தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 329

அக்டோபர் 30, 2022

இதற்கு முன்பு, தேவன் பரலோகத்தில் வீற்றிருந்தபோது, மனுஷன் தேவனை வஞ்சிக்கும் விதத்தில் செயல்பட்டான். இன்று, தேவன் மனுஷர்களிடையே இருக்கிறார்—எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என்பது யாருக்கும் தெரியாது—ஆனாலும் காரியங்களைச் செய்வதில் மனுஷன் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறான் மற்றும் அவரை முட்டாளாக்க முயற்சிக்கிறான். மனுஷன் தன் சிந்தனையில் மிகவும் பின்தங்கியவனல்லவா? யூதாஸிடமும் அப்படித்தான் இருந்தது: இயேசு வருவதற்கு முன்பு, யூதாஸ் தன் சகோதர சகோதரிகளைப் பொய்களைச் சொல்லி வஞ்சித்து வந்தான், இயேசு வந்த பிறகும் அவன் மாறவில்லை; அவன் இயேசுவை அறிந்திருக்கவில்லை, இறுதியில் அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இது அவன் தேவனை அறியாததால் அல்லவா? இன்று, நீங்கள் இன்னும் தேவனை அறியவில்லை என்றால், நீங்கள் மற்றொரு யூதாஸாக மாற வாய்ப்புள்ளது, இதைத் தொடர்ந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருபையின் காலத்தில் இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட பெருந்துயரம் மீண்டும் நடைபெறும். இதை நீங்கள் நம்பவில்லையா? இது ஓர் உண்மை! தற்போது, பெரும்பான்மையான ஜனங்கள் இதேபோன்ற சூழ்நிலையில் உள்ளனர். இதை நான் கொஞ்சம் விரைவில் சொல்லிக்கொண்டிருக்கலாம். அத்தகையவர்கள் அனைவரும் யூதாஸின் பாத்திரத்தை ஏற்று நடிக்கின்றனர். நான் முட்டாள்தனமானவற்றைப் பேசவில்லை, ஆனால் உண்மையின் அடிப்படையில் பேசுகிறேன். உங்களால் முடியாது, ஆனால் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆயினும் பலர் மனத்தாழ்மையாக இருப்பதாகப் பாசாங்கு செய்தாலும், அவர்களின் இருதயங்களில் பயனற்ற நீர் திரண்டிருக்கும், அது துர்நாற்றம் வீசும் நீரைத் தவிர வேறு எதுவும் இல்லை. இப்போது தேவாலயத்தில் இதுபோன்றவர்கள் பலர் உள்ளனர், இது எனக்கு முற்றிலும் தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இன்று, என் ஆவி எனக்காகத் தீர்மானிக்கிறது, எனக்காகச் சாட்சியம் அளிக்கிறது. எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்களா? உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் மோசமான எண்ணங்கள், உங்கள் இருதயங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் விஷயங்கள் எதுவும் எனக்குப் புரியவில்லை என்று நினைக்கிறீர்களா? தேவனிடமிருந்து சிறந்ததைப் பெறுவது அவ்வளவு எளிதானதா? நீங்கள் விரும்பும் விதத்தில் அவரை நடத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? கடந்த காலத்தில், நீங்கள் கட்டுப்படுத்தப்படாமல் இருக்க நான் கவலைப்பட்டேன், எனவே நான் உங்களுக்குச் சுதந்திரம் அளித்துக்கொண்டே இருந்தேன், ஆனால் நான் அவர்களுக்கு நல்லவராக இருக்கிறேன் என்று மனுக்குலத்தால் சொல்ல முடியவில்லை, நான் ஒரு அங்குலம் கொடுத்தபோது அவர்கள் ஒரு முழத்தை எடுத்துக்கொண்டார்கள். உங்களுக்குள்ளேயே கேட்டுப்பாருங்கள்: நான் கிட்டத்தட்ட யாரையும் ஒருபோதும் கையாண்டதில்லை, யாரையும் லேசாகக் கண்டித்ததில்லை, ஆனாலும் மனுஷனின் உள்நோக்கங்கள் மற்றும் கருத்துகள் குறித்து நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். தேவனைக் குறித்து சாட்சியம் அளிக்கும் தேவன் ஒரு முட்டாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த விஷயத்தில், நீங்கள் பெரிய குருடர் என்று நான் சொல்கிறேன்! நான் உங்களை அம்பலப்படுத்த மாட்டேன், ஆனால் நீங்கள் எவ்வளவு துன்மார்க்கம் நிறைந்தவராவீர்கள் என்று பார்ப்போம். உங்கள் புத்திசாலித்தனமான சிறிய உத்திகள் உங்களைக் காப்பாற்ற முடியுமா, அல்லது தேவனை நேசிக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்தாலும், உங்களைக் காப்பாற்ற முடியுமா என்பதைப் பார்ப்போம். இன்று, நான் உங்களைக் கண்டிக்க மாட்டேன்; தேவனுடைய காலத்தில், அவர் உங்கள்மீது எவ்வாறு பழிவாங்குவார் என்பதைப் பார்ப்போம். உங்களுடன் இப்போது சும்மா வீண் அரட்டை செய்ய எனக்கு நேரமில்லை. மேலும் எனது பெரிய ஊழியத்தை உங்கள் நிமித்தம் தாமதப்படுத்த நான் விரும்பவில்லை. உங்களைப் போன்ற ஒரு புழுவைக் கையாள தேவன் நேரத்தைச் செலவிடுவதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல. எனவே நீங்கள் எவ்வளவு நெறிதவறிப் போவீர்கள் என்பதைப் பார்ப்போம். இதுபோன்றவர்கள் தேவனைப் பற்றிய அறிவைச் சிறிதளவும் பின்பற்றுவதில்லை, அவர் மீது சிறிதளவும் அன்பு கொண்டிருக்கவில்லை, இன்னும் தேவன் அவர்களை நீதிமான்கள் என்று அழைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், இது நகைச்சுவையல்லவா? ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஜனங்கள் உண்மையில் நேர்மையானவர்கள் என்பதால், நான் தொடர்ந்து மனுஷனுக்கு வாழ்க்கை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். இன்று நான் செய்து முடிக்க வேண்டியதை மட்டுமே நான் செய்து முடிப்பேன், ஆனால் எதிர்காலத்தில் ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் செய்ததைப் பொறுத்து நான் தகுந்த தண்டனையைக் கொண்டுவருவேன். நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன், ஏனென்றால் இது துல்லியமாக நான் செய்யும் செயல். நான் செய்யக்கூடாததை அல்ல, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே செய்கிறேன். ஆயினும்கூட, நீங்கள் பிரதிபலிபலனாக அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்: தேவனைப் பற்றிய உங்கள் அறிவு எவ்வளவு உண்மை? நீங்கள் தேவனை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறையும் ஒருவரா? என் இறுதி வார்த்தைகள் இதுவே: தேவனைச் சிலுவையில் அறைகிறவர்களுக்கு ஐயோ!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “துன்மார்க்கன் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க