தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 594

பிப்ரவரி 9, 2023

ஆதியில் தேவன் இளைப்பாறுதலில் இருந்தார். அக்காலத்தில் பூமியில் மனிதர்களோ அல்லது வேறு எதுவுமோ இருக்கவில்லை, மேலும், தேவன் இன்னும் எந்தக் கிரியையும் செய்திருக்கவில்லை. மனுக்குலம் வாழ்ந்திருக்கத் தொடங்கிய பின்னர் மற்றும் சீர்கெட்ட பின்னரே அவர் தமது நிர்வாகக் கிரியையைத் தொடங்கினார்; அதில் இருந்து அவர் ஒரு போதும் இளைப்பாறவில்லை, ஆனால் அதற்குப் பதில் அவர் மனுக்குலத்திற்கு மத்தியில் ஓய்வின்றி கிரியையாற்றத் தொடங்கினார். மனுக்குலத்தின் சீர்கேட்டால் மற்றும் பிரதான தூதனின் கலகத்தால் தேவன் தமது இளைப்பாறுதலை இழந்தார். அவர் சாத்தானைத் தோற்கடித்து சீர்கெட்ட மனுக்குலத்தை மீட்காவிட்டால், அவர் மீண்டும் ஒருபோதும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது. மனிதன் இளைப்பாறுதல் இல்லாமல் இருப்பதால் தேவனும் அவ்வாறே இருக்கிறார், அவர் இளைப்பாறும் போது மனிதனும் இளைப்பாறுவான். இளைப்பாறுதலில் வாழ்வது என்பது யுத்தம் இல்லாமல், அசுத்தம் இல்லாமல் மேலும் தொடர் அநீதி இல்லாமல் வாழ்வது ஆகும். இது சாத்தானின் இடையூறுகள் இல்லாத (இங்கு "சாத்தான்" என்பது சத்துருவின் வல்லமைகளைக் குறிக்கிறது) மற்றும் சாத்தானின் சீர்கேடுகள் இல்லாத வாழ்க்கை, மேலும் அது தேவனுக்கு எதிரான எந்த வல்லமைகளும் ஊடுறுவ முடியாத வாழ்க்கையாகும்; எல்லாம் தனது வகையைப் பின்பற்றும் மற்றும் சிருஷ்டிப்பின் கர்த்தரைத் தொழுதுகொள்ளும் வாழ்க்கை மேலும் அதில் வானமும் பூமியும் முற்றிலுமாக அமைதியில் இருக்கும்—இதுவே "மனிதர்களின் இளைப்பாறுதலான வாழ்க்கை" என்ற சொற்களின் அர்த்தமாகும். தேவன் இளைப்பாறும் போது, அநீதி பூமியின் மேல் இனிமேலும் நிலைநிற்க முடியாது, அல்லது சத்துருக்களின் வல்லமைகள் மேலும் ஊடுறுவ முடியாது, மற்றும் மனுக்குலம் ஒரு புதிய ராஜ்யத்துக்குள் நுழையும்—சாத்தானால் இனி ஒருபோதும் மனுக்குலம் சீர்கேடு அடைவதில்லை, ஆனால் மாறாக சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பிறகு இரட்சிக்கப்பட்ட ஒரு மனுக்குலமாக இருக்கும். மனுக்குலத்தின் இளைப்பாறுதல் நாளே தேவனின் இளைப்பாறுதல் நாளாகவும் இருக்கும். மனுக்குலத்தால் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாத காரணத்தால்தான் தேவன் தமது இளைப்பாறுதலை இழந்தாரே ஒழிய ஆதியிலேயே அவர் தம்மால் இளைப்பாற முடியாத காரணத்தால் அல்ல. இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பது என்பதற்கு எல்லாம் இயக்கத்தை நிறுத்துகிறது அல்லது வளராமல் போகிறது என்று அர்த்தமல்ல, அல்லது தேவன் கிரியையை நிறுத்துகிறார் அல்லது மனிதர்கள் வாழ்வதை நிறுத்துகிறார்கள் என்பதும் பொருளல்ல. சாத்தான் அழிக்கப்படுவதும், அவனது தீய செயல்களில் இணைந்துகொண்ட பொல்லாத ஜனங்கள் தண்டிக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுவதும் மற்றும் தேவனுக்கு எதிரான வல்லமைகள் இல்லாமல் போவதும் நிகழும் போதே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் அடையாளம் இருக்கும். மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக தேவன் தமது கிரியையை ஆற்ற மாட்டார் என்பதே தேவன் இளைப்பாறுதலுக்குள் பிரேவேசிக்கிறார் என்பதற்கு அர்த்தமாகும். முழு மனுக்குலமும் சாத்தானின் சீர்கேடு இல்லாமல் தேவனின் ஒளிக்குள்ளும் அவரது ஆசீர்வாதத்துக்குள்ளும் வாழும், மேலும் அநீதி ஒருபோதும் ஏற்படாது என்பதுதான் மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறது என்பதற்கு அர்த்தமாகும். தேவனின் பராமரிப்பிற்குள் மனிதர்கள் பூமியில் ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ்வார்கள். தேவனும் மனுக்குலமும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, மனுக்குலம் இரட்சிக்கப்பட்டுவிட்டது, சாத்தான் அழிக்கப்பட்டுவிட்டான், மனுக்குலத்திற்குள் தேவனின் கிரியை முற்றிலுமாக முழுமையடைந்துவிட்டது என்று அர்த்தமாகும். தேவன் தொடர்ந்து மனிதர்களின் மத்தியில் கிரியை செய்ய மாட்டார், மேலும் அவர்கள் இனிமேலும் சாத்தானின் ஆதிக்கத்தின்கீழ் வாழ மாட்டார்கள். அப்படி இருக்க, தேவன் இனிமேலும் கிரியை ஆற்றிக்கொண்டிருக்க மாட்டார், மனுக்குலமும் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கவும் செய்யாது; தேவனும் மனிதர்களும் ஒரேநேரத்தில் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவன் தமது ஆதி ஸ்தலத்துக்குத் திரும்புவார், மேலும் ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் இடத்துக்குத் திரும்பிச் செல்வார்கள். தேவனின் முழு நிர்வாகமும் முடிந்துவிட்ட பின்னர் தேவனும் மனிதர்களும் தங்கும் ஸ்தலங்கள் இவைகளே. தேவனுக்கு தேவனுக்கான போய்ச்சேரும் இடம் உண்டு, மற்றும் மனுக்குலத்திற்கு மனுக்குலத்திற்கான போய்ச்சேரும் இடம் உண்டு. இளைப்பாறுதலின்போது, பூமியின் மேல் மனிதர்களுடைய வாழ்வில் தேவன் தொடர்ந்து வழிகாட்டுவார், அதே வேளையில் அவருடைய ஒளியில், அவர்கள் பரலோகத்தில் இருக்கும் ஒரே மெய் தேவனைத் தொழுதுகொள்வார்கள். தேவன் இனிமேலும் மனுக்குலத்தின் மத்தியில் வாழமாட்டார், அல்லது அவரது ஸ்தலத்தில் மனுக்குலமும் அவருடன் வாழ முடியாது. ஒரே ஆட்சி எல்லைக்குள் தேவனும் மனிதர்களும் வாழ முடியாது; மாறாக, இருவருக்கும் அவர்களுக்கே உரித்தான வாழும் முறைகள் உள்ளன. தேவன் ஒருவர் மட்டுமே மனுக்குலத்தை வழிகாட்டுகிறார், மேலும் முழு மனுக்குலமும் தேவனின் நிர்வாகக் கிரியையினால் உண்டான பலனாகும். மனிதர்கள் வழிநடத்தப்படுபவர்களோ, அவர்கள் தேவனைப் போன்ற சாராம்சம் கொண்டவர்களோ அல்ல. "இளைப்பாறுதல்" என்பது ஒருவர் தன் ஆதி ஸ்தலத்துக்குச் செல்வது ஆகும். ஆகவே, தேவன் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறார் என்றால் அவர் தமது ஆதி ஸ்தலத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டார் என்று அர்த்தமாகும். அவர் இனிமேலும் பூமியில் அல்லது மனுக்குலத்தின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்க அவர்களது மத்தியில் வாழ மாட்டார், மனிதர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறார்கள் என்றால் அவர்கள் சிருஷ்டிப்பின் மெய்யான இலக்குகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தமாகும்; அவர்கள் பூமியின் மேல் இருந்து தேவனைத் தொழுதுகொள்வார்கள், மேலும் சாதாரண மனித வாழ்வை வாழ்வார்கள். ஜனங்கள் இனிமேல் ஒருபோதும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது அவரை எதிர்க்கமாட்டார்கள், மேலும் ஆதாம் மற்றும் ஏவாளின் ஆதி வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர் இது முறையே தேவன் மற்றும் மனிதர்களின் வாழ்வும் சென்றடையும் ஸ்தலமுமாகும். தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தில் அது தோற்கடிக்கப்படுவதே தவிர்க்கமுடியாத போக்காகும். இந்த வகையில், தேவன் தமது நிர்வாகக் கிரியையை முடித்த பின்னர் அவர் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதும், மனுக்குலத்தின் முழு இரட்சிப்பும் அவர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதும் அதுபோலவே தவிர்க்கமுடியாத போக்குகளாக மாறிவிட்டன. மனுக்குலத்தின் இளைப்பாறுதல் ஸ்தலம் பூமியிலும், மேலும் தேவன் இளைப்பாறும் ஸ்தலம் பரலோகத்திலும் உள்ளன. மனிதர்கள் தங்கள் இளைப்பாறுதலில் தேவனைத் தொழுதுகொள்ளும் போது, அவர்கள் பூமியில் வாழ்வார்கள், மற்றும் தேவன் மீதமுள்ள மனுக்குலத்தை இளைப்பாறுதலுக்குள் வழிநடத்தும்போது, அவர் அவர்களை பூமியில் இருந்தல்ல பரலோகத்தில் இருந்து வழிநடத்துவார். தேவன் இன்னும் ஆவியானவராகவே இருப்பார், மனிதர்கள் இன்னும் மாம்சமாகவே இருப்பார்கள். தேவனும் மனிதர்களும் வெவ்வேறு விதமாக இளைப்பாறுவார்கள். தேவன் இளைப்பாறுதலில் இருக்கும் போது அவர் வந்து மனிதர்களுக்கு மத்தியில் தோன்றுவார்; மனிதர்கள் இளைப்பாறும் போது, அவர்கள் பரலோகத்துக்குச் செல்லவும் அங்கு வாழ்க்கையை அனுபவிக்கவும் தேவன் வழிநடத்துவார். தேவனும் மனுக்குலமும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர், சாத்தான் ஒருபோதும் இருக்க மாட்டான்; அதுபோலவே பொல்லாத மனிதர்களும் இருக்க மாட்டார்கள். தேவனும் மனுக்குலமும் இளைப்பாறும் முன்னர், பூமியில் தேவனை துன்புறுத்திய பொல்லாத நபர்களும், அங்கே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்த விரோதிகளும் ஏற்கெனவே அழிக்கப்பட்டிருப்பார்கள்; கடைசி நாட்களின் பெரும் பேரிடர்களால் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டிருப்பார்கள். அந்தப் பொல்லாத ஜனங்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர், பூமி இனி ஒருபோதும் சாத்தானின் துன்புறுத்தலை அறியாது. அப்போதுதான் மனுக்குலம் முழு இரட்சிப்பை அடையும், மற்றும் தேவனின் கிரியை முழுமையாக நிறைவடையும். தேவனும் மனிதனும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க இவைகளே முன்நிபந்தனைகளாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க