தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 589

மே 16, 2023

சிருஷ்டிகர் சிருஷ்டித்த அனைத்து ஜீவராசிகளுக்கும் திட்டமிட விரும்புகிறார். அவர் செய்யும் எதையும் நீ நிராகரிக்கவோ அல்லது கீழ்ப்படியாமல் இருக்கவோ கூடாது, அல்லது நீ அவருக்கு எதிராகக் கலகம் செய்யவும் கூடாது. அவர் செய்யும் கிரியை இறுதியில் அவருடைய நோக்கங்களை அடையும்போது, இதில் அவர் மகிமையைப் பெறுவார். இன்று, நீ மோவாபின் சந்ததி என்றோ, அல்லது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததி என்றோ ஏன் கூறப்படவில்லை? தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களைப் பற்றி ஏன் பேசவில்லை, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசிகளைப் பற்றி மட்டுமே ஏன் பேசப்படுகிறது? சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசி—இதுதான் மனிதனின் உண்மையான பெயர், அவனது உள்ளார்ந்த அடையாளமாக இருப்பது இதுவே. கிரியையின் காலம் மற்றும் காலகட்டங்கள் மாறுபடுவதால் மட்டுமே பெயர்கள் மாறுபடுகின்றன; உண்மையில், மனிதன் ஓர் இயல்பான ஜீவராசி. எல்லா ஜீவராசிகளும், அவை மிகவும் சீர்கெட்டவையாக இருந்தாலும், மிகப் புனிதமானவையாக இருந்தாலும், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியின் கடமையைச் செய்ய வேண்டும். தேவன் ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்யும்போது, உனது திசை, விதி அல்லது போய்ச்சேருமிடத்தைப் பயன்படுத்தி அவர் உன்னைக் கட்டுப்படுத்த மாட்டார். உண்மையில் இந்த வகையில் அவர் கிரியை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜெயங்கொள்ளும் கிரியையின் நோக்கம், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியின் கடமையை மனிதன் செய்ய வைப்பதும், சிருஷ்டிகரை அவன் தொழுது கொள்வதும் ஆகும்; இதற்குப் பிறகுதான் அவன் போய்ச்சேர வேண்டிய அற்புதமான இடத்திற்குள் பிரவேசிக்க முடியும். மனிதனின் தலைவிதி தேவனின் கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னைக் கட்டுப்படுத்த உன்னாலேயே இயலாது. மனிதன் எப்போதுமே தன் சார்பாக விரைந்து வந்து தன்னை மும்முரமாகப் பயன்படுத்தினாலும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது. நீ உன் சொந்த வாய்ப்புகளை அறிந்து கொள்ள முடிந்தால், உன் சொந்த விதியை உன்னால் கட்டுப்படுத்த முடிந்தால், நீ அப்போதும் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியாக இருப்பாயா? சுருக்கமாகக் கூறுவதென்றால், தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய எல்லாக் கிரியைகளும் மனிதனுக்காகவே செய்யப்படுகின்றன. உதாரணமாக, வானங்களையும் பூமியையும் மற்றும் மனிதனுக்குச் சேவை செய்யத் தேவன் சிருஷ்டித்த எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்: மனிதனுக்காக அவர் உருவாக்கிய சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள், வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம், மற்றும் இது போன்றவை எல்லாம் மனிதனின் ஜீவிதத்துக்காகவே உருவாக்கப்படுகின்றன. ஆகவே, தேவன் மனிதனை எவ்வாறு சிட்சிக்கிறார், நியாயந்தீர்க்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், இவை அனைத்தும் மனிதனின் இரட்சிப்பின் பொருட்டுதான் இருக்கின்றன. மனிதனை அவனது மாம்ச நம்பிக்கையிலிருந்து அவர் நீக்கினாலும், அது மனிதனைச் சுத்திகரிப்பதற்காகவே, மனிதனின் சுத்திகரிப்பு அவன் உயிர்வாழ்வதற்காகவே செய்யப்படுகிறது. மனிதன் யோய்ச்சேருமிடம் சிருஷ்டிகரின் கைகளில் உள்ளது, எனவே மனிதன் எப்படித் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க