தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 606
மார்ச் 1, 2023
தேவனை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள் தேவனின் வார்த்தையைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர். தேவனுக்கு சாட்சியமளிப்பதில் உண்மையிலேயே உறுதியாக நிற்கக்கூடிய ஜனங்கள் அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பவர்களாகவும், உண்மையாகச் சத்தியத்தின் பக்கம் நிற்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். தந்திரத்தையும் அநீதியையும் நாடுகிற ஜனங்கள் அனைவரிடமும் சத்தியம் இருக்காது, அவர்கள் அனைவரும் தேவனுக்கு அவமானத்தைத் தருகிறார்கள். திருச்சபையில் சச்சரவுகளை ஏற்படுத்துபவர்கள் சாத்தானின் சேவகர்கள், அவர்கள் சாத்தானின் உருவகமாகவும் இருக்கின்றனர். அத்தகையவர்கள் மிகவும் தீங்கிழைக்கக்கூடியவர்கள். எந்தவிதமான பகுத்தறிவும் இல்லாதவர்களும், சத்தியத்தின் பக்கத்தில் நிற்க இயலாதவர்களும் தீய நோக்கங்களை மனதில் தேக்கிவைத்து, சத்தியத்தைக் களங்கப்படுத்துகிறார்கள். அதற்கும் மேலாக, அவர்கள் சாத்தானின் மூலப்படிம பிரதிநிதிகள். அவர்கள் மீட்பிற்கு அப்பாற்பட்டவர்கள், மற்றும் இயற்கையாகவே புறம்பாக்கப்படுவார்கள். தேவனின் குடும்பம் சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களை நிலைத்திருக்க அனுமதிக்காது, திருச்சபையை வேண்டுமென்றே தகர்ப்பவர்களை நிலைத்திருக்க அனுமதிக்காது. இருப்பினும், வெளியேற்றும் வேலையைச் செய்ய இது நேரம் இல்லை; அத்தகைய ஜனங்கள் இறுதியில் அம்பலப்படுத்தப்படுவார்கள் மற்றும் புறம்பாக்கப்படுவார்கள். இந்த ஜனங்கள் மீது மேலும் பயனற்ற வேலை எதுவும் பயன்படுத்தப்படக்கூடாது; சாத்தானைச் சேர்ந்தவர்கள் சத்தியத்தின் பக்கம் நிற்க முடியாது, அதேசமயம் சத்தியத்தை நாடுபவர்களால் முடியும். சத்தியத்தைக் கடைப்பிடிக்காத மக்கள் சத்தியத்தின் வழியைக் கேட்க தகுதியற்றவர்கள், சத்தியத்திற்குச் சாட்சியாக இருக்கத் தகுதியற்றவர்கள். சத்தியம் அவர்களின் காதுகளுக்கு மட்டுமே அல்ல; மாறாக, அதைக் கடைப்பிடிப்பவர்களை நோக்கி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு நபரின் முடிவும் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு, திருச்சபையைத் தொந்தரவு செய்வோர் மற்றும் தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவிப்போர் முதலில் இப்போதைக்கு ஒதுக்கி வைக்கப்படுவார்கள், பின்னர் அவர்கள் கையாளப்படுவார்கள். கிரியை நிறைவேறியதும், இந்த ஜனங்கள் ஒவ்வொருவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள், பின்னர் அவர்கள் புறம்பாக்கப்படுவார்கள். தற்போதைக்கு, சத்தியம் வழங்கப்படும்போது, அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். முழு சத்தியமும் மனுஷகுலத்திற்கு வெளிப்படுத்தப்படும் போது, அந்த ஜனங்கள் புறம்பாக்கப்பட வேண்டும்; எல்லா ஜனங்களும் தங்கள் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும் நேரமாக அது இருக்கும். பகுத்தறிவு இல்லாதவர்களின் அற்பமான தந்திரங்கள் துன்மார்க்கரின் கைகளில் அவர்கள் அழிவுக்கு வழிவகுக்கும், அவர்கள் ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்று அவர்களால் நயங்காட்டப்படுவார்கள். அவர்கள் இப்படித்தான் நடத்தப்பட வேண்டும், ஏனென்றால் அவர்கள் சத்தியத்தை நேசிக்கவில்லை, ஏனென்றால் அவர்களால் சத்தியத்தின் பக்கம் நிற்க இயலவில்லை, ஏனென்றால் அவர்கள் தீயவர்களைப் பின்பற்றுகிறார்கள் மற்றும் தீயவர்களின் பக்கம் நிற்கிறார்கள், மற்றும் அவர்கள் தீயவர்களுடன் இணைந்து, தேவனை எதிர்க்கிறார்கள். அந்தத் தீயவர்கள் வெளிப்படுத்துபவை தீயவை என்பதை அவர்கள் பரிபூரணமாக அறிவார்கள், ஆனாலும் அவர்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, அவர்களைப் பின்பற்றுவதற்காகச் சத்தியத்தைப் புறக்கணிக்கிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காத, ஆனால் அழிவுகரமான மற்றும் அருவருப்பான காரியங்களைச் செய்கிற இந்த ஜனங்கள் அனைவரும் தீமை செய்யவில்லையா? அவர்களில் தங்களை ராஜாக்களாக அலங்கரிப்பவர்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களுடைய தேவனை எதிர்க்கும் இயல்புகள் அனைத்தும் ஒன்றல்லவா? தேவன் அவர்களை இரட்சிக்கவில்லை என்பதற்கு அவர்கள் என்ன காரணம் சொல்ல முடியும்? தேவன் நீதியுள்ளவர் அல்ல என்று அவர்கள் கூறுவதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? அவர்களை அழிப்பது அவர்களின் சொந்தத் தீமை அல்லவா? அவர்களை நரகத்திற்குள் இழுத்துச் செல்வது அவர்களின் சொந்தக் கலகம் அல்லவா? சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் ஜனங்கள், இறுதியில், சத்தியத்தின் காரணமாக இரட்சிக்கப்பட்டு பரிபூரணப்படுவார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள், இறுதியில், சத்தியத்தின் காரணமாக தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் கடைப்பிடிக்காதவர்களுக்கும் காத்திருக்கும் முடிவுகள் இவை. சத்தியத்தைக் கடைப்பிடிக்கத் திட்டமிடாதவர்கள் இன்னும் அதிகமான பாவங்களைச் செய்யாமல் இருக்க விரைவில் திருச்சபையை விட்டு வெளியேற வேண்டுமென்று நான் அறிவுறுத்துகிறேன். நேரம் வரும்போது, வருத்தப்பட்டு பயனில்லை. குறிப்பாக, குழுக்களை உருவாக்கி, பிளவுகளை உருவாக்குபவர்கள், மற்றும் திருச்சபைக்குள் இருக்கும் உள்ளூர் கொடுமைக்காரர்களும் விரைவில் வெளியேற வேண்டும். தீய ஓநாய்களின் இயல்பைக் கொண்ட இத்தகைய ஜனங்கள் மாறுவதற்குத் தகுதியற்றவர்களாக இருக்கின்றனர். ஆரம்ப சந்தர்ப்பத்தில் அவர்கள் திருச்சபையைவிட்டு வெளியேறினால், சகோதர சகோதரிகளின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் நல்லது, இதன் மூலம் தேவனின் தண்டனையைத் தவிர்க்க முடியும். உங்களில் அவர்களுடன் சென்றவர்கள் உங்களைக் குறித்து சிந்திக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள சிறப்பாகச் செயல்படுவார்கள். நீங்கள் தீயவர்களுடன் சேர்ந்து திருச்சபையை விட்டு வெளியேறுவீர்களா, அல்லது அங்கேயே இருந்து கீழ்ப்படிதலுடன் பின்பற்றுவீர்களா? இந்தக் காரியத்தை நீங்கள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். நான் உங்களுக்குத் தேர்வு செய்வதற்கான இந்த ஒரு வாய்ப்பைத் தருகிறேன், உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்