Christian Song | தேவன்மீது அன்பு செலுத்த, அவருடைய அருமையை நீங்கள் அனுபவிக்க வேண்டும்
ஆகஸ்ட் 23, 2021
ஜனங்கள் தேவனை விசுவாசித்தால்,
தேவனைப் போற்றும் இருதயத்துடன் தேவனின் வார்த்தைகளை அனுபவித்தால்,
அத்தகையவர்களில் தேவனின் இரட்சிப்பையும் தேவனின் அன்பையும் காண முடியும்.
இந்த ஜனங்களால் தேவனுக்கு சாட்சியளிக்க முடிகிறது.
அவர்கள் சத்தியத்தில் வாழ்கிறார்கள், அவர்கள் சாட்சியளிப்பது சத்தியமும்,
தேவன் என்றால் என்ன என்பதும், தேவனின் மனநிலையும் ஆகும்.
அவர்கள் அதன் மத்தியில் வாழ்கிறார்கள், தேவனின் அன்பைக் கண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் தேவனை நேசிக்க விரும்பினால்,
அவர்கள் தேவனின் அருமையை ருசித்து
தேவனின் அருமையைக் காண வேண்டும்.
அப்போதுதான் தேவனை நேசிக்கும் ஒரு இருதயமும்,
தேவனுக்காக விசுவாசமாக தங்களைத் தாங்களே கொடுக்க
அவர்களைத் தூண்டும் ஒரு இருதயமும் அவர்களில் எழுப்பப்பட்டிருக்க முடியும்.
தேவன் ஜனங்களை வார்த்தைகளாலும் அல்லது
கற்பனையினாலும் அவரை நேசிக்க வைப்பதில்லை,
மேலும் தன்னை நேசிக்கும்படி ஜனங்களை அவர் கட்டாயப்படுத்துவதில்லை.
அதற்கு பதிலாக, அவர் தங்களுடைய விருப்பப்படி அவரை நேசிக்க அனுமதிக்கிறார்,
மேலும் அவருடைய கிரியையிலும் சொற்களிலும் அவருடைய அருமையைக் காண
அவர் அவர்களை அனுமதிக்கிறார்,
அதன் பிறகு அவர்களில் தேவன் மீதான் அன்பு இருக்கிறது.
இந்த வழியில் மட்டுமே ஜனங்கள் உண்மையிலேயே தேவனுக்கு சாட்சி அளிக்க முடியும்.
வற்புறுத்தப்படுவதாலோ, அல்லது ஒரு தருணத்தின் உணர்ச்சி தூண்டுதலாலோ,
ஜனங்கள் தேவனை நேசிப்பதில்லை.
ஜனங்கள் தேவனை நேசிக்க விரும்பினால்,
அவர்கள் தேவனின் அருமையை ருசித்து
தேவனின் அருமையைக் காண வேண்டும்.
அப்போதுதான் தேவனை நேசிக்கும் ஒரு இருதயமும்,
தேவனுக்காக விசுவாசமாக தங்களைத் தாங்களே கொடுக்க
அவர்களைத் தூண்டும் ஒரு இருதயமும் அவர்களில் எழுப்பப்பட்டிருக்க முடியும்.
அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள்
அவருடைய அருமையைக் கண்டிருக்கிறார்கள்,
ஜனங்கள் அன்பிற்கு தகுதியானவை அநேகம் அவரிடத்தில் இருப்பதைக் கண்டிருக்கிறார்கள்,
ஏனென்றால் அவர்கள் தேவனின் இரட்சிப்பு, ஞானம் மற்றும் அதிசயமான
செயல்களைக் கண்டிருக்கிறார்கள்—
இதன் விளைவாக அவர்கள் உண்மையிலேயே தேவனைப் புகழ்கிறார்கள்
உண்மையிலேயே அவருக்காக ஏங்குகிறார்கள், தேவனைப் பெறாமல்
அவர்களால் உயிர்வாழ முடியாது என்ற
ஒரு உணர்வு அவர்களில் எழுந்திருக்கிறது.
ஜனங்கள் தேவனை நேசிக்க விரும்பினால்,
அவர்கள் தேவனின் அருமையை ருசித்து
தேவனின் அருமையைக் காண வேண்டும்.
அப்போதுதான் தேவனை நேசிக்கும் ஒரு இருதயமும்,
தேவனுக்காக விசுவாசமாக தங்களைத் தாங்களே கொடுக்க
அவர்களைத் தூண்டும் ஒரு இருதயமும் அவர்களில் எழுப்பப்பட்டிருக்க முடியும்.
"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்