தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 84

பிப்ரவரி 16, 2023

இன்று தேவன் உங்களை நியாயந்தீர்க்கிறார், உங்களை சிட்சிக்கிறார், மற்றும் உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், ஆனால் உன் ஆக்கினைத் தீர்ப்பின் நோக்கத்தை அறிய வேண்டியது நீதான் என்பதை நீ அறியவேண்டும். நீ உன்னை அறிந்து கொள்ள முடிவதற்கும், உன் மனநிலை மாறக் கூடுவதற்கும், இன்னும், நீ உன் மதிப்பை அறிந்துகொள்ளக் கூடுவதற்கும், தேவனுடைய செயல்கள் எல்லாம் நீதியானவையும், அவரது மனநிலைக்கும் அவரது கிரியையின் தேவைக்கும் ஏற்றவையும், அவர் மனிதனுடைய இரட்சிப்பின் திட்டத்திற்கு இணங்க கிரியை செய்கிறார் மற்றும் அவரே மனிதனை நேசிக்கின்ற, இரட்சிக்கின்ற, நியாயந்தீர்க்கின்ற மற்றும் சிட்சிக்கின்ற நீதியுள்ள தேவன் என்று உணர்வதற்கும் அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், சபிக்கிறார், நியாயந்தீர்க்கிறார், மற்றும் சிட்சிக்கிறார். நீ மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ளவன், நீ சீர்கேடடைந்தவன் மற்றும் கீழ்ப்படியாதவன் என்று மட்டும் நீ அறிந்து, ஆனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம் இன்று உன்னில் அவர் செய்யும் அவரது இரட்சிப்பைத் தெளிவாக விளக்க விரும்புகிறார் என்று அறியாவிட்டால், அதன்பின் அனுபவத்தை அடைய உனக்கு வேறு வழியில்லை, அதைவிட தொடர்ந்து முன்னேற உனக்குத் திறனும் இருக்காது. தேவன் நியாயந்தீர்க்கவும், சபிக்கவும், சிட்சிக்கவும், இரட்சிக்கவும் வந்திருக்கிறாரே ஒழிய கொல்வதற்காகவோ அல்லது அழிப்பதற்காகவோ அல்ல. அவரது 6,000-ஆண்டுக்கால நிர்வாகத் திட்டம் ஒரு முடிவுக்கு வரும் வரை—ஒவ்வொரு மனித வகையினரின் முடிவையும் அவர் வெளிப்படுத்தும் முன்—பூமியில் தேவனின் கிரியை இரட்சிப்புக்காகவே இருக்கும்; அவரை நேசிப்பவர்களை பரிபூரணப்படுத்துவதும், இவ்வாறு முற்றிலும் அவரது ஆளுகையின் கீழ் அடங்கியிருக்க அவர்களைக் கொண்டுவருவது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது. தேவன் ஜனங்களை எவ்வாறு இரட்சித்தாலும், அவர்களது பழைய சாத்தானின் சுபாவத்தில் இருந்து உடைத்து வெளியேறும்படி செய்வதன் மூலம் இவையெல்லாம் செய்யப்படுகின்றன; அதாவது, அவர்களை ஜீவனைத் தேடும்படி செய்து அவர் இரட்சிக்கிறார். அவர்கள் அவ்விதம் செய்யவில்லை என்றால், பின்னர் தேவனின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு ஒரு வழியும் இருக்காது. இரட்சிப்பு என்பது தேவன் தாமே செய்யும் கிரியையாகும், மேலும் ஜீவனைத் தேடுவது என்பது இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளுவதற்காக மனிதன் செய்யவேண்டிய ஒரு விஷயமாகும். மனிதனின் பார்வையில், இரட்சிப்பு என்பது தேவனின் அன்பாகும், மற்றும் தேவனின் அன்பானது சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் சாபங்களாக இருக்க முடியாது; இரட்சிப்பு என்பது அன்பு, மனதுருக்கம் மற்றும், அதற்குமேல் ஆறுதலின் வார்த்தைகளோடு தேவனால் வழங்கப்பட்ட வரம்பற்ற ஆசீர்வாதங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். தேவன் மனிதனை இரட்சிக்கும் போது, அவர்கள் தங்கள் இருதயங்களைத் தேவனுக்குக் கொடுக்கும்படியாக அவர்களைத் தமது ஆசீர்வாதங்கள் மற்றும் கிருபையைக் கொண்டு மனதை இளகச்செய்தே அவ்வாறு செய்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். அதாவது, மனிதனை அவர் தொடுவதே அவர்களை அவர் இரட்சிப்பதாகும். இது போன்ற இரட்சிப்பு ஓர் ஒப்பந்தத்தை செய்வதன் மூலமே செய்யப்படுகிறது. தேவன் நூறத்தனையாய் அளிக்கும்போதே மனிதன் தேவ நாமத்துக்கு முன்னால் கீழ்ப்படிய வருகிறான் மற்றும் அவருக்கு ஏற்புடையதை செய்ய முயன்று அவருக்கு மகிமையைக் கொண்டுவருகிறான். தேவன் மனுக்குலத்துக்கான நோக்கமாகக் கொண்டிருப்பது இதையல்ல. சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்கவே தேவன் பூமியில் கிரியை செய்ய வந்திருக்கிறார்; இதில் எந்தப் பொய்யும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், அவர் தாமே இந்தக் கிரியையைச் செய்ய நிச்சயமாக வந்திருக்க மாட்டார். கடந்த காலத்தில், அளவிலா அன்பையும் மனதுருக்கத்தையும் காட்டுவது அவரது இரட்சிப்பின் வழிமுறையில் அடங்கி இருந்ததனாலேயே அவர் தமது எல்லாவற்றையும் முழு மனுக்குலத்திற்கும் ஈடாக சாத்தானுக்குக் கொடுத்தார். நிகழ்காலம் கடந்தகாலத்தைப் போல் இல்லை: இன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரட்சிப்பு கடைசி நாட்களின் காலத்தில், வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப் படும்போது நிகழ்கிறது; உங்களது இரட்சிப்பின் வழிமுறை அன்போ அல்லது மனதுருக்கமோ அல்ல, ஆனால் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும், இதனால் மனிதன் மிகவும் முழுமையாக இரட்சிக்கப்படலாம். இவ்வாறு, நீங்கள் பெறுவதெல்லாம் சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற முறையில் கடுமையாகக் கடிந்துகொள்ளுதலும் ஆகும், ஆனால் இதை அறியுங்கள்: இந்த இரக்கமற்ற கடிந்துகொள்ளுதல் என்பது சிறு அளவில் கூடத் தண்டனை அல்ல. என்னுடைய வார்த்தைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சரி, ஒரு சில வார்த்தைகள் உங்களுக்கு முற்றிலும் இரக்கமற்றதாக தோன்றுவதைத் தவிர வேறொன்றும் உங்களுக்கு நேரிடாது, மேலும் நான் எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் மேல் என்ன பொழியும் என்றால் போதனையின் அமர்ந்த வார்த்தைகளே, மேலும் நான் உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது உங்களைக் கொன்றுவிடவோ எண்ணவில்லை. இது எல்லாம் உண்மை அல்லவா? இப்போதெல்லாம், அது நீதியான நியாயத்தீர்ப்பாக இருந்தாலும் அல்லது இரக்கமற்ற புடமிடுதல் மற்றும் சிட்சையாக இருந்தாலும், யாவும் இரட்சிப்புக்கானவையே. இன்று ஒவ்வொன்றும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது மனிதர்களின் பிரிவுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியைகளின் நோக்கமும் தேவனை உண்மையிலேயே நேசிப்பவர்களை இரட்சிப்பதாகவே இருக்கிறது. நீதியான நியாயத்தீர்ப்பு மனிதனை சுத்திகரிப்பதற்குக் கொண்டுவரப்படுகிறது, மற்றும் இரக்கமற்ற புடமிடல் அவர்களைச் சுத்தமாக்கச் செய்யப்படுகிறது; கடுமையான வார்த்தைகள் அல்லது சிட்சை ஆகிய இரண்டும் சுத்திகரிப்பதற்காகச் செய்யப்படுகின்றன, மேலும் அவை எல்லாம் இரட்சிப்புக்காகவே செய்யப்படுகின்றன. இவ்வாறு, இன்றைய இரட்சிப்பின் முறை கடந்தகாலத்தைப் போன்றதல்ல. இன்று, நீங்கள் இரட்சிப்பிற்குள் நீதியான நியாயத்தீர்ப்பு மூலம் கொண்டுவரப்பட்டிருக்கிறீர்கள், மற்றும் இது உங்கள் ஒவ்வொருவரையும் வகையின் படி வகைப்படுத்த ஒரு நல்ல கருவியாகும். மேலும், இரக்கமற்ற சிட்சை உங்களது மாபெரும் இரட்சிப்புக்கு உதவுகிறது—மற்றும் இத்தகைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ளும்போது உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது? ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை நீங்கள் எப்போதும் இரட்சிப்பை அனுபவிக்கவில்லையா? நீங்கள் மாம்சமாகிய தேவனை கண்டிருக்கிறீர்கள் மற்றும் அவருடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் உணர்ந்திருக்கிறீர்கள்; மேலும் தொடர்ந்து கடுமையான கடிந்துகொள்ளுதலையும் சிட்சித்தலையும் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். இருப்பினும், நீங்கள் மேலான கிருபையையும் பெறவில்லையா? வேறு யாரையும் விட உங்கள் ஆசீர்வாதங்கள் பெரிதானவை அல்லவா? உங்கள் கிருபைகள் சாலொமோன் அனுபவித்த மகிமை மற்றும் செல்வங்களை விடவும் ஏராளமானவை! அதைப் பற்றிச் சிந்தியுங்கள்: என் வருகையின் நோக்கம் உங்களை இரட்சிப்பதற்காக அல்லாமல் மாறாக உங்களை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்ப்பதும் தண்டிப்பதுமாக இருந்தால், உங்கள் நாட்கள் இவ்வளவு நீண்டதாக நீடித்திருக்குமா? மாம்சமும் இரத்தமுமான பாவம் நிறைந்த மனிதர்களாகிய நீங்கள் இன்றுவரை உயிர்பிழைத்து வாழ்ந்திருக்க முடியுமா? உங்களைத் தண்டிப்பது மட்டுமே என் இலக்காக இருந்திருந்தால், பின் ஏன் நான் மாம்சமாகி இத்தகைய மாபெரும் காரியத்தில் இறங்க வேண்டும்? வெறும் மனிதர்களாகிய உங்களைத் தண்டிப்பதை ஒரு ஒற்றை வார்த்தையைக் கூறியே செய்திருக்கலாமே? நோக்கத்தோடு ஆக்கினைக்குள்ளாக உங்களைத் தீர்த்த பின்னர் உங்களை இன்னும் நான் அழிப்பது தேவையா? நீங்கள் என்னுடைய இந்த வார்த்தைகளை இன்னும் விசுவாசிக்கவில்லையா? நான் மனிதனை வெறும் அன்பாலும் மனதுருக்கத்தாலும் இரட்சிக்க முடியுமா? அல்லது மனிதனை இரட்சிக்க சிலுவையில் அறைதலை மட்டுமே என்னால் பயன்படுத்த முடியுமா? மனிதனை முற்றிலும் கீழ்ப்படிதலுள்ளவனாக மாற்ற என்னுடைய நீதியான மனநிலை இன்னும் அதிக அளவில் உகந்ததாக இல்லையா? மனிதனை முற்றிலுமாக இரட்சிக்க அது இன்னும் அதிகத் திறனுடையதாக இல்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க