தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 243

அக்டோபர் 29, 2022

ஜனங்கள் செய்ய வேண்டிய பல கடமைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதைத்தான் ஜனங்கள் கடைப்பிடிக்க வேண்டும், இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் செய்ய வேண்டியதைப் பரிசுத்த ஆவியானவரே செய்யட்டும்; மனிதன் அதில் எந்தப் பங்களிப்பும் செய்ய முடியாது. மனிதனால் செய்யப்பட வேண்டியதை மனிதன் கடைப்பிடிக்க வேண்டும், அதில் பரிசுத்த ஆவியானவருக்கு எந்த தொடர்புமில்லை. இது மனிதனால் செய்யப்பட வேண்டியதே தவிர வேறொன்றுமில்லை, பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதைப் போலவே இவை கட்டளைகளாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இப்போது நியாயப்பிரமாணத்தின் காலமாக இல்லாமல் இருந்தாலும், நியாயப்பிரமாணத்தின் காலத்தில் உரைக்கப்பட்ட வார்த்தைகளைப் போலவே பல வார்த்தைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் தொடுதலை நம்பியதால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, மாறாக, அவை மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. உதாரணமாக, நடைமுறைத் தேவனின் கிரியை குறித்து நீங்கள் நியாயந்தீர்க்கக்கூடாது. தேவனால் சாட்சியமளிக்கப்படும் மனிதனை நீங்கள் எதிர்க்கக்கூடாது. தேவனுக்கு முன்பாக, நீங்கள் உங்கள் இடத்தை வைக்க வேண்டும், ஒழுக்கக்கேடாக இருக்கக்கூடாது. நீங்கள் பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும், உங்கள் வார்த்தைகளும் செயல்களும் தேவனால் சாட்சியமளிக்கப்பட்ட மனிதனுக்கான ஏற்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். தேவனின் சாட்சியத்தை நீங்கள் கனப்படுத்த வேண்டும். தேவனின் கிரியையையும் அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளையும் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. தேவனுடைய வார்த்தைகளின் தொனியையும் நோக்கங்களையும் நீங்கள் பாவனை செய்யக்கூடாது. வெளிப்படையாகச் சொன்னால், தேவனால் சாட்சியமளிக்கப்படும் மனிதனைப் பகிரங்கமாக எதிர்க்கும் எதையும் நீங்கள் செய்யக்கூடாது. இதுபோல மேலும் பல உள்ளன. இவை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டியவையாகும். ஒவ்வொரு காலத்திலும், தேவன் நியாயப்பிரமாணங்களுக்கு ஒத்துப்போகக்கூடிய மற்றும் மனிதனால் பின்பற்றப்பட வேண்டிய பல விதிகளைக் குறிப்பிடுகிறார். இதன் மூலம், அவர் மனிதனின் மனநிலையைக் கட்டுப்படுத்தி, அவனது நேர்மையைக் கண்டறிகிறார். உதாரணமாக, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக" என்ற வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வார்த்தைகள் இன்று பொருந்துவதில்லை; அந்த நேரத்தில், அவை மனிதனின் வெளிப்புற மனநிலைகள் சிலவற்றை மட்டுமே கட்டுப்படுத்தி, தேவன் மீதான மனிதனுடைய விசுவாசத்தின் நேர்மையை நிரூபிக்கப் பயன்படுத்தப்பட்டன, மேலும் தேவனை விசுவாசித்தவர்களின் அடையாளமாக அவை இருந்தன. இப்போது ராஜ்யத்தின் காலமாக இருக்கின்ற போதிலும், மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பல விதிகள் இன்னும் உள்ளன. கடந்த கால விதிகள் பொருந்தாது, இன்றும் மனிதன் செய்ய வேண்டிய, அவனுக்கு அவசியமான, பல பொருத்தமான வழக்கங்கள் உள்ளன. அவை பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் ஈடுபடுவதில்லை, அவை மனிதனாலேயே செய்யப்பட வேண்டும்.

கிருபையின் காலத்தில், நியாயப்பிரமாணத்தின் கால பல வழக்கங்கள் நீக்கப்பட்டன, ஏனெனில் இந்த நியாயப்பிரமாணங்கள், குறிப்பாக அந்த நேரத்தில் கிரியைக்குப் பயனுள்ளதாக இல்லை. அவை நீக்கப்பட்ட பின்னர், காலத்திற்கு ஏற்ற பல வழக்கங்கள் உருவாக்கப்பட்டன, அவை இன்றைய பல விதிகளாக மாறிவிட்டன. இன்றைய தேவன் வந்தபோது, இந்த விதிகள் கைவிடப்பட்டு, அதற்குமேல் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அவசியமில்லாமல் போனது, மேலும் இன்றைய கிரியைக்கு ஏற்ற பல வழக்கங்கள் உருவாக்கப்பட்டன. இன்று, இந்த வழக்கங்கள் விதிகளாக இல்லை, மாறாக அவை பலன்களை அடைவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன; அவை இன்றைக்கும், நாளைய தினத்திற்கும் பொருத்தமானவையாக இருக்கின்றன, ஒருவேளை அவை விதிகளாக மாறக்கூடும். மொத்தத்தில், நீ இன்றைய கிரியைக்குப் பலனளிப்பதைக் கடைப்பிடிக்க வேண்டும். நாளைய தினத்தில் கவனம் செலுத்த வேண்டாம்: இன்று செய்யப்படுவது இன்றைய தினத்தின் நிமித்தமாகவே செய்யப்படுகிறது. நாளை வரும்பொழுது, நீ செயல்படுத்த வேண்டிய சிறந்த வழக்கங்கள் இருக்கும், ஆனால் அதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டாம். மாறாக, தேவனை எதிர்ப்பதைத் தவிர்ப்பதற்காக இன்று கடைப்பிடிக்க வேண்டியதைக் கடைப்பிடியுங்கள். இன்று, பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதை விட மனிதனுக்கு மிக முக்கியமானது எதுவுமில்லை: உன் கண்களுக்கு முன்பாக நிற்கும் தேவனை இனிய வார்த்தைகளால் ஏமாற்றவோ, அவரிடமிருந்து எதையும் மறைக்கவோ நீ முயற்சிக்கக்கூடாது. உன் முன் உள்ள தேவனுக்கு முன்பாக இழிவான அல்லது அகங்காரமான வார்த்தையைச் சொல்லக்கூடாது. தேவனின் நம்பிக்கையைப் பெறுவதற்காகத் தேன் போன்ற இனிமையான வார்த்தைகளாலும் நியாயமான பேச்சுகளாலும், உங்கள் கண்களுக்கு முன்பாக தேவனை வஞ்சிக்கக்கூடாது. நீங்கள் தேவனுக்கு முன்பாகப் பயபக்தியின்றி செயல்படக்கூடாது. தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் அனைத்திற்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அவருடைய வார்த்தைகளைத் தடுக்கவோ, எதிர்க்கவோ, வாதிடவோ கூடாது. தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் வார்த்தைகளுக்கு உங்களுக்குத் தகுந்தமாதிரி நீங்கள் விளக்கமளிக்கக்கூடாது. துன்மார்க்கரின் வஞ்சகமான திட்டங்களுக்கு நீ இரையாகிவிடாமல் இருக்க, உன் நாவினைக் காக்க வேண்டும். தேவனால் உனக்காக அமைக்கப்பட்ட எல்லைகளை மீறுவதைத் தவிர்க்க உன் அடிச்சுவடுகளைப் பாதுகாக்க வேண்டும். நீ மீறினால், இது உன்னைத் தேவனின் நிலையில் நின்று, இறுமாப்பாகவும் பகட்டாகவும் பேசும் வார்த்தைகளை உருவாக்கக் காரணமாகிறது, இதனால் நீ தேவனால் வெறுக்கப்படுவாய். தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் வார்த்தைகளை நீ கவனக் குறைவாகப் பரப்பக்கூடாது, அவ்வாறு செய்தால் பிறர் உன்னைப் பரியாசம் பண்ணுவார்கள், பிசாசுகள் உன்னை மூடனாக்கும். இன்றைய தேவனின் அனைத்து கிரியைகளையும் நீ கடைப்பிடிக்க வேண்டும். நீ அதைப் புரிந்து கொள்ளாவிட்டாலும், நீ அது குறித்து நியாயந்தீர்க்கக்கூடாது; நீங்கள் செய்ய வேண்டியது, தேடிச்சென்று ஐக்கியம் கொள்வதாகும். எந்தவொரு மனிதனும் தேவனுடைய உண்மையான ஸ்தானத்தை மீறக்கூடாது. மனிதனின் நிலையில் இருந்து இன்றைய தேவனைச் சேவிப்பதைத் தவிர வேறு எதுவும் உன்னால் செய்ய முடியாது. மனிதனின் நிலையிலிருந்து இன்றைய தேவனுக்கு உன்னால் போதிக்க முடியாது, அவ்வாறு செய்வது தவறான வழிகாட்டுதலாகும். தேவனால் சாட்சியமளிக்கப்பட்ட மனிதனின் இடத்தில் யாரும் நிற்கக்கூடாது; உன் வார்த்தைகள், செயல்கள் மற்றும் உள்ளார்ந்த எண்ணங்களில், நீ மனிதனின் நிலையில் நிற்கிறாய். இதை மனிதனின் பொறுப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும், இதை யாரும் மாற்றக்கூடாது; அவ்வாறு முயற்சிப்பது நிர்வாக ஆணைகளை மீறுவதாகும். இது அனைவராலும் நினைவில் கொள்ளப்பட வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “புதிய காலத்திற்கான கட்டளைகள்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க