Christian Testimony | வேதாகமத்தைத் தவிர வேறெதிலாவது தேவன் பேசியிருக்கிறாரா? (Tamil Subtitles)

மார்ச் 14, 2022

எபோதும் தன் போதகர் கூறுவதையே நம்பி, தேவனுடைய எல்லா வார்த்தைகளும் கிரியையும் வேதாகமத்திலேயே இருக்கின்றன, வேதாகமத்தைத் தாண்டிச் செல்வது மதவிரோதம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவப் பெண்ணே முக்கிய கதாபாத்திரம். கர்த்தராகிய இயேசு திரும்பி வந்துவிட்டார், அவர் சத்தியத்தை வெளிப்படுத்தி கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்துகொண்டிருக்கிறார் என்று சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் இரண்டு உறுப்பினர்கள் கூறுவதைக் கேட்டபோது, அது வேதாகாமத்துக்கு வெளியே செல்வதாக எண்ணி அதை ஆராய துணிவில்லாமல் இருக்கிறார். ஆனால் கர்த்தருடைய வருகை அவருடைய மனதில் ஓடுகிறது. கொஞ்சம் உள்மனப் போராட்டத்திற்குப் பின்னர் அவர் அதை மேற்கொண்டு ஆராய்ந்து பார்க்க முடிவெடுக்கிறார். அதன் பின்னர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் சில சுவிசேஷப் படங்களை யூடியூபில் பார்த்த பிறகு, வேதாகமத்தைப் பற்றிய சத்தியம், வேதாகமத்துக்கும் தேவனுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு மற்றும் வேதாகமத்தைப் பற்றிய சரியான அணுகுமுறை ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுகிறார். சர்வவல்லமையுள்ள தேவன்தான் மறுபடியும் வந்திருக்கும் கர்த்தராகிய இயேசு என்று அறிந்து, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொள்ளுகிறார்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க