தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 83

மார்ச் 2, 2021

மனுஷனுடைய மாம்சத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்ப்பதற்கான கிரியையைச் செய்வதற்கு மாம்சத்திலுள்ள தேவனை விட வேறு யாரும் பொருத்தமானவராகவும் தகுதியானவராகவும் இல்லை. நியாயத்தீர்ப்பானது தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டிருந்தால், அது பரந்ததாக இருந்திருக்காது. மேலும், இதுபோன்ற கிரியையை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும், ஏனென்றால் ஆவியானவரால் மனுஷனிடம் நேரில் வரமுடியாது. இதன் காரணமாக, பலன்கள் உடனடியாக கிடைக்காது, மனுஷனால் தேவனுடைய இடறலடைய இயலாத மனநிலையை மிகவும் தெளிவாகப் பார்க்கவும் முடியாது. மாம்சத்திலுள்ள தேவன் மனுக்குலத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்த்தால் மாத்திரமே, சாத்தானை முழுமையாகத் தோற்கடிக்க முடியும். சாதாரண மனிதத்தன்மையைக் கொண்ட மனுஷனைப் போலவே இருக்கும் மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனுடைய அநீதியை நேரடியாக நியாயந்தீர்க்க முடியும். இது அவருடைய இயல்பான பரிசுத்தத்தன்மையின் மற்றும் அவருடைய தெய்வீகத்தன்மையின் அடையாளமாக இருக்கிறது. தேவன் மாத்திரமே மனுஷனை நியாயந்தீர்க்க தகுதியுடையவர், நியாயந்தீர்க்கும் நிலையில் இருக்கிறார், ஏனென்றால் அவர் சத்தியத்தையும் நீதியையும் கொண்டிருக்கிறார், ஆகவே அவரால் மனுஷனை நியாயந்தீர்க்க முடிகிறது. சத்தியமும் நீதியும் இல்லாதிருக்கிறவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்க தகுதியற்றவர்கள். இந்தக் கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டிருந்தால், அது சாத்தான் மீதான ஜெயத்தைக் குறிக்காது. ஆவியானவர் மனுஷர்களை விட இயல்பாகவே உயர்ந்தவர், தேவனுடைய ஆவியானவர் இயல்பாகவே பரிசுத்தமானவர், மாம்சத்தின் மீது வெற்றிசிறக்கிறார். இந்தக் கிரியையை ஆவியானவர் நேரடியாகச் செய்திருந்தால், மனுஷனுடைய கீழ்ப்படியாமை அனைத்தையும் அவரால் நியாயந்தீர்க்க முடியாது, மேலும் மனுஷனுடைய எல்லா அநீதியையும் வெளிப்படுத்த முடியாது. நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனைப் பற்றிய மனுஷனுடைய கருத்துக்கள் மூலமாகவும் செய்யப்படுவதனால், மனுஷனிடம் ஆவியானவரைப் பற்றிய எந்தக் கருத்துக்களும் கிடையாது. ஆகையால், மனுஷனுடைய அநீதியைச் சிறந்த முறையில் வெளிப்படுத்த ஆவியானவரால் முடியாது, இதுபோன்ற அநீதியை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது. மாம்சமான தேவன் அவரை அறியாத அனைவருக்கும் சத்துருவாக இருக்கிறார். மனுஷனுடைய கருத்துக்களையும், அவரை எதிர்ப்பதையும் நியாயந்தீர்ப்பதன் மூலம், மனுக்குலத்தின் கீழ்ப்படியாமை அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார். ஆவியானவரின் கிரியையின் பலன்களைக் காட்டிலும் மாம்சத்தில் அவர் செய்த கிரியையின் பலன்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. ஆகையால், மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பும் ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படாமல், மாம்சமான தேவனுடைய கிரியையால் செய்யப்படுகிறது. மாம்சத்திலுள்ள தேவனை மனுஷனால் காணவும், தொட்டுணரவும் முடியும். மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்ள முடியும். மாம்சத்திலுள்ள தேவனுடனான தனது உறவில், மனுஷன் எதிர்ப்பிலிருந்து கீழ்ப்படிதலுக்கும், துன்புறுத்துதலில் இருந்து ஏற்றுக்கொள்ளுதலுக்கும், கருத்துக்களிலிருந்து அறிவுக்கும் மற்றும் புறக்கணிப்பதிலிருந்து அன்புக்கும் முன்னேறுகிறான். இவைதான் மாம்சமான தேவனுடைய கிரியையின் பலன்களாகும். மனுஷன் அவருடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்வதன் மூலமாக மாத்திரமே இரட்சிக்கப்படுகிறான். மனுஷன் அவருடைய வாயின் வார்த்தைகளின் மூலமாக அவரைப் படிப்படியாக அறிந்துகொள்கிறான். மனுஷன் அவரை எதிர்க்கும்போது அவரால் ஜெயங்கொள்ளப்படுகிறான். அவருடைய சிட்சையை ஏற்றுக்கொள்ளும் போது அவர் வழங்கும் ஜீவனைப் பெறுகிறான். இந்தக் கிரியைகள் எல்லாம் மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியையாகும், ஆனால் ஆவியானவர் என்ற அடையாளத்திலுள்ள தேவனுடைய கிரியை அல்ல. மாம்சமான தேவன் செய்த கிரியை மாபெரும் கிரியையாகவும், மிகவும் ஆழமான கிரியையாகவும் இருக்கிறது. தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களின் முக்கியமான பகுதியானது மாம்சமான தேவன் செய்யும் கிரியையின் இரண்டு கட்டங்களாகும். மனுஷனுடைய ஆழமான சீர்கேடானது மாம்சமான தேவனுடைய கிரியைக்குப் பெரும் தடையாக இருக்கின்றது. குறிப்பாக, கடைசிக்கால ஜனங்களின் மீது செய்யப்படும் கிரியைகள் மிகவும் கடினமானவையாகவும், சூழல் விரோதமானதாகவும், ஒவ்வொரு வகையான நபரின் திறமையும் மிகவும் மோசமானதாகவும் இருக்கின்றன. ஆனாலும், இந்தக் கிரியையின் முடிவில், எந்தக் குறைபாடுகளும் இல்லாமல், அது இன்னும் சரியான பலனை அடையும். இது மாம்சத்தின் கிரியையின் பலனாகும். ஆவியின் கிரியையைக் காட்டிலும் இந்தப் பலன் மிகவும் வல்லமையானதாகும். தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்கள் மாம்சத்தில் செய்து முடிக்கப்படும். அவை மாம்சமான தேவனால் செய்து முடிக்கப்பட வேண்டும். மிகவும் அத்தியாவசியமான மற்றும் மிகவும் முக்கியமான கிரியை மாம்சத்தில் செய்யப்படுகிறது. மனுஷனுடைய இரட்சிப்பானது மாம்சத்திலுள்ள தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும். மாம்சத்திலுள்ள தேவன் மனுஷனுடன் தொடர்பில்லாதவர் என்று முழு மனுக்குலமும் உணர்கின்றபோதிலும், உண்மையில் இந்த மாம்சமானது மனுக்குலம் முழுவதின் தலைவிதியுடனும் வாழ்வுடனும் தொடர்புடையதாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பிற காணொளி வகைகள்

பகிர்க

ரத்து செய்க