வளவு வலியுறுத்த வேண்டியது அவசியமானதா? இந்தச் சொற்றொடரை அதிகம் விரும்பாத சிலரும் உங்களில் இருக்கலாம். ஏனென்றால், தேவன் கூறிய எல்லாவற்றையும் எடுத்து இந்த ஒரு பழமொழியாகக் குறைப்பது அது தேவனை மிகவும் முக்கியமற்றவராக ஆக்கிவிவதாக இருக்காதா? தேவன் சொன்னதையெல்லாம் எடுத்துக்கொண்டு, அதை ஒரு சொற்றொடருக்குள் வைப்பது தேவனை சற்று முக்கியமற்றவராக மாற்றுவதல்லவா? அது அவ்வாறுதான் அல்லவா? இந்த வார்த்தைகளின் ஆழமான அர்த்தத்தை உங்களில் பெரும்பாலானோர் முழுமையாகப் புரிந்துக்கொள்ளாமல் இருக்கலாம். நீங்கள் அனைவரும் இதைப் பற்றி ஒரு குறிப்பைச் செய்திருந்தாலும், இந்தச் சொற்றொடரை உங்கள் இருதயங்களில் வைக்க உங்களுக்கு விருப்பமில்லை. உங்கள் ஓய்வு நேரத்தில் மறுபரிசீலனை செய்ய மற்றும் சிந்திக்க உங்கள் குறிப்பேடுகளில் அதை வெறுமனே எழுதியுள்ளீர்கள். உங்களில் சிலர் இந்தச் சொற்றொடரை மனப்பாடம் செய்யக்கூட கவலைப்பட மாட்டார்கள். ஆனால் அதை நல்ல பயன்பாட்டிற்குக் கொண்டு வர முயற்சிசெய்ய மாட்டார்கள். இருப்பினும், இந்தச் சொற்றொடரை நான் ஏன் குறிப்பிட விரும்புகிறேன்? உங்கள் பார்வையைப் பொருட்படுத்தாமல், நீங்கள் என்ன நினைத்தாலும், நான் இந்தச் சொற்றொடரைக் குறிப்பிட வேண்டியிருந்தது. ஏனென்றால், ஜனங்களுடைய முடிவுகளை தேவன் எவ்வாறு தீர்மானிக்கிறார் என்பதற்கு அது மிகவும் பொருத்தமானதாகும். இந்தச் சொற்றொடரைப் பற்றிய உங்களுடைய தற்போதைய புரிதல் என்ன அல்லது நீங்கள் அதை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல. இதை நான் இன்னும் உங்களுக்குச் சொல்வேன்: இந்தச் சொற்றொடரின் வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்து அவற்றை அனுபவிக்கவும், தேவனுக்கு பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்குமான தரத்தை அடைய முடிந்தால், அவர்கள் தப்பிப்பிழைப்பார்கள் என்பதும் நல்ல முடிவுகளைக் கொண்டிருப்பார்கள் என்பதும் உறுதி. எவ்வாறாயினும், இந்தச் சொற்றொடரால் வகுக்கப்பட்டுள்ள தரத்தை நீ பூர்த்தி செய்ய முடியாவிட்டால், உன் முடிவு என்னவென்று தெரியவில்லை என்று கூறலாம். ஆகவே, உங்கள் சொந்த மன தயாரிப்புக்காக இந்தச் சொல்லைப் பற்றி நான் உங்களிடம் பேசுகிறேன். இதனால் தேவன் உங்களை அளவிட எத்தகைய தரத்தைப் பயன்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க