தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 587

டிசம்பர் 23, 2022

இந்தப் பரந்த உலகில், மீண்டும் மீண்டும் பெருங்கடல்கள் நிலங்களுக்குள் பாய்கின்றன. நிலங்கள் பெருங்கடல்களின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சர்வத்தையும் ஆளுகிறவராகிய அவரைத் தவிர இந்த மனித இனத்தை வேறு எவராலும் வழிநடத்த முடியாது. தேவனையன்றி இந்த மனித இனத்திற்காக கிரியை செய்யவோ ஆயத்தங்களைச் செய்யவோ வலிமைமிக்க ஒருவரும் இல்லை. இந்த மனித இனத்தை ஒளியுள்ள சென்றுசேருமிடத்திற்கு வழிநடத்தக்கூடிய மற்றும் பூமிக்குரிய அநீதிகளிலிருந்து விடுவிக்கக்கூடிய ஒருவரும் இல்லை. மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் குறித்து தேவன் புலம்புகிறார்; மனிதகுலத்தின் வீழ்ச்சியைக் கண்டு துக்கப்படுகிறார் மற்றும் மனிதகுலம் படிப்படியாகச் சிதைவை நோக்கி அணிவகுத்து வருவதாலும், திரும்பி வராத பாதையில் செல்வதாலும் வேதனைப்படுகிறார். தேவனுடைய இருதயத்தை உடைத்து, பொல்லாங்கனைத் தேடுகிற அத்தகைய மனிதகுலம் எந்த திசையில் செல்லக்கூடும் என்று யாரும் சிந்தித்ததில்லை. இதனால் தான் என்னவோ தேவனுடைய கோபத்தை யாரும் உணர்வதில்லை. தேவனைப் பிரியப்படுத்த ஒரு வழியைத் தேடுவதில்லை. அவரிடம் நெருங்கிச் செல்ல முயற்சிப்பதில்லை. வருத்தத்தையும் வேதனையையும் யாரும் புரிந்து கொள்ள முற்படுவதில்லை. தேவனுடைய சத்தத்தைக் கேட்ட பிறகும், மனிதன் தனது சொந்த பாதையில் தொடர்கிறான்; அவரிடமிருந்து விலகிச் செல்கிறான்; அவருடைய கிருபையையும் பராமரிப்பையும் தவிர்த்து விடுகிறான்; அவருடைய சத்தியத்தைத் தவிர்க்கிறான்; தேவனின் எதிரியான சாத்தானுக்குத் தன்னை விற்க விரும்புகிறான். தேவனை நிராகரித்து பின் அதைக் குறித்து சிந்திக்காத இந்த மனிதகுலத்தை நோக்கி தேவன் எவ்வாறு செயல்படுவார் என்பது பற்றியும் மனிதன் தனது பிடிவாதத்தைத் தொடர்வது பற்றியும் எவரேனும் எதையேனும் சிந்தித்ததுண்டா? தேவனுடைய தொடர்ச்சியான நினைவூட்டல்களுக்கும் அறிவுரைகளுக்கும் காரணம், அவர் இதுவரை இல்லாத அளவில் மனிதனின் மாம்சமும் ஆத்துமாவும் தாங்க முடியாத ஒரு பேரழிவைத் தன் கைகளில் தயார் செய்து வைத்திருப்பதே என்று யாருக்கும் தெரிவதில்லை. இந்தப் பேரழிவு மாம்சத்தின் தண்டனை மட்டுமல்ல, ஆத்துமாவின் தண்டனையும் ஆகும். தேவனுடைய திட்டம் நிறைவேறும்போது, அவருடைய நினைவூட்டல்களும் அறிவுரைகளும் திருப்பி செலுத்தப்படவில்லையேல், எத்தகு ஆத்திரத்தை அவர் கட்டவிழ்த்துவிடுவார் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினமும் இதுவரை அனுபவித்திராத அல்லது கேட்டிராத ஒன்று போல அது இருக்கும். எனவே நான் சொல்கிறேன், இந்த பேரழிவானது முன்னெப்போதும் நிழ்ந்திராததாகும். அது ஒருபோதும் மீண்டும் நிகழாது. ஏனென்றால் தேவனுடைய திட்டம் மனிதகுலத்தை ஒரு முறை மட்டுமே சிருஷ்டிப்பதும் ஒரு முறை மட்டுமே இரட்சிப்பதும் ஆகும். இதுவே முதலும் கடைசியுமாகும். எனவே, இம்முறை தேவன் மனிதனை இரட்சிக்க எடுத்துக்கொண்டுள்ள கடினமான நோக்கங்களையும் தீவிரமான எதிர்பார்ப்பையும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க