தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 604

பிப்ரவரி 28, 2023

ஒவ்வொரு திருச்சபையிலும் திருச்சபைக்குச் சிக்கலை ஏற்படுத்தும் அல்லது தேவனின் கிரியையில் தலையிடும் நபர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மாறுவேடத்தில் தேவனின் வீட்டிற்குள் ஊடுருவிய சாத்தான்கள். அத்தகைய ஜனங்கள் நடிப்பதில் வல்லவர்கள்: அவர்கள் மிகுந்த பயபக்தியுடனும், பணிவுடனும் எனக்கு முன்பாக வந்து, கீழ்த்தரமான நாய்களைப் போல ஜீவித்து, தங்கள் சொந்த நோக்கங்களை அடைய அவர்களின் "அனைத்தையும்" அர்ப்பணிக்கிறார்கள்—ஆனால் சகோதர சகோதரிகளுக்கு முன்னால், அவர்கள் தங்கள் அசிங்கமான பக்கத்தைக் காட்டுகிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்களை அவர்கள் பார்க்கும்போது, அவர்கள் அவர்களைத் தாக்கி ஒதுக்கித் தள்ளுகிறார்கள்; தங்களைவிட வல்லமையானவர்களை அவர்கள் காணும்போது, அவர்கள் முகஸ்துதி செய்து அவர்களிடம் பசப்புகிறார்கள். அவர்கள் திருச்சபையில் வரம்பு மீறி நடந்துகொள்கிறார்கள். இதுபோன்ற "உள்ளூர் கொடுமைக்காரர்கள்" இது போன்ற "நாய்க்குட்டிகள்" பெரும்பான்மையான திருச்சபைகளில் உள்ளன என்று கூறலாம். அவர்கள் ஒன்றாகப் பிசாசுத்தனமாக செயல்படுகிறார்கள், ஒருவருக்கொருவர் கண்சிமிட்டல்களையும் இரகசிய சமிக்ஞைகளையும் அனுப்புகிறார்கள், மற்றும் அவர்களில் யாரும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை. யாருக்கு அதிக விஷம் இருக்கிறதோ அவன் "தலைமைப் பிசாசு", மிக உயர்ந்த கெளரவத்தைக் கொண்டவன் அவர்களை வழிநடத்துகிறான், அவர்களின் கொடியை உயரமாகத் தூக்கிப் பிடிக்கிறான். இந்த ஜனங்கள் திருச்சபையின் வழியாகச் செல்கிறார்கள், தங்கள் எதிர்மறை எண்ணங்களைப் பரப்புகிறார்கள், மரணத்தைத் தூண்டுகிறார்கள், அவர்கள் விரும்பியபடி செயல்படுகிறார்கள், அவர்கள் விரும்புவதைச் சொல்கிறார்கள், அவர்களைத் தடுக்க யாரும் துணிவதில்லை. அவர்கள் சாத்தானின் மனநிலையினால் நிரம்பியிருக்கிறார்கள். மரணத்தின் காற்று திருச்சபைக்குள் நுழைந்ததும் அவர்கள் தொந்தரவை ஏற்படுத்துகின்றனர். சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் திருச்சபைக்குள் உள்ளவர்கள், தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாமல் கைவிடப்படுகிறார்கள், அதே நேரத்தில் திருச்சபையைத் தொந்தரவு செய்து மரணத்தைப் பரப்புபவர்கள் உள்ளுக்குள் கொந்தளிக்கிறார்கள், மேலும் என்னவென்றால், பெரும்பாலான ஜனங்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். இத்தகைய திருச்சபைகள் சந்தேகமின்றி, சாத்தானால் ஆளப்படுகின்றன; பிசாசு அவர்களின் ராஜா. திருச்சபையார்கள் எழுந்து தலைமைப் பிசாசுகளை நிராகரிக்காவிட்டால், அவர்களும் இறுதியில் அழிந்து போவார்கள். இனிமேல், இதுபோன்ற திருச்சபைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொஞ்சம் சத்தியத்தைக் கடைப்பிடிக்கக்கூடியவர்கள் அதற்காக முயற்சிக்கவில்லை என்றால், அந்தத் திருச்சபை அகற்றப்படும். ஒரு திருச்சபையானது சத்தியத்தைக் கடைப்பிடிக்கத் தயாராக இல்லாதவர்கள் எவரையும், தேவனுக்காகச் சாட்சியாக நிற்கக்கூடிய எவரையும் கொண்டிருக்கவில்லை என்றால், அந்தத் திருச்சபை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும், மற்றும் மற்ற திருச்சபைகளுடனான அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட வேண்டும். இது "புதைக்கும் மரணம்" என்று அழைக்கப்படுகிறது; சாத்தானைக் கைவிட்டதன் அர்த்தம் இதுதான். ஒரு திருச்சபையில் பல உள்ளூர் கொடுமைக்காரர்கள் இருந்தால், முற்றிலும் ஞானம் இல்லாத "சிறிய ஈக்களால்" அவர்கள் பின்தொடரப்படுவார்கள், மேலும் சத்தியத்தைப் பார்த்த பிறகும் கூட, இந்த விசுவாசிகளின் கூட்டம், இந்த கொடுமைக்காரர்களின் பிணைப்புகளையும் கையாளுதல்களையும் நிராகரிக்க முடியாமல் இருந்தால், பிறகு அந்த அனைத்து முட்டாள்களும் இறுதியில் புறம்பாக்கப்படுவார்கள். இந்தச் சிறிய ஈக்கள் பயங்கரமான எதையும் செய்திராமல் இருக்கலாம், ஆனால் அவை இன்னும் வஞ்சிப்பதாய், நயமிக்கதாய் மற்றும் மழுப்பலானதாய் இருக்கும், மேலும் இது போன்ற அனைவரும் புறம்பாக்கப்படுவார்கள். ஒருவர் கூட மீதமிருக்கமாட்டார்! சாத்தானைச் சேர்ந்தவர்கள் சாத்தானிடம் திரும்பிச் செல்வார்கள், அதே சமயம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் நிச்சயமாக சத்தியத்தைத் தேடிச் செல்வார்கள்; இது அவர்களின் இயல்புகளால் தீர்மானிக்கப்படுகிறது. சாத்தானைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் அழிந்துபோகட்டும்! அத்தகைய ஜனங்களுக்கு எந்தப் பரிதாபமும் காட்டப்படாது. சத்தியத்தைத் தேடுவோருக்கு அது வழங்கப்படட்டும், மற்றும் அவர்கள் தேவனின் வார்த்தையில் தங்கள் இருதயங்கள் நிறையும் அளவிற்கு மகிழ்ச்சியைப் பெறுவார்கள். தேவன் நீதியுள்ளவர்; அவர் யாருக்கும் ஒருதலைபட்சமாக இருக்கமாட்டார். நீ ஒரு பிசாசு என்றால், உன்னால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலாது; நீ சத்தியத்தைத் தேடும் ஒருவன் என்றால், நீ சாத்தானால் சிறைபிடிக்கப்பட மாட்டாய் என்பது உறுதி. இது எல்லா சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பிற காணொளி வகைகள்

பகிர்க

ரத்து செய்க