தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 600

பிப்ரவரி 7, 2023

ஆதியில் மனுக்குலத்தில் குடும்பங்கள் இல்லை; இரு வெவ்வேறு வகையான மனிதர்களான ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணே இருந்தனர். நாடுகள் எதுவும் இல்லை, சொல்லப்போனால் குடும்பங்கள் இல்லை, ஆனால் மனுக்குலத்தின் சீர்கேட்டின் காரணமாக, எல்லா வகையான மக்களும் தங்களைத் தனித்தனிக் குலங்களாக அமைத்துக்கொண்டனர், பின்னர் இவைகள் நாடுகளாகவும் இனங்களாகவும் மாறின. இந்த நாடுகள் மற்றும் இனங்கள் சிறு தனித்தனி குடும்பங்களைக் கொண்டிருந்தன, மேலும் இந்த வகையில், மொழி மற்றும் எல்லைகளின் வித்தியாசங்களின் அடிப்படையில் அனைத்து வகையான மக்களும் பல்வேறு இனங்களாகப் பிரிந்தனர். உண்மையில், பூமியில் எத்தனை இனங்கள் இருந்த போதிலும், மனுக்குலத்தின் முன்னோர் ஒருவரே. ஆதியில், இரு வகையான மனிதர்கள் மட்டுமே இருந்தனர், ஆணும் பெண்ணுமே அந்த இரு வகையான மனிதர்கள். இருப்பினும், தேவனின் கிரியையின் முன்னேற்றம், வரலாற்றின் நகர்வு, நிலவியல் மாற்றங்களால், இந்த இரு வகையான மனிதர்களும் வேறுபடும் அளவுகளுக்கு மேலும் பல வகையான மனிதர்களாக வளர்ச்சியுற்றனர். அடிப்படையில், மனுக்குலத்தை எத்தனை இனங்கள் உருவாக்கினாலும், மனுக்குலம் முழுமையும் இன்னும் தேவனின் சிருஷ்டியே. எந்த இனத்தை மக்கள் சேர்ந்தவர்களானாலும், அனைவரும் அவருடைய சிருஷ்டிகளே; அவர்கள் யாவரும் ஆதாம் ஏவாளின் சந்ததியாரே. அவர்கள் யாவரும் தேவனின் கரங்களால் சிருஷ்டிக்கப்படவில்லை எனினும், அவர்கள் யாவரும் தேவனால் தனியாகப் படைக்கப்பட்ட ஆதாம் ஏவாளின் சந்ததியாரே. மக்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் யாவரும் அவருடைய சிருஷ்டிகளே; அவர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால், அவர்களது இலக்கு மனுக்குலம் கொண்டிருக்க வேண்டிய ஒன்றே, மற்றும் அவை மனிதர்களை வகைப்படுத்தும் விதிகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மொத்தத்தில், அனைத்துத் துன்மார்க்கரும் அனைத்து நீதிமான்களும் சிருஷ்டிகளே. தீமை செய்யும் சிருஷ்டிகள் முடிவாக அழிக்கப்படுவார்கள், நீதியான செயல்களைச் செய்யும் சிருஷ்டிகள் பிழைத்திருப்பார்கள். இந்த இரு வகையான சிருஷ்டிகளுக்கும் இதுவே மிகவும் பொருத்தமான ஏற்பாடு. கீழ்ப்படியாமையின் காரணமாக துன்மார்க்கர் தேவனுடைய சிருஷ்டிகளாக இருந்தபோதிலும் அவர்கள் சாத்தானால் பிடிக்கப்பட்டுவிட்டனர், அதனால் அவர்களால் இரட்சிக்கப்பட முடியாது என்பதை மறுக்கின்றனர். தங்களை நீதியின்படி நடத்தும் சிருஷ்டிகள், அவர்கள் பிழைத்திருப்பார்கள் என்ற உண்மையின் அடிப்படையில், தாங்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பின்னரும் இரட்சிப்பைப் பெற்றவர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது. துன்மார்க்கர் தேவனுக்கு கீழ்ப்படியாத சிருஷ்டிகள்; இந்த சிருஷ்டிகளை இரட்சிக்க முடியாது மேலும் அவர்கள் ஏற்கெனவே முற்றிலுமாக சாத்தானால் பிடிக்கப்பட்டுவிட்டனர். தீமை செய்யும் மக்களும் மக்களே; அவர்கள் மிக அதிகமாக சீர்கெட்டுப்போன மனிதர்கள், மேலும் அவர்களை இரட்சிக்க முடியாது. அவர்கள் சிருஷ்டிகளாக இருப்பது போலவே, நீதியான நடத்தைகொண்ட மக்களும் சீர்கெடுக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் தங்கள் சீர்கெட்ட மனநிலையிலிருந்து தங்களை விடுவிக்க விருப்பம் கொண்ட மனிதர்கள், மேலும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்குத் திறன்கொண்டவர்களாக மாறினார்கள். நீதியான நடத்தை உள்ளவர்களுக்கு நீதி நிரம்பி வழிவதில்லை; மாறாக, அவர்கள் இரட்சிப்பைப் பெற்று தங்கள் சீர்கெட்ட மனநிலைகளை உடைத்து வெளிவந்தவர்கள்; அவர்களால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும். அவர்கள் முடிவில் உறுதியோடு நிற்பார்கள், இருந்தாலும் இது அவர்கள் ஒருபோதும் சாத்தானால் சீர்கெடுக்கப்படவில்லை என்று கூறுவதற்காக இல்லை. தேவனுடைய கிரியை முடிந்த பின்னர், அவருடைய எல்லா சிருஷ்டிகளுக்குள்ளும், அழிக்கப்படுபவர்களும் பிழைத்திருப்பவர்களும் இருப்பார்கள். இது அவருடைய ஆளுகைக் கிரியையின் தவிர்க்க முடியாத ஒரு போக்காகும்; இதை ஒருவரும் மறுக்க முடியாது. துன்மார்க்கர் பிழைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; தேவனுக்குக் கீழ்ப்படிந்து இறுதிவரை அவரைப் பின்பற்றுபவர்கள் நிச்சயமாகப் பிழைத்திருப்பார்கள். இந்தக் கிரியை மனுக்குலத்தின் ஆளுகையாக இருப்பதால், பிழைத்திருப்போரும் இருப்பார்கள் புறம்பாக்கப்படப் போகிறவர்களும் இருப்பார்கள். வெவ்வேறு வகையான மக்களுக்கான வெவ்வேறு பலன்கள் இவை, மேலும் தேவனின் சிருஷ்டிகளுக்கு இவையே மிகவும் பொருத்தமான ஏற்பாடுகள் ஆகும். குடும்பங்களை உடைத்து, இனங்களை நசுக்கி, நாடுகளின் எல்லைகளை சீர்குலைத்து அவர்களைப் பிரிப்பதான மனிதகுலத்துக்கான தேவனின் இறுதி ஏற்பாட்டில் குடும்பங்களும் தேசிய எல்லைகளும் இருக்காது ஏனெனில் மனிதர்கள் ஒரே மூதாதையாரில் இருந்து வந்தவர்களும், தேவனின் சிருஷ்டிகளுமாய் இருக்கிறார்கள். மொத்தத்தில், தீமை செய்யும் சிருஷ்டிகள் யாவரும் அழிக்கப்படுவார்கள், மேலும் தேவனுக்குக் கீழ்ப்படியும் சிருஷ்டிகள் பிழைத்திருப்பார்கள். இந்த வழியில், குடும்பங்கள் எதுவும் இருக்காது, நாடுகள் எதுவும் இருக்காது, மேலும் குறிப்பாக இனங்கள் எதுவும் வர இருக்கும் இளைப்பாறுதலின் காலத்தில் இருக்காது; இந்த வகையான மனுக்குலமே மிகப் பரிசுத்தமான மனுக்குலமாக இருக்கும். பூமியில் இருக்கும் சகலத்தையும் பராமரிக்க ஆதியில் ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிக்கப்பட்டனர்; ஆதியில் மனிதர்களே சகலத்துக்கும் எஜமானர்கள். மனிதனை யேகோவா சிருஷ்டித்ததற்கான நோக்கம் அவர்களைப் பூமியில் வாழ அனுமதித்து பூமியின் மேல் உள்ள யாவையும் ஆண்டுகொள்ளவே, ஏனெனில் மனுக்குலம் ஆதியில் சீர்கேடு அடையவில்லை மேலும் அதற்குத் தீமை செய்ய இயலாமல் இருந்தது. இருப்பினும், மனுக்குலம் சீர்கெடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் எல்லாவற்றின் மேலும் பராமரிப்பாளர்களாக இருக்கவில்லை. தேவனின் இரட்சிப்பின் நோக்கம் மனுக்குலத்தின் இந்தச் செயல்பாட்டை மீட்டமைப்பதும், மனுக்குலத்தின் ஆதி பகுத்தறிவையும் ஆதிக் கீழ்ப்படிதலையும் மீட்பதுமாகும்; இளைப்பாறுதலில் இருக்கும் மனுக்குலமே தேவன் தம் இரட்சிப்பின் கிரியையின் மூலமாக அடைவதாக நம்பும் விளைவின் பிரதிநிதித்துவமாக இருக்கும். அது ஏதேன் தோட்டத்தில் இருந்த வாழ்க்கையைப் போன்றதாக இல்லாவிட்டாலும் அதன் சாராம்சம் ஒன்றேயாகும்; முந்தையச் சீர்கேட்டை அடையாத மனுக்குலமாக இல்லாவிட்டாலும், மாறாகச் சீர்கேடு அடைந்து பின்னர் இரட்சிப்பைப் பெற்ற ஒரு மனுக்குலமாக இருக்கும். இரட்சிப்பைப் பெற்ற இந்த மக்கள் முடிவில் (அதாவது, தேவனுடைய கிரியை முடிவடைந்தபின்) இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். அதுபோல, தண்டிக்கப்படப் போகிறவர்களின் பலன் முடிவில் முற்றிலுமாக வெளிப்படுத்தப்பட்டு, அவர்கள் தேவனுடைய கிரியை முடிவடைந்த பின் அழிக்கவே படுவார்கள், வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவரது கிரியை முடிந்தவுடன், அந்தத் துன்மார்க்கர்கள் மற்றும் இரட்சிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்படுவர், ஏனெனில் அனைத்து வகை மக்களையும் வெளிப்படுத்தும் கிரியை (துன்மார்க்கராக இருந்தாலும் அல்லது இரட்சிக்கப்பட்டோர்க்குள்ளிருந்தாலும்) ஒரேநேரத்தில் செய்யப்படும். துன்மார்க்கர் புறம்பாக்கப்படுவர், மற்றும் பிழைத்திருக்க அனுமதிக்கப்பட்டோர் ஒரேநேரத்தில் வெளிப்படுத்தப்படுவர். ஆகவே, அனைத்துவகை மக்களின் பலாபலனும் ஒரேநேரத்தில் வெளிப்படுத்தப்படும். துன்மார்க்கரை ஒதுக்கிவைத்து மற்றும் அவர்களை ஒரு நேரத்தில் கொஞ்சமாக நியாயந்தீர்த்தல் அல்லது தண்டித்தலுக்கு முன்னர் இரட்சிப்பைக் கொண்டுவந்த ஒரு கூட்ட மக்களை இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க தேவன் அனுமதிக்க மாட்டார்; அது உண்மையோடு ஒத்துப் போகாது. துன்மார்க்கர் அழிக்கப்படும்போது மற்றும் பிழைத்திருக்கக் கூடியவர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, பிரபஞ்சம் முழுவதும் தேவனுடைய கிரியை நிறைவடையும். ஆசீர்வாதத்தைப் பெறுபவர்களுக்கும் துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைவோருக்கும் நடுவில் முன்னுரிமை வரிசை எதுவும் இருக்காது; ஆசீர்வாதத்தைப் பெறுபவர்கள் என்றென்றும் வாழ்வார்கள், துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைபவர்கள் நித்தியத்துக்கும் அழிந்து போவர்கள். கிரியையின் இந்த இரு படிகளும் ஒரே நேரத்தில் முடிக்கப்படும். சரியாகக் கூறப்போனால், கீழ்ப்படியாத மக்கள் இருக்கும் காரணத்தால்தான் கீழ்ப்படிபவர்களின் நீதி வெளிப்படுத்தப்படும், மேலும் ஆசீர்வாதம் பெற்றவர்கள் இருக்கும் காரணத்தால்தான் தங்கள் பொல்லாத நடத்தைக்காகத் துன்மார்க்கர் அடைந்த துரதிர்ஷ்டம் வெளிப்படுத்தப்படும். தேவன் துன்மார்க்கரை வெளிப்படுத்தாவிட்டால், பின்னர் தேவனுக்கு உண்மையாக கீழ்ப்படிபவர்கள் ஒருபோதும் சூரியனைப் பார்க்க மாட்டார்கள்; தமக்குக் கீழ்ப்படிந்தவர்களை தேவன் பொருத்தமான சேருமிடத்துக்குக் கொண்டுசெல்லாவிட்டால், பின்னர் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்கள் தங்களுக்குரிய பாவத்திற்கேற்ற தண்டனையை அடைவதற்கு முடியாமல் போவார்கள். இது தேவனுடைய கிரியையின் செயல்முறையாகும். அவர் தீயோரைத் தண்டித்து நல்லோர்க்கு பலாபலனை அளிக்கும் கிரியையைச் செய்யாவிட்டால், பின்னர் அவருடைய சிருஷ்டிகள் ஒருபோதும் தங்களது போய்ச்சேருமிடங்களுக்குள் முறையே பிரவேசிக்க முடியாமல் போகும். இளைப்பாறுதலுக்குள் மனுக்குலம் பிரவேசித்துவிட்டால், துன்மார்க்கர் அழிக்கப்படுவார்கள் மற்றும் முழு மனுக்குலமும் சரியான பாதையில் வந்துவிடும்; அனைத்து வகையான மக்களும் தாங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகளுக்கு ஏற்ப தங்கள் சொந்த வகையோடு இருப்பார்கள். இதுவே மனுக்குலத்தின் இளைப்பாறுதலின் நாள், மனுக்குலத்தின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாதப் போக்கு, மற்றும் மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தால் மட்டுமே தேவனின் மாபெரும் மற்றும் இறுதிக் கிரியை நிறைவேற்றம் முழுமையை அடையும்; இதுவே அவரது கிரியையின் கடைசிப் பகுதி. இந்தக் கிரியை மனுக்குலத்தின் சீரழிந்த மாம்ச வாழ்க்கையோடு சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டு வரும். அதன் பின்னர் மனிதர்கள் ஒரு புதிய ஆட்சி எல்லைக்குள் பிரவேசிப்பார்கள். எல்லா மனிதர்களும் மாம்சத்தில் வாழ்வார்கள் என்பதாலும், இந்த வாழ்க்கையின் சாராம்சத்துக்கும் சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்க்கைக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கும். இந்த வாழ்வின் முக்கியத்துவமும் சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்வும் வேறுபடுகின்றன. இது ஒரு புதிய வகையான நபரின் வாழ்க்கையாக இல்லாவிட்டாலும், இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட ஒரு மனுக்குலத்தின் வாழ்க்கை என்பதோடு மனிதத்தன்மையும் பகுத்தறிவும் மீட்டெடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை எனக் கூறலாம். ஒரு காலத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்த மக்களான இவர்கள் தேவனால் ஜெயங்கொள்ளப்பட்டு அவரால் இரட்சிக்கப்பட்டவர்கள்; தேவனை அவமரியாதை செய்த இந்த மக்கள் பின்னர் தேவனுக்குச் சாட்சியாக நின்றார்கள். அவர்கள் அவரது சோதனைக்கு உட்பட்டு பிழைத்த பிறகு, அவர்களது வாழ்வு மிகவும் அர்த்தமுள்ள வாழ்வாக இருக்கும்; அவர்கள் சாத்தானுக்கு முன் தேவனுக்குச் சாட்சியாக நின்றவர்கள், மேலும் வாழத் தகுதியான மனிதர்கள். தேவனுக்குச் சாட்சியாக நிற்க முடியாதவர்களும் தொடர்ந்து வாழத் தகுதியற்றவர்களுமே அழிக்கப்படப் போகிறவர்கள். அவர்களுடைய பொல்லாத நடத்தையின் விளைவாகவே அவர்களது அழிவு இருக்கும், மற்றும் அத்தகைய அழிவுதான் அவர்களுக்கான சிறந்த சென்று சேருமிடம். வருங்காலத்தில், மனுக்குலம் அழகான ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கும் போது, மக்கள் தாங்கள் காணலாம் என்று கற்பனை செய்யும் கணவன் மனைவிக்கு இடையிலான உறவுகள், தந்தை மகளுக்கு இடையிலான உறவுகள் அல்லது தாய் மகனுக்கு இடையிலான உறவுகள் ஒன்றும் இருக்காது. அந்நேரத்தில், ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த வகையைப் பின்பற்றுவான், மற்றும் குடும்பங்கள் ஏற்கெனவே சிதறிப் போயிருக்கும். முற்றிலுமாகத் தோல்வியடைந்த, சாத்தான் ஒருபோதும் மனுக்குலத்தைத் தொந்தரவு செய்ய மாட்டான், மற்றும் அதன்பின் சீர்கெட்ட சாத்தானின் மனநிலையைக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்தக் கீழ்ப்படியாத மக்கள் ஏற்கெனவே அழிக்கப்பட்டிருப்பார்கள், மற்றும் கீழ்ப்படியும் மக்கள் மட்டுமே பிழைத்திருப்பார்கள். இப்படியிருக்க, ஒரு சில குடும்பங்களே சீர்குலையாமல் இருக்கும்; எவ்வாறு உடல் ரீதியான உறவுகள் இருக்க முடியும்? மனுக்குலத்தின் முந்தைய மாம்ச ரீதியான உறவுகள் முற்றிலுமாகத் தடைசெய்யப்படும்; பின்னர் மக்களுக்கு இடையில் உடல் ரீதியான தொடர்புகள் எவ்வாறு இருக்க முடியும்? சாத்தானின் சீர்கெட்ட மனநிலைகள் இல்லாமல், மானிட வாழ்க்கை கடந்த காலத்தின் பழைய வாழ்க்கையாக இருக்காது, ஆனால் மாறாக ஒரு புதிய வாழ்க்கையாக இருக்கும். பெற்றோர் பிள்ளைகளை இழப்பார்கள், மேலும் பிள்ளைகள் பெற்றோரை இழப்பார்கள். கணவர்கள் மனைவிகளை இழப்பார்கள், மற்றும் மனைவிகள் கணவர்களை இழப்பார்கள். தற்போது உடல் ரீதியான உறவுகள் மக்களுக்கு இடையில் இருக்கின்றன, ஆனால் ஒவ்வொருவரும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர் அவை ஒருபோதும் இருக்காது. இத்தகைய மனுக்குலம் மட்டுமே நீதியையும் பரிசுத்தத்தையும் கொண்டிருக்கும்; இத்தகைய மனுக்குலம் மட்டுமே தேவனை ஆராதிக்க முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க