தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 246

ஏப்ரல் 15, 2023

நான் பேசிய ஒவ்வொரு வாக்கியத்திலும் தேவனின் மனநிலை இருக்கிறது. நீங்கள் என் வார்த்தைகளைக் கவனமாக நன்றாக சிந்தித்துப் பார்த்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து பெரிதும் ஆதாயம் அடைவீர்கள். தேவனின் சாராம்சத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம், ஆனால் உங்கள் அனைவருக்கும் தேவனின் மனநிலையைப் பற்றி குறைந்தபட்ச கருத்தாவது இருப்பதாக நான் நம்புகிறேன். அப்படியானால், நீங்கள் மேலும் தேவனின் மனநிலையைப் புண்படுத்தாமல் நீங்கள் செய்தவற்றை எனக்கு அதிகமாகக் காண்பிப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்போது எனக்கு உறுதியளிக்கப்படும். உதாரணமாக, தேவனை எல்லா நேரங்களிலும் உன் இருதயத்தில் வைத்திரு. நீ கிரியை செய்யும்போது, அவருடைய வார்த்தைகளின்படி செய். எல்லாவற்றிலும் அவருடைய நோக்கங்களைத் தேடு, தேவனை அவமதிக்கும் மற்றும் அவமானமான கிரியைகளைச் செய்வதைத் தவிர். உன் இருதயத்தில் எதிர்கால வெறுமையை நிரப்ப தேவனை சிறிதளவேனும் உன் மனதின் பின்புறத்தில் வைக்கக் கூடாது. நீ இதைச் செய்தால், நீ தேவனின் மனநிலையைப் புண்படுத்தியிருப்பாய். மீண்டும், உன் வாழ்நாள் முழுவதும் நீ ஒருபோதும் தேவனுக்கு எதிராக இழிவுபடுத்தும் கருத்துக்களையோ, புகார்களையோ கூறுவதில்லை என்பதாலும், மறுபடியும், அவர் உன்னிடம் ஒப்படைத்த எல்லாவற்றையும் நீ சரியாக வெளிப்படுத்த முடிகிறது என்பதாலும், மற்றும் அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் உன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிக்க முடிகிறது என்பதாலும், நீ நிர்வாகக் கட்டளைகளுக்கு எதிராக மீறுவதைத் தவிர்ப்பாய். உதாரணமாக, "அவர் தேவன் என்று நான் ஏன் நினைக்கவில்லை?" "இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் சில ஞானத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று நான் நினைக்கிறேன்," "என் கருத்துப்படி, தேவன் செய்யும் எல்லாம் சரியானதாக இருக்க அவசியமில்லை," "தேவனின் மனிதத்தன்மை என்னுடையதை விட உயர்ந்ததல்ல," "தேவனின் வார்த்தைகள் வெறுமனே நம்பமுடியாதவை," அல்லது இதுபோன்ற வேறு தவறானக் கருத்துக்களை நீ எப்போதாவது கூறியிருந்தால், உன் பாவங்களை அடிக்கடி அறிக்கையிட்டு மனந்திரும்பும்படி நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இல்லையெனில், நீ ஒருபோதும் மன்னிப்பிற்கான வாய்ப்பைப் பெற மாட்டாய், ஏனென்றால் நீ ஒரு மனிதனை அல்ல, ஆனால் தேவனையே புண்படுத்துகிறாய். நீ ஒரு மனிதனை நியாயந்தீர்க்கிறாய் என்று நீ நம்பலாம், ஆனால் தேவனுடைய ஆவியானவர் அதை அவ்வாறு கருதுவதில்லை. அவருடைய மாம்சத்திற்கு நீ இடறலுண்டாக்குவது அவரை அவமதிப்பதற்கு சமம். இது அப்படியே இருப்பதால், நீ தேவனின் மனநிலையை புண்படுத்தியிருக்கவில்லையா? தேவனுடைய ஆவியானவரால் செய்யப்படும் எல்லாம் மாம்சத்தில் அவருடைய கிரியையைப் பாதுகாப்பதற்காகவும், இந்தக் கிரியை சிறப்பாகச் செய்யப்படுவதற்காகவும் செய்யப்படுகிறது என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இதைப் புறக்கணித்தால், நீ தேவனை விசுவாசிப்பதில் ஒருபோதும் வெற்றிபெற முடியாத ஒருவன் என்று நான் சொல்கிறேன். நீ தேவனின் கோபத்தைத் தூண்டிவிட்டாய், எனவே அவர் உனக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கப் பொருத்தமான தண்டனையைப் பயன்படுத்துவார்.

தேவனின் சாராம்சத்தை அறிந்து கொள்வது அற்பமான காரியம் அல்ல. அவருடைய மனநிலையை நீ புரிந்துகொள்ள வேண்டும். இந்த வழியில், நீ படிப்படியாகவும் அறியாமலும் தேவனின் சாராம்சத்தை அறிந்து கொள்வாய். இந்த அறிவுக்குள் நீ நுழைந்ததும், உயர்ந்த மற்றும் அழகான நிலைக்குள் நீ அடியெடுத்து வைப்பதை நீ காண்பாய். முடிவில், நீ உன் அருவருப்பான ஆத்துமாவைப் பற்றி வெட்கப்படுவாய், மேலும், உன் அவமானத்திலிருந்து மறைந்து கொள்ள இடமில்லை என்று உணருவாய். அந்த நேரத்தில், தேவனின் மனநிலையைப் புண்படுத்துவது குறைவாகவும் அதற்கான உன் நடத்தையும் குறைவாகவும் இருக்கும், உன் இருதயம் தேவனின் இருதயத்திற்கு அருகில் நெருக்கமாக வரும், மேலும் உன் இருதயத்தில் அவர் மீதான அன்பு படிப்படியாக வளரும். இது மனிதகுலம் ஓர் அழகான நிலைக்குள் நுழைவதற்கான அறிகுறியாகும். ஆனால் இதுவரை, நீங்கள் இதை அடைந்திருக்கவில்லை. உங்கள் விதியின் பொருட்டு நீங்கள் அனைவரும் விரைந்து செல்லும்போது, தேவனின் சாராம்சத்தை அறிய முயல்வதில் யாருக்கு ஆர்வம் இருக்கிறது? இது தொடர வேண்டுமா, ஏனென்றால் நீங்கள் தேவனின் மனநிலையை மிகக் குறைவாகவே புரிந்துகொள்வதால் நீங்கள் அறியாமலேயே நிர்வாக கட்டளைகளுக்கு எதிராக அத்துமீறுவீர்கள். எனவே, நீங்கள் இப்போது செய்வது தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் குற்றங்களுக்கு ஓர் அஸ்திபாரத்தை அமைக்கிறது அல்லவா? நீங்கள் தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது எனது கிரியையிலிருந்து விலகியிருக்கவில்லை. நிர்வாகக் கட்டளைகளுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி அத்துமீறினால், உங்களில் யார் தண்டனையிலிருந்து தப்புவார்கள்? அப்போது எனது கிரியை முற்றிலும் வீணாகியிருக்கும் அல்லவா? எனவே, நான் இன்னும் கேட்கிறேன், உங்கள் சொந்த நடத்தையை ஆராய்வதோடு மட்டுமல்லாமல், நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். நான் உங்களிடம் முன்வைக்கும் உயரிய கோரிக்கையும் இதுதான், நீங்கள் அனைவரும் இதைக் கவனமாகக் கருத்தில் கொண்டு உங்கள் ஊக்கமான நோக்கத்தை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கிரியைகள் என் ஆத்திரத்தை மிகவும் தூண்டுகிற ஒரு நாள் வந்தால், பின்விளைவுகள் உங்களுடையதாக மட்டுமே கருத்தில் கொள்ளப்படும், உங்களுக்குப் பதிலாக தண்டனையைத் தாங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க