தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 602
மே 5, 2023
ராஜ்யத்தின் காலத்தில் மனிதன் முற்றிலும் முழுமையாக்கப்படுவான். ஜெயங்கொள்ளுதல் கிரியைக்குப்பின்பு, மனுஷன் சுத்திகரிப்பு மற்றும் உபத்திரவத்திற்கு உட்படுத்தப்படுவான். இந்த உபத்திரவத்தின்போது சாட்சியங்களை வென்று நிற்கக் கூடியவர்கள்தான் இறுதியில் முழுமையடைவார்கள்; அவர்களே ஜெயித்தவர்களாக இருக்கிறார்கள். இந்த உபத்திரவத்தின்போது, மனுஷன் இந்தச் சுத்திகரிப்பை ஏற்கவேண்டும், மேலும் இந்தச் சுத்திகரிப்பு தேவனுடைய கிரியையின் கடைசி நிகழ்வாக உள்ளது. தேவனுடைய நிர்வாகக் கிரியைகள் அனைத்தும் முடிவடைவதற்கு முன்னர் மனுஷன் சுத்திகரிக்கப்படுவதற்கான கடைசிநேரமாக இது உள்ளது, மேலும் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் அனைவரும் இந்த இறுதிச் சோதனையை ஏற்கவேண்டும், மேலும் அவர்கள் இந்தக் கடைசிச் சுத்திகரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். உபத்திரவத்தால் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கிறவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் தேவனுடைய வழிகாட்டுதலும் இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால் உண்மையிலேயே ஜெயங்கொள்ளப்பட்டவர்களும், தேவனை உண்மையாக நாடுபவர்களும் இறுதியில் உறுதியாக நிற்பவர்களுமாக இருக்கிறார்கள்; அவர்கள் மனிதத்தன்மை கொண்டவர்களாய் இருக்கிறார்கள், மற்றும் தேவனை உண்மையாய் அன்புகூருகிறார்கள். தேவன் என்ன செய்தாலும், ஜெயங்கொண்ட இவர்கள் தரிசனங்களை இழக்கமாட்டார்கள், மற்றும் அவர்களின் சாட்சியத்தில் தவறாமல் சத்தியத்தை இன்னும் கடைப்பிடிப்பார்கள். இவர்கள்தான் பெரும் உபத்திரவத்திலிருந்து இறுதியாக வெளியே வருவார்கள். குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களால் இன்னமும் இன்றைய நாட்களை சார்ந்திருக்க முடியும் என்றாலும், கடைசி உபத்திரவத்திற்கு எவரொருவரும் தப்பிக்க இயலாது, மற்றும் எவரொருவரும் இறுதிச் சோதனைக்குத் தப்பிக்க இயலாது. ஜெயிப்பவர்களுக்கு, இத்தகைய உபத்திரவம் மிகப்பெரியதொரு சுத்திகரிப்பாக உள்ளது; ஆனால் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களுக்கு, இதுமுற்றிலுமாக புறம்பாக்கப்படும் கிரியையாக இருக்கிறது. தேவனை இருதயத்தில் வைத்திருப்பவர்கள் எப்படிச் சோதிக்கப்பட்டாலும், அவர்களின் பற்றுறுதி மாறாமல் இருக்கும்; ஆனால், இருதயத்தில் தேவனைக் கொண்டிராதவர்களுக்கு, தேவனுடைய கிரியை அவர்களின் மாம்சத்திற்குச் சாதகமாக இல்லாதிருந்தால், அவர்கள் தேவனைப்பற்றிய தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்கிறார்கள், மற்றும் தேவனை விட்டு விலகிக்கூடப் போகிறார்கள். முடிவு பரியந்தம் உறுதியாய் நிலை நிற்காதவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள், இவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை மட்டுமே நாடுகிறார்கள், மற்றும் இவர்கள் தேவனுக்காகத் தங்களைச் செலவுபண்ணுவதற்கும் மற்றும் தங்களையே அவருக்கு அர்ப்பணிப்பதற்கும் விருப்பம் எதுவும் கொண்டிருப்பதில்லை. தேவனுடைய கிரியை ஒரு முடிவுக்கு வருகின்றபோது, இப்படிப்பட்ட கீழ்த்தரமான ஜனங்கள் புறம்பே தள்ளப்படுவார்கள், மற்றும் இவர்கள் எந்த அனுதாபத்திற்கும் தகுதியற்றவர்களாய் இருக்கிறார்கள். மனிதப்பண்பு இல்லாத அவர்கள் உண்மையிலேயே தேவனை அன்புகூர முடியாதவர்களாக இருக்கிறார்கள். சூழல் பாதுகாப்பாக மற்றும் பாதுகாக்கப்பட்டதாக இருக்கும்போது அல்லது லாபம் ஈட்டப்படும்போது, அவர்கள் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிதலுடன் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் விரும்பும் விஷயங்கள் சமரசம் செய்யப்பட்டால் அல்லது இறுதியாக மறுக்கப்பட்டால், அவர்கள் உடனடியாகக் கலகம் செய்கிறார்கள். ஒரே ஓர் இரவின் இடைவெளியில்கூட, அவர்கள் புன்னகைக்கும், "கனிவான" நபராக இருப்பதில் இருந்து ஒரு அசிங்கமான தோற்றமுடைய மற்றும் கொடூரமான கொலையாளி நிலைக்குச் செல்லக்கூடும், அவர்கள் அர்த்தமின்றி அல்லது காரணமின்றி தங்களது நேற்றைய உபகாரியை திடீரென்று தங்கள் ஜென்ம விரோதியாக, நடத்துகிறார்கள். இந்தப் பேய்களை, கண்சிமிட்டாமல் கொல்லும் இந்தப் பேய்களை வெளியேற்றாவிட்டால், அவை மறைந்திருக்கும் ஆபத்தாக மாறாதா? ஜெயங்கொள்ளும் கிரியை முடிந்ததைத் தொடர்ந்து மனுஷனை இரட்சிக்கும் கிரியை அடையப்படவில்லை. ஜெயங்கொள்ளுதலுக்கான கிரியை முடிவுக்கு வந்தாலும், மனுஷனைச் சுத்திகரிக்கும் கிரியை முடிவுக்கு வரவில்லை; இப்படிப்பட்ட கிரியையானது, மனுஷன் முற்றிலுமாகச் சுத்திகரிக்கப்பட்டதும், தேவனுக்கு உண்மையாக அடிபணிந்தவர்கள் முழுமையாக்கப்பட்டதும், தங்கள் இருதயத்தில் தேவனற்று இருப்பவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டதும், மற்றும் தேவனற்றவர்களாக இருக்கிற அந்த வெளிவேடக்காரர்களின் இருதயம் சுத்திகரிக்கப்பட்டதும் முடிவடையும். அவருடைய கிரியையின் இறுதிக்கட்டத்தில் தேவனைத் திருப்திப்படுத்தாதவர்கள் முற்றிலுமாக புறம்பாக்கப்படுவார்கள், மற்றும் புறம்பாக்கப்படுபவர்கள் பிசாசினுடையவர்களாக உள்ளனர். அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்த இயலாது என்பதால், அவர்கள் தேவனுக்கு எதிரான கலகக்காரர்களாக இருக்கிறார்கள், மற்றும் இந்த ஜனங்கள் இன்று தேவனைப் பின்பற்றினாலும், அவர்கள் முடிவு பரியந்தம் நிலைநிற்பார்கள் என்பதை இது நிரூபிக்கிறதில்லை. "முடிவு பரியந்தம் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்" என்ற வார்த்தைகளில், "பின்பற்றுதல்" என்ற வார்த்தை உபத்திரவத்தின் மத்தியில் உறுதியாக நிலைநிற்குதல் என்று அர்த்தம் கொண்டுள்ளது. இன்றைய நாட்களில், தேவனைப் பின்பற்றுதல் எளிதானதாக உள்ளது என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் தேவனுடைய கிரியை முடிவடைய இருக்கும்போது, "பின்பற்றுதல்" என்பதன் உண்மையான அர்த்தத்தை நீ அறிவாய். வெற்றிபெற்ற பின்னரும் நீ இன்னும் தேவனைப் பின்பற்றக் கூடியவனாக இருக்கிறாய் என்பதால், பரிபூரணமாக்கப் படுபவர்களில் நீயும் ஒருவன் என்பதை இது நிரூபிக்கிறதில்லை. சோதனைகளைச் சகித்துக்கொள்ள இயலாதவர்கள் எவர்களோ அவர்கள், உபத்திரவங்களுக்கு மத்தியில் ஜெயங்கொள்ள இயலாதவர்கள் எவர்களோ அவர்கள் இறுதியில் உறுதியாய் நிலைநிற்கக் கூடாதவர்களாக இருப்பார்கள் மற்றும் இறுதிவரை தேவனைப் பின்பற்ற இயலாதவர்களாக இருப்பார்கள். தேவனை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் கிரியையின் சோதனையைத் தாங்கிக்கொள்ள முடிகிறவர்களாக இருக்கிறார்கள், அதேசமயம் தேவனை உண்மையாகப் பின்பற்றாதவர்கள் தேவனின் எந்தவொரு சோதனையையும் தாங்கி நிற்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ புறம்பே தள்ளப்படுவார்கள், அதே நேரத்தில் ஜெயங்கொண்டவர்கள் ராஜ்யத்திற்குள் நிலைத்திருப்பார்கள். மனிதன் உண்மையிலேயே தேவனை நாடுகிறானா இல்லையா என்பது அவனது கிரியையின் சோதனையால், அதாவது தேவனின் சோதனைகளால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் மனிதன் தானே மேற்கொள்ளும் முடிவோடு இது எந்தத் தொடர்பும் கொண்டிருப்பது இல்லை. தேவன் எந்தவொரு நபரையும் ஒரு காரணமில்லாமல் நிராகரிக்கிறதில்லை; அவர் செய்கிற அனைத்தும் மனிதனை முற்றிலும் இணங்கப் பண்ணக்கூடும். மனிதனுக்குக் கண்ணால் காணமுடியாத எந்த விஷயத்தையும், அல்லது மனிதனை நம்பியிணங்கவைக்க முடியாத எந்தக் கிரியையையும் அவர் செய்கிறதில்லை. மனிதனின் நம்பிக்கை உண்மையா இல்லையா என்பது உண்மைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது, மற்றும் இது மனிதனால் தீர்மானிக்கப்பட முடியாது. "கோதுமையைக் களைகளாக மாற்ற முடியாது, மற்றும் களைகளைக் கோதுமையாக மாற்றமுடியாது" என்பது சந்தேகமற்றதாக உள்ளது. தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் அனைவரும் நிறைவாக ராஜ்யத்தில் நிலைத்திருப்பார்கள், தேவன் தம்மை உண்மையாக நேசிக்கும் எவரையும் தவறாக நடத்த மாட்டார். அவர்களின் மாறுபட்ட செயல்பாடுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், ஜெயங்கொள்ளுகிறவர்கள் ராஜ்யத்திற்குள் ஆசாரியர்களாகவோ அல்லது பின்பற்றுபவர்களாகவோ கிரியை செய்வார்கள், மற்றும் உபத்திரவங்களுக்கு மத்தியில் ஜெயங்கொள்பவர்கள் அனைவரும் ராஜ்யத்திற்குள் ஆசாரியர்களின் சரீரமாவார்கள். பிரபஞ்சம் முழுவதும் சுவிசேஷத்தின் கிரியை முடிவுக்கு வருகிறபோது ஆசாரியர்களின் சரீரம் உருவாகும். அந்த நேரம் வருகிறபோது, மனுஷனால் செய்யப்பட வேண்டியது எதுவோ அதைத் தேவனுடைய ராஜ்யத்திற்குள் அவன் செய்யவேண்டியது மற்றும் ராஜ்யத்திற்குள் அவன் தேவனோடு சேர்ந்து வாழ்வதும் அவனது கடமையாகும். ஆசாரியர்களின் சரீரத்தில் பிரதான ஆசாரியர்கள் மற்றும் ஆசாரியர்கள் இருப்பார்கள், மீதமுள்ளவர்கள் தேவனுடைய மகன்களும் ஜனங்களுமாக இருப்பார்கள். உபத்திரவத்தின்போது அவர்கள் தேவனுக்கு அளித்த சாட்சியங்களால் இவை அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன; அவை காரணமின்றி கொடுக்கப்பட்ட பட்டங்களாக இருப்பதில்லை. மனுஷனின் நிலை நிறுவப்பட்டவுடன், தேவனுடைய கிரியை நின்றுவிடும், ஏனென்றால் ஒவ்வொருவரும் அவரவர் இனத்தின்படி வகைப்படுத்தப்பட்டு அவர்களின் தொடக்ககால நிலைக்குத் திரும்புகின்றனர், மேலும் இது தேவனுடைய கிரியையை நிறைவேற்றுவதற்கான அடையாளமாகும், இது தேவனுடைய கிரியையின் இறுதி பலனும் மனுஷனின் நடைமுறையுமாக உள்ளது, மற்றும் இது தேவனுடைய கிரியையின் தரிசனங்களின் பலனாக மற்றும் மனுஷனின் ஒத்துழைப்புமாக உள்ளது. முடிவில், மனுஷன் தேவனுடைய ராஜ்யத்தில் இளைப்பாறுதலைக் கண்டறிவான், தேவனும் இளைப்பாறுவதற்காக அவருடைய வாசஸ்தலத்திற்குத் திரும்புவார். இது தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான 6,000 ஆண்டுகால ஒத்துழைப்பின் இறுதிவிளைவாக இருக்கும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்