தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 591

மே 15, 2023

இன்று, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை அடைவதற்கு முன்பு, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது மற்றும் பரிபூரணமாக்கப்படுவது ஆகியவையே மனிதன் பின்பற்ற வேண்டியவை, சாத்தான் அடிமைப்படுத்தி வைக்கப்படுவதற்கு முன்பு அவைதான் அவன் பெறவிரும்பும் நோக்கங்களாகும். அடிப்படையாகவே, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது மற்றும் பரிபூரணமாக்கப்படுவது அல்லது பெரிய அளவில் பயன்படுத்தப்படுவது இவற்றை மனிதன் பின்பற்றுவது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதற்கானது: மனிதனின் பின்பற்றல் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவதற்கானது, ஆனால் இறுதிப் பயன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதாக இருக்கும். சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதன் மூலம் மட்டுமே மனிதன் பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை, தேவனைத் தொழுது கொள்ளும் ஜீவிதத்தை ஜீவிக்க முடியும். இன்று, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுதல் மற்றும் பரிபூரணமாக்கப்படுதல் ஆகியவற்றை மனிதன் பின்பற்றுவது, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தைப் பெறுவதற்கு முன்னர் பின்பற்றப்படும் விஷயமாகும். அவை சுத்திகரிக்கப்படுவது, சத்தியத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் சிருஷ்டிகரைத் தொழுது கொள்வது ஆகியவற்றுக்காகவே முதன்மையாகப் பின்பற்றப்படுகின்றன. பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை, கஷ்டமோ உபத்திரவமோ இல்லாத ஒரு ஜீவிதத்தை மனிதன் கொண்டிருந்தால், மனிதன் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவதற்கான பின்பற்றுதலில் ஈடுபட மாட்டான். "ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது" மற்றும் "பரிபூரணமாக்கப்படுதல்" ஆகியவை மனிதன் பின்பற்றுவதற்குத் தேவன் கொடுக்கும் நோக்கங்களாகும், மேலும் இந்த நோக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் மனிதன் சத்தியத்தை நடைமுறையாக்கும்படியும் ஓர் அர்த்தமுள்ள ஜீவிதத்தை வாழும்படியும் அவர் செய்கிறார். மனிதனை முழுமையடையச் செய்வதும், அவனை ஆதாயப்படுத்திக் கொள்வதும் இதன் நோக்கமாகும், மேலும் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது, பரிபூரணமாக்கப்படுவது இவற்றைப் பின்பற்றுவது அதற்கான ஒரு வழிமுறை மட்டுமேயாகும். எதிர்காலத்தில், மனிதன் அற்புதமான சென்றடையும் இடத்திற்குள் பிரவேசித்தால், ஒரு ஜெயங்கொண்டவனாக மாறியதற்கும் பரிபூரணமாக்கப்பட்டதற்கும் எந்தக் குறிப்பும் இருக்காது; தங்கள் கடமையைச் செய்யும் ஒவ்வொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் மட்டுமே இருக்கும். இன்று, மனிதன் வெறுமனே தனக்கான ஒரு நோக்கத்தை வரையறுக்கும் பொருட்டு இவற்றைப் பின்பற்றுமாறு செய்யப்பட்டுள்ளான், இதனால் மனிதனின் பின்பற்றுதல் அதிக இலக்கு மற்றும் நடைமுறை கொண்டதாக இருக்கும். இல்லையெனில், மனிதன் தெளிவற்ற புலனாகாதவற்றுக்கு மத்தியில் வாழ்வான், மேலும் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதை நாடுவான், இது அப்படியானால், மனிதன் இன்னும் அதிகமாக பரிதாபத்துக்கு உரியவன் ஆகமாட்டானா? குறிக்கோள்களோ கொள்கைகளோ இல்லாமல் இந்த வகையில் பின்பற்றுவது—இது தன்னைத்தானே ஏமாற்றுவது அல்லவா? இறுதியில், இந்தப் பின்பற்றல் இயற்கையாகவே பயனற்றதாக இருக்கும்; முடிவில், மனிதன் இன்னும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வான், அதிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள அவனால் இயலாது. இத்தகைய நோக்கமற்ற பின்பற்றலுக்கு அவனை ஏன் உட்படுத்த வேண்டும்? மனிதன் நித்தியமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்கும்போது, சிருஷ்டிகரைத் தொழுது கொள்வான், மனிதன் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு நித்தியத்திற்குள் பிரவேசித்துள்ள காரணத்தால், மனிதன் எந்த நோக்கத்தையும் பின்பற்ற மாட்டான், அல்லது சாத்தானால் முற்றுகையிடப்படுவதைப் பற்றி அவன் கவலைப்பட மாட்டான். இந்த நேரத்தில், மனிதன் தனது இடத்தை அறிந்துகொள்வான், மேலும் தன் கடமையைச் செய்வான், அவர்கள் சிட்சிக்கப்படாவிட்டாலும் அல்லது நியாயந்தீர்க்கப்படாவிட்டாலும் கூட, ஒவ்வொரு நபரும் தங்கள் கடமையைச் செய்வார்கள். அந்த நேரத்தில், மனிதன் அடையாளம் மற்றும் அந்தஸ்து இவை இரண்டிலும் ஒரு ஜீவனாக இருப்பான். உயர்வு மற்றும் தாழ்வு என்ற வேறுபாடு இனி இருக்காது; ஒவ்வொரு நபரும் ஒரு வித்தியாசமான செயல்பாட்டைச் செய்வார்கள். ஆயினும்கூட மனிதன் ஒழுங்காகவும் மனிதகுலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும் ஒரு சென்றடையும் இடத்தில் வாழ்வான்; சிருஷ்டிகரைத் தொழுது கொள்வதற்காக மனிதன் தன் கடமையைச் செய்வான், மேலும் இந்த மனுக்குலமே நித்திய மனுக்குலமாக மாறும். அந்த நேரத்தில், மனிதன் தேவனால் வெளிச்சம் பெற்ற ஒரு ஜீவிதம், தேவனின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் உள்ள ஒரு ஜீவிதம், தேவனுடன் இணைந்த ஒரு ஜீவிதத்தை ஆதாயப்படுத்தியிருப்பான். மனுக்குலம் பூமியில் ஒரு இயல்பான ஜீவிதத்தை நடத்தும், மேலும் அனைத்து மக்களும் சரியான பாதையில் பிரவேசிப்பார்கள். 6,000 ஆண்டுக்கால நிர்வாகத் திட்டம் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடித்திருக்கும், அதாவது மனிதன் சிருஷ்டிக்கப்பட்டபோது இருந்த அசலான சாயலைத் தேவன் மீட்டிருப்பார், அப்படி ஆகியிருந்தால் தேவனின் உண்மையான நோக்கம் நிறைவேறியிருக்கும். ஆரம்பத்தில், மனுக்குலம் சாத்தானால் சீர்கெட்டுப்போவதற்கு முன்பு, மனுக்குலம் பூமியில் ஓர் இயல்பான ஜீவிதத்தை நடத்தியது. பின்னர், மனிதன் சாத்தானால் சீர்கெட்டுப்போனபோது, மனிதன் இந்த இயல்பான ஜீவிதத்தை இழந்தான், அதனால் தேவனின் நிர்வாகக் கிரியையும், மனிதனின் இயல்பான ஜீவிதத்தை மீட்கச் சாத்தானுடனான யுத்தமும் தொடங்கியது. தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியைகள் முடிவுக்கு வரும்போதுதான், மனுக்குலத்தின் ஜீவிதம் அதிகாரப்பூர்வமாக பூமியில் தொடங்கும்; அதன்பிறகுதான் மனிதனுக்கு ஓர் அற்புதமான ஜீவிதம் கிடைக்கும், ஆரம்பத்தில் மனிதனை சிருஷ்டிப்பதில் தேவன் கொண்டிருந்த தனது நோக்கத்தையும், மனிதனின் அசல் சாயலையும் மீட்டெடுப்பார். ஆகவே, பூமியில் மனிதகுலத்தின் இயல்பான ஜீவிதம் மனிதனுக்கு கிடைத்தவுடன், மனிதன் ஜெயங்கொண்டவனாகவோ அல்லது பரிபூரணமாக்கப்பட்டவனாகவோ இருப்பதை பின்பற்ற மாட்டான், ஏனென்றால் மனிதன் பரிசுத்தவானாக இருப்பான். மக்கள் பேசும் "ஜெயங்கொண்டவர்கள்" மற்றும் "பரிபூரணமாக்கப்பட்டவர்கள்" என்பது தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தின் போது மனிதன் பின்பற்றுவதற்கானவை, மேலும் அவை மனிதன் சீர்கேட்டுப்போனதால் மட்டுமே இருக்கின்றன. உனக்கு ஒரு நோக்கத்தைக் கொடுத்து, உன்னை இந்த நோக்கத்தைப் பின்பற்றச் செய்வதன் மூலம், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். நீ சாட்சியம் அளித்து சாத்தானை அவமானப்படுத்த, உன்னை ஒரு ஜெயங்கொண்டவன் அல்லது பரிபூரணமாக்கப்பட வேண்டியவன் அல்லது பயன்படுத்தப்பட வேண்டியவனாக இருக்கும்படி கேட்பது தேவைப்படுகிறது. இறுதியில், மனிதன் பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை நடத்துவான், மனிதன் பரிசுத்தவானாக இருப்பான்; இது நிகழும்போது, மக்கள் இன்னும் ஜெயங்கொண்டவர்களாக மாற முற்படுவார்களா? அவர்கள் அனைவரும் சிருஷ்டிப்பின் ஜீவன்கள் அல்லவா? ஒரு ஜெயங்கொண்டவன் மற்றும் ஒரு பரிபூரணமாக்கப்பட்டவன் என்று பேசுகையில், இந்த வார்த்தைகள் சாத்தானையும், மனிதனின் இழிநிலையையும் குறிக்கின்றன. "ஜெயங்கொண்டவன்" என்ற இந்த வார்த்தை சாத்தானுக்கும் விரோதச் சக்திகளுக்கும் எதிராக ஜெயங்கொள்ளப்படுவதைக் குறிக்கவில்லையா? நீ பரிபூரணப்படுத்தப்பட்டாய் என்று நீ கூறும்போது, உனக்குள் உள்ள எந்தவொன்று பரிபூரணப்படுத்தப்பட்டது? உன் சீர்கெட்ட சாத்தானிய மனப்பான்மையிலிருந்து நீயே விலகிவிட்டாய், இதனால் நீ தேவனுடைய மிக உயர்ந்த அன்பை அடைய முடியும் என்பதுதான், இல்லையா? இதுபோன்ற விஷயங்கள் மனிதனுக்குள் இருக்கும் இழிவான விஷயங்கள் தொடர்பாக மற்றும் சாத்தான் தொடர்பானவற்றுடன் கூறப்படுகின்றன; அவை தேவன் தொடர்பாகப் பேசப்படவில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க