தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 82

ஏப்ரல் 12, 2023

மாம்சத்தில் அவர் செய்யும் கிரியை மிகவும் முக்கியமானதாகும், இது கிரியையைப் பற்றி பேசப்படுகிறது. மேலும், கிரியையை இறுதியில் முடிப்பவர் மாம்சமான தேவனேயன்றி, ஆவியானவர் அல்ல. தேவன் அறியப்படாத நேரத்தில் பூமிக்கு வந்து மனுஷனிடம் தோன்றி, அதன்பிறகு அவர் மனுக்குலம் முழுவதையும் தனிப்பட்ட முறையில் நியாயந்தீர்ப்பார், யாரையும் விட்டு வைக்காமல் அவர்களை ஒவ்வொருவராகச் சோதிப்பார் என்று சிலர் நம்புகிறார்கள். இவ்விதமாகச் சிந்திப்பவர்களுக்கு மனுஷ அவதரிப்பின் இந்த கட்டக் கிரியையைத் தெரியாது. தேவன் மனுஷனை ஒவ்வொருவராக நியாயந்தீர்ப்பதில்லை, மனுஷனை ஒவ்வொருவராகச் சோதிப்பதில்லை. அவ்வாறு செய்வது நியாத்தீர்ப்பின் கிரியையாக இருக்காது. சகல மனுஷரின் சீர்கேடும் ஒன்றுபோல இல்லையா? சகல மனுஷரின் சாரம்சமும் ஒன்றுபோல இல்லையா? மனுக்குலத்தின் சீர்கேடான சாராம்சம், சாத்தானால் சீர்கேடடைந்த மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷனுடைய சகல பாவங்கள் ஆகியவையே நியாயந்தீர்க்கப்படுகின்றன. மனுஷனுடைய அற்பமான மற்றும் முக்கியத்துவமில்லாத தவறுகளை தேவன் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பின் கிரியை ஒரு மாதிரியாகும். இது குறிப்பாக ஒரு குறிப்பிட்ட நபருக்குச் செய்யப்படுவதில்லை. மாறாக, இது மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பையும் குறிப்பிடும் பொருட்டு ஒரு கூட்ட ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படும் கிரியையாகும். ஒரு கூட்ட ஜனங்களின் மீது தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதன் மூலம், மனுக்குலம் முழுவதின் கிரியையையும் குறிப்பிட மாம்சத்திலுள்ள தேவன் தமது கிரியையைப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு அது படிப்படியாகப் பரவுகிறது. இவ்வாறும் நியாயத்தீர்ப்பின் கிரியை இருக்கிறது. தேவன் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தையோ நியாயந்தீர்க்க மாட்டார். மாறாக, மனுக்குலம் முழுவதின் அநீதியையும் நியாயந்தீர்க்கிறார். அதாவது, உதாரணமாக, தேவனை மனுஷன் எதிர்ப்பது அல்லது அவர் மீது மனுஷனுக்கு காணப்படும் பக்தியின்மை அல்லது தேவனுடைய கிரியையை மனுஷன் இடையூறு செய்வது மற்றும் இதுபோன்ற பலவற்றை நியாயந்தீர்க்கிறார். தேவனை எதிர்க்கும் மனுக்குலத்தின் சாராம்சமே நியாந்தீர்க்கப்படுகிறது. இந்தக் கிரியை கடைசி நாட்களின் ஜெயங்கொள்ளும் கிரியையாகும். மனுஷனால் சாட்சிகூறப்படும் மாம்சமான தேவனுடைய கிரியையும் வார்த்தையுமே கடைசி நாட்களில் பெரிய வெண்மையான சிங்காசனத்திற்கு முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பின் கிரியையாகும், இது கடந்த காலங்களில் மனுஷனால் செய்யப்பட்டதாகும். தற்போது மாம்சமான தேவனால் செய்யப்படும் கிரியையானது பெரிய வெண்மையான சிங்காசனத்தின் முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பாகும். இன்றைய மாம்சமான தேவன் கடைசி நாட்களில் மனுக்குலம் முழுவதையும் நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். இந்த மாம்சம், அவருடைய கிரியை, அவருடைய வார்த்தை மற்றும் அவருடைய முழு மனநிலை ஆகியவை சேர்ந்துதான் அவருடைய முழுமையாகும். அவருடைய கிரியையின் எல்லை குறைவாக இருக்கின்றபோதிலும், முழு பிரபஞ்சத்தையும் நேரடியாக ஈடுபடுத்துவதில்லை என்றபோதிலும், நியாயத்தீர்ப்பின் கிரியையின் சாராம்சம் என்பது முழு மனுக்குலத்தின் நேரடி நியாயத்தீர்ப்பாகும். இது சீனாவின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்காகவோ அல்லது சிறு எண்ணிக்கையிலான ஜனங்களுக்காகவோ செய்யப்படும் நியாயத்தீர்ப்பு அல்ல. மாம்சத்திலுள்ள தேவன் கிரியை செய்யும் போது, இந்தக் கிரியையின் நோக்கம் முழு பிரபஞ்சத்தையும் ஈடுபடுத்தவில்லை என்றபோதிலும், அது முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் குறிக்கிறது. மேலும், அவர் தமது மாம்சத்தின் கிரியையின் எல்லைக்குள்ளாகவே கிரியையை முடித்த பிறகு, இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலைத் தொடர்ந்து இயேசுவைப் பற்றிய சுவிசேஷமானது பிரபஞ்சம் முழுவதும் பரவியதைப் போலவே அவர் இந்தக் கிரியையை உடனடியாக முழு பிரபஞ்சத்திற்கும் விரிவுபடுத்துவார். இது ஆவியானவரின் கிரியையாக இருந்தாலும் அல்லது மாம்சத்தின் கிரியையாக இருந்தாலும், இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் செய்யப்படும் கிரியையாக இருக்கிறது, ஆனால் இது முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் குறிக்கிறது. கடைசி நாட்களில், தேவன் தமது மாம்சமான அடையாளத்தில் தோன்றி தமது கிரியையைச் செய்கிறார். மேலும், மாம்சத்திலுள்ள தேவனே பெரிய வெள்ளைச் சிங்காசனத்தின் முன்பாக மனுஷனை நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். அவர் ஆவியானவராக இருந்தாலும் அல்லது மாம்சமாக இருந்தாலும், நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறவர் தான் கடைசி நாட்களில் மனுக்குலத்தை நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். இது அவருடைய கிரியையின் அடிப்படையில் தான் வரையறுக்கப்படுகிறது. இது அவருடைய வெளிப்புறத் தோற்றத்தினாலோ அல்லது பல காரணிகளின்படியோ வரையறுக்கப்படுவதில்லை. மனுஷன் இந்த வார்த்தைகளைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டிருக்கின்றபோதிலும், மாம்சமான தேவனுடைய நியாயத்தீர்ப்பு குறித்த உண்மையையும், முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொள்வதையும் யாராலும் மறுக்க முடியாது. மனுஷன் அதைப் பற்றி என்ன நினைத்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மைகள் உண்மைகளாகவே இருக்கின்றன. "தேவனால் கிரியை செய்யப்படுகிறது, ஆனால் மாம்சம் தேவன் அல்ல" என்று யாரும் சொல்ல முடியாது. இது முட்டாள்தனம், ஏனென்றால் இந்தக் கிரியையை மாம்சத்திலுள்ள தேவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. இந்தக் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டதால், இந்தக் கிரியையைத் தொடர்ந்து, மனுஷர் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை இரண்டாவது முறையாகத் தோன்றாது. தேவன் தமது இரண்டாவது மனுஷ அவதரிப்பில் முழு நிர்வாகத்தின் அனைத்துக் கிரியைகளையும் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். மேலும், தேவனுடைய கிரியையின் நான்காவது கட்டம் இருக்காது. ஏனென்றால், மாம்சமான மற்றும் சீர்கேடான மனுஷனே நியாயந்தீர்க்கப்படுகிறான், நேரடியாக நியாயந்தீர்க்கப்படும் சாத்தானுடைய ஆவி அல்ல, ஆகையால் நியாயத்தீர்ப்பின் கிரியை ஆவிக்குரிய உலகில் செய்யப்படாமல், மனுஷர் நடுவே செய்யப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க