தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 401

டிசம்பர் 8, 2022

இப்போது இருப்பது ராஜ்யத்தின் யுகம். இந்தப் புதிய யுகத்திற்குள் நீ நுழைந்திருக்கிறாய் என்பது தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நீ நுழைந்திருக்கிறாயா, அவருடைய வார்த்தைகள் உனது வாழ்வின் யதார்த்தமாகியிருக்கின்றனவா என்பதைப் பொறுத்தது. தேவனின் வார்த்தைகள் ஒவ்வொரு நபருக்கும் தெரியப்படுத்தப்படுகின்றன, இதன் மூலம், இறுதியில், எல்லா ஜனங்களும் தேவனின் வார்த்தைகளின் உலகில் வாழ்வார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகள் ஒவ்வொருவரையும் உள்ளிருந்து தெளியச் செய்யும் மற்றும் பிரகாசமாக்கும். இந்த நேரத்தில், நீ தேவனின் வார்த்தைகளை வாசிப்பதில் அக்கறையற்றவனாகவும், அவருடைய வார்த்தைகளில் ஆர்வம் காட்டாமலும் இருந்தால், உனது நிலை தவறானது என்பதையே இது காட்டுகிறது. உன்னால் வார்த்தையின் யுகத்திற்குள் நுழைய முடியாவிட்டால், பரிசுத்த ஆவியானவர் உன்னுள் கிரியை செய்ய மாட்டார்; நீ இந்த யுகத்திற்குள் நுழைந்திருந்தால், அவர் தம்முடைய கிரியையைச் செய்வார். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவதற்கு வார்த்தையின் யுகத்தின் தொடக்கத்தில் நீ என்ன செய்ய முடியும்? இந்த யுகத்திலும், உங்களுக்கு மத்தியில், தேவன் பின்வரும் உண்மையை நிறைவேற்றுவார்: ஒவ்வொரு மனுஷனும் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்வார்கள், சத்தியத்தைக் கடைபிடிக்க அவர்களால் முடியும், தேவனை ஆர்வத்துடன் நேசிப்பார்கள்; எல்லா ஜனங்களும் தேவனுடைய வார்த்தைகளை ஒரு அஸ்திவாரமாகவும், அவர்களின் யதார்த்தமாகவும் பயன்படுத்துவார்கள், மேலும் தேவனை ஆராதிக்கும் இருதயங்களைக் கொண்டிருப்பார்கள்; தேவனின் வார்த்தைகளைக் கடைபிடிப்பதன் மூலம், மனுஷன் தேவனுடன் சேர்ந்து ராஜரீக வல்லமையைப் பயன்படுத்துவான். இது தேவனால் அடைய வேண்டிய கிரியை. தேவனின் வார்த்தைகளை வாசிக்காமல் நீ இருக்க முடியுமா? இன்று, அவருடைய வார்த்தைகளை வாசிக்காமல் ஓரிரு நாட்கள் கூட இருக்க முடியாது என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளை வாசிக்க வேண்டும், நேரம் அனுமதிக்கவில்லை என்றால், அவற்றைக் கேட்பது போதுமானதாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்கு அளிக்கும் உணர்வு இதுதான், மற்றும் அவர்களை ஏவத் துவங்கியிருக்கும் வழியும் இதுதான். அதாவது, தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழையும்படி அவர் வார்த்தைகளின் மூலம் ஜனங்களை ஆளுகிறார். தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் ஒரேயொரு நாள் கழிந்தால், நீங்கள் இருட்டையும் தாகத்தையும் உணர்வீர்கள், அதைத் தாங்க முடியாது, இது நீ பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுகிறாய் என்பதையும், அவர் உன்னிடமிருந்து விலகவில்லை என்பதையும் காட்டுகிறது. அப்போது தான் நீ இந்தப் பிரவாகத்தில் இருப்பவனாவாய். இருப்பினும், தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் ஓரிரு நாட்கள் இருந்த பிறகு, நீ எதையும் உணரவில்லை என்றால், உனக்குத் தாகம் இல்லை, மற்றும் நீ ஏவப்படவே இல்லை, பரிசுத்த ஆவியானவர் உன்னிடமிருந்து விலகி விட்டார் என்பதை இது காட்டுகிறது. இதன் அர்த்தம், உனக்குள் உள்ள நிலையில் ஏதோ தவறு இருக்கிறது; நீ வார்த்தையின் யுகத்திற்குள் நுழையவில்லை, பின்மாற்றமடைந்தவர்களில் நீயும் ஒருவனே. ஜனங்களை ஆள்வதற்கு தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; நீ தேவனின் வார்த்தைகளைப் புசித்துக் குடித்தால், நன்றாக உணர்வாய், நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ பின்பற்றுவதற்கு வழி இல்லை. தேவனின் வார்த்தைகள் ஜனங்களின் போஜனமாகவும், அவர்களை இயக்கும் சக்தியாகவும் மாறும். "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" (மத்தேயு 4:4). என்று வேதாகமம் சொல்கிறது. இன்று, தேவன் இந்தக் கிரியையைச் செய்து முடிப்பார், இந்த உண்மையை அவர் உங்களிடம் நிறைவேற்றுவார். கடந்த காலங்களில், ஜனங்கள் தேவனின் வார்த்தைகளை வாசிக்காமல் பல நாட்கள் இருந்திருக்கலாம், ஆயினும் அவர்களால் வழக்கம் போல் புசிக்கவும் வேலை செய்யவும் முடியும், ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை? இந்த யுகத்தில், தேவன் அனைவரையும் ஆள வார்த்தைகளைப் பிரதானமாகப் பயன்படுத்துகிறார். தேவனின் வார்த்தைகளின் மூலம், மனுஷன் நியாயந்தீர்க்கப்பட்டு பரிபூரணமாக்கப்படுகிறான், பின்னர் இறுதியாக ராஜ்யத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறான். தேவனின் வார்த்தைகளால் மட்டுமே மனுஷனின் ஜீவனை வழங்க முடியும், மேலும் தேவனின் வார்த்தைகளால் மட்டுமே, குறிப்பாக ராஜ்யத்தின் யுகத்தில், மனுஷனுக்கு வெளிச்சத்தையும் கடைபிடிப்பதற்கான ஒரு பாதையையும் வழங்க முடியும். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திலிருந்து நீ விலகிச் செல்லாத வரை, ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளைப் புசித்துக்கொண்டும், குடித்துக்கொண்டும் இருந்தால், தேவனால் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க