தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 263

மார்ச் 4, 2023

மனுக்குலம் சமூக அறிவியலைக் கண்டுபிடித்தது முதல், மனிதனின் மனம் அறிவியலாலும் அறிவாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அறிவியலும் அறிவும் மனுக்குலத்தை ஆட்சி செய்யும் கருவிகளாக மாறியுள்ளன. மேலும் தேவனைத் தொழுதுகொள்வதற்கு மனுஷனுக்குப் போதுமான இடமோ, தேவனைத் தொழுதுகொள்வதற்கான சாதகமான சூழ்நிலைகளோ இல்லை. தேவனுடைய நிலை மனிதனின் இருதயத்தின் அடியில் எப்போதும் மூழ்கிப்போய்விட்டது. மனுஷனுடைய இருதயத்தில் தேவன் இல்லாமல், அவனுடைய உள் உலகம் இருண்டதாகவும், நம்பிக்கையற்றதாகவும் மேலும் வெறுமையானதாகவும் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பல சமூக விஞ்ஞானிகளும், வரலாற்றாசிரியர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் மனுஷர்களின் இருதயங்களையும் மனதையும் நிரப்புவதற்காக சமூக அறிவியல் கோட்பாடுகள், மனிதப் பரிணாம வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் தேவன் மனுஷனைச் சிருஷ்டித்தார் என்ற உண்மைக்கு முரணான பிற கோட்பாடுகளை வெளிப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர். இவ்விதமாக, தேவனே சகலத்தையும் சிருஷ்டித்தார் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது, அதேநேரத்தில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பெரும்பாலானவர்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்திலுள்ள தேவனுடைய கிரியை மற்றும் அவருடைய வார்த்தைகளின் பதிவுகளைப் புராணங்களாகவும் புராணக்கதைகளாகவும் கருதுகிறார்கள். தேவனுடைய மேன்மையையும் மகத்துவத்தையும் குறித்தும், தேவன் ஜீவிக்கிறார் மற்றும் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற நம்பிக்கையைக் குறித்தும் ஜனங்கள் தங்கள் இருதயங்களில் அலட்சியத்துடன் காணப்படுகிறார்கள். மனுக்குலத்தின் ஜீவியமும், நாடுகளின் மற்றும் தேசங்களின் தலைவிதியும் அவர்களுக்கு ஒருபோதும் முக்கியமானதாக இல்லை. புசித்துக் குடித்து, இன்பத்தை நாடுவதில் மாத்திரமே அக்கறை கொண்ட ஒரு வெற்று உலகில் மனுஷன் வாழ்கிறான். … தேவன் இன்று எங்கு தனது கிரியையைச் செய்கிறார் என்பதை நாடியோ அல்லது அவர் மனுஷனுடைய தலைவிதியை எவ்வாறு அடக்கி ஆள்கிறார் மற்றும் ஒழுங்குபடுத்துகிறார் என்பதை நாடியோ கொஞ்சப்பேர் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர். இவ்விதமாக, மனுஷனுக்குத் தெரியாமலே, மனித நாகரிகமானது மனிதனின் ஆசைகளைத் துண்டிக்கக்கூடியதாக மாறுகிறது. மேலும் இதுபோன்ற உலகில் வாழ்வதில், ஏற்கனவே மரணித்தவர்களைக் காட்டிலும் குறைவாகவே சந்தோஷமாகக் காணப்படுவதாகக் கருதும் பலரும் உள்ளனர். மிகவும் நாகரிகமாக இருக்கும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் கூட இதுபோன்ற மனவருத்தங்களை வெளிப்படுத்துகிறார்கள். தேவனுடைய வழிகாட்டுதல் இல்லாமல், ஆட்சியாளர்களும் சமூகவியலாளர்களும் மனித நாகரிகத்தைப் பாதுகாக்க எவ்வளவு மூளையைக் கசக்கினாலும், அதில் பிரயோஜனமில்லை. யாரும் மனுஷனின் ஜீவனாக இருக்க இயலாது என்பதனால், மனுஷனுடைய இருதயத்திலுள்ள வெறுமையை யாராலும் நிரப்ப இயலாது. எந்தவொரு சமூகக் கோட்பாடும் மனுஷனை அவன் அவதிப்படும் வெறுமையிலிருந்து விடுவிக்க இயலாது. அறிவியல், அறிவு, சுதந்திரம், ஜனநாயகம், ஓய்வு, சௌகரியம் ஆகியவை மனுஷனுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை மாத்திரமே கொண்டுவருகின்றன. இந்தக் காரியங்கள் மூலமாகவும் கூட, மனுஷன் இன்னும் தவிர்க்க முடியாமல் பாவம் செய்து, சமுதாயத்தின் அநீதிகளை எண்ணிப் புலம்புகிறான். இந்த காரியங்களால் ஆராய்வதற்கான மனுஷனின் வாஞ்சையையும் ஆசையையும் தடுக்க இயலாது. ஏனென்றால், மனுஷன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான், மேலும் மனுஷனின் அறிவில்லாத தியாகங்களும் ஆராய்ச்சிகளும் மனுஷனின் எதிர்காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது முன்னால் உள்ள பாதையை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் அதிகத் துயரத்திற்கு மாத்திரமே வழிவகுக்கும் மற்றும் மனுஷனை ஒரு நிலையான பயத்தில் மாத்திரமே வைத்திருக்கும். மனுஷன் அறிவியலையும் அறிவையும் பார்த்துக்கூட பயப்படுகிறான், மேலும் வெறுமை உணர்வினால் இன்னும் அதிகமாகப் பயப்படுவான். இந்த உலகில், நீ ஒரு சுதந்திர நாட்டில் வாழ்ந்தாலும் அல்லது மனித உரிமைகள் இல்லாத ஒரு நாட்டில் வாழ்ந்தாலும், நீ மனுக்குலத்தின் தலைவிதியிலிருந்து முற்றிலும் தப்பித்துக்கொள்ள இயலாது. நீ ஆள்பவனாக இருந்தாலும் அல்லது ஆளப்படுபவனாக இருந்தாலும், மனுக்குலத்தின் தலைவிதி, மர்மங்கள் மற்றும் போய்ச்சேருமிடம் ஆகியவற்றை ஆராய்வதற்கான பிரயாசத்திலிருந்து உன்னால் முற்றிலும் தப்பித்துக்கொள்ள இயலாது, மேலும் வெறுமை என்னும் குழப்பமான உணர்விலிருந்து உன்னால் தப்பித்துக்கொள்ள இயலாது. மனுக்குலம் முழுவதிற்கும் பொதுவான இதுபோன்ற நிகழ்வுகள் சமூகவியலாளர்களால் சமூக தோற்றப்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன, ஆனாலும் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க எந்த ஒரு பெரிய மனுஷனும் முன்வர இயலவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷன் எப்படியானாலும் மனுஷன்தான். தேவனுடைய நிலையையும் ஜீவனையும் எந்த மனுஷனாலும் ஈடு செய்ய முடியாது. அனைவரும் நன்கு புசித்தும், சமமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் வாழும் ஒரு நியாயமான சமூகம் மனுக்குலத்திற்கு தேவைப்படுவது மட்டுமல்லாமல், தேவனுடைய இரட்சிப்பும், அவர்களுக்கு அவர் அருளும் ஜீவனும் மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது. தேவன் அருளும் ஜீவனையும் அவரது இரட்சிப்பையும் பெறும்போது மாத்திரமே, தேவைகள், ஆராய்வதற்கான வாஞ்சை மற்றும் மனுஷனின் ஆவிக்குரிய வெறுமை ஆகியவற்றுக்கு தீர்வுகாண இயலும். ஒரு நாட்டின் அல்லது ஒரு தேசத்தின் ஜனங்களால் தேவனுடைய இரட்சிப்பையும் கவனிப்பையும் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், இதுபோன்ற ஒரு நாடோ அல்லது தேசமோ வீழ்ச்சியையும், இருளையும் நோக்கிச்செல்லும் சாலையில் காலடி எடுத்து வைக்கும், மேலும் தேவனால் நிர்மூலமாக்கப்படும்.

ஒருவேளை உன் நாடு தற்போது செழிப்படைகிறது, ஆனால் உன் ஜனங்களை தேவனிடமிருந்து விலகிச் செல்ல நீ அனுமதித்தால், அது தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெருமளவில் இழந்து காணப்படும். உன் நாட்டின் நாகரிகம் பெருமளவில் நசுக்கப்படும். விரைவிலேயே ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக எழுந்து பரலோகத்தைச் சபிப்பார்கள். ஆகவே, மனுஷனுக்குத் தெரியாமலே, ஒரு நாட்டின் தலைவிதி அழிக்கப்படும். தேவனால் சபிக்கப்பட்ட அந்த நாடுகளைச் சரிக்கட்ட வல்லமை பொருந்திய நாடுகளை தேவன் எழுப்புவார். மேலும் பூமியின் மீதிருந்து அந்த நாடுகளை ஒன்றுமில்லாமல் துடைத்துப் போடுவார். ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் ஆட்சியாளர்கள் தேவனைத் தொழுதுகொள்கிறார்களா, அவர்கள் தங்கள் ஜனங்களை தேவனோடு நெருங்கியிருக்கவும், அவரைத் தொழுதுகொள்ளவும் வழிநடத்துகிறார்களா என்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஆனாலும், இந்தக் கடைசி காலத்தில், தேவனை உண்மையாகவே தேடி தொழுதுகொள்கிறவர்கள் குறைவானவர்களாகவே இருப்பதால், கிறிஸ்தவம் அரச மதமாக இருக்கும் நாடுகளுக்கு தேவன் சிறப்புச் சலுகையைத் தந்தருளுகிறார். உலகின் மிகவும் நீதியான ஐக்கியத்தை உருவாக்க அவர் அந்த நாடுகளை ஒன்றிணைக்கிறார், அதே நேரத்தில் நாத்திக நாடுகளும் மெய்யான தேவனைத் தொழுதுகொள்ளாதவர்களும் நீதியுள்ள ஐக்கியத்தின் எதிரிகளாக மாறுகிறார்கள். இவ்விதமாக, தேவன் தம்முடைய கிரியையை நடப்பிக்க மனுஷர்கள் மத்தியில் வாசம் செய்வது மட்டுமின்றி, நீதியான அதிகாரத்தைக் கடைபிடிக்கக்கூடிய நாடுகளை ஆதாயப்படுத்துகிறார், அதே நேரத்தில் அவரை எதிர்க்கும் நாடுகள் மீது தண்டனைகளையும் தடைகளையும் விதிக்க அனுமதிக்கிறார். இவ்வாறு இருப்பினும், இன்னும் யாரும் தேவனைத் தொழுதுகொள்ள முன்வருவதில்லை, ஏனென்றால் மனுஷன் தேவனிடமிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டான், மனுஷன் தேவனை நீண்ட காலமாகவே மறந்துவிட்டான். நீதியைக் கடைப்பிடிக்கும், அநீதியை எதிர்க்கும் நாடுகள் மாத்திரமே பூமியில் எஞ்சியிருக்கும். ஆனால் எந்தவொரு நாட்டின் ஆட்சியாளர்களும் தேவன் தங்கள் ஜனங்களை ஆளுகை செய்து வழிநடத்த அனுமதிக்க மாட்டார்கள், எந்தவொரு அரசியல் கட்சியும் தேவனைத் தொழுதுகொள்வதற்காக தங்கள் ஜனங்களை ஒன்று திரட்டாது என்பதனால், இது தேவனுடைய விருப்பங்களுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. எல்லா நாடு, தேசம், ஆளும் கட்சி ஆகியவற்றின் இருதயத்திலும், ஏன் ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் கூட தேவன் தனது நீதியான இடத்தை இழந்துவிட்டார். இந்த உலகில் நீதியான அதிகாரங்கள் இருந்தாலும், மனிதனுடைய இருதயத்தில் தேவனுக்கு இடமளிக்காத ஆட்சி எளிதில் அழியக்கூடியதாக இருக்கிறது. தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல், அரசியல் களம் சீர்குலைந்து போகும் மற்றும் அதனால் ஒரு அடிக்கு நிலைத்து நிற்க முடியாது. மனுக்குலத்தைப் பொறுத்தவரை, தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல் இருப்பது சூரியன் இல்லாமல் இருப்பது போன்றதாகும். ஆட்சியாளர்கள் தங்கள் ஜனங்களுக்காக எவ்வளவு பங்களிப்பு செய்தாலும், மனுக்குலம் எத்தனை நீதியான மாநாடுகளை ஒன்றாக நடத்தினாலும், இது எதுவுமே போக்கையோ திருப்பாது அல்லது மனுக்குலத்தின் தலைவிதியையோ மாற்றாது. ஜனங்கள் உண்டும் உடுத்தும், ஒன்றாக நிம்மதியாக வாழும் ஒரு நாடே நல்ல நாடு என்றும், நல்ல தலைமை கொண்ட நாடு என்றும் மனுஷன் நினைக்கிறான். ஆனால் தேவன் அவ்வாறு நினைக்கவில்லை. தேவனைத் தொழுதுகொள்ளாத ஒரு நாட்டை தாமே நிர்மூலமாக்கும் நாடு என்று அவர் நினைக்கிறார். மனுஷன் சிந்திக்கும் விதமும் தேவன் சிந்திக்கும் விதமும் பெரிதும் மாறுபட்டது. ஆகவே, ஒரு நாட்டின் தலைவர் தேவனைத் தொழுதுகொள்ளவில்லை என்றால், அந்த நாட்டின் தலைவிதி அழிவுகரமான ஒன்றாக இருக்கும், அந்த நாட்டிற்கு எந்தப் போக்கிடமும் இருக்காது.

தேவன் மனுஷனுடைய அரசியலில் பங்கெடுப்பதில்லை, ஆனாலும் ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் தலைவிதியானது தேவனால் கட்டுப்படுத்தப்படுகிறது. தேவன் இந்த உலகத்தையும் அண்டசராசரம் முழுவதையும் கட்டுப்படுத்துகிறார். மனுஷனின் தலைவிதியும் தேவனுடைய திட்டமும் நெருக்கமான தொடர்புடையவையாக இருக்கின்றன. எந்த மனுஷனும், நாடும், தேசமும் தேவனுடைய ராஜரீகத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. மனுஷன் தனது தலைவிதியை அறிந்துகொள்ளப் பிரயாசப்பட்டால், அவன் தேவனுக்கு முன்பாக வர வேண்டும். தேவன் தம்மைப் பின்பற்றுகிறவர்களையும் தொழுதுகொள்கிறவர்களையும் செழிப்படையச் செய்வார், அதே நேரத்தில் அவரை எதிர்ப்பவர்கள் மற்றும் புறக்கணிப்பவர்கள் மீது வீழ்ச்சியையும் அழிவையும் கொண்டுவருவார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க