தேவனுடைய வார்த்தைகள் | தேவன் தோன்றுதல் ஒரு புதிய யுகத்தைத் துவக்கியிருக்கிறது (Tamil Subtitles)

மே 15, 2021

தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு நிர்வகிப்புத் திட்டம் முடிவுக்கு வருகிறது, அவர் தோன்றுதலைத் தேடுகிறவர்கள் அனைவருக்கும் ராஜ்யத்தின் கதவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? நீங்கள் தேவன் தோன்றுவதற்காகக் காத்திருக்கிறீர்களா? நீங்கள் அவருடைய கால்தடங்களை தேடுகிறீர்களா? தேவன் தோன்றுதலுக்காக ஒருவர் எப்படி ஏங்குகிறார்! தேவனின் கால்தடங்களைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம்! இது போன்ற ஒரு யுகத்தில், இது போன்ற உலகில், தேவன் தோன்றும் நாளைக் காண நாம் என்ன செய்ய வேண்டும்? தேவனின் காலடிச் சுவடுகளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன் தோன்ற வேண்டுமென்று காத்திருக்கும் அனைவருமே இந்த வகையான கேள்விகளை எதிர்கொள்கின்றனர். நீங்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இது குறித்து யோசனை செய்திருப்பீர்கள்—ஆனால் இதன் விளைவு என்ன? தேவன் எங்கு தோன்றுவார்? தேவனின் கால்தடங்கள் எங்கே? உங்களுக்கு பதில் கிடைத்ததா? பலர் இவ்வாறு பதிலளிப்பார்கள்: "தேவன் அவரைப் பின்பற்றுபவர்களிடையே தோன்றுகிறார், அவருடைய கால்தடங்கள் நம் மத்தியில் உள்ளன; இது அவ்வளவு எளிதானது!" யார் வேண்டுமானாலும் ஒரு சூத்திரமான பதிலை வழங்கலாம், ஆனால் தேவன் தோன்றுதல் அல்லது அவருடைய கால்தடங்கள் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிகிறதா? தேவன் தோன்றுதல் என்பது அவர் தனது கிரியையை நேரடியாகச் செய்ய பூமிக்கு வருவதைக் குறிக்கிறது. அவருடைய சொந்த அடையாளத்துடனும், மனநிலையுடனும், மற்றும் இயல்பான உள்ளார்ந்த விதத்திலும் ஒரு யுகத்தைத் தொடங்குவதற்கும், ஒரு யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான கிரியையைச் செய்ய அவர் மனிதர்கள் மத்தியில் இறங்கி வருகிறார். இந்த வகையான தோன்றுதல் என்பது ஒரு வகை சடங்கு அல்ல. இது ஒரு அடையாளமோ, படமோ, அதிசயமோ அல்லது ஒருவிதமான பிரமாண்டமான காட்சியோ அல்ல, அதிலும், இது ஒரு வகை மதம்சார்ந்த சம்பிரதாயமும் அல்ல. இது யாராலும் தொடவும், தரிசிக்கவும் முடிகின்ற ஒரு நிஜமான, நிச்சயமான உண்மை. இந்த வகையான வெளிப்படுதல் ஏதோ ஒன்று இயங்கவேண்டும் என்பததற்காகவோ, அல்லது எந்தவொரு குறுகிய கால பொறுப்பினை நிறைவேற்றவோ நடைபெறுவது அல்ல; மாறாக, அவருடைய நிர்வகிப்புத் திட்டத்தில் கிரியையின் ஒரு கட்டம். தேவனின் தோன்றுதல் எப்போதுமே அர்த்தமுள்ளதாக இருக்கும், மேலும் அவருடைய நிர்வகிப்புத் திட்டத்துடன் எப்போதும் சில தொடர்பைக் கொண்டிருக்கும். இங்கே "தோன்றுதல்" என்று அழைக்கப்படுவது, தேவன் மனிதனை வழிநடத்தும், அழைத்துச் செல்லும், அறிவூட்டும் "தோன்றுதல்" வகையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒவ்வொரு முறையும் தன்னை வெளிப்படுத்தும்போது தேவன் தனது மகத்தான கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவேற்றுகிறார். இந்தக் கிரியை வேறு எந்த யுகத்திலிருந்தும் வேறுபட்டது. இது மனிதனால் கற்பனை செய்ய முடியாதது, மனிதனால் ஒருபோதும் அனுபவிக்கப்பட்டிராதது. இந்தக் கிரியை ஒரு புதிய யுகத்தைத் தொடங்கி பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும், இது மனிதகுலத்தை இரட்சிப்பதற்கான புதிய மற்றும் மேம்பட்ட கிரியையின் வடிவமாகும்; அது மட்டுமல்ல, இது மனிதகுலத்தை புதிய யுகத்திற்கு கொண்டுச் செல்லும் கிரியை. தேவனின் தோன்றுல் இதைத்தான் குறிக்கிறது.

தேவன் தோன்றுதல் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டவுடன், தேவனின் கால்தடங்களை எவ்வாறு நாட வேண்டும்? இந்தக் கேள்வியை விளக்குவது கடினம் அல்ல: தேவன் எங்கெல்லாம் தோன்றுகிறாரோ, அங்கெல்லாம் நீங்கள் அவருடைய காலடிச் சுவடுகளைக் காண்பீர்கள். அத்தகைய விளக்கம் புரிந்துகொள்ள எளிதானதாகத் தோன்றினாலும், அது நடைமுறையில் அவ்வளவு எளிதானது அல்ல, ஏனென்றால் தேவன் எங்கு தோன்றுவார் என்பது பலருக்குத் தெரியவில்லை, அதிலும் அவர் எங்கு தோன்ற விரும்புகிறார், அவர் எங்கு தோன்ற வேண்டுமென்பது தெரியவில்லை. பரிசுத்த ஆவியானவர் எங்கு தனது கிரியையை மேற்கொண்டாலும், அங்கே தேவன் தோன்றுவார் என்று சிலர் உணர்ச்சிவசப்பட்டு நம்புகிறார்கள். இல்லையெனில் ஆவிக்குரிய உருவங்கள் எங்கிருந்தாலும் அங்கே தேவன் தோன்றுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இல்லையென்றால் உயர்ந்த புகழ் பெற்றவர்கள் எங்கிருந்தாலும் தேவன் அங்கே தோன்றுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இப்போதைக்கு, இதுபோன்ற நம்பிக்கைகள் சரியானதா, தவறானதா என்று பார்ப்பதைத் தள்ளிவைப்போம். அத்தகைய கேள்வியை விளக்க, நாம் முதலில் ஒரு தெளிவான குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும்: நாம் தேவனின் கால்தடங்களைத் தேடுகிறோம். நாம் ஆவிக்குரிய நபர்களைத் தேடவில்லை, அதிலும் நாம் புகழ்பெற்ற நபர்களைப் பின்தொடரவில்லை; நாம் தேவனுடைய கால்தடங்களை பின்தொடர்கிறோம். இந்தக் காரணத்திற்காக, நாம் தேவனின் கால்தடங்களைத் தேடுகிறோம் என்பதால், தேவனுடைய சித்தம், தேவனுடைய வசனங்கள், அவருடைய சொற்களைத் தேடும் கடமையை இது நமக்கு அளிக்கிறது—ஏனென்றால் எங்கெல்லாம் தேவனால் புதிய சொற்கள் பேசப்படுகிறதோ, அங்கு தேவனின் சத்தம் இருக்கும், தேவனின் அடிச்சுவடுகள் எங்கிருந்தாலும், அங்கு தேவனின் கிரியைகள் இருக்கும். தேவனின் வெளிப்பாடு எங்கிருந்தாலும், அங்கே தேவன் தோன்றுவார், தேவன் எங்கு தோன்றினாலும், அங்கே சத்தியம், வழி மற்றும் ஜீவன் இருக்கும். தேவனின் கால்தடங்களைத் தேடுவதில், நீங்கள் "தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்" என்கிற சொற்களை உதாசீனம் செய்துவிட்டீர்கள். எனவே, பலர், சத்தியத்தைப் பெற்றாலும், அவர்கள் தேவனின் கால்தடங்களைக் கண்டுபிடித்துவிட்டதை நம்புவதில்லை, அதிலும் அவர்கள் தேவனின் தோன்றுதலை ஒப்புக்கொள்வதில்லை. இது எவ்வளவு பெரிய தவறு! தேவன் தோன்றுதலை மனிதனின் கருத்துகளுடன் தொடர்புப்படுத்த முடியாது, அதிலும் தேவன் மனிதனின் கட்டளைப்படி தோன்ற மாட்டார். தேவன் தனது கிரியையைச் செய்யும்போது அவருடைய சொந்தத் தேர்வுகளையும், அவருடைய சொந்தத் திட்டங்களையும் வகுக்கிறார்; மேலும், அவர் தனது சொந்த குறிக்கோள்களையும் தனது சொந்த முறைகளையும் கொண்டிருக்கிறார். அவர் எந்த கிரியையைச் செய்தாலும், அதை மனிதனுடன் விவாதிக்க அல்லது அவனுடைய ஆலோசனையைப் பெற வேண்டிய தேவை அவருக்கு இல்லை. அதிலும், அவருடைய கிரியை குறித்து ஒவ்வொரு நபருக்கும் தெரிவிக்க வேண்டியதும் இல்லை. இது தேவனுடையமனநிலையாகும், மேலும், இது அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். நீங்கள் தேவனின் தோன்றுதலைக் காணவும் தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவும் விரும்பினால், நீங்கள் முதலில் உங்கள் சொந்த கருத்துக்களிலிருந்து வெளியேற வேண்டும். தேவன் இதைச் செய்ய வேண்டும் அல்லது அதைச் செய்ய வேண்டும் என்று நீ கேட்கக்கூடாது, அதிலும் நீ அவரை உன் சொந்த கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், உன் கருத்துக்களுக்கேற்ப தடுக்கவும் கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் தேவனின் கால்தடங்களை எவ்வாறு தேட வேண்டும், நீங்கள் தேவனின் தோன்றுதலை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனின் புதிய கிரியைக்கு நீங்கள் எவ்வாறு அடிபணிய வேண்டும் என்று நீங்கள் கேட்க வேண்டும்: இதைத் தான் மனிதன் செய்ய வேண்டும். மனிதன் சத்தியம் அல்ல, சத்தியத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதால், அவன் அவரை நாட வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

நீங்கள் அமெரிக்கராகவோ, ஆங்கிலேயராகவோ, அல்லது வேறு எந்த தேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும், உங்கள் சொந்தத் தேசத்தின் கட்டுப்பாடுகளைத் தாண்டி வெளியே வர வேண்டும், உங்கள் சுயத்தைக் கடந்து, தேவனின் கிரியையை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் பார்வையில் பார்க்க வேண்டும். இந்த வழியில், நீங்கள் தேவனின் கால்தடங்களில் வரம்புகளை விதிக்க மாட்டீர்கள். ஏனென்றால், இப்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களிடையே தேவன் தோன்றுவார் என்பது கூடாத காரியம் என்று பலர் கருதுகிறார்கள். தேவனின் கிரியையின் முக்கியத்துவம் எவ்வளவு ஆழமானது, தேவன் தோன்றுதல் எவ்வளவு முக்கியமானது! மனிதனின் கருத்துகளுக்கும் சிந்தனைக்கும் இதனை மதிப்பிடுவதற்கான சாத்தியம் எப்படி இருக்கும்? எனவே நான் சொல்கிறேன், தேவன் தோன்றுதலைத் தேடுவதற்கு நீங்கள் தேசியம் மற்றும் இனத்தின் கருத்துக்களை உடைக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே நீங்கள் உங்கள் சொந்தக் கருத்துக்களால் கட்டுப்படுத்தப்பட மாட்டீர்கள்; இதன் மூலம் மட்டுமே தேவன் தோன்றுதலை வரவேற்க நீங்கள் தகுதி பெறுவீர்கள். இல்லையெனில், நீங்கள் நித்திய இருளில் இருப்பீர்கள், ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெற மாட்டீர்கள்.

தேவன் என்பவர் முழு மனிதஇனத்திற்கும் தேவனாயிருக்கிறார். அவர் தன்னை எந்தவொரு தேசத்தின் அல்லது மக்களின் தனிப்பட்ட சொத்தாகக் கருதுவதில்லை, ஆனால் அவர் எந்தவொரு வடிவத்தாலும், தேசத்தாலும், மக்களாலும் கட்டுப்படுத்தப்படாமல், திட்டமிட்டபடி தனது வேலையைச் செய்கிறார். ஒருவேளை நீ இந்த வடிவத்தை ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திராமல் இருக்கலாம், அல்லது ஒருவேளை இந்த வடிவத்தை ஒரு வகையில் மறுப்பது உன் அணுகுமுறையாக இருக்கலாம், அல்லது ஒருவேளை தேவன் தன்னை வெளிப்படுத்தும் தேசம் மற்றும் அவர் தன்னை யார் மத்தியில் வெளிப்படுத்துகிறாரோ அந்த மக்கள் ஆகியோர், அனைவராலும் பாகுபாடு காட்டப்படுபவர்களாகவும், பூமியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களாகவும் இருக்க நேரிடலாம். எனினும் தேவனுக்கு அவருடைய ஞானம் இருக்கிறது. அவருடைய மகா வல்லமையினாலும், அவருடைய சத்தியத்தினாலும், அவருடைய மனநிலையினாலும், அவருடைய எண்ணத்துடன் ஒத்துப்போகின்ற ஒரு ஜனக்குழுவையும், அவர் முழுமையாக்க விரும்பிய ஒரு ஜனக்குழுவையும் அவர் உண்மையிலேயே பெற்றுள்ளார்—இது அவரால் வெற்றி கொள்ளப்பட்ட, எல்லா விதமான சோதனைகளையும் இன்னல்களையும், எல்லா விதமான துன்புறுத்தல்களையும் சகித்துக் கொண்டு, அவரை இறுதிவரை பின்பற்ற முடிகின்ற ஒரு ஜனக்குழுவாக இருக்கும். தேவன் தோன்றுவதன் நோக்கமாவது, எந்தவொரு வடிவத்தின் அல்லது தேசத்தின் தடைகளிலிருந்தும் விடுவித்து, அவர் திட்டமிட்டபடி அவரது வேலையைச் செயல்படுத்தி முடிக்கவேண்டும் என்பதாகும். யூதேயாவில் தேவன் மாம்சமானது போலவே இதுவும் உள்ளது: மனித இனம் முழுவதையும் மீட்பதற்காகச் சிலுவையில் அறையப்படும் வேலையை முடிப்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஆயினும் யூதர்கள் இது தேவனால் கூடாத காரியம் என்று நம்பினர், மேலும் தேவன் மாம்சமாகி, கர்த்தர் இயேசுவின் ரூபத்தை ஏற்பது கூடாத காரியம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களுடைய "கூடாத காரியம்" அவர்கள் தேவனைக் கண்டித்து எதிர்த்ததற்கான அடிப்படையாக மாறியது, இறுதியில் இஸ்ரவேலின் அழிவுக்கு வழிவகுத்தது. இன்று, பலர் இதே போன்ற பிழையைச் செய்துள்ளனர். தேவனுடைய உடனடி பிரசன்னமாகுதலை அவர்கள் தங்கள் முழு பலத்தோடும் பறைசாற்றுகிறார்கள், ஆனால் அதே நேரத்தில் அவருடைய பிரசன்னமாகுதலை கண்டிக்கிறார்கள்; அவர்களுடைய "கூடாத காரியம்" தேவனின் பிரசன்னமாகுதலை அவர்களின் கற்பனையின் எல்லைக்குள் மீண்டும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே, தேவனுடைய வசனங்களைக் கேட்ட பிறகு பலர் பலத்த, கடுமையான நகைப்பினால் பரியாசம்பண்ணுவதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இந்த நகைப்பு யூதர்களின் ஆக்கினையிலிருந்தும், தேவ தூஷணத்திலிருந்தும் வேறுபட்டதா? சத்தியத்தின் முன்னிலையில் நீங்கள் பயபக்தியுடன் இல்லை, அதிலும் குறைவாகவே நீங்கள் ஏக்கத்தின் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறீர்கள். நீ செய்வதெல்லாம் பகுத்தறியாமல் படிப்பது மற்றும் அக்கறையற்ற மகிழ்ச்சியுடன் காத்திருப்பது மட்டுமே. இப்படி படிப்பதிலிருந்தும் காத்திருப்பதிலிருந்தும் நீ என்ன பெற முடியும்? நீ தேவனிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டுதலைப் பெறுவாய் என்று நினைக்கிறாயா? தேவனுடைய வசனங்களை நீ நிதானித்து அறிய முடியாவிட்டால், தேவனுடைய பிரசன்னமாகுதலை காண நீ எந்த வகையில் தகுதியுடையவர்? தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம் இருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களால் மட்டுமே தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும், மேலும் அத்தகைய ஜனங்கள் மட்டுமே தேவனுடைய பிரசன்னமாகுதலைக் காண தகுதியுடையவர்களாவர். உன் கருத்துகளை விட்டுவிடு! நீங்களே அமைதியாக இருந்து, இந்த வார்த்தைகளைக் கவனமாக வாசி. நீ சத்தியத்திற்காக ஏங்குகிறாய் என்றால், தேவன் உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார், மேலும் நீ அவருடைய சித்தத்தையும் அவருடைய வார்த்தைகளையும் புரிந்துகொள்வாய். "கூடாத காரியம்" பற்றிய உங்கள் கருத்துக்களை விட்டுவிடுங்கள்! எது ஒன்றைக் கூடாத காரியம் என்று மக்கள் அதிகளவு நம்புகிறார்களோ, அது நிகழ்வதற்கான வாய்ப்பு அந்தளவிற்கு அதிகமாக உள்ளது, ஏனென்றால் தேவனின் ஞானம் வானங்களைவிட உயர்ந்தது, தேவனுடைய நினைவுகள் மனிதனின் நினைவுகளை விட உயர்ந்தவை, மேலும் தேவனுடைய கிரியை மனிதனின் நினைவு மற்றும் கருத்துக்களின் வரம்புகளைக் கடந்தது. எது ஒன்று அதிகளவு கூடாத காரியமாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக நாடிச்செல்லக்கூடிய சத்தியம் அதில் இருக்கும்; மனிதனின் கருத்துக்களுக்கும் கற்பனைக்கும் அதிகம் அப்பாற்பட்டதாக எது ஒன்று இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக அது தேவனுடைய சித்தத்தைக் கொண்டுள்ளது. ஏனென்றால், அவர் தன்னை எங்கு வெளிப்படுத்தினாலும், தேவன் இன்னும் தேவன் தான், அவருடைய தோன்றும் இடம் அல்லது முறை காரணமாக அவருடைய தன்மை ஒருபோதும் மாறாது. தேவனின் மனநிலை அவருடைய கால்தடங்கள் எங்கு இருந்தாலும் மாறாமல் அப்படியே இருக்கும், தேவனின் கால்தடங்கள் எங்கு இருந்தாலும், கர்த்தராகிய இயேசு எப்படி இஸ்ரவேலர்களின் தேவனாக மட்டுமல்லாமல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் எல்லா மக்களுக்கும், மேலும் அதற்கும் மேலாக அவர் முழுப் பிரபஞ்சத்திற்கும் ஒரே தேவனாக இருக்கிறாரோ அது போலவே அவர் எல்லா மனித இனத்திற்கும் தேவனாயிருக்கிறார். ஆகவே, தேவனுடைய சித்தத்தை நாடுவோம், அவருடைய வசனங்களில் அவருடைய தோன்றுதலைக் கண்டுபிடிப்போம், அவருடைய காலடிச் சுவடுகளின் வேகத்திற்கு ஈடுகொடுப்போம்! தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார். அவரது வார்த்தைகளும் அவரது தோன்றுதலும் ஒரே நேரத்தில் சந்திக்கின்றன, அவருடைய மனநிலையும் கால்தடங்களும் மனிதகுலத்திற்கு எல்லா நேரங்களிலும் திறந்திருக்கும். அன்புள்ள சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்த வார்த்தைகளில் தேவனின் தோன்றுதலைக் காண முடியும் என்று நம்புகிறேன், புதிய யுகத்திற்கு முன்னேறிச் செல்கையில் அவருடைய காலடிச் சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கி, தேவன் பிரசன்னமாகுதலுக்காக காத்திருப்பவர்களுக்குத் தேவன் தயார் செய்திருக்கும் அழகான புதிய வானம் மற்றும் புதிய பூமிக்குள் நுழைந்திடுங்கள்!

"மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க