தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 593

மே 16, 2023

பரிபூரணமாக்கப்படுவதற்கு விருப்பமாக உள்ள அனைவருக்கும் பரிபூரணமாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது, எனவே அனைவரும் இளைப்பாற வேண்டும்: எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிப்பீர்கள். ஆனால் நீ பரிபூரணமாக்கப்பட விரும்பவில்லை என்றால், அற்புதமான உலகில் நுழைய விரும்பவில்லை என்றால், அது உனது சொந்தப் பிரச்சினை. பரிபூரணமாக்கப்படுவதற்கு விருப்பமாக இருப்பவர்களும் விசுவாசமுள்ளவர்களும், தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அனைவரும், மற்றும் தங்கள் செயல்பாட்டை உண்மையாகச் செய்கிறவர்களும்—இவர்கள் அனைவருமே பரிபூரணமாக்கப் படக்கூடியவர்கள். இன்று, விசுவாசமாகத் தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் அனைவரும், மற்றும் தேவனுக்கு விசுவாசமில்லாதவர்கள் அனைவரும், தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அனைவரும், குறிப்பாகப் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் பெற்றவர்கள், ஆனால் அதை நடைமுறைக்குக் கொண்டு வராதவர்கள் அத்தகைய அனைவரும் பரிபூரணமாக்கப்பட முடியாதவர்கள். விசுவாசமுள்ளவர்களாகவும் தேவனுக்கு கீழ்ப்படிபவர்களாகவும் இருக்கத் தயாராக உள்ள அனைவரையும் பரிபூரணமாக்க முடியும், அவர்கள் கொஞ்சம் அறியாதவர்களாக இருந்தாலும்; இதனைப் பின்பற்றத் தயாராக உள்ள அனைவரையும் பரிபூரணமாக்க முடியும். இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. இந்தத் திசையில் நீ தொடரத் தயாராக இருக்கும் வரை, நீ பரிபூரணமாக்கப்படமுடியும். உங்களில் யாரையும் கைவிடவோ அல்லது புறம்பாக்கவோ நான் விரும்பவில்லை, ஆனால் மனிதன் நல்லவிதமாகச் செய்ய முயற்சிக்கவில்லை என்றால், பின்னர் உன்னை நீயே அழித்துக் கொள்கிறாய்; உன்னை புறம்பாக்குவது நானல்ல, நீயே உன்னை அவ்வாறு செய்கிறாய். உனக்கு நீ நல்லவிதமாகச் செய்ய முயற்சிக்கவில்லை என்றால்—நீ சோம்பேறியாக இருந்தால், அல்லது உனது கடமையைச் செய்யாவிட்டால், அல்லது விசுவாசமாக இல்லாவிட்டால், அல்லது நீ சத்தியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், நீ எப்போதும் நீ விரும்பியபடி செய்வதானால், நீ பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், உன் சொந்தப் புகழுக்காகவும், செல்வத்துக்காகவும் போராடுகிறவன் என்றால், மற்றும் எதிர் பாலினத்தவர்களிடம் நடந்துகொள்ளும் முறையில் நீ நேர்மையற்றவனாக இருந்தால், நீ உனது சொந்தப் பாவங்களின் சுமையைச் சுமப்பாய்; நீ யாருடைய பரிதாபத்திற்கும் தகுதியுள்ளவன் அல்ல. நீங்கள் அனைவரும் பரிபூரணமாக்கப்பட வேண்டும் என்பதும், குறைந்தபட்சம் ஜெயங்கொள்ளப்பட வேண்டும் என்பதும் எனது நோக்கம், இதனால் இந்தக் கட்டக் கிரியை வெற்றிகரமாக முடிக்கப்படலாம். ஒவ்வொரு மனிதனும் பரிபூரணமாக்கப்பட வேண்டும், இறுதியில் அவரால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும், அவரால் பரிபூரணமாகச் சுத்திகரிக்கப்பட வேண்டும், அவருக்குப் பிரியமான மக்களாக மாற வேண்டும் என்பதே தேவனின் விருப்பம். நான் உங்களுக்குச் சொல்வது பின்தங்கியதா அல்லது மோசமான திறமை வாய்ந்ததா என்பதெல்லாம் முக்கியமல்ல—இது எல்லாம் உண்மை. இதை நான் சொல்வதென்பது, நான் உங்களைக் கைவிட உத்தேசிக்கிறேன், நான் உங்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டேன், அதைக்காட்டிலும் உங்களை இரட்சிக்க நான் விரும்பவில்லை என்பதையெல்லாம் நிரூபிக்கவில்லை. இன்று நான் உங்கள் இரட்சிப்பின் கிரியையைச் செய்ய வந்திருக்கிறேன், அதாவது நான் செய்யும் கிரியை இரட்சிப்பின் கிரியையின் தொடர்ச்சியாகும். ஒவ்வொரு நபருக்கும் பரிபூரணமாக்கப் படுவதற்கு வாய்ப்பு உள்ளது: ஆனால் நீ அதற்குத் தயாராக இருக்க வேண்டும், நீ பின்பற்ற வேண்டும், இறுதியில் நீ இந்த முடிவை அடைய முடியும், உங்களில் ஒருவர் கூடக் கைவிடப்பட மாட்டார்கள். நீ மோசமான திறமை வாய்ந்தவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் மோசமான திறனுக்கேற்ப இருக்கும்; நீ அதிகத் திறன் கொண்டவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் உயர் திறனுக்கேற்ப இருக்கும்; நீ அறியாதவனாகவும், கல்வியறிவற்றவனாகவும் இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் கல்வியறிவின்மைக்கு ஏற்ப இருக்கும்; நீ கல்வியறிவு பெற்றவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் நீ கல்வியறிவு பெற்றவனாக இருப்பதற்கு ஏற்ப இருக்கும்; நீ வயதானவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் வயதுக்கு ஏற்ப இருக்கும்; நீ விருந்தோம்பல் வழங்க வல்லவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் இந்தத் திறனுக்கு ஏற்ப இருக்கும்; உன்னால் விருந்தோம்பல் வழங்க முடியாது, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை மட்டுமே செய்ய முடியும் என்று நீ சொன்னால், அது ஒரு நற்செய்தியைப் பரப்புவதா, அல்லது தேவாலயத்தைக் கவனித்துக்கொள்வதா, அல்லது பிற பொது விவகாரங்களில் கலந்துகொள்வதா என்பதில் உன்னைப் பற்றிய எனது பரிபூரணமாக்கும் செயல் நீ செய்யும் செயல்பாட்டிற்கு ஏற்ப இருக்கும். விசுவாசமாக இருப்பது, கடைசிவரை கீழ்ப்படிதல், தேவன்மீது மிகுந்த அன்பு செலுத்த முற்படுவது—இதைத்தான் நீ நிறைவேற்ற வேண்டும், இந்த மூன்று விஷயங்களை விடச் சிறந்த நடைமுறைகள் எதுவும் இல்லை. இறுதியில், இந்த மூன்று விஷயங்களை மனிதன் அடைய வேண்டிய தேவையுள்ளது, அவனால் அவற்றை அடைய முடிந்தால், அவன் பரிபூரணமாகிவிடுவான். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, நீ உண்மையிலேயே பின்பற்ற வேண்டும், இந்த விஷயத்தில் நீ முன்னோக்கியும் மேல்நோக்கியும் தீவிரமான உந்துதல் செய்ய வேண்டும், அந்த விஷயத்தில் செயலற்றவனாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு நபருக்கும் பரிபூரணமாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், பரிபூரணமாக்கப்பட்டவராக ஆகும் திறன் உள்ளது என்றும் நான் சொல்லியிருக்கிறேன், இது உண்மைதான், ஆனால் நீ உன் பின்பற்றும் செயலில் சிறப்பாக இருக்க முயற்சிக்க வேண்டாம். இந்த மூன்று அளவுகோல்களை நீங்கள் அடையவில்லை என்றால், இறுதியில் நீ அவசியம் புறம்பாக்கப்படுவாய். எல்லோரும் இதைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், எல்லோருக்கும் கிரியையும் பரிசுத்த ஆவியின் பிரகாசமும் இருக்க வேண்டும், மேலும் கடைசிவரை கீழ்ப்படிய இயல வேண்டும், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை இதுதான். நீங்கள் அனைவரும் உங்கள் கடமையைச் செய்தவுடன், நீங்கள் அனைவரும் பரிபூரணப்படுத்தப்பட்டிருப்பீர்கள், உங்களிடம் பலத்த சாட்சியம் இருக்கும். சாட்சியம் அளிப்பவர்கள் அனைவரும் சாத்தானை வென்றவர்களாகவும், தேவனின் வாக்குத்தத்தைப் பெற்றவர்களாகவும் உள்ளனர், மேலும் அவர்கள் அற்புதமான சென்றடையும் இடத்திலேயே வாழ்வார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க