Christian Choir Song | ராஜ்ய கீதம்: ராஜ்யம் உலகத்தின் மீது இறங்குகிறது (Tamil Subtitles)

செப்டம்பர் 16, 2020

பரபரப்பான ராஜ்ய கீதம் ஒலிக்கிறது, மனுஷரிடையே தேவனின் வருகையை முழு பிரபஞ்சத்திற்கும் அறிவிக்கிறது! தேவனுடைய ராஜ்யம் வந்துவிட்டது! சகல ஜனங்களும் உற்சாகமடைகிறார்கள், சகலமும் களிப்படைகின்றன! வானங்கள் அனைத்திலும் உள்ள சகலமும் மகிழ்ச்சியில் பொங்கிவழிகின்றன. என்னவொரு மகிழ்ச்சியான வசீகரிக்கும் காட்சிகள் இவை?

மனுஷரிடையே, வேதனையோடு வாழ்ந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகாலம் சாத்தானின் சீர்கேட்டைத் தாங்கிக்கொண்டு, தேவனின் வருகைக்காக நீண்ட காலம் காத்திருக்காதவன் - ஏங்காதவன் - யார்? யுகங்கள் முழுவதும் எத்தனை விசுவாசிகளும், தேவனைப் பின்பற்றுபவர்களும், சாத்தானின் செல்வாக்கின் கீழ், துன்பங்களையும், கஷ்டகாலத்தையும், இடர்பாடுகளையும், பிரிவினையையும் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்? தேவனுடைய ராஜ்யம் விரைவில் வரும் என்று யார் தான் நம்பவில்லை? மனுஷகுலத்தின் சந்தோஷங்களையும் துக்கங்களையும் ருசித்துவிட்டு, மனுஷரிடையே அதிகாரத்தை நிலைநிறுத்த சத்தியத்தையும் நீதியையும் விரும்பாதவன் யார்?

தேவனுடைய ராஜ்யம் வரும்போது, சகலவித தேசங்களும் ஜனங்களும் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் ஒருவழியாக வரும்! இந்த நேரத்தில், வானத்திலும் பூமியிலும் உள்ள சகலத்திலும் காட்சிகள் என்னவாக இருக்கும்? ராஜ்யத்தில் ஜீவிதமானது எவ்வளவு அழகாக இருக்கும்? ""ராஜ்ய கீதம்: ராஜ்யம் உலகத்தின் மீது இறங்குகிறது"" மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான பிரார்த்தனைகள் நிறைவேறும்!

ராஜ்யம் உலகத்தின் மீது இறங்குகிறது

பக்கவாத்தியம்: திரளான ஜனங்கள் தேவனை உற்சாகப்படுத்துகிறார்கள், திரளான ஜனங்கள் தேவனைப் போற்றுகிறார்கள்; சகல வாய்களும் ஒரே மெய்யான தேவன் என்று அழைக்கிறார்கள். ராஜ்யமானது மனுஷரின் உலகில் இறங்குகிறது.

1. திரளான ஜனங்கள் தேவனை உற்சாகப்படுத்துகிறார்கள், திரளான ஜனங்கள் தேவனைப் போற்றுகிறார்கள்; சகல வாய்களும் ஒரே மெய்யான தேவன் என்று அழைக்கிறார்கள், சகல ஜனங்களும் தேவனின் கிரியைகளைக் காணக் கண்களை உயர்த்துகிறார்கள் ராஜ்யமானது மனுஷரின் உலகில் இறங்குகிறது, தேவனின் மனுஷன் பணக்காரனாகவும், ஏராளமானவற்றைக் கொண்டவனாகவும் இருக்கிறான். இதைப் பார்த்து யார் தான் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்? மகிழ்ச்சியின் காரணமாக யார் தான் நடனமாட மாட்டார்கள்? ஓ, சீயோனே! தேவனைக் கொண்டாட உன் வெற்றிக் கொடியை உயர்த்து! தேவனின் பரிசுத்த நாமத்தைப் பரப்ப உன் ஜெயங்கொண்ட வெற்றிப் பாடலைப் பாடு!

2. பூமியின் எல்லைகள் வரை இருக்கும் சகல சிருஷ்டிப்புகளே! நீங்கள் உங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுக்க உங்களை நீங்களே சுத்திகரித்துக் கொள்ளுங்கள்! மேலே வானத்தில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களே! தேவனின் வல்லமைமிக்க சக்தியை வானத்தில் காட்ட உங்கள் இடங்களுக்கு விரைந்து செல்லுங்கள்! பூமியில் தங்கள் எல்லையற்ற அன்பையும் பயபக்தியையும் பாடலாக ஊற்றும் ஜனங்களின் குரல்களுக்கு தேவன் செவிசாய்க்கிறார்! இந்த நாளில், எல்லா சிருஷ்டிப்புகளும் ஜீவனுக்குத் திரும்பும்போது, தேவன் மனுஷரின் உலகத்திற்கு இறங்குகிறார். இந்த தருணத்தில், இதே சந்தர்ப்பத்தில், பூக்கள் அனைத்தும் கட்டுக்கடங்காமல் பூக்கின்றன, சகல பறவைகளும் ஒரே குரலில் பாடுகின்றன, சகலமும் மகிழ்ச்சியுடன் துள்ளுகின்றன! ராஜ்யத்தின் வணக்கத்தின் சத்தத்தில், சாத்தானின் ராஜ்யம் கவிழ்ந்துபோகிறது, மீண்டும் ஒருபோதும் எழாதபடிக்கு, ராஜ்ய கீதத்தின் இடி முழக்கத்தால் அழிக்கப்படுகிறது!

3. பூமியில் யார் எழுந்து எதிர்க்கத் துணிகிறார்கள்? தேவன் பூமிக்கு இறங்கும்போது, அவர் நெருப்பைக் கொண்டுவருகிறார், கோபத்தைக் கொண்டுவருகிறார், எல்லா வகையான பேரழிவுகளையும் கொண்டு வருகிறார். பூமிக்குரிய ராஜ்யங்கள் இப்போது தேவனின் ராஜ்யம்! வானத்தின் மேலே, மேகங்கள் கவிழ்ந்து நீர்த்திரை ஆகின்றன; வானத்தின் கீழ், ஏரிகளும் ஆறுகளும் துள்ளியெழுந்து மகிழ்ச்சியுடன் ஒரு கலவையான இன்னிசையை வெளிப்படுத்துகின்றன. ஓய்வெடுக்கும் மிருகங்கள் அவற்றின் குகைகளிலிருந்து வெளிப்படுகின்றன, சகல ஜனங்களும் தேவனால் தங்கள் நித்திரையிலிருந்து எழுப்பப்படுகிறார்கள். பன்முக ஜனங்கள் எதிர்பார்த்த நாள் ஒருவழியாக வந்துவிட்டது! அவர்கள் மிக அழகான பாடல்களை தேவனுக்கு ஏறெடுக்கிறார்கள்!

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை”யில் உள்ள “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்” இல் உள்ள “ராஜ்ய கீதம்” என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது

இந்தக் காணொளியில் காணப்படும் சில காரியங்கள்:

https://www.holyspiritspeaks.org/special-topic/kingdom-has-descended-on-the-world/copyright_en.html

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

1 கருத்து

பகிர்க

ரத்து செய்க