தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 596
பிப்ரவரி 9, 2023
இந்நாட்களில் ஜனங்களால் இன்னும் மாம்சத்தின் காரியங்களை விட்டுவிட முடியவில்லை; அவர்களால் மாம்ச இன்பம், உலகம், பணம், அல்லது அவர்களது சீர்கெட்ட மனநிலைகளை விட முடியவில்லை. பெரும்பாலான ஜனங்கள் தங்கள் தேடல்களை ஒரு அக்கறையற்ற முறையிலேயே நடத்துகின்றனர். உண்மையில், இந்த ஜனங்கள் தங்கள் இருதயங்களில் தேவனை வைத்துக்கொள்ளுவதே இல்லை; அதைவிட மோசமானது, அவர்கள் தேவனுக்குப் பயப்படுவதில்லை. அவர்களது இருதயத்தில் தேவன் இல்லை, மற்றும் அதனால் தேவன் செய்யும் அனைத்தையும் அவர்களால் கண்டுணர முடிவதில்லை, மேலும் அவர் கூறும் வார்த்தைகளை நம்புவதற்கும் அவர்கள் மிகக் குறைந்த திறன் உடையவர்களாக இருக்கின்றனர். இந்த ஜனங்கள் மிக அதிகமான அளவில் மாம்ச சிந்தை உடையவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் மிகவும் சீர்கெட்டவர்களாக இருக்கின்றனர் மற்றும் சத்தியம் என்பதே இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் என்னவென்றால், தேவன் மாம்சமாக முடியும் என்று அவர்கள் நம்புவதில்லை. மாம்சமாகிய தேவன் மீது நம்பிக்கை இல்லாத எவரும்—அதாவது, கண்ணுக்குத் தெரியும் தேவனையோ அல்லது அவரது கிரியை மற்றும் வார்த்தைகளையோ நம்பாத எவரும், மேலும் அதற்குப் பதில் பரலோகத்தில் இருக்கும் அதரிசனமான தேவனை தொழுதால்—தன் இருதயத்தில் தேவன் இல்லாத ஒரு நபராக இருப்பான். இத்தகைய ஜனங்கள் கலகக்காரர்கள் மற்றும் தேவனை எதிர்ப்பவர்கள் ஆவார்கள். சத்தியத்தைப் பற்றி எதுவும் கூற அவர்களிடம் மனிதத்தன்மை மற்றும் பகுத்தறிவு இல்லை. மேலும், இந்த ஜனங்களுக்கு, கண்ணுக்குத் தெரியும் மற்றும் தொட்டுணரத்தக்க தேவன் முற்றிலுமாக நம்பமுடியாதவராக இருக்கிறார், இருப்பினும் அதரிசனமான மற்றும் தொட்டுணர முடியாத தேவன் அதிகமாக நம்பகமானவரும் மிகவும் சந்தோஷமளிப்பவராகவும் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் தேடுவது மெய்யான சத்தியத்தை அல்ல, அல்லது வாழ்க்கையின் மெய்யான சாராம்சத்தையும் அல்ல; தேவ சித்தத்தையும் அறவே இல்லை. மாறாக, அவர்கள் மனவெழுச்சியை நாடுகிறார்கள். தங்கள் சொந்த விருப்பங்களை அடைய மிகவும் உதவும் விஷயங்கள் எதுவாக இருந்தாலும் சந்தேகமின்றி அதுவே அவர்கள் நம்புவதும் நாடுவதும் ஆகும். சத்தியத்தைப் பின்பற்றுவதற்கு அல்லாமல் தங்கள் விருப்பங்களைத் திருப்திப்படுத்தவே அவர்கள் தேவனை நம்புகிறார்கள். இத்தகைய ஜனங்கள் அக்கிரமக்காரர் இல்லையா? அவர்கள் மிக அதிகமாக சுய-நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் அவர்கள் பரலோகத்தில் இருக்கும் தேவன் தங்களைப் போன்ற "நல்லவர்களை" அழிப்பார் என்று நம்பவே மாட்டார்கள். அதற்குப் பதில், தேவன் அவர்களைப் பிழைத்திருக்க அனுமதிப்பார் என்றும் மேலும் தேவனுக்காக அநேக காரியங்களைச் செய்ததாலும் அவரிடம் கணிசமான "விசுவாசத்தை" காட்டியதாலும் சிறந்த பிரதிபலனை அளிப்பார் என்றும் நம்புகிறார்கள். கண்ணுக்குப் புலனாகிற தேவனை பின்பற்றுவதிலும், தங்கள் விருப்பங்கள் நிறைவேறாத போது, அவர்கள் தேவனுக்கு விரோதமாக உடனடியாக எழும்புவார்கள் அல்லது மிகுந்த கோபத்துக்கு ஆளாவார்கள். தங்கள் விருப்பங்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கும் இகழத்தக்க ஜனங்களைப் போல தங்களைத் தாங்களே காட்டிக் கொள்ளுகிறார்கள்; சத்தியத்தைப் பின்பற்றுவதில் அவர்கள் நேர்மையான ஜனங்கள் அல்ல. இத்தகைய ஜனங்களே கிறிஸ்துவைப் பின்பற்றுவதாக அழைக்கப்படும் துன்மார்க்கர். சத்தியத்தைப் பின்பற்றாத ஜனங்களால் சத்தியத்தை நம்பவும் முடியாது, மேலும் அவர்களால் மனுக்குலத்தின் எதிர்காலத்தை உய்த்துணரவும் முடியாது, ஏனெனில் அவர்கள் கண்ணுக்குப் புலனாகும் தேவனின் எந்த ஒரு கிரியையையும் வார்த்தைகளையும் நம்புவதில்லை—மேலும் மனுக்குலம் எதிர்காலத்தில் சென்றடையும் இடத்தை நம்ப முடியாததும் இதில் அடங்கும். ஆகவே, அவர்கள் கண்ணுக்குப் புலனாகும் தேவனைப் பின்பற்றினாலும், அவர்கள் இன்னும் தீமை செய்வார்கள், மேலும் சத்தியத்தைப் பின்பற்றவே மாட்டார்கள், அல்லது நான் கோரும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவும் மாட்டார்கள். மாறாக, தாங்கள் அழிக்கப்படுவோம் என்பதை நம்பாதவர்களே அழிக்கப்படப் போகும் ஜனங்கள். அவர்கள் எல்லோரும் தங்களை மிகவும் புத்திசாலிகள் என்று நம்புகிறார்கள், மேலும் அவர்கள் தாங்கள்தான் சத்தியத்தைப் பின்பற்றும் ஜனங்கள் என்று நம்புகிறவர்கள். அவர்கள் தங்களது துன்மார்க்கமான வழிதான் சத்தியம் என்று கருதி அதனால் அதில் மகிழ்கிறார்கள். இத்தகைய துன்மார்க்கர் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் சத்தியத்தைக் கோட்பாடாகக் கருதி தங்கள் துன்மார்க்கமான காரியங்களை சத்தியம் எனக் கொள்ளுகின்றனர், ஆனால் முடிவில், அவர்கள் தாங்கள் விதைத்ததையே அறுக்க முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை உடையவர்களாவும் அகந்தை கொண்டவர்களாகவும் இருக்கின்றனரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களால் சத்தியத்தை அடையமுடிவதில்லை; பரலோகத்தில் இருக்கும் தேவனை ஜனங்கள் அதிகமாக நம்பும்போதே அவர்கள் தேவனை அதிகமாக எதிர்க்கின்றனர். இந்த ஜனங்களே தண்டிக்கப்படப் போகிறவர்கள்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்