Christian Song | தேவனை அவரது வார்த்தையை அனுபவிப்பதன் மூலம் மனிதன் அறிந்து கொள்கிறான்

பிப்ரவரி 18, 2022

தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார், தேவனுடைய சாராம்சம்,

தேவனுடைய மனநிலை என இவை அனைத்தும்

அவருடைய வார்த்தைகளில் மனுக்குலத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

மனிதன் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் செயல்பாட்டில், தேவனுடைய வார்த்தைகளின்

நோக்கத்தையும் மூலத்தையும் உத்தேச விளைவையும் தெரிந்துகொள்வான்.

இவை அனைத்தும் சத்தியத்தையும் ஜீவனையும் அடைவதற்கும், தேவனுடைய நோக்கங்களை

புரிந்துகொள்வதற்கும், அவனுடைய மனநிலையில் மாற்றமடைவதற்கும்,

தேவனுடைய ஆளுகை மற்றும் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதற்கும்,

மனிதன் அவற்றை அனுபவிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும், அடைய வேண்டும்.

இந்த நேரத்தில், அவன் படிப்படியாக தேவனைப் பற்றிய புரிதலைப் பெற்றிருப்பான்.

தன்னைப் பற்றியும் அவன் பல்வேறு அளவிலான அறிவைப் பெற்றிருப்பான்.

அனுபவித்தல், உணர்தல் மற்றும் உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் மூலம்

தேவனைப் பற்றிய உண்மையான புரிதலையும் அறிவையும் அடைவதற்கான இந்த செயல்முறை

மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான உண்மையான ஐக்கியமாகும்.

இதன் மத்தியில், தேவனின் எண்ணத்தையும் தேவனுடைய உடைமைகளையும் உண்மை யாகவே

புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான்.

தேவனுடைய சாரத்தையும் மனநிலையையும் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும்

தேவனுடைய ஆதிக்கத்தின் உறுதியையும், சரியான வரையறையையும்,

தேவனுடைய அடையாளம் மற்றும் நிலையைப் பற்றிய தெளிவையும் பெறுகிறான்.

தேவன் மீதான மனிதனுடைய அக்கறையும் தேவனுக்குக் கீழ்ப்படிதலும் பெரிதாக வளரும்.

தேவன் மீது அவன் கொண்டுள்ள மரியாதை மிகவும் உண்மையானதாகவும் ஆழமாகவும் மாறும்.

இத்தகைய ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் சத்தியத்தின் வழங்குதலையும்

ஜீவனின் ஞானஸ்நானத்தையும் அடைவது மட்டுமல்லாமல்,

தேவனைப் பற்றிய உண்மையான அறிவையும் அடைவான்.

மனிதன் தனது மனநிலையில் மாற்றம் பெற்று இரட்சிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல்,

தேவனை நோக்கி ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினத்தின் உண்மையான

பயபக்தியையும் வழிபாட்டையும் பெறுவான்.

இந்த வகையான ஐக்கியத்தின் மூலமாக மட்டுமே

அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்படும்.

தேவன் மீதான அவனது விசுவாசம், தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற நம்பிக்கையிலிருந்து

உண்மையான கீழ்ப்படிதலுக்கும் அக்கறைக்கும், உண்மையான பயபக்திக்கும், செல்லும்.

தேவனைப் பின்பற்றுவதில் ஒரு செயலற்ற நிலையில் இருந்து

நேர்மறையான செயல்பாட்டிற்கு முன்னேறுவான்.

இந்த வகையான ஐக்கியத்துடன் மட்டுமே

மனிதன் தேவனைப் பற்றிய உண்மையான புரிதலுக்கும், உணர்தலுக்கும் வருவான்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க