தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 289

டிசம்பர் 8, 2022

வரலாறு எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, அதேபோல் தேவனின் கிரியையும் எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது. அவரது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டம் அதன் முடிவை எட்டுவதற்கு, அது ஒரு முன்னோக்கிய திசையில் முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும்; அவர் புதிய பாதைகளைத் தொடங்க வேண்டும், புதிய யுகங்களைத் தொடங்க வேண்டும், புதிய மற்றும் பெரிய கிரியைகளைத் தொடங்க வேண்டும், இவற்றுடன் புதிய நாமங்களையும் புதிய கிரியைகளையும் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு கணத்திலும், தேவனின் ஆவியானவர் புதிய கிரியையைச் செய்கிறார், ஒருபோதும் பழைய வழிகளையோ விதிகளையோ பற்றிக்கொள்வதில்லை. அவருடைய கிரியை இதுவரை நிறுத்தப்படவில்லை, ஆனால் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அது நிறைவேறுகிறது. பரிசுத்த ஆவியின் கிரியை மாறாதது என்று நீ சொன்னால், யேகோவா ஏன் ஆசாரியர்களை ஆலயத்தில் சேவிக்கும்படிக் கேட்டார்? இயேசு வந்தபோது, அவர் பிரதான ஆசாரியராக இருந்தார் என்றும், அவர் தாவீதின் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும், பிரதான ஆசாரியரும் பெரிய ராஜாவுமாக இருந்தார் என்றும் கூறியபோதும் ஏன் இயேசு ஆலயத்திற்குள் நுழையவில்லை? அவர் ஏன் பலிகளைக் கொடுக்கவில்லை? ஆலயத்திற்குள் நுழைவதாகட்டும் அல்லது நுழையாததாகட்டும்—இவை அனைத்தும் தேவனின் கிரியைகள் அல்லவா? மனுஷன் கற்பனை செய்வதுபோல, இயேசு மீண்டும் வருவார், கடைசிக் காலத்திலும் இயேசு என்று அழைக்கப்படுவார், ஒரு வெண்மையான மேகத்தின் மீது வந்து, இயேசுவின் சாயலில் மனுஷரிடையே இறங்குவார்: அது அவருடைய கிரியையை மறுபடியும் செய்வது போலில்லையா? பரிசுத்த ஆவியானவர் பழையதையே பற்றிக்கொண்டிருப்பவரா? மனுஷன் நம்புகிறதெல்லாம் கருத்துக்களை மட்டும்தான், மற்றும் மனுஷன் நேரடி அர்த்தத்திற்கு ஏற்பவும், அவனது கற்பனைக்கு ஏற்பவும்தான் அனைத்தையும் புரிந்துகொள்கிறான்; அவை பரிசுத்த ஆவியினுடைய கிரியையின் கொள்கைகளுடன் முரண்படுகின்றன, மேலும் தேவனின் நோக்கங்களுடனும் அவை ஒத்துப்போவதில்லை. தேவன் அவ்வாறு செயல்பட மாட்டார்; தேவன் அவ்வளவு முட்டாள்தனமானவரோ மதிகெட்டவரோ அல்ல, மேலும் அவருடைய கிரியை நீ கற்பனை செய்வது போல அவ்வளவு எளிதானதல்ல. மனுஷன் கற்பனை செய்யும் சகலத்தையும் அடிப்படையாகக் கொண்டு, இயேசு ஒரு மேகத்தின் மீது வந்து உங்களுக்கு மத்தியில் இறங்குவார். மேகத்தின் மீது வந்திறங்கிய அவரை நீங்கள் காண்பீர்கள், தாம் இயேசு என்று அவர் உங்களுக்குச் சொல்லுவார். நீங்கள் அவருடைய கைகளில் உள்ள ஆணி அடிக்கப்பட்ட தழும்புகளைக் கண்டு, அவரை இயேசு என்று அறிந்து கொள்வீர்கள். அவர் உங்களை மீண்டும் இரட்சிப்பார், மேலும் அவர் உங்களது வலிமைமிக்க தேவனாக இருப்பார். அவர் உங்களை இரட்சிப்பார், உங்களுக்கு ஒரு புதிய நாமத்தைக் கொடுப்பார், உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளைக் கல்லைக் கொடுப்பார், அதன் பிறகு நீங்கள் பரலோகராஜ்யத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டு பரலோகத்தில் பெறப்படுவீர்கள். இத்தகைய நம்பிக்கைகள் மனுஷனின் கருத்துக்கள் அல்லவா? தேவன் மனுஷனின் கருத்துக்களுக்கு ஏற்ப செயல்படுகிறாரா, அல்லது மனுஷனின் கருத்துக்களுக்கு எதிராக அவர் செயல்படுகிறாரா? மனுஷனின் கருத்துக்கள் அனைத்தும் சாத்தானிடமிருந்து பெறப்பட்டவை அல்லவா? மனுஷர் அனைவரும் சாத்தானால் சீர்கெட்டுப் போகவில்லையா? தேவன் தனது கிரியையை மனுஷனின் கருத்துக்களின்படி செய்திருந்தால், அவர் சாத்தானாக மாறியிருக்கமாட்டாரா? அவர் தனது சொந்த சிருஷ்டிப்புகளைப் போலவே இருந்திருக்க மாட்டாரா? அவருடைய சிருஷ்டிப்புகள் இப்போது சாத்தானால் மிகவும் சீர்கெட்டிருப்பதால், மனுஷன் சாத்தானின் உருவமாகிவிட்டான், தேவன் சாத்தானின் விஷயங்களின்படி செயல்படுவதாக இருந்தால், அவர் சாத்தானுடன் கூட்டணி அமைத்திருக்க மாட்டாரா? தேவனின் கிரியையை மனுஷன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? ஆகையால், தேவன் ஒருபோதும் மனுஷனின் கருத்துக்களின்படி செயல்படமாட்டார், மேலும் நீ கற்பனை செய்யும் வழிகளில் ஒருபோதும் செயல்பட மாட்டார். தேவன் ஒரு மேகத்தில் வருவார் என்று அவரே சொன்னதாகச் சொல்பவர்களும் உண்டு. தேவன் அவராகவே சொன்னார் என்பது உண்மைதான், ஆனால் தேவனின் மறைபொருட்களை எந்த மனுஷனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பது உனக்குத் தெரியாதா? தேவனின் வார்த்தைகளை எந்த மனுஷனாலும் விளக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா? பரிசுத்த ஆவியானவரால் நீ ஞானமும் தெளிவும் பெற்றிருக்கிறாய் என்பதில் சந்தேக நிழலுக்கு அப்பாலும் நீ உறுதியாக இருக்கிறாயா? உனக்கு இதுபோன்ற நேரடியான முறையில் காட்டியவர் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்று உன்னால் நிச்சயமாகக் கூறமுடியுமா? உனக்கு அறிவுறுத்தியது பரிசுத்த ஆவியானவரா, அல்லது உன் சொந்தக் கருத்துக்கள் உன்னை அவ்வாறு சிந்திக்க வழிவகுத்ததா? "இது தேவனால் கூறப்பட்டது," என்று நீ சொன்னாய். ஆனால் தேவனின் வார்த்தைகளை அளவிட நம் சொந்த கருத்துக்களையும் மனதையும் பயன்படுத்த முடியாது. ஏசாயா பேசிய வார்த்தைகளைப் பொறுத்தவரை, அவருடைய வார்த்தைகளை முழுமையான உறுதியுடன் உன்னால் விளக்க முடியுமா? அவருடைய வார்த்தைகளை விளக்க உனக்கு தைரியம் இருக்கிறதா? ஏசாயாவின் வார்த்தைகளை விளக்க உனக்கு துணிவில்லை என்பதால், இயேசுவின் வார்த்தைகளை விளக்க மட்டும் நீ ஏன் துணிகிறாய்? இயேசுவா அல்லது ஏசாயாவா, இவர்களில் மிகவும் உயர்ந்தவர் யார்? பதில் இயேசு என்பதால், இயேசு பேசிய வார்த்தைகளை நீ ஏன் விளக்குகிறாய்? தேவன் தனது கிரியையை முன்கூட்டியே உனக்குச் சொல்வாரா? ஒரு சிருஷ்டியால் கூட அறிய முடியாது, பரலோகத்திலுள்ள தூதர்களோ, மனுஷகுமாரனோ கூட அறிய முடியாது, எனவே உன்னால் மட்டும் எப்படி அறிந்து கொள்ளமுடியும்? மனுஷன் பலவற்றைக் கொண்டிருப்பதில்லை. உங்களுக்கு இப்போது முக்கியமானது என்னவென்றால், கிரியையின் மூன்று கட்டங்களை அறிந்து கொள்வதுதான். யேகோவாவின் கிரியை முதல் இயேசுவின் கிரியை வரை மற்றும் இயேசுவின் கிரியை முதல் இந்தத் தற்போதைய கட்டம் வரை, என இந்த மூன்று கட்டங்களும் தொடர்ச்சியான நூலில் தேவனின் ஆளுகையின் முழு வரம்பையும் உள்ளடக்குகிறது, இவை அனைத்தும் ஒரே ஆவியானவரின் கிரியைதான். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து, தேவன் எப்போதும் மனுஷகுலத்தை நிர்வகிக்கும் கிரியையை செய்துவருகிறார். அவரே ஆதியும் அந்தமும் ஆவார், அவரே முதலும் கடைசியும் ஆவார், மேலும், ஒரு யுகத்தைத் தொடங்குவதும் முடித்து வைப்பதும் அவரே. கிரியையின் மூன்றுக் கட்டங்கள், வெவ்வேறு யுகங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில், ஒரே ஆவியானவரின் கிரியை என்பதில் சந்தேகமில்லை. இந்த மூன்று கட்டங்களையும் பிரிப்பவர்கள் அனைவரும் தேவனுக்கு எதிராக நிற்பவர்கள் தான். இப்போது, முதல் கட்டத்திலிருந்து இன்று வரை அனைத்துக் கிரியைகளும் ஒரே தேவனின் கிரியை, ஒரே ஆவியானவரின் கிரியை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க