தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 599
பிப்ரவரி 7, 2023
முற்றிலும் அவநம்பிக்கை கொண்ட தங்கள் குழந்தைகளையும் உறவினர்களையும் சபைக்குள் இழுத்துக்கொண்டு வருபவர்கள் அதிக சுயநலம் கொண்டவர்கள், மேலும் அவர்கள் வெறுமனே இரக்கத்தைக் காட்சிப்படுத்துகிறார்கள். அவர்கள் நம்புகிறார்களா இல்லையா என்பதை எண்ணாமலும் மற்றும் அது தேவனின் சித்தம்தானா என்பதை எண்ணாமலும் இந்த மக்கள் நேசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சிலர் தங்கள் மனைவியை தேவனுக்கு முன் இழுத்து வருகிறார்கள், அல்லது தங்கள் பெற்றோரை தேவனுக்கு முன் இழுத்து வருகிறார்கள் மேலும் இதைப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் கிரியை செய்கிறாரோ இல்லையோ, அவர்கள் குருட்டுத்தனமாகத் தொடர்ந்து தேவனுக்காகத் "திறமையுள்ள மக்களைத் தத்தெடுக்கின்றனர்". இந்த நம்பிக்கை அற்றவர்களுக்கு அன்பு காட்டுவதன் மூலம் என்ன நன்மையை அடைவது சாத்தியம்? பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் இல்லாத இவர்கள் தேவனைத் தடுமாற்றத்தோடு பின்பற்றினாலும், ஒருவர் நம்புவது போல அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது. இரட்சிப்பைப் பெறக்கூடியவர்களை அவ்வளவு எளிதில் பெற முடியாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை மற்றும் சோதனைக்குள் பிரவேசியாதவர்கள், மற்றும் மாம்சமாகிய தேவனால் முழுமையாக்கப்படாதவர்கள் முற்றிலுமாக முழுமையாக்க முடியாதவர்கள் ஆவர். ஆகவே, பெயரளவில் அவர்கள் தேவனைப் பின்பற்றும் கணத்தில் இருந்து, தேவ ஆவியானவரின் பிரசன்னம் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களின் நிலை மற்றும் யதார்த்தத் தன்மைகளின் காரணமாக, அவர்களை முழுமையாக்க முடியவே முடியாது. இவ்வாறிருக்க, அவர்கள் மேல் அதிகமான ஆற்றலைச் செலுத்த வேண்டாம் என்று பரிசுத்த ஆவியானவர் முடிவு செய்கிறார், அல்லது அவர் உள்ளொளி எதுவும் அளிப்பதில்லை அல்லது எந்த வழியிலும் வழிகாட்டுவதில்லை; அவர் அவர்களை வெறுமனே பின்பற்றுவதற்கு அனுமதிக்கிறார், மேலும் முடிவாக அவர்களது பலன்களை வெளிப்படுத்துவார்—இது போதுமானதாகும். மனுக்குலத்தின் உற்சாகம் மற்றும் உள்நோக்கங்கள் சாத்தானிடம் இருந்து வருகின்றன மேலும் இந்த விஷயங்களால் எந்த வகையிலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நிறைவுசெய்ய முடியாது. மக்கள் எவ்வாறு இருந்தாலும், அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியை தேவை. மனிதர்கள் மனிதர்களை முழுமையாக்க முடியுமா? ஒரு கணவன் ஏன் மனைவியை நேசிக்கிறான்? ஒரு மனைவி ஏன் கணவனை நேசிக்கிறாள்? பிள்ளைகள் ஏன் பெற்றோர்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்? தங்கள் பிள்ளைகள் மேல் பெற்றோர் ஏன் மிகையாக அன்புசெலுத்துகிறார்கள்? மக்கள் உண்மையில் எந்த வகையான உள்நோக்கங்களை வைத்திருக்கிறார்கள்? தங்கள் சொந்தத் திட்டங்களையும் சுயநல விருப்பங்களையும் திருப்திபடுத்துவது அவர்களின் உள்நோக்கம் இல்லையா? அவர்கள் உண்மையில் தேவனின் நிர்வாகத் திட்டத்துக்காகச் செயலாற்ற எண்ணுகிறார்களா? அவர்கள் உண்மையில் தேவனின் நிர்வாகத் திட்டத்துக்காக செயல்படுகின்றனரா? சிருஷ்டியின் கடமைகளை நிறைவேற்றுவது அவர்களின் எண்ணமாக இருக்கிறதா? தேவனை விசுவாசிக்கத் தொடங்கிய கணம் முதல், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தைப் பெற முடியாதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒருபோதும் அடைய முடியாது; இவர்கள் நிச்சயமாக அழிவிற்கான பொருட்களாக இருக்கின்றனர். இவர்கள் மேல் ஒருவருக்கு எவ்வளவு அன்பு இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பதிலீடு செய்ய முடியாது. மக்களின் உற்சாகம் மற்றும் அன்பு மானிட உள்நோக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஆனால் தேவனின் நோக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் அவை தேவனின் கிரியைக்கு மாற்றாக இருக்க முடியாது. தேவனை விசுவாசிப்பது என்றால் என்ன என்பதை உண்மையில் அறியாமல் பெயரளவில் தேவனை நம்பி அவரைப் பின்பற்றுவது போல் பாசாங்கு செய்யும் மக்கள் மேல் ஒருவர் முடிந்த அளவில் மிக அதிகமாக அன்பையும் இரக்கத்தையும் காட்டினாலும் அவர்கள் தேவனிடம் இருந்து பரிவைப் பெற முடியாது, மேலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் அடைய முடியாது. தேவனை முழுமனதோடு பின்பற்றும் குறைந்த திறனுடையவர்களும் அதிகமான சத்தியங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களும் கூட பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எப்போதாவது அடையலாம்; இருப்பினும், கணிசமாக நல்ல திறனிருந்தும் ஆனால் முழுமனதோடு விசுவாசிக்காதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை அடையவே முடியாது. இத்தகைய மக்களுக்கு இரட்சிப்பு அறவே சாத்தியமற்றது. அவர்கள் எப்போதாவது தேவனுடைய வார்த்தைகளை வாசித்தாலும், எப்போதாவது பிரசங்கங்களைக் கேட்டாலும், அல்லது தேவனுக்குத் துதி பாடினாலும், அவர்களால் இளைப்பாறுதலின் காலம் வரை முடிவாக நிலைத்திருக்க முடியாது. பிறர் எவ்வாறு அவர்களை மதிப்பீடு செய்கிறார்கள் அல்லது சுற்றிலும் உள்ள மக்கள் அவர்களை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைக் கொண்டு மக்கள் முழுமனதோடு தேடுகிறார்களா என்பது தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெறுகிறதா மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தைப் பெற்றிருக்கிறார்களா என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்படுகிறதா மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு உட்படுத்தப்பட்டு சில காலங்களுக்குப் பின்னர் அவர்கள் தேவனைப் பற்றிய அறிவை அடைந்திருக்கிறார்களா என்பதைப் பொறுத்துள்ளது அது. ஒருவர் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெற்றால், அந்த நபரின் மனநிலை படிப்படியாக மாறும், மேலும் தேவனை விசுவாசிப்பது பற்றிய அவர்களின் கண்ணோட்டம் படிப்படியாக தூயதாக மாறும். எவ்வளவு காலம் மக்கள் தேவனைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தல்லாமல், அவர்கள் மாற்றத்தை அடைந்திருந்தால், அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெறுகிறது என்று அர்த்தமாகிறது. அவர்கள் மாற்றம் அடையாவிட்டால், பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்கள் மேல் நடைபெறவில்லை என்பது பொருளாகும். இத்தகைய மக்கள் சில ஊழியங்களைச் செய்தாலும், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான விருப்பமே அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. எப்போதாவது ஊழியம் செய்வது என்பது அவர்கள் தங்கள் மனநிலையில் மாற்றத்தை அனுபவிப்பதைப் பதிலீடு செய்யாது. முடிவாக, அவர்கள் இன்னும் அழிக்கவே படுவார்கள், ஏனெனில் ராஜ்யத்தில் ஊழியம் செய்வோருக்குத் தேவை எதுவும் இல்லை, அல்லது பரிபூரணமாக்கப்பட்டு தேவனிடம் விசுவாசமுள்ளவர்களாய் இருப்பவர்களுக்கு மனநிலை மாற்றம் அடையாத எவரின் ஊழியமும் தேவையாக இருப்பதுமில்லை. "ஒருவன் கர்த்தரை நம்பும்போது, அவனது முழுக்குடும்பத்தின் மேலும் அதிர்ஷ்டம் புன்னகைபுரிகிறது" என்று கடந்த காலத்தில் பேசப்பட்ட வார்த்தைகள், கிருபையின் காலத்துக்குப் பொருத்தமானவை, ஆனால் அவை மனுக்குலம் சென்றடையும் இடத்துக்குச் சம்பந்தமற்றவை. கிருபையின் காலத்தின் ஒரு கட்டத்துக்கே அவை பொருத்தமானவை. அந்த வார்த்தைகளின் கருத்து மக்கள் அனுபவித்த சமாதானம் மற்றும் பொருள்சார் ஆசீர்வாதங்களைப் பற்றியது; கர்த்தரை விசுவாசிக்கிறவனின் முழுக் குடும்பமும் இரட்சிக்கப்படும் என்பது அதன் பொருளல்ல, மேலும் ஒருவன் ஆசீர்வாதங்களைப் பெற்றால் அவனது முழுக் குடும்பமும் இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படும் என்பதும் பொருளல்ல. ஒருவன் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் அல்லது துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைவதும் ஒருவனின் சாரம்சத்தைப் பொறுத்ததே தவிர ஒருவன் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் எந்தப் பொது சாராம்சத்தையும் பொறுத்தது அல்ல. அந்த வகையான கூற்று அல்லது விதிக்கு ராஜ்யத்தில் இடமே இல்லை. ஒரு நபரால் மீந்திருக்க முடியுமானால் அதற்குக் காரணம் அவர்கள் தேவனுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ததனால்தான், மேலும் இளைப்பாறுதல் காலம் வரை அவர்களால் மீந்திருக்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர்கள் தேவனிடம் கீழ்ப்படியாமல் இருந்ததும் தேவனுடைய எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்யாமல் இருந்ததும்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பொருத்தமான போய்ச்சேருமிடம் உண்டு. ஒவ்வொரு தனிநபரின் சாரம்சத்தைப் பொறுத்து இந்தச் சேருமிடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன, மேலும் இதற்கும் பிறருக்கும் முழுமையாகச் சம்பந்தம் எதுவும் இல்லை. ஒரு குழந்தையின் பொல்லாத நடத்தையை, பெற்றொருக்கு மாற்ற முடியாது மற்றும் ஒரு குழந்தையின் நீதியைப் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஒரு பெற்றோரின் பொல்லாத நடத்தையை, குழந்தைக்கு மாற்ற முடியாது மற்றும் ஒரு பெற்றோரின் நீதியைக் குழந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஒவ்வொருவரும் தங்களது பாவங்களைச் சுமக்கிறார்கள், மேலும் தங்கள் ஆசீர்வாதங்களை ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள். ஒருவரும் இன்னொருவருக்கான மாற்றாக இருக்க முடியாது; இதுவே நீதியாகும். மனிதனின் கண்ணோட்டத்தில் இருந்து, பெற்றோர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றால், பின் அவர்களது குழந்தைகளும் பெற முடியும், மேலும் குழந்தைகள் தீமை செய்தால், பின் அவர்களுடைய பெற்றோர்கள் அந்தப் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். இது மனிதனின் ஒரு கண்ணோட்டம் மற்றும் மனிதன் காரியங்களைச் செய்யும் ஒரு வழி ஆகும்; இது தேவனின் கண்ணோட்டம் அல்ல. ஒவ்வொருவரின் நடத்தையில் இருந்து வரும் சாராம்சத்தைப் பொறுத்து அவர்களின் பலாபலன் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அது எப்போதும் பொருத்தமாகவே தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரும் இன்னொருவரின் பாவத்தைச் சுமக்க முடியாது; இன்னும் கூறப்போனால், ஒருவருக்காக இன்னொருவர் தண்டனையை ஏற்க முடியாது. இது முழுமையானது. ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பால் செலுத்தும் மிகையான அன்பு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பதிலாக நீதியின் காரியங்களை ஆற்றலாம் என்பதைக் குறிக்காது அல்லது ஒரு குழந்தை தன் பெற்றோருக்காகச் செய்யும் கடமை சார்ந்த அன்பு தங்கள் பெற்றொருக்காக நீதியின் காரியங்களைச் செய்ய முடியும் என்று அர்த்தமாகாது. "அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்." என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் இதுவாகும். பெற்றோர் தீமை செய்யும் தங்கள் குழந்தைகளைத் தாங்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பின் அடிப்படையில் இளைப்பாறுதலுக்குள் கொண்டுசெல்ல முடியாது, அல்லது தங்கள் மனைவியை (அல்லது கணவனை) தங்கள் சொந்த நீதியான நடத்தை மூலம் இளைப்பாறுதலுக்குள் கொண்டு செல்ல முடியாது. இது ஒரு நிர்வாக விதி; யாருக்கும் விதிவிலக்கு இருக்க முடியாது. முடிவில், நீதியைச் செய்பவர்கள் நீதியைச் செய்பவர்கள், மற்றும் தீமை செய்கிறவர்கள் தீமை செய்பவர்களே. நீதிமான்கள் இறுதியில் பிழைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள், அதேவேளையில் தீமைசெய்பவர்கள் அழிக்கப்படுவார்கள். பரிசுத்தவான்கள் பரிசுத்தமானவர்கள்; அவர்கள் அருவருப்பானவர்கள் அல்ல. அருவருப்பானவர்கள் அருவருப்பானவர்களே, அவர்களின் ஒரு பகுதி கூட பரிசுத்தமானது அல்ல. துன்மார்க்கரின் பிள்ளைகள் நீதியான செயல்களைச் செய்தாலும், மற்றும் நீதிமான்களின் பெற்றோர்கள் தீமைசெய்தாலும் அழிக்கப்படப் போகிறவர்கள் யாவரும் துன்மார்க்கரே, பிழைத்திருக்கப்போகிறவர்கள் யாவரும் நீதிமான்களே. விசுவாசிக்கும் கணவனுக்கும் மற்றும் அவிசுவாசியான மனைவிக்கும் இடையில் உறவில்லை, மற்றும் விசுவாசிக்கும் பிள்ளைகளுக்கும் அவிசுவாசிகளான பெற்றோருக்கும் இடையில் உறவில்லை; இந்த இரு வகையான மக்களும் முற்றிலும் இணக்கமற்றவர்கள். இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் முன்னர், ஒருவருக்கு உடல்ரீதியான உறவினர்கள் இருப்பார்கள், ஆனால் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர், ஒருவருக்கு கூறுவதற்கு என உடல்ரீதியான உறவினர்கள் யாரும் இல்லை. தங்கள் கடமையைச் செய்கிறவர்கள் செய்யாதவர்களுக்கு விரோதிகள்; தேவனை நேசிக்கிறவர்களும் அவரை வெறுப்பவர்களும் ஒருவருக்கொருவர் எதிராக இருக்கின்றனர். இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கப் போகிறவர்களும் அழிக்கப்பட போகிறவர்களும் இரு இணக்கமற்ற வகையான சிருஷ்டிகளாக இருக்கின்றனர். தங்கள் கடமையை ஆற்றுபவர்களால் பிழைத்திருக்க முடியும், அதேசமயம் தங்கள் கடமையை ஆற்றாதவர்கள் அழிவிற்கான பொருட்கள் ஆவர்; மேலும் என்னவென்றால், இது நித்தியத்தைக் கடந்து செல்லும். ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் கணவனை நேசிக்கிறாயா? ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் மனைவியை நேசிக்கிறாயா? ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் அவிசுவாசிகளான பெற்றோரை நேசிக்கிறாயா? தேவனை விசுவாசிப்பது என்ற மனிதப் பார்வை சரியா தவறா? நீ ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்? நீ எதை அடைய விரும்புகிறாய்? நீ எவ்வாறு தேவனை நேசிக்கிறாய்? சிருஷ்டிகளாக தங்கள் கடமையைச் செய்ய முடியாதவர்கள், மற்றும் முழுமுயற்சியை மேற்கொள்ள முடியாதவர்கள், அழிவிற்கான பொருள் ஆவார்கள். இன்றைய மக்களிடையே ஒரு உடல் ரீதியான உறவு உள்ளது, இரத்த உறவும் உள்ளது, ஆனால் எதிர்காலத்தில், இவை எல்லாம் கலைந்து போகும். விசுவாசிகளும் அவிசுவாசிகளும் இணக்கமானவர்கள் அல்ல, மாறாக அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மாறானவர்கள். இளைப்பாறுதலில் இருப்பவர்கள் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பார்கள் மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிவார்கள், அதே சமயத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் யாவரும் அழிக்கப்படுவார்கள். குடும்பங்கள் இனிமேல் பூமியில் இருப்பதில்லை; பெற்றோர் அல்லது குழந்தைகள் அல்லது மண உறவுகள் எவ்வாறு இருக்க முடியும்? விசுவாசம் மற்றும் அவிசுவாசத்திற்கு இடையில் இருக்கும் இணக்கமற்ற தன்மை இதுபோன்ற உடல் ரீதியான உறவுகளை முழுமையாகப் பிரித்துவிட்டிருக்கும்!
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்