தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 87

மே 5, 2023

மனுஷனை தேவன் பரிபூரணமாக்குவது எவ்வாறாக நிறைவேற்றப்படுகிறது? இது அவருடைய நீதியுள்ள மனநிலையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. தேவனின் மனநிலையானது முதன்மையாக நீதியும், கடுங்கோபமும், மகத்துவமும், நியாயத்தீர்ப்பும், சாபமும் கொண்டது, மேலும் அவர் மனுஷனை முதன்மையாக அவருடைய நியாயத்தீர்ப்பின் மூலம் பரிபூரணமாக்குகிறார். சிலர் புரிந்துகொள்ளாமல், ஏன் தேவனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சாபத்தின் மூலம் மட்டுமே மனுஷனைப் பரிபூரணமாக்க முடிகிறது என்று கேட்கிறார்கள். அவர்கள், "தேவன் மனுஷனை சபிப்பதாக இருந்தால், மனுஷன் இறந்துபோக மாட்டானா? தேவன் மனுஷனை நியாயந்தீர்ப்பதாக இருந்தால், மனுஷன் கண்டிக்கப்படமாட்டானா? பின்னர் எப்படி அவன் இன்னும் பரிபூரணமாக்கப்பட முடியும்?" என்கிறார்கள். தேவனின் கிரியையை அறியாத ஜனங்களின் வார்த்தைகள் அப்படியாக இருக்கின்றன. தேவன் மனுஷனின் கீழ்ப்படியாமையைத்தான் சபிக்கிறார், அவர் மனுஷனின் பாவங்களைத்தான் நியாயந்தீர்க்கிறார். அவர் கடுமையாக இரக்கமின்றி பேசினாலும், மனுஷனுக்குள் உள்ள அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார், மனுஷனுக்குள் இருக்கும் பிரத்தியேகமானவற்றை இந்தக் கடுமையான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், ஆனாலும் அத்தகைய நியாயத்தீர்ப்பின் மூலம், அவர் மாம்சத்தின் சாராம்சத்தைப் பற்றிய ஆழமான அறிவை மனுஷனுக்கு அளிக்கிறார், இதனால் தேவன் முன்பாக மனுஷன் கீழ்ப்படிகிறான். மனுஷனின் மாம்சமானது பாவத்தாலும் சாத்தானாலும் ஆனது, அது கீழ்ப்படியாதது, அது தேவனுடைய சிட்சைக்கான பொருளாகவும் இருக்கிறது. ஆகவே, மனுஷன் தன்னைத் தெரிந்துகொள்ள அனுமதிக்க, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் அவனுக்கு நேரிட வேண்டும், மேலும் எல்லா வகையான புடமிடுதலையும் பயன்படுத்த வேண்டும்; அப்போதுதான் தேவனின் கிரியையானது பயனுள்ளதாக இருக்கும்.

தேவன் பேசிய வார்த்தைகளின் மூலம் அவர் ஏற்கெனவே மனுஷனின் மாம்சத்தைக் கண்டித்துள்ளார் என்பதைக் காணலாம். அப்படியானால், இந்த வார்த்தைகள் சபிக்கும் வார்த்தைகள் இல்லையா? தேவன் பேசும் வார்த்தைகள் மனுஷனின் உண்மையான சுபாவங்களை வெளிப்படுத்துகின்றன, அத்தகைய வெளிப்பாட்டின் மூலம் அவன் நியாயந்தீர்க்கப்படுகிறான், மேலும் அவனால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற இயலாது என்பதை அவன் காணும்போது, தனக்குள் அவன் துக்கத்தையும் வருத்தத்தையும் உணர்கிறான், அவன் தேவனுக்குக் கடன்பட்டிருப்பதாகவும், தேவனுடைய சித்தத்தை அடைய முடியாது என்றும் உணர்கிறான். பரிசுத்த ஆவியானவர் உன்னை உள்ளிருந்து தண்டித்து திருத்தும் காலங்களும் உள்ளன, இந்த தண்டித்து திருத்துதல் தேவனின் நியாயத்தீர்ப்பிலிருந்து வருகிறது; தேவன் உன்னை நிந்தித்து, அவரது முகத்தை உன்னிடமிருந்து மறைக்கும் காலம், அவர் உனக்கு செவிசாய்க்காமல், உன்னுள் கிரியை செய்யும் காலம், உன்னை சுத்திகரிப்பதற்காக உன்னை சத்தமில்லாமல் சிட்சிக்கும் காலம் ஆகிய காலங்களும் இருக்கின்றன. மனுஷனில் தேவனின் கிரியையானது முதன்மையாக அவருடைய நீதியான மனநிலையைத் தெளிவுபடுத்துவதற்காகவே செய்யப்படுகிறது. மனுஷன் இறுதியில் தேவனுக்கு என்ன சாட்சியம் அளிக்கிறான்? தேவன் நீதியுள்ள தேவன் என்று மனுஷன் சாட்சிக் கொடுக்கிறான், அவருடைய மனநிலை நீதியும், கடுங்கோபமும், சிட்சையும், நியாயத்தீர்ப்பும் கொண்டதாக சாட்சிக் கொடுக்கிறான்; தேவனின் நீதியான மனநிலைக்கு மனுஷன் சாட்சிக் கொடுக்கிறான். மனுஷனைப் பரிபூரணமாக்க தேவன் தமது நியாயத்தீர்ப்பைப் பயன்படுத்துகிறார், அவர் மனுஷனை நேசித்திருக்கிறார், மனுஷனை இரட்சித்திருக்கிறார்—ஆனால் அவருடைய அன்புக்குள் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன? நியாயத்தீர்ப்பு, மகத்துவம், கடுங்கோபம் மற்றும் சாபம் ஆகியவை இருக்கின்றன. கடந்த காலத்தில் தேவன் மனுஷனை சபித்த போதிலும், அவர் மனுஷனைப் பாதாளக்குழிக்குள் முழுமையாகத் தள்ளிடவில்லை, ஆனால் மனுஷனின் விசுவாசத்தைச் சுத்திகரிக்க அவ்வழியைப் பயன்படுத்தினார்; அவர் மனுஷனைக் கொல்லவில்லை, ஆனால் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகவே செயல்பட்டார். மாம்சத்தின் சாராம்சம் சாத்தானிடமிருந்து வந்தது—தேவன் அதைச் சரியாகச் சொன்னார்—ஆனால் தேவனால் மேற்கொள்ளப்பட்ட உண்மைகள் அவருடைய வார்த்தைகளின்படி முடிக்கப்படவில்லை. நீ அவரை நேசிப்பதற்காகவும், நீ மாம்சத்தின் சாராம்சத்தை அறிந்து கொள்வதற்காகவும் அவர் உன்னைச் சபிக்கிறார்; நீ விழித்துக் கொள்ளவும், உனக்குள் இருக்கும் குறைபாடுகளை நீ அறிந்துகொள்ள மற்றும் மனுஷனின் முழு தகுதியற்ற தன்மையை அறிய உன்னை அனுமதிக்கவும் அவர் உன்னை சிட்சிக்கிறார். ஆகவே, தேவனின் சாபங்கள், அவருடைய நியாயத்தீர்ப்பு, அவருடைய மகத்துவம் மற்றும் கடுங்கோபம்—இவை அனைத்தும் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகத்தான். இன்று தேவன் செய்கிற எல்லாவற்றையும், அவர் உனக்குள் தெளிவுபடுத்தும் நீதியான மனநிலையும்—இவை அனைத்தும் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகத்தான். இதுவே தேவனின் அன்பு.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க