கிறிஸ்தவ பாடல் | தேவனுடைய நீதியான மனநிலை தெளிவானது மற்றும் முக்கியமானதுமாய் இருக்கிறது (Tamil Subtitles)

ஜூன் 18, 2021

தேவனுடைய நீதியான மனநிலை தெளிவானது மற்றும் முக்கியமானதுமாய் இருக்கிறது.

காரியங்கள் உருவாகும் விதத்தின்படி அவர் தம்முடைய யோசனைகளையும்

மற்றும் சிந்தைகளையும் மாற்றுகிறார்.

நினிவே ஜனங்கள் மீதான அவருடைய மனப்பான்மையின் மாற்றமானது

தேவனின் எண்ணங்கள் அவருடையதாய் இருக்கிறதென மனிதனுக்கு கூறுகிறது.

தேவன் ஒரு இயந்திர மனிதனோ அல்லது சிலையோ அல்ல,

மாறாக அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார்.

நினிவே ஜனங்களுடைய சிந்தைகளின் காரணத்தினால்,

அவர்களுடைய கடந்தக்காலத்தை மன்னித்ததுப்போல,

அவர்கள் மேல் கோபங்கொள்ளவும் அவரால் முடியும்.

அவர் நினிவே ஜனங்களை அழித்துப்போடவும்,

அல்லது அவர்கள் மனந்திரும்பினால் மன்னிக்கவும் அவரால் கூடும்.

தேவனுடைய எண்ணங்கள் சூழ்நிலைகளின் மாற்றத்திற்கு ஏற்றார்போல்

எப்பொழுதும் மறுரூபப் படுத்துகிறதாய் இருக்கிறது.

இந்த எண்ணங்கள் தொடர்ந்து உருவாகும்போது,

தேவனுடைய சாராம்சத்தின் வெவ்வெறு பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

தேவனின் இருதயம் மறுபரிசீலனை செய்யும் கணப்பொழுதில்,

அவர் மனிதனுக்கு தம்முடைய மெய்யான இருப்பை காண்பிக்கிறார்.

தேவனுடைய நீதியான மனநிலை தெளிவானது மற்றும் முக்கியமானதுமாய் இருக்கிறது.

தேவனின் மெய்யான வெளிப்பாடுகள் அவருடைய கோபம், அவருடைய இரக்கம்,

அவருடைய கிருபை, மற்றும் அவருடைய சகிப்புத்தன்மை போன்றவை

இருப்பதற்கான ஆதாரத்தை மனிதகுலத்திற்கு அளிக்கின்றன.

காரியங்கள் உருவாவதற்கு ஏற்றாற்போன்று, அவருடைய சாராம்சம் எந்த நேரத்திலும்,

எந்த இடத்திலும் வெளிப்படுத்தப்படும்.

தேவன் சிங்கத்தின் கோபத்தையும் மற்றும் ஒரு தாயின் இரக்கத்தையும்,

சகிப்புத்தன்மையையும் உடையவராக இருக்கிறார்.

அவருடைய நீதியான மனநிலையானது

ஒருவராலும் கேள்விக் கேட்பதையோ அல்லது மீறுதலையோ,

அல்லது திரித்தலையோ அல்லது மாற்றுகிறதையோ அனுமதிப்பதில்லை.

தேவனுடைய நீதியான மனநிலை—

அதாவது தேவனின் கோபம் மற்றும் இரக்கம்,

எந்த நேரத்திலும் அல்லது எந்த இடத்திலும்

எல்லா காரியங்கள் மற்றும் விஷயங்கள் மத்தியில் அமைக்கப்படலாம்.

கடந்துபோகும் ஒவ்வொரு பொழுதுடனும்

சிருஷ்டிப்பின் எல்லா மூலைகளிலும்

முக்கியமான வெளிப்பாடுகளை அவர் கொடுக்கிறார்.

தேவனுடைய நீதியான மனநிலை தெளிவானது மற்றும் முக்கியமானதுமாய் இருக்கிறது.

தேவனுடைய நீதியான மனநிலையானது

காலத்தாலோ அல்லது இடத்தாலோ கட்டுப்படுத்தக்கூடியதல்ல,

மாறாக அது எல்லா காலத்திலும் எல்லா

இடங்களிலும் மிகவும் எளிமையாக பரிபூரணமாக வெளிப்படுத்தப்படுகிறது.

தேவன் ஒரு மாற்றமடைந்த இருதயத்தை கொண்டிருக்கும்போது,

கோபத்தை வெளிப்படுத்துவதை நிறுத்தி,

நினிவே பட்டணத்தாரை வாழும்படிச் செய்தது,

தேவன் இரக்கமுள்ளவர் மற்றும் அன்புள்ளவர் என்று உங்களால் கூற முடியுமா?

தேவனுடைய கோபாமானது வெற்று வார்த்தைகளையேயன்றி வேறொன்றுமில்லை

என்று உங்களால் கூற முடியுமா?

தேவன் கடுங்கோபம் கொண்டு,

தம்முடைய இரக்கத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளும்போது,

அவருக்கு மனிதன் மீது உண்மையான அன்பில்லை என்று உங்களால் கூற முடியுமா?

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க