Christian Movie Trailer | தேவனை விசுவாசிப்பது நன்மையானது (Tamil Subtitles)
டிசம்பர் 5, 2021
ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்வதற்காகப் பணம் சம்பாதிப்பதற்கு, டிங்க் ரூய்லினும் அவரது கணவரும் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடத்த கசப்போடு கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் சிசிபி அரசின் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தின் காரணமாக வேறு வழியின்றி வெளிநாட்டில் வேலைபார்க்கச் செல்ல வேண்டியதாயிற்று. அதிகப் பணம் சம்பாதிக்க டிங்க் ரூய்லின் இரண்டு வேலைகள் பார்க்கிறார். அவரது அதிக வேலைப் பளுவும், அவரைச் சுற்றி இருந்தவர்களின் உதாசீனமும் பணத்துக்காக வேலைபார்ப்பதன் வேதனை மற்றும் இயலாமையை அவரை உணர வைத்தது. தனது வேதனை மற்றும் குழப்பத்தின் மத்தியில் உயர்நிலைப் பள்ளி வகுப்புத் தோழியான லின் ஸிக்சினை சந்திக்கிறார். பேசும்போது லின் ஸிக்சின் தேவனிடத்தில் வைத்த விசுவாசத்தினால் பல விஷயங்களை புரிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறார். தேவ பிரசன்னத்தினால் அவர் ஆவிக்குரிய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் உணர்ந்து சமாதானமாகவும், கஷ்டமின்றியும் வாழ்வதைப் பார்த்து டிங்க் ரூய்லினும் தேவனை விசுவாசிக்க விரும்புகிறார். விரைவில், மேலும் பணம் சம்பாதிக்க டிங்க் ரூய்லினும் அவரது கணவரும் ஒரு உணவகத்தை வாங்கி நடத்துகின்றனர். ஆனால் நீண்ட நாள் களைப்பால் டிங்க் ரூய்லின் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார். அதனால் அவர் முடக்குவாத நோய்க்கு ஆட்படும் அபாயம் நேரிடுகிறது. நோயின் துன்பத்தால் டிங்க் ரூய்லின் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கிறார். மக்கள் எதற்காக வாழவேண்டும். சொத்துக்காகவும் புகழுக்காகவும் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பது மதிப்புடையதுதானா? மக்கள் வெறுமை உணர்விலும் துன்பத்திலும் இருந்து தப்பிக்க பணம் உதவுமா? அது மரணத்தில் இருந்து மக்களைக் காக்குமா? தன் சகோதரியின் தேவ வார்த்தைகளின் மேல் இருந்த ஐக்கியத்தின் மூலம் டிங்க் ரூய்லினால் வாழ்க்கையைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்குத் தெளிவாக விடை காணமுடிந்தது. வாழ்க்கையில் முக்கியமாகத் தேட வேண்டிய விஷயத்தை அவர் அறிகிறார். கடைசியில் அவர் ஆவிக்குரிய சமாதானத்தைக் கண்டறிகிறார். தேவ வார்த்தையின் வழிகாட்டுதல் மூலம் இறுதியில் டிங் ரூய்லின் வாழ்க்கையில் சந்தோஷத்தைக் கண்டடைகிறார்…
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்