தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 390

பிப்ரவரி 9, 2023

அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்றாலும், தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல் என்றால் என்ன மற்றும் தேவனின் சித்தத்திற்கு இணங்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பவற்றை சிலர் மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால், "தேவன்" என்ற வார்த்தையையும் "தேவனின் கிரியை" போன்ற சொற்றொடர்களையும் ஜனங்கள் அறிந்திருந்தாலும், அவர்கள் தேவனை அறிந்திருக்கவில்லை, அதற்கு மேலாக அவருடைய கிரியையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்படியானால், தேவனை அறியாதவர்கள் அனைவரும் அவரை விசுவாசிப்பதில் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, இதற்குக் காரணம் தேவனை விசுவாசிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் அறிமுகமில்லாததாகவும், மிகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. இவ்வாறாக, அவர்கள் தேவனின் கோரிக்கைகளை முழுமையாக நிவர்த்தி செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனங்கள் தேவனை அறியாவிட்டால், அவருடைய கிரியையை அறியாவிட்டால், அவர்கள் தேவன் பயன்படுத்துவற்கு தகுதியற்றவர்களாகிறார்கள், மேலும் அவர்களால் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முடிவதில்லை. "தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்" என்பது தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது ஆகும்; இதுவே தேவனை விசுவாசிப்பது குறித்த மிகவும் எளிமையான கருத்தாகும். மேலும், தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது, உண்மையாக தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதற்குச் சமமானதல்ல; மாறாக, இது வலுவான மத மேலோட்டங்களைக் கொண்ட ஒரு வகையான எளிய விசுவாசம் ஆகும். தேவனிடத்தில் உண்மையான விசுவாசம் வைத்தல் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கிறது: தேவன் எல்லாவற்றிற்கும் மேலான ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்ற விசுவாசத்தின் அடிப்படையில், ஒருவன் தேவனின் வார்த்தைகளையும் அவருடைய கிரியைகளையும் அனுபவிக்கிறான், ஒருவனின் சீர்கெட்ட மனநிலையைத் தூய்மைப்படுத்துகிறான், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறான், மேலும் தேவனை அறிந்துகொள்கிறான். இந்த வகையான ஒரு பிரயாணத்தை மட்டுமே "தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்" என்று அழைக்கலாம். ஆயினும், ஜனங்கள் பெரும்பாலும் தேவனிடத்திலான விசுவாசத்தை ஓர் எளிமையான மற்றும் அற்பமான விஷயமாகவே பார்க்கிறார்கள். இவ்வழியில் தேவனை விசுவாசிப்பவர்கள் தேவனை விசுவாசிப்பதன் அர்த்தத்தை இழந்துவிட்டிருக்கிறார்கள், கடைசி வரை அவர்கள் தொடர்ந்து விசுவாசித்தாலும், அவர்கள் ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெறப்போவதில்லை, ஏனென்றால் அவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். எழுத்துக்களின்படியும், வெற்றுக் கோட்பாட்டிலும் தேவனை விசுவாசிப்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். தேவனிடத்திலான விசுவாசத்தின் சாராம்சம் அவர்களிடம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது, மேலும் அவர்களால் தேவனின் அங்கீகாரத்தைப் பெற முடியாது. அப்படியிருப்பினும் அவர்கள் இரட்சிப்பிற்கான ஆசீர்வாதங்களுக்காகவும், போதுமான கிருபைக்காகவும் தேவனிடம் ஜெபிக்கிறார்கள். நாம் நிதானித்து, நம் இருதயங்களை அமைதிப்படுத்திக் கொண்டு, நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்: தேவனை விசுவாசிப்பது என்பது உண்மையில் பூமியில் எளிதான விஷயமாக இருக்க முடியுமா? தேவனை விசுவாசிப்பது என்பது தேவனிடமிருந்து அதிகக் கிருபையைப் பெறுவதைத் தவிர வேறொன்றுமில்லை என்று இருக்க முடியுமா? தேவனை அறியாமலேயே அவரை விசுவாசிப்பவர்களும் அல்லது தேவனை நம்புகிறவர்களும் அவரை எதிர்த்தால், அவர்களால் உண்மையில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியுமா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க