தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 300

மே 18, 2023

பல்லாயிரம் ஆண்டுகள் சீர்கேட்டுக்குப் பிறகு, மனிதன் உணர்வற்றவனாக, மந்த அறிவுள்ளவனாக இருக்கிறான்; தேவனைப் பற்றின மனிதனுடைய கலகத்தன்மை சரித்திர புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அளவிற்கு, தேவனை எதிர்க்கும் ஒரு பிசாசாய் அவன் மாறிவிட்டான். மனிதனே கூட தனது கலகத்தனமான நடத்தையைப் பற்றிய முழு கணக்கை ஒப்புவிக்க இயலாது—ஏனென்றால் மனிதன் சாத்தானால் ஆழமாய்க் கெடுக்கப்பட்டிருக்கிறான், எங்கே திரும்புவது என்று அவனுக்குத் தெரியாத அளவிற்கு சாத்தானால் திசைமாறி நடத்தப்பட்டிருக்கிறான். இன்றும் கூட மனிதன் இன்னமும் தேவனுக்குத் துரோகம் செய்கிறான். மனிதன் தேவனைப் பார்க்கும்போது, அவருக்குத் துரோகம் செய்கிறான். தேவனை அவனால் பார்க்க முடியாதபோதும் கூட அவன் அவருக்குத் துரோகம் செய்கிறான். இவர்கள் தேவனுடைய சாபங்களையும் தேவனுடைய கோபத்தையும் பார்த்தவர்களாய் இருந்தாலும்கூட, அவருக்கு இன்னும் துரோகம் செய்கிறார்கள். அதனால் மனிதனுடைய அறிவு அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் மனிதனுடைய மனசாட்சியும் அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் நான் கூறுகிறேன். நான் நோக்கிப் பார்க்கும் மனிதன், மனித உடையில் இருக்கும் ஒரு மிருகம், அவன் ஒரு விஷப்பாம்பு, மேலும் அவன் எவ்வளவு பரிதாபமாய் என் கண்கள் முன் தென்பட முயற்சித்தாலும், அவனிடத்தில் ஒருபோதும் நான் இரக்கம் காட்ட மாட்டேன். ஏனென்றால் மனிதனுக்கு, கருப்பு வெள்ளைக்கும், சத்தியத்திற்கும் சத்தியமல்லாததற்கும் இடையேயான வித்தியாசத்தைக் குறித்த புரிதல் இல்லை. மனிதனுடைய உணர்வு மிகவும் மரத்துப்போய்விட்டது, என்றாலும் இன்னமும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறான்; அவனுடைய மனிதத்தன்மை மிகவும் இழிவானதாக இருக்கிறது, அப்படியிருந்தும் அவன் ஒரு ராஜாவின் ராஜரீகத்தைக் கொண்டிருக்க விரும்புகிறான். அப்படிப்பட்ட உணர்வைக் கொண்டிருக்கும் அவன் யாருக்கு ராஜாவாக முடியும்? அப்படிப்பட்ட மனிதத்தன்மையுடைய அவன் எப்படி சிங்காசனத்தின் மேல் அமர முடியும்? உண்மையாகவே மனிதனுக்கு வெட்கமே இல்லை. அவன் ஒரு அகந்தையுள்ள துன்மார்க்கன்! ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் உங்களிடம் ஒரு யோசனை கூறுகிறேன். முதலாவது நீங்கள் ஒரு கண்ணாடியைக் கண்டுபிடித்து, உங்களின் சொந்த அருவருப்பான பிம்பத்தைப் பார்க்கும்படி அறிவுறுத்துகிறேன்—ஒரு ராஜாவாக இருப்பதற்கு உன்னிடம் என்ன இருக்கிறது? ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரின் முகம் உனக்கு இருக்கிறதா? உன்னுடைய மனநிலையில் சிறிதளவேனும் மாற்றமில்லை, எந்த ஒரு சத்தியத்தையும் நீ கைக்கொள்ளவும் இல்லை, அப்படியிருந்தும் அற்புதமான நாளைக்காக நீ ஆசைப்படுகிறாய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்! இத்தகைய அசுத்தமான நிலத்தில் பிறந்த மனிதன், சமுதாயத்தால் மோசமாகக் கெடுக்கப்பட்டிருக்கிறான், நிலப்பிரபுத்துவ நெறிமுறைகளால் அவன் தாக்கப்பட்டிருக்கிறான். மேலும் அவன் "உயர் கல்வி நிறுவனங்களில்" கற்பிக்கப்பட்டிருக்கிறான். பின்னோக்கிய சிந்தனை, அசுத்தமான அறநெறி, வாழ்க்கைப் பற்றிய குறுகிய பார்வை, வாழ்க்கைக்கான இழிவான தத்துவம், முழுவதும் உபயோகமற்ற வாழ்க்கை, ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள்—இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதனின் இதயத்தில் தீவிரமாய் ஊடுருவி, அவனுடைய மனசாட்சியைக் கடுமையாக வலுவிழக்கச் செய்து தாக்கியுள்ளன. இதன் விளைவாக, மனிதன் எப்பொழுதும் தேவனிடமிருந்து தூரத்தில் இருக்கிறான், எப்பொழுதும் அவரை எதிர்க்கிறான். மனிதனுடைய மனநிலை நாளுக்கு நாள் அதிகக் கொடூரமாகிறது. தேவனுக்காக எதையும் விருப்பத்துடன் விட்டுவிட, விருப்பத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிய, மேலும், விருப்பத்துடன் தேவனுடைய தோன்றுதலைத் தேட ஒருவர் கூட இல்லை. அதற்குப் பதிலாக, சாத்தானின் ஆதிக்கத்தின்கீழ், சேற்று நிலத்தில் மாம்சக் கேட்டிற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, இன்பத்தைப் பின்தொடர்வதைத் தவிர மனிதன் வேறொன்றும் செய்வதில்லை. சத்தியத்தைக் கேட்டாலும்கூட, இருளில் வாழ்கிற அவர்கள் அதை கைக்கொள்ள யோசிப்பதுமில்லை, அவர் பிரசன்னமாவதைப் பார்த்திருந்தாலும்கூட தேவனைத் தேடுவதற்கு அவர்கள் நாட்டங்கொள்வதுமில்லை. இவ்வளவு ஒழுக்கம் கெட்ட மனிதகுலத்திற்கு இரட்சிப்பின் வாய்ப்பு எப்படி இருக்கும்? இவ்வளவு சீர்கெட்ட ஒரு மனிதகுலம் எவ்வாறு வெளிச்சத்தில் வாழ முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க