தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 282

மார்ச் 5, 2023

தேவனை விசுவாசிக்கிற விஷயத்தில் ஒருவர் எப்படி அவரை அறிந்துகொள்ள வேண்டும்? தேவனுடைய வார்த்தைகள் மற்றும் அவரது இன்றைய கிரியைகளின் அடிப்படையில் ஒருவர் தேவனை அறிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, விலகலோ அல்லது தவறான நம்பிக்கையோ இல்லாமல் தேவனுடைய கிரியைகளை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும். இதுதான் தேவனை அறிந்து கொள்ளுகிறதன் அஸ்திபாரம் ஆகும். தேவனுடைய வார்த்தைகளை குறித்த சுத்தமான புரிந்துகொள்ளுதல் குறைவாய்க் காணப்படும் பல்வேறுவிதமான அனைத்துத் தவறான உபதேசங்களும் சமயம் சார்ந்த நோக்கம் கொண்டவையாகும்; அவை மாறுபட்டதும் தவறான புரிந்துகொள்ளுதலுமாகும். தேவனுடைய வார்த்தைகளை எடுத்து அவற்றைக் கடந்தகாலத்தில் புரிந்துகொண்டு, தேவனுடைய இன்றைய வார்த்தைகளை அவற்றுக்கு எதிராய் மதிப்பிடுவதே மதவாதிகளின் சிறந்த திறமையாகும். இன்றைய தேவனை சேவிக்கும்போது, கடந்த காலத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஞானத்தினால் வெளிப்படுத்தப்பட்ட காரியங்களை நீங்கள் பற்றிக்கொண்டால் அது இடையூறு விளைவிக்கக்கூடியதாகவும், உங்கள் நடைமுறைகள் பழமையாகிப் போனதாகவும் வெற்று சமய சடங்காச்சாரமாகவும் மட்டுமே இருக்கும். தேவனை சேவிப்பவர்கள் ஏனைய தராதரங்களோடு வெளிப்புறமாகத் தாழ்மையாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் என்று நீ நம்பினால், அவ்வகையான அறிவை இக்காலத்தில் நடைமுறைப்படுத்தினால், அவ்வறிவு சமய நோக்கம் கொண்டதாகும்; அச்செயல்பாடு மாய்மாலமாகிவிடும். "சமயம் சார்ந்த நம்பிக்கை" என்னும் பதம் (முன்பு தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தைகளின் புரிதல் மற்றும் பரிசுத்த ஆவியானவரால் நேரடியாக வெளிப்படுத்தப்பட்ட வெளிச்சம் உள்பட) பழமையாகிப்போன மற்றும் வழக்கத்தில் இல்லாத காரியங்களைக் குறிக்கும். இக்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்தினால் அவை தேவனின் செயல்பாட்டுக்கு இடையூறாக அமையும்; மனுஷனுக்கு ஒரு நன்மையையும் கொண்டு வராது. சமயம் சார்ந்த நம்பிக்கைகளை மக்கள் தம்மிடமிருந்து அகற்றாவிட்டால், அது அவர்கள் தேவனை சேவிப்பதற்குப் பெரிய தடையாக மாறும். சமயம் சார்ந்த நம்பிக்கையுள்ள மக்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையுடன் முன்னேறிச் செல்ல எந்த வழியும் இல்லை; அவர்கள் ஒன்று, இரண்டு என அடி சறுக்குவார்கள். ஏனென்றால் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் மனுஷனை அசாதாரண சுயநீதி கொண்டவனாகவும் அகந்தை கொண்டவனாகவும் மாற்றுகின்றன. தேவன் தாம் முன்பு கூறியவற்றை, செய்தவற்றைக் குறித்த பழைய நினைவுகளில் திளைப்பவரல்லர்; மாறாக, ஏதாவது ஒன்று பழையதாகிவிட்டால் அதை அவர் நீக்கிப்போடுகிறார். உண்மையில் நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட முடியவில்லையா? தேவன் முற்காலத்தில் கூறிய வார்த்தைகளைப் பற்றிக்கொண்டிருந்தால், இது நீ தேவனின் கிரியைகளை அறிந்திருக்கிறாய் என்பதை நிரூபிக்கிறதா? இன்று பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தை உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், கடந்த கால வெளிச்சத்தைப் பற்றிக் கொண்டிருப்பதால், நீ தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாய் என்று நிரூபிக்க இயலுமா? இன்னும்கூட சமயம் சார்ந்த நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட இயலவில்லையா? அப்படியாயின் நீ தேவனை எதிர்க்கும் ஒருவனாக மாறுவாய்.

சமயம் சார்ந்த நம்பிக்கைகளை மக்களால் விட்டுவிடக்கூடுமாயின் அவர்கள் தேவனின் இன்றைய கிரியைகளையும் வார்த்தைகளையும் மதிப்பிடுவதில் தங்கள் மனதை ஈடுபடுத்தாமல் நேரடியாகக் கீழ்ப்படிவார்கள். தேவனின் இன்றைய கிரியை கடந்த காலத்தைப் போலன்றி வெளிப்பட்டாலும், உன்னால் கடந்த கால பார்வைகளை விட்டுவிட்டு தேவனின் இன்றைய கிரியைக்கு நேரடியாகக் கீழ்ப்படிய முடியும். தேவன் கடந்த காலத்தில் எப்படி செயல்பட்டார் என்பதைக் கருதாமல், தேவனின் இன்றைய கிரியைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ளும் திறன் உனக்கு இருந்தால், நீ அவற்றின் நம்பிக்கைகளை விட்டுவிடுபவனாகவும், தேவனுக்குக் கீழ்ப்படிபவனாகவும், தேவனின் வார்த்தைகளுக்கும் அவரது கிரியைகளுக்கும் கீழ்ப்படியக்கூடியவனாகவும் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவனாகவும் இருப்பாய். இதில் நீ தேவனுக்கு உண்மையாய் கீழ்ப்படிகிறவனாக இருப்பாய். தேவனின் கிரியையைப் பரிசோதிக்காமல் அல்லது ஆராய்ந்து பார்க்காமல், தேவன் தமது முந்தைய கிரியையை மறந்துவிட்டதுபோல நீயும் அதை மறந்திருப்பாய். நிகழ்காலம் நிகழ்காலம்தான்; கடந்த காலம் கடந்தகாலம்தான். முன்பு தாம் செய்தவற்றை தேவன் இன்று புறம்பே தள்ளி வைத்துவிட்டதால், நீ அதில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடாது. அப்படிப்பட்டவரே தேவனுக்கு முழுவதுமாக கீழ்ப்படிகிறவராக, தங்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைளை முற்றிலும் விட்டுவிடுகிறவராக இருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க