தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 601
பிப்ரவரி 7, 2023
தேவன் மனிதர்களைப் படைத்து பூமியில் வைத்தார், மற்றும் அவர் அதுமுதற்கொண்டு அவர்களை வழிநடத்தினார், அவர் அவர்களை இரட்சித்து மனுக்குலத்திற்கு ஒரு பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தார். முடிவில், அவர் இன்னும் மனுக்குலத்தை ஜெயங்கொள்ளவும், மனுக்குலம் முழுவதையும் இரட்சிக்கவும், மற்றும் அவர்களை ஆதி நிலைக்கு மீட்டுக்கொள்ளவும் வேண்டியுள்ளது. ஆதியில் இருந்து அவர் இந்தக் கிரியையில்தான் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்—மனுக்குலத்தை அதன் ஆதி சாயலாகவும் ரூபமாகவும் மீட்டெடுத்தல். தேவன் தமது ராஜ்யத்தை அமைத்து மனிதர்களின் ஆதி சாயலை மீட்டெடுப்பார், அதாவது தேவன் தமது அதிகாரத்தை பூமியிலும் மற்றும் எல்லா சிருஷ்டிகள் மத்தியிலும் நிறுவுவார். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பின்னர் மனுக்குலம் தங்கள் தேவனுக்குப் பயப்படும் இருதயத்தையும் தேவனுடைய சிருஷ்டிகள் ஆற்றவேண்டிய கடமையையும் இழந்து போனது, அதனால் தேவனுக்குக் கீழ்ப்படியாத விரோதியாக அவர்கள் மாறினர். பின்னர் மனுக்குலம் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றியது; இவ்வாறு, தேவன் தமது சிருஷ்டிகளுக்கு நடுவில் கிரியை செய்ய வழி இல்லாமல் போனது, மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரால் அவர்களது பயம் நிறைந்த பக்தியைப் பெற முடியாமல் போய்விட்டது. மனிதர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும் அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும், ஆனால் உண்மையில் அவர்கள் அவரை நோக்கித் தங்கள் முதுகைத் திருப்பிக்கொண்டனர், மேலும் அதற்குப் பதிலாக சாத்தானை வணங்கினர். அவர்களது இருதயத்தில் சாத்தான் விக்கிரகமாக மாறினான். இவ்வாறு, தேவன் அவர்களது இருதயத்தில் தம் இடத்தை இழந்தார், அதை வேறு வகையில் கூறினால் அவர் தாம் மனுக்குலத்தை படைத்ததன் அர்த்தத்தை இழந்துபோனார். ஆகவே, தாம் மனுக்குலத்தைப் படைத்ததன் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை மீட்டெடுக்க, அவர் அவர்களுடைய ஆதிச் சாயலை மீட்டெடுத்து மனுக்குலத்தின் சீர்கெட்ட மனநிலையைப் போக்க வேண்டும். சாத்தானிடம் இருந்து மனிதர்களை மறுபடியும் மீட்க, அவர் அவர்களைப் பாவத்தில் இருந்து இரட்சிக்க வேண்டும். இந்த வகையில் மட்டுமே தேவனால் அவர்களது ஆதிச் சாயலையும் செயல்பாட்டையும் படிப்படியாக மீட்டெடுத்து, முடிவாகத் தமது ராஜ்யத்தை மீட்க முடியும். மனிதர்கள் சிறந்த முறையில் தேவனை ஆராதிக்கவும் சிறந்த முறையில் பூமியின் மீது வாழவும் அனுமதிக்கக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை இறுதியாக அழிப்பதும் மேற்கொள்ளப்படும். தேவனே மனிதர்களைச் சிருஷ்டித்ததால், அவர் அவர்களை அவரை ஆராதிக்க வைப்பார்; ஏனெனில் அவர் மனுக்குலத்தின் ஆதிச் செயல்பாட்டை மீட்க விரும்புகிறார், அவர் அதை முற்றிலுமாக மற்றும் எந்த மாசுமருவின்றி மீட்பார். அவரது அதிகாரத்தை மீட்பது என்றால் மனிதர்களை அவரை ஆராதிக்க வைத்து அவருக்கு கீழ்ப்படிய வைப்பது என்று அர்த்தமாகும்; தேவன் மனிதர்களை அவரால் வாழவைப்பார் மற்றும் அவரது விரோதிகளை தமது அதிகாரத்தின் விளைவாக அழியவைப்பார். எவரிடம் இருந்தும் எதிர்ப்பின்றி தம்மைப் பற்றிய எல்லாவற்றையும் தேவன் நிலைநிற்கச் செய்வார். தேவனுடைய ராஜ்யம் அவரது சொந்த ராஜ்யத்தை நிறுவ விரும்புகிறது. அவரை ஆராதிக்கும், முற்றிலுமாக அவருக்குக் கீழ்ப்படியும் மற்றும் அவரது மகிமையை வெளிப்படுத்தும் மனுக்குலமே அவர் விரும்பும் மனுக்குலமாகும். தேவன் சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்காவிட்டால், பின்னர் அவர் மனுக்குலத்தைப் படைத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போகும்; அவருக்கு மனுக்குலத்திடம் அதிகாரம் ஒன்றும் இல்லாமல் போகும், பூமியில் அவரது ராஜ்யம் இனிமேலும் நிலைநிற்க முடியாமல் போய்விடும். அவருக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் எதிரிகளை அழிக்காமல் போனால் அவர் தமது மகிமையை முற்றிலுமாகப் பெறமுடியாமல் போகும், அல்லது பூமியில் அவர் தமது ராஜ்யத்தை நிறுவ முடியாமல் போகும். மனுக்குலத்துக்குள் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்களை முற்றிலுமாக அழித்தல், மற்றும் பரிபூரணமாக்கப்பட்டவர்களை இளைப்பாறுதலுக்குள் கொண்டுவருதல் இவையே அவர் தமது கிரியைகளை முடித்ததற்கான மற்றும் அவரது மாபெரும் கிரியை நிறைவேறுதலுக்கான அடையாளமாகும். மனிதர்கள் தங்கள் ஆதிச் சாயலில் மீட்கப்பட்ட பின், அவர்கள் தங்களுக்குரிய கடமைகளை முறையே நிறைவேற்ற முடிகின்றபோது, தங்களுக்கே உரிய முறையான இடங்களில் இருந்து மற்றும் தேவனின் விதிமுறைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும் போது, பூமியில் தம்மை ஆராதிக்கும் ஒரு கூட்ட மக்களை தேவன் ஆதாயப்படுத்தியிருந்திருப்பார், மற்றும் தம்மை ஆராதிக்கும் ஒரு ராஜ்யத்தை அவர் நிறுவி இருப்பார். பூமியின் மேல் அவர் நித்திய வெற்றியைப் பெறுவார், மற்றும் அவரை எதிர்த்த அனைவரும் நித்தியமாய் அழிந்துபோவார்கள். இது மனுக்குலத்தை அவர் படைத்ததன் ஆதி நோக்கத்தை மீட்டெடுக்கும்; எல்லாவற்றையும் படைத்த அவர் நோக்கத்தை மீட்டமைக்கும், மற்றும் அது பூமியின் மேல், எல்லாவற்றின் மத்தியிலும், அவரது விரோதிகளின் மத்தியிலும் அவரது அதிகாரத்தை மீட்டெடுக்கும். இவை அவரது முழு வெற்றியின் சின்னங்களாய் இருக்கும். அதிலிருந்து, மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும், மற்றும் சரியான பாதையில் ஒரு வாழ்க்கையைத் தொடங்கும். மனுக்குலத்துடன் தேவனும் நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார், அவரும் மனுக்குலமும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நித்திய வாழ்வு தொடங்கும். அருவருப்பும் கீழ்ப்படியாமையும் பூமியில் இருந்து மறைந்து போயிருக்கும், மற்றும் புலம்பல் யாவும் காணாமற் போயிருக்கும், தேவனுக்கு எதிராக உலகில் இருந்த எல்லாம் இல்லாமல் போயிருக்கும். தேவனும் அவர் இரட்சிப்புக்குள் கொண்டுவந்த மக்கள் மட்டுமே இருப்பர்; அவரது சிருஷ்டிப்பு மட்டுமே மீந்திருக்கும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்