தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 400

டிசம்பர் 8, 2022

மனுஷனைப் பரிபூரணப்படுத்துவதற்கு தேவன் தீர்மானித்துள்ளார், அவர் எந்தக் கண்ணோட்டத்தில் பேசினாலும், அவை அனைத்தையும் ஜனங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே பேசுகிறார். ஆவியானவரின் கண்ணோட்டத்தில் பேசப்படும் வார்த்தைகளை ஜனங்கள் புரிந்து கொள்வது கடினம்; அதன்படி நடப்பதற்கான பாதையைக் கண்டுபிடிப்பதற்கான வழி அவர்களுக்கு இல்லை, அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் குறைவாகவே உள்ளது. தேவனின் கிரியை வெவ்வேறு தாக்கங்களை அடைகிறது, மற்றும் கிரியையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதில் அவருக்கு அவருடைய நோக்கம் இருக்கிறது. மேலும், அவர் வெவ்வேறு கோணங்களிலிருந்துப் பேசுவது கட்டாயமாகும், ஏனென்றால் அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே அவரால் மனுஷனைப் பரிபூரணப்படுத்த முடியும். ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே அவர் தனது குரலை எழுப்பினால், தேவனின் கிரியையின் இந்த நிலையைப் பரிபூரணப்படுத்த எந்த வழியும் இருக்காது. அவர் பேசும் தொனியில் இருந்து, இந்த நபர்களை பூரணப்படுத்துவதில் அவர் உறுதியாக இருப்பதை நீ காணலாம். ஆகவே, பரிபூரணப்படுத்தப்பட விரும்பும் ஒவ்வொருவருக்கும் முதல் படி என்னவாக இருக்க வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் தேவனின் கிரியையை அறிந்திருக்க வேண்டும். இன்று, தேவனின் கிரியையில் ஒரு புதிய முறை தொடங்கியிருக்கிறது; யுகம் மாறியுள்ளது, தேவன் கிரியை செய்யும் முறையும் மாறியுள்ளது, தேவன் பேசும் முறையும் விசேஷித்த விதமாக உள்ளது. இன்று, அவருடைய கிரியையின் முறை மட்டும் மாறாமல், யுகமும் மாறியுள்ளது. இப்போது இருப்பது ராஜ்யத்தின் யுகம். இது அன்பான தேவனின் யுகமாகவும் உள்ளது. இது ஆயிரவருட அரசாட்சியின் யுகத்தின் முன்னறிவிப்பாகும்—இது வார்த்தையின் யுகமும்கூட, இதில் தேவன் பரிபூரண மனுஷனுடன் பேசுவதற்கு பல வழிகளைப் பயன்படுத்துகிறார், மேலும் மனுஷனுக்கு வழங்குவதற்காக வெவ்வேறு கோணங்களில் பேசுகிறார். ஆயிரவருட அரசாட்சியின் யுகத்திற்குள் நுழைந்தவுடன், தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்க வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்குவார், மனுஷனை வாழ்வின் யதார்த்தத்திற்குள் நுழைய அனுமதிப்பார், அவனைச் சரியானப் பாதையில் கொண்டு செல்வார். தேவனின் கிரியையின் பல படிகளை அனுபவித்த மனுஷன், தேவனின் கிரியை மாறவில்லை, ஆனால் அது இடைவிடாமல் உருவாகி, ஆழமடைகிறது என்பதைக் கண்டிருக்கிறான். ஜனங்கள் நீண்ட காலமாக அதனை அனுபவித்த பிறகு, கிரியைத் தொடர்ந்து சுழன்று, மீண்டும் மீண்டும் மாறுகிறது. அது எவ்வளவு மாறினாலும், மனிதகுலத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கான தேவனின் நோக்கத்திலிருந்து அது ஒருபோதும் விலகாது. பத்தாயிரம் மாற்றங்களின் மூலம் கூட, அது ஒருபோதும் அதன் உண்மையான நோக்கத்திலிருந்து விலகாது. தேவனின் கிரியையின் முறை எவ்வாறு மாறினாலும், இந்தக் கிரியை ஒருபோதும் சத்தியத்திலிருந்து அல்லது ஜீவனிலிருந்து விலகாது. கிரியையை மேற்கொள்ளும் முறையில் செய்யப்படும் மாற்றங்கள், கிரியையின் வடிவம், மற்றும் தேவன் பேசும் கண்ணோட்டம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவதைத்தான் உள்ளடக்கியிருந்தாலும், தேவனின் கிரியையின் மைய நோக்கம் மாறாது. ஒரு பலனை அடைவதற்காக தேவனின் குரலில் மற்றும் அவரது கிரியையின் முறை ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குரலின் தொனியில் மாற்றம் என்பது கிரியையின் பின்னால் உள்ள நோக்கம் அல்லது மாற்றத்தைக் குறிக்கவில்லை. ஜீவனைத் தேடுவதற்காகவே ஜனங்கள் தேவனைப் பிரதானமாக விசுவாசிக்கிறார்கள்; நீ தேவனை விசுவாசித்த போதிலும், ஜீவனைத் தேடவில்லை அல்லது சத்தியத்தையோ அல்லது தேவனின் அறிவையோ நாடவில்லை என்றால், அது தேவன் மீதான விசுவாசம் அல்ல! ராஜாவாக இருப்பதற்கு ராஜ்யத்திற்குள் நுழைய இன்னும் முற்படுவது யதார்த்தமானதா? ஜீவனைத் தேடுவதன் மூலம் தேவன் மீதான உண்மையான அன்பை அடைவது—இது மட்டுமே யதார்த்தம்; சத்தியத்தின் நாட்டம் மற்றும் நடைமுறை—இவை அனைத்தும் யதார்த்தம். தேவனின் வார்த்தைகளை வாசிப்பதால், இந்தச் சொற்களை அனுபவிப்பதால், நிஜமான அனுபவத்தின் மத்தியில் நீங்கள் தேவனைப் பற்றிய அறிவைப் பெறுவீர்கள், உண்மையிலேயே பின்தொடர்வது என்றால் இதுதான் அர்த்தம்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க