Tamil Sermon Series | மதத் தலைவர்களைப் பின்பற்றுவது தேவனைப் பின்பற்றுவதா?
டிசம்பர் 23, 2022
2,000 ஆண்டுகளுக்கு முன்பு, நம்முடைய இரட்சகரான கர்த்தராகிய இயேசு மீட்பின் கிரியையைச் செய்ய வந்தார். பெரும்பாலான யூத மதத்தினர் தங்கள் மதத் தலைவர்களையும் பரிசேயர்களையும் வணங்கியதால், கர்த்தராகிய இயேசுவைக் கண்டனம் செய்வதிலும் நிராகரிப்பதிலும் அவர்கள் அந்த அந்திக்கிறிஸ்துக்களுடன் இணைந்து சென்றனர், இறுதியில் அவரை சிலுவையில் அறைவதில் அவர்களுக்கும் ஒரு கை இருந்தது. இது அவர்களுக்கு தேவனுடைய சாபத்தையும் தண்டனையையும் பெற்றுத் தந்தது, இஸ்ரவேல் தேசத்தை 2,000 ஆண்டுகளாக அழித்தது. கர்த்தராகிய இயேசு கடைசி நாட்களில் மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனாக திரும்பி வந்திருக்கிறார், சத்தியங்களை வெளிப்படுத்துகிறார் மற்றும் மனிதகுலத்தை முழுமையாகச் சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் நியாயத்தீர்ப்புக் கிரியைகளைச் செய்கிறார். மதத் தலைவர்களின் வெறித்தனமான கண்டனங்களையும் எதிர்ப்பையும் அவர் எதிர்கொள்கிறார். இன்று மத உலகத்தில் உள்ள பலர் தங்கள் மதகுருமார்களைக் கண்மூடித்தனமாக ஆராதிப்பதால், தங்கள் மதத் தலைவர்கள் தேவனால் நியமிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்குக் கீழ்ப்படிவது தேவனுக்குக் கீழ்ப்படிவது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இதன் விளைவாக, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள்தான் சத்தியம் என்பதையும், அவைகள் வல்லமைவாய்ந்தவை, அதிகாரம் கொண்டவை, தேவனிடத்திலிருந்து வந்தவை என்பதை அவர்கள் தெளிவாகக் கண்டிருந்தாலும், அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளப் பயப்படுகிறார்கள். மாறாக, கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருப்பதை நிராகரிப்பதிலும் கண்டனம் செய்வதிலும் அவர்களுடன் இணைந்து செல்கிறார்கள், கர்த்தரை வரவேற்கும் வாய்ப்பை இழந்து பேரழிவுகளில் விழுகிறார்கள். இது உண்மையில் வெட்கக்கேடானது! அப்படியானால், மதத் தலைவர்கள் உண்மையில் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா? அவர்களுக்குக் கீழ்ப்படிவதும் தேவனைப் பின்பற்றுவதும் ஒன்றா? மெய்யான விசுவாசத்தைத் தேடுதல் என்ற இந்த தொடர் நிகழ்ச்சி சத்தியத்தைத் தேடவும் பதிலைக் கண்டறியவும் உங்களுக்கு வழிகாட்டும்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்