Christian Song | தேவனின் கிரியை ஆழங்காணமுடியாதது (Tamil Subtitles)

பிப்ரவரி 17, 2022

தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவிக்கும் போது,

அவரைப் பற்றி முதலில் தோன்றுவது என்னவென்றால்,

அவர் புரிந்துகொள்ளமுடியாதவர்,

ஞானமுள்ளவர் மற்றும் அற்புதமானவர் என்பவை தான்,

மேலும் அவர்கள் அறியாமலே அவரை வணங்குகிறார்கள்,

அவர் செய்யும் கிரியையின் இரகசியத்தை உணர்கிறார்கள்,

இது மனுஷனின் மனதிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

தேவனின் கிரியை ஆழங்காணமுடியாதது

அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும்,

அவருடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும் மட்டுமே ஜனங்கள் விரும்புகிறார்கள்;

அவர்கள் அவரை மிஞ்ச விரும்புவதில்லை,

ஏனென்றால் அவர் செய்யும் கிரியையானது மனுஷனின் சிந்தனைக்கும்

கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது,

அவருக்குப் பதிலாக மனுஷனால் அதைச் செய்ய முடியாது.

மனுஷனுக்கு கூட தனது குறைபாடுகள் தெரியாது,

ஆனாலும் தேவன் ஒரு புதிய பாதையை உருவாக்கி,

மனுஷனை ஒரு புதிய மற்றும் அழகான உலகிற்கு கொண்டு வர வந்திருக்கிறார்,

எனவே மனுக்குலம் புதிய முன்னேற்றத்துடன் ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்கியுள்ளது.

தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவிக்கும் போது,

அவரைப் பற்றி முதலில் தோன்றுவது என்னவென்றால்,

அவர் புரிந்துகொள்ளமுடியாதவர்,

ஞானமுள்ளவர் மற்றும் அற்புதமானவர் என்பவை தான்,

மேலும் அவர்கள் அறியாமலே அவரை வணங்குகிறார்கள்,

அவர் செய்யும் கிரியையின் இரகசியத்தை உணர்கிறார்கள்,

இது மனுஷனின் மனதிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

தேவனின் கிரியை ஆழங்காணமுடியாதது

தேவனைப் பற்றி ஜனங்கள் உணருவது போற்றுதல் இல்லை,

அது பயபக்தியும் அன்பும் அவர்களின் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கின்றன;

தேவன் உண்மையில் அற்புதமானவர் என்பது அவர்களின் உணர்வாக இருக்கிறது.

மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவர் செய்கிறார், மேலும் சொல்கிறார்.

தேவனின் கிரியையை அனுபவித்தவர்களுக்கு

எப்போதும் விவரிக்க முடியாத உணர்வு இருக்கும்.

ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களால் தேவனின் அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது;

அவருடைய அன்பின் தயையையும், அவருடைய கிரியையானது மிகவும் ஞானமானது,

மிகவும் அற்புதமானது என்பதையும், அவர்களால் உணரமுடிகிறது,

அதன் மூலம் எல்லையற்ற வல்லமையானது அவர்கள் மத்தியில் உருவாகிறது

என்பதையும் அவர்களால் உணர முடிகிறது.

இது பயமோ அல்லது அவ்வப்போது வெளிப்படும் அன்பு மற்றும் மரியாதையோ இல்லை,

ஆனால் தேவனுடைய இரக்கத்தின் ஆழமான மற்றும் சகித்துக்கொள்ளும் உணர்வு ஆகும்.

இருப்பினும், அவருடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்த ஜனங்கள்

அவருடைய மகத்துத்தையும் அவர் எந்தக் குற்றத்தையும்

பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதையும் உணர்கிறார்கள்.

அவருடைய கிரியையின் பெரும்பகுதியை அனுபவித்தவர்களால் கூட

அவரைப் புரிந்து கொள்ள முடிவதில்லை;

அவரை உண்மையிலேயே வணங்கும் அனைவருக்கும்

அவருடைய கிரியையானது ஜனங்களின் கருத்துக்களுக்கு ஏற்ப இருப்பதில்லை என்பதையும்,

எப்போதும் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதையும் அறிவார்கள்.

தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவிக்கும் போது,

அவரைப் பற்றி முதலில் தோன்றுவது என்னவென்றால்,

அவர் புரிந்துகொள்ளமுடியாதவர்,

ஞானமுள்ளவர் மற்றும் அற்புதமானவர் என்பவை தான்,

மேலும் அவர்கள் அறியாமலே அவரை வணங்குகிறார்கள்,

அவர் செய்யும் கிரியையின் இரகசியத்தை உணர்கிறார்கள்,

இது மனுஷனின் மனதிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

தேவனின் கிரியை ஆழங்காணமுடியாதது

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க