தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 293

மார்ச் 6, 2023

தேவனுடைய கிரியையின் நோக்கம், அவருடைய கிரியை மனுஷனில் ஏற்படுத்தும் தாக்கம், மனுஷனுக்கான அவருடைய சித்தம் என்ன என்பவற்றைப் புரிந்துகொள்ள, தேவனைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இதனைத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் தேவனின் கிரியைப் பற்றிய அறிவுதான் எல்லா ஜனங்களுக்கும் இருப்பதில்லை. தேவன் ஜனங்கள் மீது நடப்பித்த கிரியைகள், தேவனின் கிரியையின் முழுமை, மற்றும் உலகை சிருஷ்டித்ததிலிருந்து தற்போதைய காலம் வரை மனுஷனிடம் தேவனின் சித்தம் துல்லியமாக என்னவாக இருக்கிறது—இந்த விஷயங்கள் மனுஷனுக்குத் தெரிவதில்லை அல்லது அவன் புரிந்துகொள்வதுமில்லை. இந்தப் போதாமை மத உலகம் முழுவதும் மட்டுமல்லாமல், தேவனை விசுவாசிக்கிறவர்களிடமும் காணப்படுகிறது. நீ உண்மையிலேயே தேவனைக் காணும் நாள் வரும்போது, அவருடைய ஞானத்தை நீ உண்மையிலேயே பாராட்டும்போது, தேவன் செய்த அனைத்து கிரியைகளையும் நீ காணும்போது, தேவன் என்பவர் யார், அவர் என்ன வைத்திருக்கிறார் என்பதை நீ அறிந்துகொள்ளும்போது—அவருடைய ஈவை, ஞானத்தை, அதிசயத்தை மற்றும் அவர் ஜனங்கள் மீது புரிந்த அனைத்து கிரியையைக் காணும்போது—அப்போதுதான் தேவனில் நீ கொண்டிருக்கும் உனது விசுவாசத்தில் நீ வெற்றியை அடைவாய். தேவன் எல்லாவற்றையும் உள்ளடக்கியவர், எல்லாம் நிறைந்தவர் என்று கூறப்படும் போது, அவர் எந்த வகையில் சரியாக அனைத்தையும் உள்ளடக்கியவர், எந்த வகையில் அவர் எல்லாம் நிறைந்தவர்? நீ இதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீ தேவனை விசுவாசிப்பதாகக் கருத முடியாது. மத உலகில் இருப்பவர்கள் தேவனை விசுவாசிப்பவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் பிசாசைப் போல பொல்லாதவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன்? அவர்கள் பொல்லாதவர்கள் என்று நான் கூறுவதற்கு அவர்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாததும், அவருடைய ஞானத்தைக் காண முடியாததும் தான் காரணம். தேவன் எந்த நேரத்திலும் தம்முடைய கிரியையை அவர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் குருடர்கள்; அவர்களால் தேவனின் கிரியைகளைக் காண முடியாது, அவர்கள் தேவனால் கைவிடப்பட்டிருக்கிறார்கள், தேவனின் அக்கறையும் பாதுகாப்பும் அவர்களுக்கு முற்றிலுமாக இருப்பதில்லை, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதில்லை. தேவனின் கிரியை இல்லாதவர்கள் அனைவரும் பொல்லாதவர்கள் மற்றும் தேவனின் எதிராளிகள். நான் கூறும் தேவனின் எதிராளிகள் என்பவர்கள், தேவனை அறியாதவர்கள், தேவனை அவர்களின் உதடுகளால் ஏற்றுக்கொண்டாலும், இன்னும் அவரை அறியாதவர்கள், தேவனைப் பின்பற்றினாலும், இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள், மற்றும் தேவனின் கிருபையில் மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னும் அவருக்கு சாட்சியாக நிற்க முடியாதவர்கள். தேவனின் கிரியையின் நோக்கம் பற்றிய புரிதலோ அல்லது தேவன் மனுஷனில் செய்யும் கிரியைப் பற்றிய புரிதலோ இல்லாமல், அவன் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்கவும் முடியாது, அவன் தேவனுக்கு சாட்சியாக நிற்கவும் முடியாது. மனுஷன் தேவனை எதிர்ப்பதற்கான காரணம், ஒருபுறம், அவனுடைய சீர்கெட்ட மனநிலையிலிருந்தும், மறுபுறம், தேவன் குறித்த அறியாமையிலிருந்தும், தேவன் செயல்படும் கொள்கைகள் மற்றும் மனுஷனுக்கான அவருடைய சித்தம் பற்றிய புரிதல் இல்லாததாலும் உருவாகிறது. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால், இவை தேவனுடன் மனுஷனுக்கு உள்ள எதிர்ப்பின் வரலாற்றை உருவாக்குகின்றன. புதிதாக விசுவாசிப்பவர்கள் தேவனை எதிர்ப்பதற்கு காரணம், இது போன்ற எதிர்ப்பு அவர்களின் இயல்பிலேயே இருக்கிறது, அதே சமயம் பல ஆண்டுகளாக விசுவாசிப்பவர்கள் தேவனை எதிர்ப்பது அவரைப் பற்றிய அவர்களின் அறியாமையாலும், இதனுடன் அவர்களின் சீர்கெட்ட மனநிலையினாலும் விளைகிறது. தேவன் மாம்சமாக மாறுவதற்கு முந்தைய காலத்தில், ஒரு மனுஷன் தேவனை எதிர்க்கிறானா என்கிற அளவீடானது பரலோகத்தில் உள்ள தேவனால் வகுக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றுகிறானா என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உதாரணமாக, நியாயப்பிரமாண யுகத்தில், யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை யாரெல்லாம் கடைப்பிடிக்கவில்லையோ அவர்கள் தேவனை எதிர்த்தவர்களாகக் கருதப்பட்டார்கள்; யேகோவாவுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளை யாரெல்லாம் திருடினார்களோ, அல்லது யேகோவாவுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக நின்றார்களோ, அவர்கள் தேவனை எதிர்த்தவர்கள் என்று கருதப்பட்டு, கல்லெறிந்து கொல்லப்படுவார்கள்; தன் தந்தையையும் தாயையும் மதிக்காதவர்கள், மற்றவனைத் தாக்கியவர்கள் அல்லது சபித்தவர்கள், நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்காதவர்களாகக் கருதப்பட்டார்கள். யேகோவாவின் நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்காத அனைவரும் அவருக்கு எதிராக நிற்பவர்கள் என்று கருதப்பட்டனர். ஆனால், கிருபையின் யுகத்தில் அது தொடரவில்லை, அப்போது இயேசுவுக்கு எதிராக யாரெல்லாம் நின்றார்களோ அவர்கள் தேவனுக்கு எதிராக நின்றவர்களாகக் கருதப்பட்டனர், மற்றும் இயேசு சொன்ன வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தேவனுக்கு எதிராக நின்றவர்களாகக் கருதப்பட்டனர். இந்த நேரத்தில், தேவனை எதிர்ப்பது குறித்து வரையறுக்கப்பட்டுள்ள விதம், மிகவும் துல்லியமாகவும் நடைமுறைக்கு மிகவும் ஏற்றதாகவும் ஆனது. அதுவரை தேவன் மாம்சமாக மாறியிராத காலகட்டத்தில், மனுஷன் தேவனை எதிர்க்கிறானா என்பது மனுஷன் பரலோகத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தேவனை வணங்குகிறானா மற்றும் போற்றுகிறானா என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தேவனை எதிர்ப்பது என்பது வரையறுக்கப்பட்ட விதம் நடைமுறைக்குரியதாக இல்லவே இல்லை, ஏனென்றால் மனுஷனால் தேவனைப் பார்க்கவும் முடியவில்லை, தேவனின் உருவம் எதுவென்றும், அல்லது அவர் எவ்வாறு கிரியை புரிந்தார், பேசினார் என்றும் அவனுக்குத் தெரிந்திருக்கவுமில்லை. மனுஷனுக்கு தேவனைப் பற்றி எவ்வகையான கருத்தும் இல்லை, அவன் தேவனைத் தெளிவற்ற முறையில் நம்பினான், ஏனென்றால் தேவன் அதுவரை மனுஷனுக்குத் தோன்றவில்லை. ஆகையால், மனுஷன் தனது கற்பனையில் தேவனை எப்படி நம்பினாலும் பரவாயில்லை, தேவன் மனுஷனைக் கண்டிக்கவோ அல்லது அவனிடம் பல கோரிக்கைகளை வைக்கவோ இல்லை, ஏனென்றால் மனுஷனால் தேவனை முழுமையாகக் காண முடியவில்லை. தேவன் மாம்சமாகி, மனுஷர்களிடையே கிரியைப் புரிய வரும்போது, அனைவரும் அவரைக் காண்பார்கள், அவருடைய வார்த்தைகளைக் கேட்பார்கள், தேவன் தம்முடைய மாம்ச உடலுக்குள் மேற்கொள்ளும் செயல்களை அனைவரும் காண்பார்கள். அந்தத் தருணத்தில், எல்லா மனுஷனின் கருத்துக்களும் நுரையாகின்றன. தேவன் மாம்சத்தில் தோன்றுவதைக் கண்டவர்கள் விருப்பத்துடன் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள் கண்டிக்கப்பட மாட்டார்கள், அதேசமயம் அவருக்கு எதிராக வேண்டுமென்றே நிற்பவர்கள் தேவனுடைய எதிரியாகக் கருதப்படுவார்கள். அத்தகையவர்கள் அந்திக்கிறிஸ்துகள், அவர்கள் தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்கும் எதிரிகள். தேவனைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், அவருக்குக் கீழ்ப்படியத் தயாராகவும், விருப்பம் கொண்டவராகவும் இருப்பவர்கள் ஆக்கினைக்குள்ளாக மாட்டார்கள். மனுஷனின் நோக்கங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தேவன் மனுஷனைக் கண்டிக்கிறார், ஒருபோதும் அவனது சிந்தனைகளையும் யோசனைகளையும் வைத்து அல்ல. அவர் மனுஷனை அவனுடைய சிந்தனைகள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் கண்டித்தால், தேவனின் கோபமான கரங்களிலிருந்து ஒரு மனுஷனால் கூட தப்பிக்க முடியாது. மனுஷரூபமெடுத்த தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்பவர்கள், கீழ்ப்படியாமைக்காகத் தண்டிக்கப்படுவார்கள். தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்கும் இந்த ஜனங்களைப் பொறுத்தவரை, அவர்கள் தேவனுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் எதிர்ப்பு உருவாகிறது, அதன் விளைவாக இது தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களுக்கு அவர்களை வழிநடத்துகிறது. இந்த ஜனங்கள் வேண்டுமென்றே தேவனின் கிரியையை எதிர்த்து அழிக்கிறார்கள். அவர்கள் வெறுமனே தேவனைப் பற்றிய கருத்துகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவருடைய கிரியையைச் சீர்குலைக்கும் செயல்களிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள், இந்தக் காரணத்திற்காக இந்த வகையான ஜனங்கள் கண்டிக்கப்படுவார்கள். தேவனின் கிரியையை வேண்டுமென்றே சீர்குலைக்காதவர்கள் பாவிகளாகக் கண்டிக்கப்பட மாட்டார்கள், ஏனென்றால் அவர்களால் விருப்பத்துடன் கீழ்ப்படியவும், மேலும் இடையூறு மற்றும் தொந்தரவை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் முடிகிறது. இது போன்றவர்கள் கண்டிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், பல ஆண்டுகளாக தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவித்திருக்கும்போது, அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தால் மற்றும் மனுஷரூபமெடுத்த தேவனின் கிரியையை அறிய முடியாமல் இருந்தால், எத்தனை வருடங்கள் அவருடைய கிரியையை அவர்கள் அனுபவித்திருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் தொடர்ந்து தேவனைப் பற்றிய கருத்துக்களால் நிரம்பி இருந்தாலும், அவரை அறிய முடியாது, பின்னர் அவர்கள் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடாவிட்டாலும், அவர்களுடைய இருதயங்கள் தேவனைப் பற்றிய பல கருத்துக்களால் நிரம்பியிருக்கும், இந்த கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், இது போன்ற ஜனங்கள் தேவனின் கிரியைக்கு எந்தவகையிலும் உதவியாக இருக்க மாட்டார்கள். தேவனுக்காக சுவிசேஷத்தைப் பரப்பவோ அல்லது அவருக்கு சாட்சியாக இருக்கவோ அவர்களால் முடியவில்லை. இது போன்ற ஜனங்கள் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் மற்றும் மிகக் குறைவான அறிவை உடையவர்கள். அவர்களுக்கு தேவனைத் தெரியாததாலும், மேலும் அவரைப் பற்றிய தங்கள் கருத்துகளைத் தூக்கி எறிய முற்றிலும் இயலாதவர்களாகவும் இருப்பதால், அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். இதனை இவ்வாறு கூறலாம்: புதிய விசுவாசிகள் தேவனைப் பற்றிய யூகக் கருத்துகளை வைத்திருப்பது அல்லது அவரைப் பற்றி எதுவும் தெரியாமல் இருப்பது இயல்பானது, ஆனால் பல ஆண்டுகளாக தேவனை விசுவாசித்து, அவருடைய கிரியையில் ஒரு நல்ல பங்கை அனுபவித்த ஒருவருக்கு, யூகக் கருத்துகளைத் தொடர்ந்து வைத்திருப்பது இயல்பான விஷயம் அல்ல, மேலும் இது போன்ற ஒருவன் தேவனைப் பற்றிய அறிவு இல்லாதிருப்பது அவ்வளவு இயல்பானதாக இருக்காது. இதற்குக் காரணம், அவர்கள் கண்டிக்கப்படுவது ஒரு சாதாரண நிலை அல்ல. இந்த அசாதாரண ஜனங்கள் அனைவரும் குப்பைகள்; அவர்கள் தான் தேவனை மிகவும் எதிர்க்கிறார்கள், எதுவும் செய்யாமல் தேவனின் கிருபையை அனுபவித்தவர்கள். அத்தகைய ஜனங்கள் அனைவரும் முடிவில் புறம்பாக்கப்படுவார்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க