தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 597

பிப்ரவரி 9, 2023

மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் முன்னர், அவர்கள் சத்தியத்தை நம்பினார்களா, அவர்கள் தேவனை அறிந்துள்ளார்களா, மற்றும் கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்குத் தங்களை அவர்களால் அர்ப்பணிக்க முடியுமா என்பதைப் பொறுத்தே ஒவ்வொரு வகையான நபரும் தண்டனைக்குரியவரா அல்லது பிரதிபலனுக்குரியவரா என்பது தீர்மானிக்கப்படும். கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்கு ஊழியம் செய்தும் அவரை அறியாமலும் அவருக்குக் கீழ்ப்படியாமலும் இருப்பவர்களிடம் சத்தியம் இல்லை. இத்தகைய ஜனங்கள் அக்கிரமக்காரர், மற்றும் அக்கிரமக்காரர் சந்தேகமின்றி தண்டனைக்குரியவர்கள்; மேலும் அவர்கள் தங்கள் துன்மார்க்கத்துக்கு ஏற்பத் தண்டிக்கப்படுவார்கள். தேவன் மனிதர்களின் விசுவாசத்துக்குரியவர் மேலும் அவர் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு உகந்தவர். தெளிவில்லாத மற்றும் அதரிசனமான தேவனில் விசுவாசம் உள்ளவர்களே தேவனை விசுவாசியாதவர்கள் மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிய இயலாதவர்கள் ஆவர். கண்ணுக்குப்புலனாகும் தேவனின் ஜெயங்கொள்ளும் கிரியை முடியும் போது இந்த ஜனங்களால் இன்னும் அவரை நம்புவதற்கு முடியாமல் போனால், மேலும் மாம்சத்தில் புலனாகும் தேவனுக்குத் தொடர்ந்து கீழ்ப்படியாமல் எதிர்த்தால், பின்னர் இந்த "தெளிவற்றவர்கள்", சந்தேகமின்றி, அழிவின் பொருளாக மாறுவார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் சிலர் போல—மாம்சமாகிய தேவனை வாயால் அங்கீகரித்தும் மாம்சமாகிய தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், இறுதியில் புறம்பாக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டும். மேலும், கண்ணுக்குப்புலனாகும் தேவனை வார்த்தையால் அங்கீகரிக்கும் யாரொருவரும், அவரால் கூறப்படும் சத்தியத்தைப் புசித்து மற்றும் பானம்பண்ணி, அதே நேரத்தில் தெளிவற்ற மற்றும் அதரிசனமான தேவனைப் பின்பற்றினால், நிச்சயமாக அழிவிற்கான பொருளாக இருப்பார்கள். தேவனின் கிரியை நிறைவடைந்த பின்னர் வரும் இளைப்பாறுதல் காலத்தில் இந்த ஜனங்களில் ஒருவரும் மீந்திருக்க மாட்டார்கள் அல்லது இத்தகைய ஜனங்களைப் போன்றவர்களில் ஒரு தனி நபர் கூட இளைப்பாறுதல் காலத்தில் மீந்திருக்க மாட்டார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களே பேய்த்தனமான ஜனங்கள்; அவர்களின் சாராம்சம் தேவனை எதிர்ப்பதும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதும் ஆகும், மேலும் அவர்களிடம் அவருக்குக் கீழ்ப்படியும் எண்ணம் சிறிதளவும் இருப்பதில்லை. இத்தகைய ஜனங்கள் யாவரும் அழிக்கப்படுவார்கள். உன்னிடம் சத்தியம் இருக்கிறதா மற்றும் நீ தேவனை எதிர்க்கிறாயா என்பது உன் சாராம்சத்தைப் பொறுத்தது, உன் தோற்றத்திலோ அல்லது நீ எப்போதாவது பேசுவதிலோ அல்லது நீ நடந்துகொள்ளும் விதத்திலோ இல்லை. ஒரு தனி நபர் அழிக்கப்படுவானா இல்லையா என்பது ஒருவனின் சாராம்சத்தினால் தீர்மானிக்கப்படும்; ஒருவரின் நடத்தையும் ஒருவர் சத்தியத்தைப் பின்பற்றுவதும் வெளிப்படுத்தும் சாராம்சத்தை வைத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. ஜனங்கள் மத்தியில், கிரியை செய்வதில் ஒருவரைப் போல் ஒருவர் இருப்பவர்களும், ஒரே அளவிலான கிரியையை செய்பவர்களும், மனித சாராம்சம் நல்லதாக இருப்பவர்களும், சத்தியத்தைக் கொண்டிருப்பவர்களுமான ஜனங்களே மீந்திருக்க அனுமதிக்கபப்டுவார்கள், அதே சமயம் யாருடைய மனித சாராம்சம் தீமையானதோ மற்றும் யார் கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லையோ அவர்களே அழிவுக்குரிய பொருளாவார்கள். மனுக்குலம் சென்றடையும் இடத்தைப் பற்றிய அனைத்து தேவனின் கிரியை அல்லது வார்த்தைகள் ஒவ்வொரு தனிநபரின் சாராம்சத்தைப் பொறுத்து தகுந்த முறையில் ஜனங்களைக் கையாளும்; ஒரு சிறு தவறும் ஏற்படாது, மேலும் ஒரு சிறு பிழையும் நடைபெறாது. ஜனங்கள் செயலாற்றும் போதே மனித உணர்ச்சி அல்லது அர்த்தம் கலக்கிறது. தேவன் செய்யும் கிரியை மிகவும் பொருத்தமானது; அவர் எந்த சிருஷ்டிக்கும் எதிராகப் பொய்யான கூற்றைக் கொண்டுவர மாட்டார். மனுக்குலத்தின் வருங்கால சேருமிடத்தை கண்டுணராத மற்றும் நான் கூறும் வார்த்தைகளை நம்பாத அநேக ஜனங்கள் தற்போது உள்ளனர். நம்பாத அனைவரும் மட்டுமல்லாமல் சத்தியத்தைக் கடைப்பிடிக்காத எவரும் பிசாசுகளே!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க