தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 592
மே 16, 2023
மனிதன் பூமியில் மனிதனின் உண்மையான ஜீவிதத்தை அடையும்போது, சாத்தானின் முழுச் சக்திகளும் அடிமைப்படுத்தி வைக்கப்படும்போது, மனிதன் பூமியில் எளிதாக வாழ்வான். இன்று இருப்பதுபோல விஷயங்கள் சிக்கலானதாக இருக்காது: மனித உறவுகள், சமூக உறவுகள், சிக்கலான குடும்ப உறவுகள்—அவை மிகுந்த சிரமங்களையும், மிகுந்த வேதனையையும் தருகின்றன! இங்கே மனிதனின் ஜீவிதம் மிகவும் பரிதாபகரமானது! மனிதன் ஜெயங்கொள்ளப்பட்டதும், அவனது இருதயமும் மனமும் மாறும்: தேவன் மீது பயபக்தியாயிருந்து, அவரை நேசிக்கும் இருதயம் அவனுக்கு இருக்கும். தேவனை நேசிக்க முற்படும் பிரபஞ்சத்திற்குள் உள்ள அனைவருமே ஜெயங்கொள்ளப்பட்டதும், அதாவது சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும், சாத்தானின் சகல அந்தகார வல்லமைகளும் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டதும், பூமியில் மனிதனின் ஜீவிதம் தொந்தரவு இல்லாததாக இருக்கும், அவனால் பூமியில் சுதந்திரமாக வாழ முடியும். மனிதனின் ஜீவிதம் மாம்ச உறவுகள் மற்றும் மாம்சத்தின் சிக்கல்கள் இல்லாததாக இருந்திருந்தால், அது மிகவும் எளிதாக இருக்கும். மனிதனின் மாம்ச உறவுகள் மிகவும் சிக்கலானவை, மனிதனுக்கு இதுபோன்ற விஷயங்கள் இருப்பது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தன்னை இன்னும் அவன் விடுவிக்கவில்லை என்பதற்குச் சான்றாகும். உனது ஒவ்வொரு சகோதர சகோதரிகளுடனும் நீ ஒரே உறவைக் கொண்டிருந்தால், உன் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் ஒரே உறவைக் கொண்டிருந்தால், உனக்கு எந்தக் கவலையும் இருக்காது, யாரையும் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இவை எதுவும் சிறப்பாக இருக்க முடியாது எனும்போது, இந்த வழியில் மனிதன் தனது துன்பத்தில் பாதியிலிருந்து விடுபடுவான். பூமியில் ஓர் இயல்பான மனித ஜீவிதத்தை வாழ்ந்தால், மனிதன் தேவதூதர்களை ஒத்து இருப்பான்; அவன் இன்னும் மாம்சமாக இருந்தாலும், அவன் ஒரு தேவதூதரைப் போலவே இருப்பான். இது இறுதி வாக்குத்தத்தம், மனிதனுக்கு வழங்கப்பட்ட கடைசி வாக்குத்தத்தம். இன்று மனிதன் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்கிறான்; இதுபோன்ற விஷயங்களை மனிதன் அனுபவிப்பது அர்த்தமற்றது என்று நீ நினைக்கிறாயா? சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியையை எந்தக் காரணமும் இல்லாமல் செய்ய முடியுமா? முன்னதாக மனிதனை சிட்சிப்பதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவனைப் பாதாளக்குழிக்குள் வைப்பதற்காகச் சொல்லப்பட்டது, அதாவது அவனது தலைவிதியையும் வாய்ப்புகளையும் பறிப்பது என்பது இதன் அர்த்தம். இது ஒரு விஷயத்திற்கானது: அது மனிதனின் சுத்திகரிப்பு. மனிதன் வேண்டுமென்றே பாதாளக்குழியில் வைக்கப்பட்டு, அதன்பிறகு தேவன் அவனைக் கை கழுவி விடுவதில்லை. மாறாக, அது மனிதனுக்குள் இருக்கும் கலகத்தனத்தைக் கையாள்வதற்கானது, இதனால் இறுதியில் மனிதனுக்குள் இருக்கும் விஷயங்கள் சுத்திகரிக்கப்படலாம், இதனால் அவன் தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறலாம், மேலும் அவன் ஒரு பரிசுத்தமான மனிதனைப் போல ஆகலாம். இது செய்யப்பட்டால், பின்னர் அனைத்தும் நிறைவேற்றப்படும். உண்மையில், மனிதனுக்குள் கையாளப்பட வேண்டிய விஷயங்கள் கையாளப்படும்போது, மனிதன் உறுதியான சாட்சியமளிக்கும் போது, சாத்தானும்கூட தோற்கடிக்கப்படுவான், மேலும் முற்றிலும் சுத்திகரிக்கப்படாத, மனிதனுக்குள் அசலாக இருக்கக் கூடிய சில விஷயங்கள் மனிதனுக்குள் இருந்தாலும் கூட, சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும் அதன்பின்னர் பிரச்சினையை ஏற்படுத்தாது, மேலும் அந்த நேரத்தில் மனிதன் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டிருப்பான். மனிதன் அத்தகைய ஜீவிதத்தை ஒருபோதும் அனுபவித்து உணர்ந்ததில்லை, ஆனால் சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும், அனைத்தும் தீர்ந்துவிடும், மனிதனுக்குள் இருக்கும் அற்பமான விஷயங்கள் அனைத்தும் தீர்க்கப்படும், அந்த முக்கிய பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன், மற்ற எல்லாக் கஷ்டங்களும் முடிவுக்கு வரும். பூமியில் தேவன் மனித உருவம் எடுத்த இந்தச் சமயத்தில், அவர் மனிதர்களிடையே தனிப்பட்ட முறையில் தனது கிரியையைச் செய்யும்போது, அவர் செய்யும் எல்லாக் கிரியைகளும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே செய்யப்படுகின்றன, மேலும் மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் மூலமும், உங்களை முழுமையாக்குவதன் மூலமும் அவர் சாத்தானைத் தோற்கடிப்பார். நீங்கள் உறுதியான சாட்சியங்களை அளிக்கும்போது, இதுவும் சாத்தானின் தோல்வியின் அடையாளமாக இருக்கும். மனிதன் முதலில் ஜெயங்கொள்ளப்படுகிறான், சாத்தானைத் தோற்கடிப்பதற்காக இறுதியில் முழுமையாக பரிபூரணமாக்கப்படுகிறான். சாராம்சத்தில், எவ்வாறாயினும், சாத்தானின் தோல்வியுடன் சேர்ந்து, உபத்திரவங்கள் நிறைந்த இந்த வெற்றுக் கடலிலிருந்து எல்லா மனிதர்களுக்கும் இது இரட்சிப்பாகும். கிரியை மேற்கொள்ளப்படுவது பிரபஞ்சம் முழுவதிலுமா அல்லது சீனாவிலா என்பதைப் பொருட்டாகக் கொள்ளாமல், சாத்தானைத் தோற்கடித்து, மனுக்குலம் முழுவதிலும் இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கு எல்லாம் வரிசையாக உள்ளன, இதனால் மனிதன் இளைப்பாறுதலான இடத்திற்குள் பிரவேசிக்க முடியும். மனித உருவான தேவன், இந்த இயல்பான மாம்சம், துல்லியமாகச் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆகும். வானத்தின் கீழே உள்ள தேவனை நேசிக்கும் அனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கு மாம்சத்தில் தேவனின் கிரியை பயன்படுத்தப்படுகிறது, இது எல்லா மனிதர்களையும் ஜெயங்கொள்ளும் பொருட்டாகும், மேலும், சாத்தானைத் தோற்கடிப்பதற்கானதாகும். எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பைக் கொடுப்பதற்கான தேவனின் அனைத்து நிர்வாகக் கிரியைகளின் உட்பொருளானது, சாத்தானின் தோல்வியிலிருந்து பிரிக்க முடியாதது. ஏன், இந்தக் கிரியையின் பெரும்பகுதிகளில், நீங்கள் சாட்சியம் அளிப்பது பற்றி எப்போதும் பேசப்படுகிறது? இந்த சாட்சியம் யாரை நோக்கி இயக்கப்படுகிறது? இது சாத்தானை நோக்கியதல்லவா? இந்தச் சாட்சியம் தேவனுக்குச் செய்யப்படுகிறது, மேலும் தேவனின் கிரியை அதன் பயனை அடைந்துள்ளது என்பதற்கான சாட்சியமளிக்கப்படுகிறது. சாட்சியம் அளிப்பது சாத்தானைத் தோற்கடிக்கும் கிரியையுடன் தொடர்பு கொண்டது; சாத்தானுடன் ஒரு யுத்தம் இல்லாவிட்டால், மனிதன் சாட்சியம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், மனிதனை இரட்சிக்கும் அதே நேரத்தில், சாத்தான் தோற்கடிக்கப்பட வேண்டும், சாத்தானுக்கு முன்பாக மனிதன் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று தேவன் கோருகிறார், அது மனிதனை இரட்சிக்கவும் சாத்தானுடன் யுத்தம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, மனிதன் இரட்சிக்கப்படும் பொருள் மற்றும் சாத்தானைத் தோற்கடிப்பதற்கான ஒரு கருவி என இரண்டுமாகிறான், ஆகவே மனிதன் தேவனின் முழு நிர்வாகக் கிரியையின் உட்பொருளாக இருக்கிறான், அதே சமயம் சாத்தான் வெறுமனே அழிவின் பொருள், மற்றும் எதிரியாக இருக்கிறான். நீ எதுவும் செய்யவில்லை என்று நீ உணரலாம், ஆனால் உனது மனநிலையின் மாற்றங்கள் காரணமாக, சாட்சியம் அளிக்கப்படுகிறது, மேலும் இந்தச் சாட்சியம் சாத்தானை நோக்கிச் செய்யப்படுகிறது, அது மனிதனுக்குச் செய்யப்படவில்லை. அத்தகைய சாட்சியத்தை அனுபவிக்க மனிதன் தகுதியற்றவன். தேவன் செய்த கிரியையை அவன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? தேவனுடைய யுத்தத்தின் நோக்கம் சாத்தான்; இதற்கிடையில், மனிதன் இரட்சிப்பின் பொருள் மட்டுமேயாவான். மனிதனிடம் சீர்கெட்ட சாத்தானின் மனப்பான்மை உள்ளது, மேலும் இந்தக் கிரியையைப் புரிந்துகொள்ள இயலாதவனாக இருக்கிறான். இதன் காரணம் சாத்தான் ஏற்படுத்தும் சீர்கேடு ஆகும், அது மனிதனுக்கு இயல்பானது அல்ல, ஆனால் அது சாத்தானால் இயக்கப்படுகிறது. இன்று, தேவனின் முக்கிய கிரியை சாத்தானைத் தோற்கடிப்பது, அதாவது மனிதனை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவது, இதனால் மனிதன் சாத்தானுக்கு முன்பாக தேவனுக்கு இறுதி சாட்சியம் அளிக்க முடியும். இந்த வகையில், எல்லா விஷயங்களும் நிறைவேற்றப்படும். பல சந்தர்ப்பங்களில், உனது வெறுங்கண்ணுக்கு எதுவும் செய்யப்படவில்லை என்பதுபோல தோன்றுகிறது, ஆனால் உண்மையில், கிரியை ஏற்கெனவே முடிக்கப்பட்டுவிட்டது. முடிக்கப்பட்டு விட்ட அனைத்துக் கிரியைகளும் கண்ணுக்குப் புலப்பட வேண்டும் என்று மனிதன் கோருகிறான், ஆனாலும் உன் கண்ணுக்குத் தெரியாமலேயே நான் என் கிரியையை முடித்துவிட்டேன், ஏனென்றால் சாத்தான் சரண் அடைந்துவிட்டான், அதாவது அவன் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டான், தேவனின் ஞானம், சக்தி மற்றும் அதிகாரம் அத்தனையும் சாத்தானை வென்று விட்டது. துல்லியமாக, இதுவே சொல்லப்பட வேண்டிய சாட்சியம், அதற்கு மனிதனிடம் தெளிவான வெளிப்பாடு இல்லை என்றாலும், அது வெறுங்கண்ணுக்குப் புலப்படவில்லை என்றாலும், சாத்தான் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டு விட்டான். இந்தக் கிரியை முழுதும் சாத்தானுக்கு எதிராக இயக்கப்பட்டு சாத்தானுடனான யுத்தம் காரணமாக மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வெற்றி பெற்றதாக மனிதன் பார்க்காத பல விஷயங்கள் உள்ளன, ஆனால் அவை தேவனின் பார்வையில் வெற்றிகரமாக நீண்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டன. தேவனின் எல்லா கிரியைகளைப் பற்றிய உள்ளார்ந்த சத்தியங்களில் இது ஒன்றாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்