தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 259

டிசம்பர் 19, 2022

தேவன் இந்த உலகை சிருஷ்டித்து, அதில் மனிதனைக் கொண்டுவந்து, அவனுக்கு ஜீவனைக் கொடுத்தார். பின்பு, மனிதனுக்கு பெற்றோரும் உறவினர்களும் வந்தார்கள். அதன் பின், அவன் தனிமையாக இருக்கவில்லை. மனிதனுடைய கண்கள் இந்தப் பொருள் உலகத்தை முதன்முதலில் கவனித்ததிலிருந்தே, அவன் தேவனுடைய முன்குறித்தலுக்குள் இருக்க விதிக்கப்பட்டான். தேவனிடமிருந்து வரும் ஜீவ சுவாசம் அனைத்து ஜீவராசிகளையும் வளர்ந்து முதிர்ச்சியடையும் வரையிலும் ஆதரிக்கிறது. இந்த செயல்முறையின் போது, மனிதர்கள் தேவனுடைய பராமரிப்பில் வளர்ந்து வருவதை ஒருவரும் உணர்வதில்லை; மாறாக, தம் பெற்றோரின் அன்பான பராமரிப்பும் தம் ஜீவித உள்ளுணர்வும்தான் தம் வளர்ச்சியை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், மனிதனுக்கு அவனுடைய ஜீவனை வழங்கியது யார் என்றும் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரிவதில்லை. ஜீவனின் உள்ளுணர்வு எவ்வாறு அற்புதங்களை உருவாக்குகிறது என்பதும் தெரிவதில்லை. மனிதன் அறிந்ததெல்லாம்: அவனது ஜீவன் தொடர அடிப்படையாக இருக்கும் உணவும், அவனது இருப்புக்கான ஆதாரமான விடாமுயற்சியும், அவனது பிழைப்புக்கு மூலதனமான அவனது மனதில் உள்ள நம்பிக்கைகளுமே ஆகும். மனிதன் தேவனுடைய கிருபையையும் ஏற்பாட்டையும் முற்றிலுமாக மறந்துவிட்டான். அவனுக்கு தேவன் கொடுத்த ஜீவிதத்தை சுக்குநூறாக உடைக்கிறான்…. தேவன் இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும் இந்த மனிதகுலத்திலுள்ள ஒருவர் கூட அவரை ஆராதிக்க தாங்களை ஈடுபடுத்துவதில்லை. தேவன் தாம் திட்டமிட்டபடி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து மனிதன் மீது மட்டுமே கிரியை செய்கிறார். ஒரு நாள், மனிதன் தன் சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்து, வாழ்க்கையின் மதிப்பையும் அர்த்தத்தையும், மனிதனுக்காக தேவன் விலைக்கிரயம் செலுத்தி பெற்றுக் கொடுத்த எல்லாவற்றிற்கும், மனிதன் தன்னிடம் திரும்புவான் என்று காத்திருக்கும் அக்கறையையும் உணர்ந்து அவரிடம் திரும்புவான் என்ற நம்பிக்கையில் தேவன் இவ்வாறு செய்கிறார். மனித ஜீவிதத்தின் தோற்றம் மற்றும் தொடர்ச்சியை ஆளும் இரகசியங்களை இதுவரை யாரும் பார்த்ததில்லை. இவை அனைத்தையும் புரிந்துகொண்ட ஒரே ஒருவரான தேவன், தம்மிடமிருந்து எல்லாவற்றையும் பெற்ற பின்னரும் நன்றியற்று காணப்படும் மனிதன் அவருக்குக் கொடுக்கும் காயங்களையும் அடிகளையும் மௌனமாக சகித்துக்கொள்கிறார். ஜீவிதம் தரும் அனைத்தையும் மனிதன் நிச்சயமாகவே அனுபவிக்கிறான். அதைப் போலவே, இது தேவன் மனிதனால் காட்டிக் கொடுக்கப்படுகிறார், மனிதனால் மறக்கப்படுகிறார் மற்றும் மனிதனால் பலவந்தம் பண்ணப்படுகிறார் என்பதன் விளைவாகும். தேவனுடைய திட்டம் உண்மையிலேயே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததா? தேவனுடைய கரத்திலிருந்து வந்த சிருஷ்டியான மனிதன் உண்மையிலேயே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவனா? தேவனுடைய திட்டம் நிச்சயமாகவே முக்கியத்துவம் வாய்ந்தது தான்; எனினும், அவர் கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட இந்த ஜீவன் அவருடைய திட்டத்துக்காகவே உள்ளது. எனவே, மனித இனத்தின் மீதான வெறுப்பால் தேவன் தமது திட்டத்தை வீணடிக்க முடியாது. அவருடைய திட்டத்திற்காகவும் தாம் கொடுத்த சுவாசத்திற்காகவும் எல்லா வேதனைகளையும் சகித்துக்கொள்கிறார். இது மனிதனுடைய மாம்சத்திற்காக அல்ல, அவனுடைய ஜீவனுக்காகவே ஆகும். மனிதனுடைய மாம்சத்தையல்ல, தாம் சுவாசமாக ஊதிய ஜீவனை திரும்பப் பெறுவதற்காகவே அவர் அவ்வாறு செய்கிறார். இது அவருடைய திட்டமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க