தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 590

மே 15, 2023

ஜெயங்கொள்ளும் கிரியையை முடித்ததும், மனிதன் ஓர் அழகான உலகத்திற்குக் கொண்டு வரப்படுவான். இந்த ஜீவிதம் அப்போதும் நிச்சயமாகப் பூமியில்தான் இருக்கும், ஆனால் அது இன்றைய மனிதனின் ஜீவிதத்தைப்போலல்லாமல் இருக்கும். மனிதகுலம் முழுவதையும் ஜெயங்கொண்ட பின்னர் மனிதகுலத்தின் ஜீவிதம் இதுதான், இது பூமியில் மனிதனுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும், மேலும் மனிதகுலத்திற்கு இதுபோன்ற ஒரு ஜீவிதம் இருப்பது மனிதகுலம் ஒரு புதிய மற்றும் அழகான உலகில் நுழைந்துள்ளது என்பதற்குச் சான்றாக இருக்கும். இது பூமியிலுள்ள மனிதன் மற்றும் தேவனின் ஜீவிதத்தின் தொடக்கமாக இருக்கும். அத்தகைய அழகான ஜீவிதத்தின் முன்மாதிரி என்னவென்றால், மனிதன் சுத்திகரிக்கப்பட்டு ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு, அவன் சிருஷ்டிகருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிறான். ஆகவே, மனிதகுலம் போய்ச்சேர வேண்டிய அற்புதமான இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, தேவனின் கிரியையின் கடைசிக் கட்டமே ஜெயங்கொள்ளும் கிரியையாகும். அத்தகைய ஜீவிதம் என்பது பூமியில் மனிதனின் எதிர்கால ஜீவிதமாகவும், பூமியில் மிக அழகான ஜீவிதமாகவும், மனிதன் ஏங்குகிற ஜீவிதமாகவும், உலக வரலாற்றில் மனிதன் இதற்கு முன் அடையாத ஒரு வகை ஜீவிதமாகவும் இருக்கிறது. இது 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியையின் இறுதிப் பலனாகும்; மனிதகுலம் இதற்குத்தான் வெகுவாக ஏங்குகிறது, மேலும் இது மனிதனுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தமும் ஆகும். ஆனால் இந்த வாக்குத்தத்தம் உடனடியாக நிறைவேறாது: கடைசிக் காலத்தின் கிரியைகள் முடிந்ததும், மனிதன் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்பட்டதும், அதாவது சாத்தான் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னரே மனிதன் எதிர்காலத்தில் போய்ச்சேருமிடத்திற்குள் நுழைவான். மனிதன் சுத்திகரிக்கப்பட்ட பிறகு, அவன் பாவ இயல்பு இல்லாதவனாக இருப்பான், ஏனென்றால் தேவன் சாத்தானைத் தோற்கடித்திருப்பார், அதாவது விரோத சக்திகளால் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்காது, மனிதனின் மாம்சத்தைத் தாக்கக்கூடிய விரோத சக்திகள் எதுவும் இருக்காது. ஆகவே மனிதன் சுதந்திரமாகவும் பரிசுத்தமாகவும் இருப்பான்—அவன் நித்தியத்திற்குள் நுழைந்திருப்பான். அந்தகாரத்தின் வலிமைமிக்க விரோத சக்திகள் அடிமைத்தனத்தில் வைத்திருந்தால் மட்டுமே, மனிதன் எங்குச் சென்றாலும் சுதந்திரமாக இருப்பான், ஆகவே அவன் கிளர்ச்சியோ எதிர்ப்போ செய்யாமல் இருப்பான். சாத்தான் அடிமைத்தனத்தில் இருக்க வேண்டும், இதனால் மனிதனிடத்தில் அனைத்தும் நன்றாக இருக்கும்; தற்போதைய நிலைமை நிலவுவது ஏனென்றால் பூமியில் எல்லா இடங்களிலும் சாத்தான் இன்னமும் பிரச்சினையைத் தூண்டுகிறான், மேலும் தேவனின் நிர்வாகத்தின் முழு கிரியையும் அதன் முடிவை இன்னும் எட்டவில்லை. சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், மனிதன் முற்றிலுமாக விடுவிக்கப்படுவான்; சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து வெளியே வந்து மனிதன் தேவனைப் பெற்றதும், அவன் நீதியின் சூரியனைக் காண்பான். இயல்பான மனிதனுக்கு உரிய ஜீவிதம் மீண்டும் பெறப்படும்; தீமையிலிருந்து நன்மையை அறிந்துகொள்ளும் திறன், எப்படி சாப்பிட வேண்டும் மற்றும் ஆடை அணிய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது, இயல்பாக வாழக்கூடிய திறன் போன்ற இயல்பான மனிதனுக்கு இருக்க வேண்டியவை அனைத்தும் மீண்டும் பெறப்படும். ஏவாள் சர்ப்பத்தால் பரீட்சிக்கப்படாவிட்டால், ஆரம்பத்தில் சிருஷ்டிக்கப்பட்ட பிறகு மனிதன் இந்த மாதிரியான இயல்பான ஜீவிதத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவன் சாப்பிட்டு, ஆடை அணிந்து, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை நடத்தியிருக்க வேண்டும். மனிதன் சீரழிவு நிலைக்கு வந்தபின், இந்த ஜீவிதம் அடைய முடியாத மாயையாக மாறியது, இன்றும் கூட மனிதன் அத்தகைய விஷயங்களைக் கற்பனை செய்யத் துணியவில்லை. உண்மையில், மனிதன் ஏங்குகிற இந்த அழகான ஜீவிதம் ஓர் அவசியத் தேவையாகும். மனிதன் அத்தகைய போய்ச்சேருமிடம் இல்லாமல் இருந்திருந்தால், பூமியில் அவனது சீரழிந்த ஜீவிதம் ஒருபோதும் முடிவடையாது, இவ்வளவு அழகான ஜீவிதம் இல்லாதிருந்தால், சாத்தானின் தலைவிதிக்கு அல்லது பூமியின் மீது சாத்தான் அதிகாரம் வைத்திருக்கும் காலத்துக்கு எந்த முடிவும் இருக்காது. மனிதன் அந்தகாரத்தின் வலிமை கொண்ட சக்திகளால் எட்ட முடியாத ஓர் உலகிற்குள் வர வேண்டும், அவன் அவ்வாறு செய்யும்போது, சாத்தான் தோற்கடிக்கப்பட்டான் என்பதை இது நிரூபிக்கும். இந்த வகையில், சாத்தானால் எந்த இடையூறும் ஏற்படாத நிலையில், தேவனே மனிதகுலத்தைக் கட்டுப்படுத்துவார், மேலும் அவர் மனிதனின் முழு ஜீவிதத்தையும் கட்டளையிடுவார், கட்டுப்படுத்துவார்; அப்போதுதான் சாத்தான் உண்மையிலேயே தோற்கடிக்கப்படுவான். இன்று மனிதனின் ஜீவிதம் பெரும்பாலும் அசுத்தமான ஜீவிதம்; அது இன்னும் கஷ்டமான மற்றும் துன்பப்பட்ட ஜீவிதம்தான். இதைச் சாத்தானின் தோல்வி என்று சொல்ல முடியாது; மனிதன் இன்னமும் துன்பக் கடலிலிருந்து தப்பவில்லை, இன்னும் மனிதனின் வாழ்க்கையின் கஷ்டத்திலிருந்து, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பவில்லை, ஆனால் இன்னும் அவனுக்கு தேவனைப் பற்றிய சிறிதளவு அறிவுகூட இல்லை. மனிதனின் கஷ்டங்கள் அனைத்தும் சாத்தானால் உருவாக்கப்பட்டவை; மனிதனின் வாழ்க்கையில் துன்பத்தைக் கொண்டுவந்தது சாத்தான்தான், மேலும் சாத்தான் அடிமைத்தனத்தில் வைக்கப்பட்ட பின்னரே மனிதனால் துன்பக் கடலில் இருந்து பரிபூரணமாகத் தப்பிக்க முடியும். ஆயினும், மனிதனின் இதயத்தை ஜெயிப்பதன் மூலமும், அதனை ஆதாயப்படுத்துவதன் மூலமும் சாத்தானுடனான போரில் வென்றெடுக்கப்பட்டவனாக மனிதனை ஆக்குவதன் மூலமும், சாத்தானின் அடிமைத்தனம் அடையப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க