தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 248

மே 3, 2023

நான் எல்லாவற்றையும் விழுங்கும் நெருப்பு, இடறலை நான் பொறுத்துக்கொள்ளவே மாட்டேன். மனுஷர் அனைவரும் எம்மால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதால், நான் என்ன சொன்னாலும் செய்தாலும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும், அவர்கள் கலகம் செய்யக்கூடாது. எனது கிரியையில் தலையிட ஜனங்களுக்கு உரிமை இல்லை, எனது கிரியையிலும் எனது வார்த்தைகளிலும் எது சரி எது தவறு என்பதை ஆராய அவர்கள் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். நான்தான் சிருஷ்டிப்பின் கர்த்தர், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷர் எனக்குத் தேவையான அனைத்தையும் பயபக்தியுடனான இருதயத்துடன் அடைய வேண்டும்; அவர்கள் என்னுடன் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடாது, குறிப்பாக, அவர்கள் எதிர்க்கக்கூடாது. எனது அதிகாரத்தினால் நான் எனது ஜனங்களை ஆளுகிறேன், எனது சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அனைவரும் எனது அதிகாரத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். இன்று நீங்கள் எனக்கு முன்பாக தைரியமாகவும், அகந்தையோடும் இருந்தாலும், நான் உங்களுக்குப் போதிக்கும் வார்த்தைகளை நீங்கள் மதிக்கவில்லை என்றாலும், உங்களிடம் எந்த பயமும் இல்லை என்றாலும், நான் உங்களது கலகத்தன்மையை சகிப்புத்தன்மையுடன் மட்டுமே எதிர்கொள்கிறேன்; சிறிய, அற்பமான புழுக்கள் குப்பையில் உள்ள அசுத்தத்தைக் கிளறிவிட்டிருந்தாலும், நான் கோபப்பட்டு எனது கிரியையில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டேன். நான் வெறுக்கிற எல்லாவற்றின் இருப்பையும் நான் தாங்கிக்கொள்கிறேன், எனது பிதாவின் சித்தத்திற்காக நான் வெறுக்கிற எல்லாவற்றையும் நான் பொறுத்துக்கொள்கிறேன், எனது வெளிப்பாடுகள் நிறைவடையும் வரை, எனது கடைசி தருணம் வரை நான் இதைச் செய்வேன். கவலைப்படாதே! நாமமிடப்படாத புழுக்கள் இருக்கும் அதே மட்டத்திற்கு என்னால் மூழ்க முடியாது, மேலும் எனது திறமையின் அளவை உன்னுடன் ஒப்பிடவும் மாட்டேன். நான் உன்னை வெறுக்கிறேன், ஆனாலும் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது. நீ எனக்குக் கீழ்ப்படிவதில்லை, ஆனால் உன்னை நான் தண்டிக்கும் நாளில் உன்னால் தப்பித்துக்கொள்ள முடியாது, இது எனது பிதாவினால் எனக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டது. சிருஷ்டிக்கும் கர்த்தருடன் சிருஷ்டிக்கப்பட்ட புழுவை ஒப்பிட முடியுமா? இலையுதிர்காலத்தில், உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்புகின்றன; நீ உனது "பிதாவின்" வீட்டிற்குத் திரும்பிச் செல்வாய், நான் எனது பிதாவின் பக்கமாகத் திரும்பிச் செல்வேன். நான் அவருடைய கனிவான பாசத்துடன் இருப்பேன், நீ உனது தகப்பனின் நடையை பின்பற்றுவாய். எனது பிதாவின் மகிமை எனக்கு இருக்கும், நீ உன்னுடைய தகப்பனின் அவமானத்தைப் பெறுவாய். நான் நீண்ட காலமாக என்னிடம் வைத்திருந்த உனக்குக் கொடுக்க வேண்டிய சிட்சையைப் பயன்படுத்துவேன், மேலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீர்கெட்டுப் போயிருக்கும் உன்னுடைய கெட்டுப்போன மாம்சத்துடன் நீ எனது சிட்சிப்பை எதிர்கொள்வாய். சகிப்புத்தன்மையுடன் உனக்குள் எனது வார்த்தைகளின் கிரியையை நான் முடித்திருப்பேன், எனது வார்த்தைகளிலிருந்து பேரழிவை அனுபவிக்கும் பங்கினை நீ நிறைவேற்றத் தொடங்குவாய். நான் இஸ்ரவேலில் மிகுந்த சந்தோஷத்துடன் கிரியை செய்வேன்; நீ அழுது பற்களை நறநறவென கடித்து, ஜீவித்து அப்படியே சேற்றில் விழுந்து இறந்துபோவாய். நான் எனது சுயமான வடிவத்தை மீண்டும் பெறுவேன், இனியும் உன்னுடன் அசுத்தத்தில் இருக்க மாட்டேன், அதே நேரத்தில் நீ உனது சுயமான அருவருப்பான தோற்றத்தை மீண்டும் பெற்று குப்பைக்குள் தொடர்ந்து புதையுண்டு போவாய். எனது கிரியையும் வார்த்தைகளும் நிறைவடைந்தவுடன், அது எனக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உனது எதிர்ப்பும் கலகமும் முடிவிற்கு வரும்போது, அது நீ அழுகிற நாளாக இருக்கும். நான் உன்னிடம் அனுதாபப்பட மாட்டேன், நீ என்னை மீண்டும் ஒருபோதும் பார்க்கவும் மாட்டாய். நான் இனி உன்னுடன் உரையாடலிலும் ஈடுபட மாட்டேன், நீ என்னை மீண்டும் ஒருபோதும் சந்திக்கவும் மாட்டாய். உனது கலகத்தனத்தை நான் வெறுப்பேன், மேலும் நீ எனது சௌந்தரியத்தை இழப்பாய். நான் உன்னை அடிப்பேன், நீ எனக்காக வருந்துவாய். நான் உன்னிடமிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் செல்வேன், எனக்கான உன்னுடைய கடனை நீ அறிந்து கொள்வாய். நான் உன்னை மீண்டும் பார்க்க மாட்டேன், ஆனால் நீ எப்போதும் எனக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பாய். நான் உன்னை வெறுப்பேன், ஏனென்றால் நீ தற்போது என்னை எதிர்க்கிறாய், நீ என்னை இழக்க நேரிடும், ஏனெனில் நான் தற்போது உன்னை சிட்சிக்கிறேன். நான் உன்னுடன் ஜீவிக்க விரும்பவில்லை, ஆனால் நீ அதற்காகக் கடுமையாக ஏங்கி நித்தியமாக அழுவாய், ஏனென்றால் நீ என்னிடம் செய்த எல்லாவற்றிற்கும் நீ வருந்துவாய். உனது கலகத்தன்மை மற்றும் எதிர்ப்பிற்காக நீ வருந்துவாய், நீ வருத்தத்துடன் தரையில் முகங்குப்புற எனது முன் விழுந்து, மீண்டும் ஒருபோதும் எனக்குக் கீழ்ப்படியாமல் இருக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வாய். இருப்பினும், உனது இருதயத்தில், நீ என்னை நேசிக்க மட்டுமே செய்வாய், ஆனாலும் உன்னால் ஒருபோதும் எனது சத்தத்தைக் கேட்க முடியாது. உன்னை எண்ணி நீயே வெட்கங்கொள்ளச் செய்வேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்பும்போது, நீ செய்த அனைத்துத் தீமைகளுக்கும் நீ வருத்தப்படுவாய்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க