தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 284

ஏப்ரல் 26, 2023

தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, மேலும் அவருடைய கிரியையின் நோக்கம் மாறாவிட்டாலும், அவர் கிரியை செய்யும் முறை தொடர்ந்து மாறுகிறது, அதாவது தேவனைப் பின்பற்றுகிறவர்களும்கூட தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறார்கள். தேவன் அதிகமான கிரியையைச் செய்யச்செய்ய, தேவனைப் பற்றிய அறிவு மனிதனுக்கு முழுமையாகிறது. தேவனின் கிரியையின் விளைவாக மனிதனின் மனநிலையிலும் அதற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், தேவனுடைய கிரியை எப்போதும் மாறிக்கொண்டு இருப்பதால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள், மேலும் சத்தியத்தை அறியாத அந்த மூடத்தனமான மக்கள் தேவனை எதிர்ப்பவர்களாகின்றனர். தேவனின் கிரியை ஒருபோதும் மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்ப இருப்பதில்லை, ஏனெனில் அவரது கிரியை எப்போதும் புதியதே தவிர ஒருபோதும் பழையதல்ல, மற்றும் அவர் ஒருபோதும் பழைய கிரியையைத் திருப்பிச் செய்வதில்லை, ஆனால் மாறாக முன்னெப்போதும் செய்யப்படாத கிரியையுடன் முன்னோக்கிச் செல்கிறார். தேவன் தாம் செய்த அதே கிரியையைத் திருப்பிச் செய்வதில்லை என்பதாலும், மனிதன் எப்போதும் தேவன் கடந்த காலத்தில் செய்த கிரியையை வைத்தே அவரது தற்போதைய கிரியையை மதிப்பிடுவதினாலும், புதிய காலத்தின் கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் நிறைவேற்றுவது தேவனுக்கு மிகவும் கடினமாகிவிட்டது. மனிதனுக்கோ மிக அதிக அளவிலான கஷ்டங்கள்! அவன் தனது சிந்தனைகளில் மிகவும் பழமைவாதியாக இருக்கிறான்! தேவனின் கிரியையை எவரும் அறியவில்லை, ஆனால் ஒவ்வொருவரும் அதை வரம்பிற்குட்படுத்துகின்றனர். தேவனை விட்டு விலகும் போது மனிதன் ஜீவன், சத்தியம் மற்றும் தேவ ஆசீர்வாதங்களை இழக்கிறான், ஆனால் அவன் ஜீவனையோ அல்லது சத்தியத்தையோ பெறுவதில்லை, மனுக்குலத்திற்குத் தேவன் அருளும் பெரும் ஆசீர்வாதங்களையும் பெறுவதில்லை. எல்லா மனிதர்களும் தேவனை அடையவே விரும்புகின்றனர், ஆனால் தேவனின் கிரியைகளில் எந்த ஒரு மாற்றத்தையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேவனின் புதிய கிரியையை ஏற்காதவர்கள் தேவனின் கிரியை மாறாதது என்றும் அது என்றென்றும் நிலைமாறாமல் இருக்கும் என்றும் நம்புகின்றனர். அவர்களது நம்பிக்கையின்படி, நித்திய இரட்சிப்பை அடையத் தேவையானதெல்லாம் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிப்பது மட்டுமே, மேலும் அவர்கள் மனந்திரும்பி தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு விட்டாலே தேவனின் சித்தம் எப்போதும் நிறைவேறிவிடும். நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கும் தேவனும், மனிதனுக்காகச் சிலுவையில் அறையப்பட்ட தேவனும் மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்; வேதாகமத்தை தேவன் மிஞ்சக் கூடாது மற்றும் மிஞ்ச முடியாது என்பதும் கூட அவர்களது எண்ணம் ஆகும். சரியாகச் சொல்லப்போனால், இந்த எண்ணங்களே அவர்களைப் பழைய நியாயப்பிரமாணங்களுடன் பிணைத்து செத்த விதிகளுடன் சேர்த்துவைத்து அறைந்துள்ளன. தேவனின் புதிய கிரியை எதுவாக இருந்த போதிலும், அது தீர்க்கதரிசனங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், மேலும் அத்தகைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், "உத்தம" இருதயத்துடன் அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் வெளிப்பாடுகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்; அப்படி இல்லை என்றால், அத்தகைய கிரியைகள் தேவனின் கிரியைகளாக இருக்க முடியாது என்று நம்பும் மேலதிகமானோரும் உள்ளனர்; தேவனை அறிந்துகொள்ளுவது என்பது மனிதனுக்கு ஏற்கெனவே ஓர் எளிமையான காரியம் அல்ல. மனிதனின் மூட இருதயத்தோடு அவனது சுய-முக்கியத்துவம் மற்றும் அகம்பாவம் என்னும் கலக சுபாவத்தின் காரணமாக தேவனின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளுவது அவனுக்கு இன்னும் கடினமானதாக இருக்கிறது. தேவனின் புதிய கிரியையை மனிதன் கவனமாக ஆராய்வதுமில்லை, அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை; அதற்குப் பதிலாக, அவன் தேவனிடம் இருந்து வெளிப்பாடுகளுக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் காத்திருந்து ஓர் அலட்சியமான மனப்பாங்கைக் கடைபிடிக்கிறான். இது தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்து அவரை எதிர்ப்பவர்களின் நடத்தை அல்லவா? இத்தகைய மக்கள் தேவனின் அங்கீகாரத்தை எவ்வாறு பெற முடியும்?

இயேசுவின் கிரியையும் தகர்ந்து போய்விட்டது என்று இன்று நான் கூறுவது போலவே கிருபையின் காலத்தில் யேகோவாவின் கிரியை தகர்ந்து போய்விட்டது என்று இயேசு கூறினார். கிருபையின் காலம் இல்லாமல் இருந்து நியாயப்பிரமாணத்தின் காலம் மட்டுமே இருந்திருந்தால், இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்க மாட்டார் மேலும் அனைத்து மனுக்குலத்தையும் இரட்சித்திருக்கவும் மாட்டார். நியாயப்பிரமாணத்தின் காலம் மட்டுமே இருந்திருந்தால், மனுக்குலம் இன்றளவும் வந்தடைந்திருக்க முடியாது. வரலாறு முன்னோக்கி நகர்கிறது, மேலும் வரலாறு என்பது தேவனின் கிரியையின் இயற்கைச் சட்டம் அல்லவா? பிரபஞ்சம் முழுவதிலும் அவர் மனிதனை நிர்வகிப்பது பற்றிய ஒரு சித்தரிப்பு அல்லவா இது? வரலாறு முன்னோக்கி நகர்கிறது, மேலும் தேவனின் கிரியையும் அவ்வாறே முன்னோக்கி நகர்கிறது. தேவ சித்தம் தொடர்ந்து மாறுகிறது. அவரால் ஆறாயிரம் ஆண்டுகளாகக் கிரியை என்னும் ஒற்றைக் கட்டத்திலேயே நிலைத்திருக்க முடியாது, ஏனெனில் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது போல, தேவன் எப்போதுமே புதியவராக இருக்கிறார், மேலும் அவர் ஒருபோதும் பழையவர் அல்ல, மற்றும் சிலுவையில் அறையப்பட்டது போல ஒருமுறை, இருமுறை, மூன்று முறைகள்…. என அவர் தொடர்ந்து அறையப்பட்டு அவ்விதமான கிரியையை அவரால் ஆற்ற முடியாது, அவ்வாறு சிந்திப்பதே கேலிக்குரியதாக இருக்கும். தேவன் தொடர்ந்து ஒரே கிரியையை செய்துகொண்டே இருப்பதில்லை; நான் எவ்வாறு உங்களிடம் புதிய வார்த்தைகளைப் பேசியும் ஒவ்வொரு நாளும் புதிய கிரியையைச் செய்கிறேனோ அதுபோல அவருடைய கிரியையும் எப்போதும் மாறிக்கொண்டிருக்கிறது மற்றும் எப்போதும் புதிதானது. இதுதான் நான் செய்யும் கிரியை, மற்றும் எது முக்கியம் என்றால் "புதிது" மற்றும் "அற்புதமானது" என்ற வார்த்தைகளே. "தேவன் மாறாதவர், மற்றும் தேவன் எப்போதும் தேவனாகவே இருப்பார்": இந்தக் கூற்று நிச்சயமாகவே உண்மையானது; தேவனின் சாராம்சம் மாறுவதில்லை, தேவன் எப்போதும் தேவனே, மற்றும் அவர் ஒருபோதும் சாத்தானாக மாற முடியாது, ஆனால் இது அவரது கிரியையானது அவரது சாரம்சத்தைப் போன்று நிலையாகவும் மாறாததாகவும் இருக்கும் என்று நிரூபிக்காது. தேவன் மாறாதவர் என்று நீ அறிவிக்கிறாய், ஆனால் எவ்வாறு, பின்னர், தேவன் எப்போதும் புதியவர் மற்றும் ஒருபோதும் பழையவர் அல்ல என்று உன்னால் விளக்க முடியும்? தேவனின் கிரியை தொடர்ந்து பரவுகிறது மேலும் தொடர்ந்து மாறுகிறது, மற்றும் அவரது சித்தம் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு மனிதனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மனிதன் தேவனின் கிரியையை அனுபவிக்கும்போது, அவனது மனநிலை முடிவின்றி மாறுகிறது போல அவனது அறிவும் மாறுகிறது. பின் எங்கிருந்து இந்த மாற்றம் எழுகிறது? அது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் தேவனின் கிரியையில் இருந்தல்லவா? மனிதனின் மனநிலை மாறமுடியும் என்றால், என்னுடைய கிரியையும் என் வார்த்தைகளும் தொடர்ந்து மாற மனிதனால் ஏன் அனுமதிக்க முடியாது? மனிதனின் கட்டுப்பாடுகளுக்கு நானும் உட்பட வேண்டுமா? இதில், திணிக்கப்படும் வாதங்களையும் நெறியற்ற தர்க்கங்களையும் நீ பயன்படுத்தவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க