தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 305

ஜனவரி 15, 2023

நீங்கள் எப்போதுமே கிறிஸ்துவைக் காண விரும்புகிறீர்கள், ஆனால் உங்களை இவ்வளவு உயர்ந்த மதிப்பில் வைத்திருக்க வேண்டாம் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்; யாரும் கிறிஸ்துவைக் காணலாம், ஆனால் கிறிஸ்துவைக் காணும் தகுதி யாருக்கு இல்லை என்று நான் சொல்கிறேன். ஏனென்றால், மனுஷனின் இயல்பு தீமை, அகம்பாவம் மற்றும் கலகத்தால் சூழப்பட்டிருக்கிறது, நீ கிறிஸ்துவைக் காணும் தருணத்தில், உனது இயல்பு உன்னை அழித்து, உனக்கு மரண தண்டனையைக் கொடுக்கும். ஒரு சகோதரர் (அல்லது ஒரு சகோதரி) உடனான உனது ஐக்கியம் உன்னைப் பற்றி அதிகமாகக் காட்டாமல் போகலாம், ஆனால் நீ கிறிஸ்துவோடு உன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும்போது அது அவ்வளவு எளிதல்ல. எந்த நேரத்திலும், உனது கருத்துகள் வேரூன்றக்கூடும், உனது ஆணவம் முளைக்கத் தொடங்கும், மேலும் உனது கலகம் அத்திப்பழங்களைக் கொடுக்கிறது. அத்தகைய மனுஷத்தன்மையுடன் நீ கிறிஸ்துவுடன் ஐக்கியப்படுவதற்கு எவ்வாறு தகுதியுடையவனாக இருப்பாய்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உன்னால் அவரை தேவனாகக் கருத முடியுமா? தேவனுக்கு நிஜமாக உன்னால் ஒப்புக்கொடுக்க முடியுமா? காணக்கூடிய கிறிஸ்துவை ஒரு மனுஷனாகக் கருதி, உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் உயர்ந்த தேவனை யேகோவாவாகத் தொழுகிறீர்கள். உங்கள் உணர்வு மிகவும் தாழ்ச்சியானது மற்றும் உங்களின் மனுஷத்தன்மை மிகவும் தாழ்ந்தது! கிறிஸ்துவை எப்போதும் தேவனாகப் பார்க்க உங்களால் இயலவில்லை; எப்போதாவது, நீங்கள் விரும்பினால், நீங்கள் அவரைப் பற்றிக்கொண்டு தேவனாக வணங்குவீர்கள். இதனால்தான் நீங்கள் தேவனின் விசுவாசிகள் அல்ல, கிறிஸ்துவுக்கு எதிராகப் போராடும் குற்றத்திற்குத் துணைப்போகும் கூட்டாளிகள் என்று நான் சொல்கிறேன். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டும் மனுஷர்களுக்குக்கூட கைம்மாறு அளிக்கப்படுகிறது, ஆனாலும் உங்களிடையே இதுபோன்ற கிரியைகளைப் புரிந்த கிறிஸ்து, மனுஷனின் அன்பையோ, அவனுடைய கைம்மாறையோ கீழ்ப்படிதலையோ பெறவில்லை. இது மிகுந்த கவலையளிக்கும் ஒன்றல்லவா?

தேவன் மீது நீ விசுவாசம் கொண்டிருந்த எல்லா ஆண்டுகளிலும், நீ ஒருபோதும் யாரையும் சபிக்கவில்லை அல்லது ஒரு கெட்ட செயலைச் செய்யவில்லை, ஆனால் கிறிஸ்துவுடனான உனது தொடர்பில், உன்னால் சத்தியத்தைப் பேசவோ, நேர்மையாகச் செயல்படவோ, அல்லது கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படியவோ முடியவில்லை; அவ்வாறான நிலையில், நீ தான் உலகிலேயே மிகவும் கொடியவன் மற்றும் வஞ்சகமானவன் என்று நான் சொல்கிறேன். நீ உனது உறவினர்கள், நண்பர்கள், மனைவி (அல்லது கணவன்), மகன்கள் மற்றும் மகள்கள் மற்றும் பெற்றோர்களிடம் மிகவும் நட்புள்ளவனாகவும், அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்கலாம், மற்றவர்களை ஒருபோதும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளாதவனாகவும் இருக்கலாம், ஆனால் உன்னால் கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இருக்க இயலவில்லையென்றால், உன்னால் அவருடன் இணக்கமாகச் செயல்பட முடியாவிட்டால், நீ உனது அண்டைவீட்டாருக்கு உனது பணம் அனைத்தையும் செலவிட்டாலும் அல்லது உனது தந்தை, தாய், மற்றும் உனது குடும்ப உறுப்பினர்களை மிகக் கவனமாக கவனித்துக் கொண்டாலும்கூட, நீ இன்னும் பொல்லாதவன் என்றும், மேலும் தந்திரங்கள் நிறைந்தவன் என்றும் நான் கூறுவேன். நீ மற்றவர்களுடன் பழகுவதாலோ அல்லது சில நல்ல செயல்களைச் செய்வதாலோ நீ கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இருக்கிறாய் என்று நினைக்க வேண்டாம். உனது தொண்டு செய்யும் நோக்கம் பரலோகத்தின் ஆசீர்வாதங்களைத் தந்திரமாகப் பெற்றுத்தரும் என்று நீ நினைக்கிறாயா? ஒரு சில நல்ல செயல்களைச் செய்வது உனது கீழ்ப்படிதலுக்கு மாற்றாக இருக்கும் என்று நீ நினைக்கிறாயா? உங்களில் ஒருவரால் கூட கையாளப்படுவதையும் கிளைநறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் நீங்கள் அனைவரும் கிறிஸ்துவின் சாதாரண மனுஷத்தன்மையைத் தழுவுவதற்கு சிரமப்படுகிறீர்கள், இருந்தபோதிலும் நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதைப் பற்றி தொடர்ந்து எக்காளமிடுகிறீர்கள். உங்களுக்கு இருப்பதைப் போன்ற விசுவாசம் பொருத்தமான பதிலடியைக் குறைக்கும். பகட்டான மாயைகளில் ஈடுபட்டுக் கிறிஸ்துவைக் காண விரும்புவதை நிறுத்துங்கள், ஏனென்றால் நீங்கள் மிகவும் சிறியவர்கள், எந்த அளவுக்கு என்றால் நீங்கள் அவரைப் பார்க்க கூட தகுதியற்றவர்கள். நீ உனது கலகத்தன்மையைப் பரிபூரணமாக நிவர்த்தி செய்தால், மற்றும் உன்னால் கிறிஸ்துவோடு இணக்கமாக இருக்க முடிந்தால், அந்தத் தருணத்தில் தேவன் இயல்பாகவே உனக்குத் தோன்றுவார். நீ கிளைநறுக்குதலுக்கோ அல்லது நியாயந்தீர்ப்பளித்தலுக்கோ உள்ளாவதற்கு முன் தேவனைக் காணச் சென்றால், நீ நிச்சயமாக தேவனின் எதிராளியாவாய் மற்றும் உனக்கு அழிவு விதிக்கப்படும். மனுஷனின் இயல்பு தேவனுக்கு இயல்பாகவே விரோதமானது, ஏனென்றால் எல்லா மனுஷர்களும் சாத்தானின் மிக ஆழமான அழிவிற்கு ஆளாகியுள்ளனர். மனுஷன் தனது சொந்த சீர்கேட்டின் மத்தியில் இருந்து தேவனுடன் ஐக்கியப்பட முயன்றால், இதனால் எந்த நல்லதும் நடக்காது என்பது உறுதி; அவருடைய செயல்களும் வார்த்தைகளும் நிச்சயமாக ஒவ்வொரு முறையும் அவனது அழிவை அம்பலப்படுத்தும், மேலும் தேவனுடன் ஐக்கியப்படுவதில் அவனுடைய கலகத்தன்மை அதன் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படும். தன்னை அறியாமல், மனுஷன் கிறிஸ்துவை எதிர்ப்பதற்கும், கிறிஸ்துவை ஏமாற்றுவதற்கும், கிறிஸ்துவை கைவிடுவதற்கும் வருகிறான்; இது நிகழும்போது, மனுஷன் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பான், இது தொடர்ந்தால், அவன் தண்டனைக்குரிய பொருளாக மாறுவான்.

தேவனுடன் ஐக்கியப்படுவது மிகவும் ஆபத்தானது என்றால், தேவனை தூரத்தில் வைத்திருப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம் என்று சிலர் நம்பலாம். இது போன்ற ஜனங்கள் எதைப் பெறக்கூடும்? அவர்களால் தேவனுக்கு விசுவாசமாக இருக்க முடியுமா? நிச்சயமாக, தேவனோடு ஐக்கியமாவது மிகவும் கடினமானதுதான்—ஆனால் அதற்குக் காரணம் மனுஷன் சீர்கெட்டுவிட்டான் என்பதே தவிர தேவனால் அவனுடன் ஐக்கியப்பட முடியவில்லை என்பதால் அல்ல. சுயத்தை அறிந்து கொள்வதற்கான உண்மைக்கு அதிக முயற்சியை அர்ப்பணிப்பது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் ஏன் தேவனின் நன்மைகளைப் பெறவில்லை? உங்கள் மனநிலை ஏன் அவருக்கு அருவருப்பானது? உங்கள் பேச்சு ஏன் அவருடைய வெறுப்பைத் தூண்டுகிறது? நீங்கள் கொஞ்சம் விசுவாசத்தை வெளிக்காட்டியவுடன், நீங்கள் உங்கள் சொந்தப் புகழைப் பாடுகிறீர்கள், மேலும் ஒரு சிறிய பங்களிப்புக்கு வெகுமதியைக் கோருகிறீர்கள்; நீங்கள் கொஞ்சம் கீழ்ப்படிதலைக் காட்டும்போது மற்றவர்களைக் குறைத்துப் பார்க்கிறீர்கள், ஏதோ சிறிய பணியைச் செய்து முடித்தபின் தேவனை அவமதிக்கிறீர்கள். தேவனை உபசரிக்க, நீங்கள் பணம், பரிசுகள் மற்றும் பாராட்டுக்களைக் கேட்கிறீர்கள். இது ஒன்று அல்லது இரண்டு நாணயங்களைக் காணிக்கையாகக் கொடுப்பதற்கு உங்கள் மனதை வலிக்கச் செய்கிறது; நீங்கள் பத்து கொடுக்கும்போது, நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறவும், மேலும் மேன்மையாக நடத்தப்பட வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள். உங்களுக்கு இருப்பதைப் போன்ற ஒரு மனுஷத்தன்மையைப் பற்றி பேசுவதோ கேட்பதோ நிச்சயமாகத் தீங்குவிளைவிக்கும். உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் பாராட்டத்தக்கதாக ஏதாவது இருக்கிறதா? தங்கள் கடமையைச் செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள்; வழிநடத்துபவர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள்; தேவனை வரவேற்பவர்கள் மற்றும் வரவேற்காதவர்கள்; காணிக்கை அளிப்பவர்கள் மற்றும் அளிக்காதவர்கள்; பிரசங்கிப்பவர்கள், வார்த்தையைப் பெறுபவர்கள், மேலும் பலர்: அத்தகைய மனுஷர்கள் அனைவரும் தங்களைப் புகழ்ந்து கொள்கிறார்கள். இது நகைப்புக்குரியதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? நீங்கள் தேவனை நம்புகிறீர்கள் என்பதை முழுவதுமாக அறிந்திருந்தாலும், உங்களால் தேவனுக்கு இணக்கமாய் இருக்க முடியவில்லை. நீங்கள் முற்றிலும் தகுதியற்றவர்கள் என்பதை நன்கு அறிந்திருக்கிறீர்கள், நீங்கள் ஒரே மாதிரியாகப் பெருமை பேசுகிறீர்கள். உங்களிடம் இனி சுய கட்டுப்பாடு இல்லை என்ற அளவுக்கு உங்கள் உணர்வு மோசமடைந்துள்ளதாக நீங்கள் உணரவில்லையா? இது போன்ற உணர்வோடு, தேவனுடன் ஐக்கியப்படும் தகுதி உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த நேரத்தில் நீங்கள் உங்களுக்காகப் பயப்படவில்லையா? உங்கள் மனநிலை ஏற்கனவே நீங்கள் தேவனுடன் இணைந்து இருக்க முடியாத அளவிற்கு மோசமாகிவிட்டது. இது அவ்வாறு இருக்கையில், உங்கள் விசுவாசம் நகைப்புக்கு உரியதாய் இருக்காதா? உங்கள் விசுவாசம் அபத்தமானது இல்லையா? உன் எதிர்காலத்தை நீ எவ்வாறு அணுகப் போகிறாய்? எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை நீ எவ்வாறு தேர்வு செய்யப் போகிறாய்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க