தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 283

மார்ச் 5, 2023

தேவனின் கிரியையில் எப்போதும் புதிய முன்னேற்றங்கள் இருப்பதால், புதிய கிரியை வரும்போது, பழையதாகி வழக்கத்தில் இல்லாமல் போகிற கிரியை உண்டு. பழையதும் புதியதுமான இந்த வெவ்வேறு வகையான கிரியைகள் ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன, ஒவ்வொரு நடவடிக்கையும் கடைசி நடவடிக்கையிலிருந்து தொடர்கிறது. புதிய கிரியை வருவதால் பழையவை நீக்கப்படவேண்டியது கட்டாயம். எடுத்துக்காட்டாக, மனுஷனின் பல்லாண்டு அனுபவம் மற்றும் போதகத்தோடு இணைந்த நீண்டகால பழக்கவழக்கங்கள், சொல்வழக்குகள் மனுஷனின் மனதில் எல்லாவிதமான கருத்துக்களையும் ஏற்படுத்தி இருக்கும். பழங்காலம் முதல் பல ஆண்டுகளாகப் பரவி வரும் பாரம்பரியக் கோட்பாடுகள் மனுஷனின் மனதில் இதுபோன்ற நம்பிக்கைகளை ஏற்புடையதாக உருவாக்கி வரும் நிலையில், தேவன் இன்னும் தமது உண்மையான முகத்தை, உள்ளார்ந்த தன்மையை மனுஷனுக்கு முழுவதுமாக வெளிப்படுத்த வேண்டும். காலப்போக்கில் தேவன்மேல் மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையின்மீது இதுபோன்ற பல்வேறு நம்பிக்கைகளின் தாக்கம், தேவ ஜனங்களில் எல்லாவிதமான நம்பிக்கை சார்ந்த புரிதல்கள் உருவாக தொடர்ந்து காரணமாகிறது; தேவனை சேவிக்கும் சமயரீதியான பல மக்கள் அவரது எதிரிகளாக மாறிவிட இது வழிவகுக்கிறது என்று சொல்லலாம். ஆகவே, மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் தேவனை எதிர்த்தும், அவ்வளவு அதிகமாய் அவருக்கு எதிரிகளாகவும் இருக்கின்றனர். தேவனின் கிரியை ஒருபோதும் பழமையாய்ப் போகாது; அது எப்போதும் புதியதாய் இருக்கும்; ஒருபோதும் சித்தாந்தங்களை உருவாக்காது; மாறாக, தொடர்ந்து மாறி, பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இம்முறையில் செயல்படுவது தேவனின் இயல்பான மனநிலையின் ஒரு வெளிப்படுதலாகும். இது தேவனின் கிரியையின். இயல்பான கொள்கையாகவும், தேவன் தமது ஆளுகையை நிறைவேற்றும் வழிகளில் ஒன்றாகவும் உள்ளது. தேவன் இவ்வழியில் செயல்படாவிட்டால் மனுஷன் மாறாமல் அல்லது தேவனைக் குறித்து அறிந்துகொள்ள இயலாமல் போகும்; சாத்தான் தோற்கடிக்கப்படமாட்டான். இப்படியாக அவரது கிரியையில், மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது, ஆனால் இது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடக்கிறது. எப்படியாயினும் தேவனில் மனுஷன் நம்பிக்கை வைக்கும் முறையானது சற்று வேறுபட்டது. அவன் பழைய, பழக்கமான சித்தாந்தங்கள் மற்றும் அமைப்புகளைப் பற்றிக் கொள்கிறான்; அவை எந்த அளவுக்குப் பழமையாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவை அவன் மனதுக்குப் பிடித்தமானவையாய் உள்ளன. மதியீனமான, கல்லைப் போல் இறுகிய மனுஷ மனதினால் தேவனுடைய ஆராய்ந்துமுடியாத புதிய கிரியைகளையும் வார்த்தைகளையும் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? ஒருபோதும் பழையவராகிப் போகாமல் எப்போதும் புதிதாய் இருக்கின்ற தேவனை மனுஷன் விரும்பவில்லை; நீண்ட பல்லும் வெள்ளை முடியும் கொண்டு ஓரிடத்தில் இருக்கிற பழைய தேவனையே அவன் விரும்புகிறான். இப்படி தேவனும் மனுஷனும் தங்களுக்கென்று சொந்த விருப்பங்களை கொண்டிருப்பதால், மனுஷன் தேவனுக்கு விரோதியாகிறான். ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகள் தேவன் புதிய கிரியைகளைச் செய்து கொண்டிருக்கிறார்; இன்றும்கூட பல முரண்பாடுகள் இருந்து வருகின்றன. பின்னர் அவை தீர்வுக்கு அப்பாற்பட்டவையாகி விடுகின்றன. மனுஷனுடைய பிடிவாதம் அல்லது எந்த மனுஷனாலும் மாற்றக்கூடாத தேவனின் ஆளுகை ஆணைகளின் காரணமாக அப்படி இருக்கக்கூடும். ஆனாலும் தம் பக்கம் யாருமில்லாததுபோல தேவன் தமது பூர்த்தியாகாத இரட்சிப்பின் பணிகளை நடத்திக்கொண்டிருக்கும்போது, அந்த குருமாரும் குருத்துவ பெண்களும் இன்னும் செல்லரித்துப் போன பழைய புஸ்தகங்கள் மற்றும் காகிதங்களை பற்றிக்கொண்டுள்ளனர். இந்த முரண்பாடுகள் தேவனுக்கும் மனுஷனுக்குமிடையே விரோதத்தை உண்டு பண்ணினாலும், அவை சரிசெய்யப்படக்கூடாதவையாயிருந்தாலும், அவை இருந்தாலும் இல்லாததுபோல தேவன் அவற்றின்மேல் கவனம் செலுத்தமாட்டார். எப்படியாயினும் மனுஷன் தன்னுடைய நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய எண்ணங்களை விட்டுவிடாமல் இருக்கிறான். மனுஷன் தன் நிலைப்பாட்டிலிருந்து மாறாமல் இருந்தாலும், தேவனது பாதங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன; சூழ்நிலைக்கேற்ப தம் நிலைப்பாட்டை அவர் எப்போதும் மாற்றிக்கொண்டே இருக்கிறார் என்பது விளக்கம் தேவைப்படாத உதாரணமாகும். முடிவில் போராட்டமே இல்லாமல் மனுஷன் தோற்கடிக்கப்படுவான். தம்மால் தோற்கடிக்கப்பட்ட அத்தனை எதிரிகளுக்கும் தேவன் பெரிய பகைவராகவும், தோற்கடிக்கப்பட்ட மற்றும் தோற்கடிக்கப்படாத மனுக்குலத்திற்கான வீரராகவும் திகழ்வார். தேவனோடு போட்டியிட்டு யாரால் ஜெயம்பெற இயலும்? தேவனுடைய கிரியை தொடங்கும்போதுதான் மனுஷனுடைய கருத்துகள் பிறப்பதால், அவை தேவனிடமிருந்து வந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. எப்படியாயினும் தேவன் இதற்காக மனுஷனை மன்னிப்பதில்லை; மாறாக, தமது கிரியைக்குப் புறம்பான தமது கிரியை தொடங்கும்போது, "தேவனுக்காக" என்று தொகுப்பு தொகுப்பாய் மனுஷன் உருவாக்கும் தயாரிப்புகளுக்காக அவர் மனுஷனை மெச்சுவதில்லை. அதற்குப் பதிலாக, மனுஷனுடைய நம்பிக்கைகளை குறித்தும் பழைமையானதும் சமயரீதியானதுமான நம்பிக்கையைக் குறித்தும் அவர் மிகவும் வெறுப்படைந்திருக்கிறார், மேலும் அவர் இக்கருத்துக்கள் எப்போது முதன்முதலாக தோன்றின என்ற காலத்தை ஒப்புக்கொள்ள மனமில்லாதிருக்கிறார். மனுஷனுடைய இப்படியான நம்பிக்கைகள் தேவனிடத்திருந்தல்ல, சாத்தானிடமிருந்தும் மனுஷ சிந்தனைகளிலிருந்தும் மனதிலிருந்தும் தோன்றி மனுஷனால் பரப்பப்படுவதால் இக்கருத்துகள் தமது கிரியையினால் தோன்றியவை என்பதை அவர் ஒப்புக்கொள்ளமாட்டார். தமது கிரியை பழையதாகவும் செத்துப்போனதாகவும் அல்ல, புதிதாயும் ஜீவனுள்ளதாயும் இருக்கவேண்டுமென்பதே எப்போதும் தேவனின் நோக்கம். அவை காலத்திற்கேற்ப மனுஷனால் பின்பற்றப்படவேண்டியவையாயினும், அவை மாற்றப்படக்கூடாததும் அழியாதவையுமல்ல. ஏனென்றால் அவர் மனுஷனை ஜீவித்திருக்கவும் புதிதாயிருக்கவும் செய்யும் தேவனாக இருக்கிறார், மாறாக, சாத்தானோ மனுஷன் சாகவும் பழையவனாகிப் போகவும் காரணமாகிறான். உங்களால் இதை இன்னும் புரிந்துகொள்ள இயலவில்லையா? தேவனைக் குறித்து உனக்குக் கருத்துகள் இருந்தாலும், உன் மனம் மூடியிருப்பதினால் அவற்றை விட்டொழிக்க இயலவில்லை. தேவனுடைய கிரியைகளில் மிகவும் குறைவான அறிவு இருப்பதாலோ, அவரது கிரியைகள் மனுஷ விருப்பங்களிலிருந்து வேறுபட்டு இருப்பதாலோ தேவன் தமது கடமைகளில் எப்போதும் அலட்சியமாக இருப்பதாலோ அல்ல. தேவன் காரியங்களை உனக்கு கடினமாக்கி வைத்திருப்பதால் அல்ல, நீ கீழ்ப்படியாதவனாக இருப்பதனாலும், சிருஷ்டியின் தன்மை உன்னிடம் சிறிதும் காணப்படாததனாலும், உன் நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட முடியவில்லை. இவை எல்லாவற்றையும் நீயே வருவித்துக் கொண்டாய்; தேவனுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை. எல்லா பாடுகளும் தொல்லைகளும் மனுஷனாலேயே உருவாக்கப்படுகின்றன. தேவனுடைய எண்ணங்கள் எப்போதும் நன்மையானவையாய் இருக்கின்றன. நீ கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள தாம் காரணமாவதையல்ல, காலம் செல்லச் செல்ல நீ மாற்றம் பெற்று புதுப்பிக்கப்படவேண்டுமென்றே அவர் விரும்புகிறார். உனக்கு எது நன்மையானதென்று இன்னும் அறிந்திடாமல், எப்போதும் ஆராய்ந்து கொண்டு அல்லது பரிசோதித்துக் கொண்டு இருக்கிறாய். தேவன் உனக்குக் காரியங்களை கடினமாக்கவில்லை; உனக்குக் கீழ்ப்படியாமை பெரிதாயிருப்பதோடு தேவன்மேல் உனக்கு எந்தப் பயமும் இல்லை. மிகச்சிறிய சிருஷ்டிப்பு ஒன்று, முன்பு தேவனால் கொடுக்கப்பட்ட பழையவற்றை எடுத்துக்கொண்டு, திரும்ப தேவனை தாக்குவதற்கு அதை பயன்படுத்தினால் அது மனுஷனின் கீழ்ப்படியாமைதானே? தேவன் முன்பு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு மனுஷர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை; அவர்கள் அந்த அழுகிய கருத்துக்களைக் குறித்து எதுவும் சொல்ல விரும்பாததனால், எந்தப் பெறுமதியும் இல்லாத, துர்நாற்றம் வீசுகிற, அழுகிய, அலங்கார வார்த்தைகளைப் பகட்டாக காண்பிக்கத் தகுதியில்லாதவர்கள். அவர்கள் இன்னும் அதிகத் தகுதியற்றவர்கள்தானே?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க