Christian Song | தேவனுடைய நியாயத்தீர்ப்பு முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது (Tamil Subtitles)

மார்ச் 9, 2023

இடிமுழக்கம் போன்றதொரு சத்தம் உண்டாகி முழு பிரபஞ்சத்தையும் உலுக்குகிறது.

ஜனங்கள் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாதபடிக்கு

இது காதுகளைச் செவிடாக்குமளவிற்கு உரத்த சத்தத்தில் ஒலிக்கிறது.

சிலர் கொல்லப்படுகிறார்கள், சிலர் அழிக்கப்படுகிறார்கள்,

மேலும் சிலர் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள்.

இது உண்மையிலேயே ஓர் அதிசயமான காட்சியாக இருக்கிறது,

இது போன்றதை யாரும் இதுவரை பார்த்ததில்லை.

கவனமாகக் கேளுங்கள்: இடிமுழக்கங்கள் அழுகையின் சத்தத்துடன் வருகின்றன,

இந்தச் சத்தமானது பாதாளத்திலிருந்து வருகிறது; நரகத்திலிருந்து வருகிறது.

இது தேவனால் நியாயந்தீர்க்கப்பட்ட கலகக் குமாரர்களின் கசப்பான சத்தமாகும்.

தேவன் சொல்வதைக் கேட்காதவர்களும்,

அவரது வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவர்களும் கடுமையாக

நியாயந்தீர்க்கப்பட்டு,

அவரது கோபாக்கினையின் சாபத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

நியாயத்தீர்ப்பும் கோபாக்கினையும்தான் தேவனின் குரலாக இருக்கிறது;

அவர் யாரையும் மென்மையாக நடத்துவதில்லை,

ஒருவருக்கும் இரக்கம் காட்டுவதில்லை,

ஏனென்றால் அவர் நீதியுள்ள தேவன்,

அவர் கோபாக்கினையைக் கொண்டிருக்கிறார்;

அவர் புடமிடுதலையும், சுத்திகரிப்பையும் மற்றும் அழிவையும் கொண்டிருக்கிறார்.

அவர் கோபாக்கினையைக் கொண்டிருக்கிறார்;

அவர் புடமிடுதலையும், சுத்திகரிப்பையும் மற்றும் அழிவையும் கொண்டிருக்கிறார்.

தேவனில் எதுவும் மறைக்கப்பட்டிருக்கவில்லை அல்லது எதுவும்

உணர்ச்சியைச் சார்ந்ததாகவும் இல்லை,

மாறாக, எல்லாமே வெளிப்படையாக,

நீதியுள்ளவையாக மற்றும் பாரபட்சமற்றவையாக இருக்கின்றன.

ஏனென்றால், தேவனது முதற்பேறான குமாரர்கள் ஏற்கனவே

அவருடன் சிங்காசனத்தில் அமர்ந்து,

எல்லா தேசங்களையும் எல்லா ஜனங்களையும் ஆளுகிறார்கள்,

அநியாயமும் அநீதியுமாக இருக்கும் அந்த விஷயங்களும் ஜனங்களும்

இப்போது நியாயந்தீர்க்கப்படப்போகிறார்கள்.

தேவன் அவர்களை ஒவ்வொருவராக விசாரிப்பார்,

யாரையும் விடமாட்டார், அவர்களை முழுமையாக வெளிப்படுத்துவார்.

தேவனது நியாயத்தீர்ப்பானது முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு

முழுமையாக வெளியரங்கமாக்கப்பட்டுள்ளது,

அவர் எதையும் மறைத்து வைக்கவில்லை;

அவரது சித்தத்திற்கு இணங்காத அனைத்தையும் அவர் தூக்கி எறிவார்,

அது பாதாளத்தில் நித்தியத்திற்கும் அழிந்து போகட்டும்.

அங்கே அவர் அதனை என்றென்றும் எரிய அனுமதிப்பார்.

இதுவே தேவனின் நீதியும், அவரது நேர்மையுமாகும்.

இதை ஒருவரும் மாற்ற முடியாது,

அனைவரும் தேவனின் கட்டளைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இதுவே தேவனின் நீதியும், அவரது நேர்மையுமாகும்.

இதை ஒருவரும் மாற்ற முடியாது,

அனைவரும் தேவனின் கட்டளைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இதுவே தேவனின் நீதியும், அவரது நேர்மையுமாகும்.

இதை ஒருவரும் மாற்ற முடியாது,

அனைவரும் தேவனின் கட்டளைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இதுவே தேவனின் நீதியும், அவரது நேர்மையுமாகும்.

இதை ஒருவரும் மாற்ற முடியாது,

அனைவரும் தேவனின் கட்டளைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள் என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க