தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 66

மே 14, 2023

நான் ராஜ்யத்தில் ஆட்சி செய்கிறேன், மேலும், முழு பிரபஞ்சத்திலும் நான் ஆட்சி செய்கிறேன்; நான் ராஜ்யத்தின் ராஜாவாகவும் மற்றும் பிரபஞ்சத்தின் தலைவராகவும் இருக்கிறேன். இந்தத் தருணத்திலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லாத அனைவரையும் நான் ஒன்று சேர்த்து, புறஜாதியினரிடையே எனது கிரியையைத் தொடங்குகிறேன், மேலும் எனது நிர்வாக ஆணைகளை முழு பிரபஞ்சத்திற்கும் அறிவிக்கிறேன், இதன்மூலம் எனது கிரியையின் அடுத்தக் கட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளுவேன். என் கிரியையைப் புறஜாதியினரிடையே பரப்ப நான் சிட்சையைப் பயன்படுத்துவேன், அதாவது புறஜாதியார் அனைவருக்கும் எதிராக நான் பெலத்தைப் பயன்படுத்துவேன். இயற்கையாகவே, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே எனது கிரியை செயல்படும் அதே நேரத்தில் இந்தக் கிரியை மேற்கொள்ளப்படும். என் ஜனங்கள் பூமியில் ஆட்சி செய்து அதிகாரம் செலுத்தும்போது, அந்த நாள், பூமியிலுள்ள ஜனங்கள் அனைவரையும் வென்ற நாளாகவும் இருக்கும், மேலும், அது நான் இளைப்பாறும் நேரமாகவும் இருக்கும்—அப்போதுதான் ஜெயங்கொள்ளப்பட்ட அனைவரின் முன்பாகவும் நான் தோன்றுவேன். நான் பரிசுத்த ராஜ்யத்திற்கு முன்பாகத் தோன்றுகிறேன், அதேசமயம் என்னை அசுத்த தேசத்திலிருந்து நானே மறைக்கிறேன். எனக்கு முன்பாக ஜெயங்கொண்டு கீழ்ப்படியும் அனைவராலுமே என் முகத்தை அவர்கள் கண்களால் பார்க்க முடிகிறது, மேலும் என் சத்தத்தை அவர்கள் காதுகளால் கேட்கவும் முடிகிறது. கடைசி நாட்களில் பிறந்தவர்களின் ஆசீர்வாதம் இதுதான், இது என்னால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஆசீர்வாதம், இதனை எந்த மனுஷனாலும் மாற்ற முடியாது. இன்று, எதிர்காலக் கிரியைக்காக நான் இவ்வழியில் கிரியை செய்கிறேன். எனது எல்லாக் கிரியைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, அவை அனைத்திலும், ஓர் அழைப்பும் ஒரு பதிலும் உள்ளது: ஒருபோதும் எந்த நடவடிக்கையும் திடீரென நிறுத்தப்படுவதில்லை, வேறு எந்த நடவடிக்கையும் சுயாதீனமாக மேற்கொள்ளப்படுவதும் இல்லை. இது அப்படியாக இல்லையா? கடந்த காலத்தின் கிரியை இன்றைய கிரியைக்கு அஸ்திபாரம் இல்லையா? கடந்த காலத்தின் வார்த்தைகள் இன்றைய வார்த்தைகளுக்கு முன்னோடியாக இல்லையா? கடந்த காலத்தின் படிநிலைகள் இன்றைய படிநிலைகளின் தோற்றம் இல்லையா? நான் சுருளை முறையாகத் திறக்கும்போதுதான், அதாவது பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் சிட்சிக்கப்படுகையில், உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகையில், அதுவே எனது கிரியையின் உச்சக்கட்டமாக இருக்கிறது; எல்லா ஜனங்களும் வெளிச்சம் இல்லாத தேசத்தில் வாழ்கிறார்கள், எல்லா ஜனங்களும் தங்கள் சூழலால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிருஷ்டிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை மனுஷன் அனுபவிக்காத வாழ்க்கை இது, யுகங்கள் முழுவதும் யாரும் இந்த வகையான வாழ்க்கையை "அனுபவித்ததில்லை", எனவே இதற்கு முன் செய்திடாத கிரியையை நான் இப்போது செய்திருக்கிறேன் என்று நான் கூறுகிறேன். இதுவே விவகாரங்களின் உண்மையான நிலை, இதுவே அதன் கருப்பொருள். ஏனென்றால், எனது நாள் எல்லா மனுஷரிடமும் நெருங்கி வருகிறது, ஏனென்றால் அது தொலைவில் தோன்றாமல் மனுஷனின் கண்களுக்கு முன்பாகவே தோன்றுகிறது, இதன் விளைவாக யார் பயப்படாமல் இருக்க முடியும்? இதில் யார் மகிழ்ச்சியாக இருக்க முடியாது? அருவருப்பான நகரமான பாபிலோன் கடைசியில் முடிவுக்கு வந்துவிட்டது; மனுஷன் மீண்டும் ஒரு புதிய உலகத்தைச் சந்திக்கிறான், வானமும் பூமியும் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.

நான் எல்லா தேசங்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாகத் தோன்றும்போது, வெண்மையான மேகங்கள் வானத்தில் கடையப்பட்டு என்னைச் சூழ்ந்து கொள்கின்றன. அவ்வாறே, பூமியிலுள்ள பறவைகள் எனக்காகப் பாடிக்கொண்டே மகிழ்ச்சியுடன் நடனமாடி, பூமியின் சூழ்நிலையை எடுத்துக்காட்டுகின்றன, இனியும் "மெதுவாக கீழ்நோக்கிச் செல்லாமல்", ஆனால் அதற்குப் பதிலாக உற்சாகமான சூழ்நிலையில் ஜீவித்திருக்கும்படி, பூமியிலுள்ள எல்லாவற்றையும் உயிர்த்தெழச் செய்கின்றன. நான் மேகங்களுக்கிடையில் இருக்கும்போது, மனுஷன் என் முகத்தையும் கண்களையும் மங்கலாகவே உணர்கிறான், மேலும் இந்த நேரத்தில் அவன் கொஞ்சம் பயப்படவும் செய்கிறான். கடந்த காலங்களில், புராணங்களில் என்னைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை அவன் கேள்விப்பட்டிருக்கிறான், இதன் விளைவாக அவன் என் மீது பாதியளவு நம்பிக்கையும், மீதியளவு சந்தேகத்தையும் கொண்டிருக்கிறான். நான் எங்கே இருக்கிறேன், அல்லது என் முகம் எவ்வளவு பெரியது என்று அவனுக்குத் தெரியாது—அது கடல் போன்று அகலமானதா, அல்லது பச்சைப்பசேலாக இருக்கும் மேய்ச்சல் நிலங்களைப் போல எல்லையற்றதா? இந்த விஷயங்கள் யாருக்கும் தெரியாது. இன்று மேகங்களில் மனுஷன் என் முகத்தைப் பார்க்கும்போதுதான், என்னைப் பற்றிய புராணம் உண்மையானது என்று மனுஷன் உணர்கிறான், அதன் காரணமாக அவன் என்னை நோக்கி இன்னும் கொஞ்சம் சாதகமாக வருகிறான், மேலும், என் காரியங்கள் காரணமாகவே என்னைப் பற்றிய அவனுடைய அபிமானம் சற்று அதிகரிக்கிறது. ஆனால் மனுஷன் இன்னும் என்னை அறிந்திருக்கவில்லை, அவன் என்னில் ஒரு பகுதியை மட்டுமே மேகங்களில் காண்கிறான். அதன்பிறகு, நான் என் கைகளை நீட்டி அவற்றை மனுஷனுக்குக் காட்டுகிறேன். மனுஷன் ஆச்சரியப்படுகிறான், என் கைகளால் தாக்கப்படுவோம் என்ற ஆழ்ந்த பயத்தால் அவன் அவனது வாய்க்கு முன்பாக கைதட்டுகிறான், அதன்மூலம் அவன் அவனது போற்றுதலுடன் சிறிது பயபக்தியையும் சேர்க்கிறான். அவன் கவனம் செலுத்தாதபோது என்னால் அவன் தாக்கப்படுவான் என்ற ஆழ்ந்த பயத்தில், மனுஷன் என் ஒவ்வொரு அசைவின் மீதும் தன் கண்களைப் பதிக்கிறான்—ஆனாலும் மனுஷனால் கவனிக்கப்படுவதால் நான் கட்டுப்படுத்தப் படுவதில்லை, நான் தொடர்ந்து என் கரங்களால் கிரியை செய்கிறேன். நான் செய்யும் அனைத்துக் காரியங்களின் நிமித்தமாகத்தான், மனுஷன் என்னிடம் ஒருவித தயவைக் கொண்டிருக்கிறான், இதனால் படிப்படியாக எனக்கு முன்பாக வந்து என்னுடன் கூட்டுறவு கொள்கிறான். நான் முழுவதுமாக மனுஷனுக்கு வெளிப்படும் போது, மனுஷன் என் முகத்தைக் காண்பான், அப்போதிருந்து நான் இனிமேல் மனுஷனிடமிருந்து என்னை மறைத்துக் கொள்ளவோ அல்லது மறைந்து கொள்ளவோ மாட்டேன். பிரபஞ்சம் முழுவதும், ஜனங்கள் அனைவரது முன்பாகவும் நான் பகிரங்கமாகத் தோன்றுவேன், மாம்சமும் இரத்தமும் கொண்ட அனைவரும் என் எல்லாக் காரியங்களையும் காண்பார்கள். ஆவிக்குரியவர்கள் அனைவரும் நிச்சயமாக என் வீட்டில் நிம்மதியாக வாழ்வார்கள், என்னுடன் சேர்ந்து அற்புதமான ஆசீர்வாதங்களை நிச்சயமாக அனுபவிப்பார்கள். நான் அக்கறை கொள்ளும் அனைவரும் சிட்சையிலிருந்து தப்பிப்பார்கள், மேலும் அவர்களை ஆவியின் வேதனையிலிருந்தும் மாம்சத்தின் வியாகுலத்திலிருந்தும் தவிர்ப்பேன். நான் எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும் பகிரங்கமாகத் தோன்றி, ஆட்சி செய்து, என் அதிகாரத்தைப் பயன்படுத்துவேன், இதனால் சடலங்களின் துர்நாற்றம் இனி பிரபஞ்சத்தில் பரவாது; அதற்கு பதிலாக, என் மிருதுவான நறுமணம் உலகம் முழுவதும் பரவும், ஏனென்றால் எனது நாள் நெருங்கி வருகிறது, மனுஷன் தூக்கத்திலிருந்து விழிக்கிறான், பூமியில் உள்ள அனைத்தும் கிரமமாக இருக்கிறது, பூமியின் உயிர்பிழைக்கும் நாட்கள் இனியும் இருக்கப்போவதில்லை, ஏனென்றால் நான் வந்துவிட்டேன்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 29" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க