தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 598

பிப்ரவரி 7, 2023

தற்பொழுது, தேடுபவர்களும் தேடாதவர்களும் இரு முற்றிலும் வேறான வகையான மக்களாக உள்ளனர், அவர்கள் சென்றடையும் இடமும் வேறானவை. சத்தியத்தைப் பற்றிய அறிவை நாடுபவர்களுக்கும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்குமே தேவன் இரட்சிப்பைக் கொண்டுவருவார். மெய்யான வழியை அறியாதவர்கள் பிசாசுகள் மற்றும் விரோதிகள்; அவர்கள் பிரதான தூதனின் சந்ததியார் மற்றும் அவர்களே அழிவின் பொருளாவார்கள். தெளிவற்ற தேவனின் பக்தியுள்ள விசுவாசிகள்—அவர்களும் கூட பிசாசுகள் இல்லையா? மெய்யான வழியை ஏற்காத நல்மனசாட்சி கொண்ட மக்களும் பிசாசுகள்; தேவனை எதிர்ப்பதே அவர்களுடைய சாராம்சம். மெய்யான வழியை ஏற்காதவர்களே தேவனை எதிர்ப்பவர்கள், இத்தகைய மக்கள் அநேகத் துன்பங்களை சகித்திருந்தாலும் அவர்களும் அழிக்கப்படுவார்கள். உலகத்தைக் கைவிட விருப்பம் அற்ற அனைவரும், தங்கள் பெற்றோரைப் பிரிய முடியாதவர்கள், மாம்சத்தின் பேரில் உள்ள தங்கள் இன்ப அனுபவத்தை விட்டுவிட முடியாதவர்கள் யாவரும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களே, மற்றும் அவர்கள் அழிவின் பொருட்களே. மாம்சமாகிய தேவனை விசுவாசிக்காத எவரும் பேய்த்தனம் கொண்டவர்கள், மற்றும், அவர்கள் அழிக்கப்படுவார்கள். விசுவாசம் இருந்தும் சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள், மாம்சமாகிய தேவனை விசுவாசிக்காதவர்கள், தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசிக்காதவர்கள் ஆகியோரும் அழிவிற்குரிய பொருள் ஆவார்கள். துன்பப்படுதல் என்ற புடமிடுதலை அனுபவித்து உறுதியாக நின்ற மக்கள் அனைவரும் மீந்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்; இவர்களே உண்மையில் சோதனைகளைச் சகித்துக்கொண்டவர்கள். தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும் ஓர் எதிரி; அதாவது மாம்சமாகிய தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும்—இந்தப் பிரவாகத்துக்கு உள்ளே அல்லது வெளியே இருந்தாலும் இல்லாவிட்டாலும்—ஓர் அந்திக்கிறிஸ்துதான். சாத்தான் யார், பிசாசுகள் யார், தேவனை விசுவாசிக்காத எதிர்ப்பாளர்கள் இல்லை என்றால் தேவனின் விரோதிகள் யார்? தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அல்லவா அந்த மக்கள்? விசுவாசம் இருக்கிறது என்று கூறினாலும் சத்தியம் இல்லாமல் இருப்பவர்கள் அல்லவா அவர்கள்? தேவனுக்கு சாட்சியாக இருக்க முடியாமல் ஆசிர்வாதத்தை அடைவதற்கு நாடுபவர்கள் அல்லவா அவர்கள்? இன்று நீ இன்னும் அந்தப் பிசாசுகளுடன் இணைந்தும், அவற்றிடம் மனசாட்சியும் அன்புகொண்டும் இருக்கிறாய், ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் சாத்தானிடம் நல்நோக்கில் நீ இருக்கவில்லையா? நீ பிசாசுகளுடன் சதித்திட்டம் தீட்டவில்லையா? இந்த நாட்களில் மக்களால் நன்மை தீமைக்கு இடையில் வித்தியாசத்தைக் காண முடியாவிட்டால், மற்றும் தேவனுடைய சித்தத்தைத் தேடும் எண்ணம் இல்லாமல் குருட்டுத்தனமாகத் தொடர்ந்து அன்புடனும் இரக்கத்துடனும் இருந்தால், அல்லது தேவனின் எண்ணங்களைத் தங்களின் சொந்த எண்ணங்களாக எந்த வகையிலாவது கொண்டிருக்க முடியாதவர்களாக இருந்தால், பின்னர் அவர்களது முடிவும் மிகவும் இழிவானதாகவே இருக்கும். மாம்சத்திலுள்ள தேவனை விசுவாசிக்காத எவனும் தேவனின் விரோதியே. உனக்கு மனசாட்சி இருந்தும் மற்றும் ஒரு விரோதியை நேசித்தால், உனக்கு நீதியின் உணர்வு இல்லை அல்லவா? நான் வெறுப்பவர்களிடமும் நான் ஒத்துக்கொள்ளாதவைகளிடமும் நீ இணக்கமாக இருந்தால், மற்றும் அவைகளிடம் இன்னும் அன்பு கொண்டு அல்லது அவைகளிடம் தனிப்பட்ட உணர்வு கொண்டிருப்பாயானால் நீ கீழ்ப்படியாமல் இருக்கிறாய் அல்லவா? நீ வேண்டும் என்றே தேவனை எதிர்க்கவில்லையா? இத்தகைய நபர் சத்தியத்தைக் கொண்டிருப்பானா? விரோதிகளிடம் மனசாட்சி உடையவர்களாகவும், பிசாசுகளிடம் அன்புகொண்டவர்களாகவும், சாத்தானிடம் இரக்கம் கொண்டவர்களாகவும் இருக்கும் மக்கள் தேவனுடைய கிரியையைக்கு இடையூறு செய்யவில்லையா? கடைசி நாட்களில் இயேசுவை மட்டும் விசுவாசித்து மாம்சமாகிய தேவனை விசுவாசியாமல் இருக்கும் மக்களும், தேவனுடைய மனுவுருவாதலை வார்த்தைகளில் விசுவாசிப்பதாகக் கூறியும் தீமைகளைச் செய்பவரும், தேவனை விசுவாசியாமல் இருப்போர்களைப் பற்றி குறிப்பிட வேண்டிய தேவையே இல்லாமல், அனைவரும் அந்திக்கிறிஸ்துகளே. இந்த மக்கள் யாவரும் அழிவுக்கான பொருட்கள். மனிதர்கள் பிற மனிதர்களை மதிப்பிடும் அளவீடு அவர்களின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டது; யாருடைய நடத்தை நல்லதாக இருக்கிறதோ அவர்கள் நீதிமான்கள், அதே சமயம் யாருடைய நடத்தை அருவருப்பானதோ அவர்கள் துன்மார்க்கர். மனிதர்களின் சாராம்சம் அவருக்கு கீழ்ப்படிகிறதா இல்லையா என்பதை அளவீடாய்க் கொண்டு அதன் அடிப்படையில் தேவன் அவர்களை மதிப்பிடுகிறார்; தேவனுக்குக் கீழ்ப்படியும் ஒருவன் ஒரு நீதிமான், கீழ்ப்படியாத ஒருவன் ஒரு விரோதி மற்றும் ஒரு துன்மார்க்கன், இந்த நபரின் நடத்தை நல்லதா அல்லது மோசமானதா மற்றும் அவர்களது பேச்சு சரியானதா அல்லது தவறானதா என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சிலர் நல்ல செயல்களைப் பயன்படுத்தி ஒரு நல்ல சென்றடையும் இடத்தை வருங்காலத்தில் அடைய விரும்புகிறார்கள், மற்றும் சிலரோ நல்ல சொற்களைப் பயன்படுத்தி ஒரு நல்ல சேருமிடத்தை அடைய விரும்புகிறார்கள். தேவன் அவர்களது நடத்தையைப் பார்த்து அல்லது அவர்களின் பேச்சைக் கேட்டு மக்களின் பலாபலன்களை தீர்மானிப்பதாக ஒவ்வொருவரும் தவறாக நம்புகிறார்கள்; ஆகவே பலர் இதை அனுகூலமாகப் பயன்படுத்தி தேவனை ஏமாற்றி தற்காலிக நன்மைகளைப் பெற விரும்புகின்றனர். வருங்காலத்தில், ஓர் இளைப்பாறுதல் நிலையில் வாழும் மக்கள் எல்லோரும் உபத்திரவ காலத்தைச் சகித்துக் கொண்டவர்களாகவும் மற்றும் தேவனுக்கு சாட்சியாக நின்றவர்களுமாக இருப்பார்கள்; அவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றியவர்களாகவும் உளமாற தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் இருப்பார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதை தவிர்க்கும் எண்ணத்தோடு மட்டும் ஊழியம் செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புவோர் மீந்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு நபரின் பலனுக்கான ஏற்பாட்டிற்காக தேவன் பொருத்தமான அளவீடுகளை வைத்திருக்கிறார்; அவர் ஒருவரின் வார்த்தைகள் மற்றும் நடத்தையை வைத்து மட்டுமே இந்த முடிவுகளை எடுப்பதில்லை அல்லது ஓர் ஒற்றைக் கால கட்டத்தில் ஒருவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை வைத்தும் முடிவெடுப்பதில்லை. கடந்த காலத்தில் ஒருவர் அவருக்குச் செய்த சேவையின் காரணமாக ஒருவரின் பொல்லாத நடத்தைத் தொடர்பாக அவர் நிச்சயமாக இரக்கம் காட்டுவதில்லை, அல்லது ஒருவர் தேவனுக்காக ஒரே முறை செய்த செலவுக்காக அவர் ஒருவரை மரணத்தில் இருந்து தப்பிக்க விடுவதில்லை. ஒருவரும் தனது பொல்லாங்குக்காகப் பழிவாங்கப்படுதலை தவிர்க்க முடியாது, மேலும் ஒருவரும் தமது தீய நடத்தையை மறைக்க முடியாது மேலும் அதன் மூலம் அழிவின் வேதனையைத் தவிர்க்க முடியாது. மக்கள் தங்கள் சொந்தக் கடமைகளை உண்மையில் நிறைவேற்ற முடியுமானால், அவர்கள் ஆசீர்வாதங்களையோ அல்லது இக்கட்டில் துன்பங்களையோ அடைந்தாலும் பிரதிபலன்களைத் தேடாமல் நித்தியமாக தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆசீர்வாதங்களைக் காணும்போது தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாகவும், ஆனால் ஆசீர்வாதங்களைக் காணாதபோது தங்கள் விசுவாசத்தை இழந்தும், முடிவில் தேவனுக்குச் சாட்சியாக நிற்க முடியாமல் அல்லது தங்கள் மேல் விழுந்த கடமைகளை அவர்களால் ஆற்ற முடியாமல் போனால், முன்னர் ஒருகாலத்தில் அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ள ஊழியத்தைச் செய்திருந்தாலும் கூட அவர்கள் அழிவிற்கான பொருளாகவே இருப்பார்கள். மொத்தத்தில், துன்மார்க்கர் தப்பி நித்தியத்துக்குள் செல்ல முடியாது, அல்லது இளைப்பாறுதலுக்குள்ளும் அவர்களால் பிரவேசிக்க முடியாது; நீதிமான்கள் மட்டுமே இளைப்பாறுதலின் நாயகர்கள். மனுக்குலம் சரியான பாதைக்குத் திரும்பிய பின், மக்களுக்கு இயல்பான மானிட வாழ்க்கை அமையும். அவர்கள் யாவரும் தங்களுக்குரிய கடமைகளை ஆற்றுவார்கள் மேலும் தேவனுக்கு முழு விசுவாசமானவர்களாய் இருப்பார்கள். அவர்கள் தங்கள் கீழ்ப்படியாமையையும் சீர்கெட்ட மனநிலைகளையும் முற்றிலுமாக விட்டுவிடுவார்கள், மேலும் அவர்கள் தேவனுக்காகவும் மற்றும் தேவன் நிமித்தமாக கீழ்ப்படியாமையும் எதிர்ப்புமாகிய இரண்டும் இல்லாமல் வாழ்வார்கள். அவர்கள் யாவராலும் முழுமையாக தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும். இதுவே தேவன் மற்றும் மனுக்குலத்தின் வாழ்க்கையாக இருக்கும்; இதுவே ராஜ்யத்தின் வாழ்க்கையாகவும் இளைப்பாறுதலின் வாழ்க்கையாகவும் இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க