தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 65
மே 14, 2023
சகலமும் உயிர்த்தெழுப்பப்பட்ட நாளில், நான் மனுஷனிடையே வந்து, அவனுடன் அற்புதமான பகல்களையும் இரவுகளையும் கழிக்கிறேன். இந்தக் கட்டத்தில் மட்டுமே மனுஷன் எனது அணுகலைக் கொஞ்சம் உணர்கிறான், என்னுடன் அவனுடைய தொடர்பு அடிக்கடி நிகழும்போது, என்னிடம் என்ன இருக்கிறது என்பதையும், நான் என்னவாக இருக்கிறேன் என்பதையும் அவன் காண்கிறான்—இதன் விளைவாக, என்னைப் பற்றிய சில அறிவை அவன் பெறுகிறான். எல்லா ஜனங்களிடையேயும், நான் என் தலையை உயர்த்திப் பார்க்கிறேன், அவர்கள் அனைவரும் என்னைப் பார்க்கிறார்கள். ஆனாலும் உலகிற்குப் பேரழிவு ஏற்படும்போது, அவர்கள் உடனடியாகக் கவலைப்படுகிறார்கள், என் உருவம் அவர்களின் இருதயங்களிலிருந்து மறைகிறது; பேரழிவின் வருகையால் பீதியடையும் அவர்கள், எனது புத்திமதிகளைப் பொருட்படுத்துவதில்லை. நான் மனுஷனிடையே பல வருடங்களைக் கடந்துவிட்டேன், ஆனாலும் அவன் எப்போதும் அறியாமலேயே இருக்கிறான், என்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. இன்று இதை நான் என் சொந்த வார்த்தைகளால் அவனிடம் சொல்கிறேன், மேலும் எல்லா ஜனங்களையும் என்னிடமிருந்து எதையாவது பெறும்படி எனக்கு முன்பாக வரச் செய்கிறேன், ஆனால் அவர்கள் இன்னும் என்னிடமிருந்து தூரமாகவே இருக்கிறார்கள், அதனால் அவர்கள் என்னை அறியவில்லை. என் அடிச்சுவடுகள் பிரபஞ்சத்திலும் பூமியின் முனைகளிலும் படும்போது, மனுஷன் தன்னைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவான், எல்லா ஜனங்களும் என்னிடம் வந்து என் முன் தரைமட்டும் குனிந்து, என்னை வணங்குவார்கள். இதுவே நான் மகிமை அடையும் நாளாகவும், நான் திரும்பும் நாளாகவும் மற்றும் நான் புறப்படும் நாளாகவும் இருக்கும். இப்போது, நான் எல்லா மனுஷரிடையேயும் எனது பணியைத் தொடங்கியிருக்கிறேன், எனது நிர்வாகத் திட்டத்தின் நிறைவாகப் பிரபஞ்சம் முழுவதும் நான் முறையாக இறங்கியிருக்கிறேன். இந்தத் தருணத்திலிருந்து, எச்சரிக்கையற்ற எவரும் இரக்கமற்ற சிட்சையின் மத்தியில் மூழ்கடிக்கப்படுவார்கள், இது எந்த நேரத்திலும் நிகழக்கூடும். இது நான் இருதயமற்றவன் என்பதால் அல்ல; மாறாக, இது எனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு படிநிலை என்பதே ஆகும்; அனைத்தும் எனது திட்டத்தின் படிநிலைகள் படியே தொடர வேண்டும், இதை எந்த மனுஷனாலும் மாற்ற முடியாது. நான் எனது கிரியையை முறையாகத் தொடங்கும்போது, எல்லா ஜனங்களும் நான் நகரும்போது நகர்கிறார்கள், அதாவது பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் என்னுடன் படிப்படியாகத் தங்களை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள், பிரபஞ்சம் முழுவதும் "மகிழ்ச்சி" நிறைந்திருக்கிறது, மேலும், மனுஷன் என்னால் முன்னோக்கித் தூண்டப்படுகிறான். இதன் விளைவாக, சிவப்பான பெரிய வலுசர்ப்பம் அதுவாகவே அதனை வெறித்தனமான மற்றும் திகைப்பூட்டும் நிலைக்குத் தள்ளுகிறது, அது என் கிரியைக்கு உதவுகிறது, மேலும், அது விருப்பமில்லாமல் இருந்தாலும், அதன் சொந்த ஆசைகளைப் பின்பற்ற முடியாமல் போகிறது, அதனால் என் கட்டுப்பாட்டுக்குச் சமர்ப்பிப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை. எனது எல்லா திட்டங்களிலும், சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனக்கு பிரதிபலிப்புப் படலமாகவும், என் சத்துருவாகவும், என் ஊழியக்காரனாகவும் இருக்கிறது; எனவே, அதற்கான எனது "தேவைகளை" நான் ஒருபோதும் தளர்த்துவதில்லை. எனவே, எனது மனுஷ அவதரிப்பின் கிரியையின் இறுதிக் கட்டம் அதன் வீட்டில் நிறைவடைகிறது. இவ்வழியில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் எனக்குச் சரியாக சேவையைச் செய்ய முடிகிறது, இதன் மூலம் நான் அதை வென்று எனது திட்டத்தை முடிப்பேன். நான் கிரியை செய்யும் போது, எல்லா தேவதூதர்களும் என்னுடன் தீர்க்கமான யுத்தத்தில் இறங்குகிறார்கள், இறுதிக் கட்டத்தில் என் விருப்பங்களை நிறைவேற்றத் தீர்மானிக்கிறார்கள், இதனால் பூமியிலுள்ள ஜனங்கள் தேவதூதர்களைப் போல எனக்கு முன்பாகக் கீழ்ப்படிகிறார்கள், மேலும் அவர்களுக்கு என்னை எதிர்க்க விருப்பமுமில்லை, எனக்கு எதிராகக் கலகம் செய்யும் எதையும் செய்யவும் மறுக்கிறார்கள். இவையே பிரபஞ்சம் முழுவதும் எனது கிரியையின் இயக்கவியலாக இருக்கிறது.
மனுஷரிடையே நான் வந்ததன் நோக்கமும் அதன் முக்கியத்துவமும் அனைத்து மனுஷரையும் இரட்சிப்பதும், எல்லா மனுஷரையும் மீண்டும் என் வீட்டுக்குக் கொண்டுவருவதும், பரலோகத்தை பூமியுடன் மீண்டும் ஒன்றிணைப்பதும் மற்றும் மனுஷன் பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையிலான "சமிக்ஞைகளை" தெரிவிக்கச் செய்வதற்குமே ஆகும், ஏனெனில் இதுவே மனுஷனின் இயற்கையான செயல்பாடு ஆகும். நான் மனுக்குலத்தை உருவாக்கிய நேரத்தில், மனுக்குலத்திற்காக எல்லாவற்றையும் தயார் செய்திருந்தேன், பின்னர், என் தேவைகளுக்கு ஏற்ப நான் அதற்குக் கொடுத்த செல்வத்தை மனுக்குலம் பெற அனுமதித்தேன். இவ்வாறு, என் வழிகாட்டுதலின் கீழ்தான் எல்லா மனுஷரும் இன்றைய தினத்தை வந்தடைந்திருக்கிறார்கள் என்று நான் சொல்கிறேன். இவை அனைத்தும் எனது திட்டம். எல்லா மனுஷரிடையேயும், எண்ணற்ற ஜனங்கள் என் அன்பான பாதுகாப்பின் கீழ் இருக்கிறார்கள், எண்ணற்ற எண்ணிக்கையிலானவர்கள் என் வெறுப்பின் சிட்சையின் கீழ் வாழ்கிறார்கள். ஜனங்கள் அனைவரும் என்னிடம் ஜெபித்தாலும், அவர்களால் தற்போதைய சூழ்நிலைகளை மாற்ற முடிவதில்லை; அவர்கள் நம்பிக்கையை இழந்தவுடன், இயற்கையை அதன் பாதையில் செல்ல அனுமதிப்பதும், மற்றும் எனக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதை நிறுத்தவும் மட்டுமே அவர்களால் முடியும், ஏனென்றால் மனுஷனால் இவற்றை மட்டுமே நிறைவேற்றிட முடியும். மனுஷனின் வாழ்க்கை நிலையைப் பார்க்கையில், மனுஷன் இன்னும் உண்மையான வாழ்க்கையைக் கண்டுபிடிக்கவில்லை, உலகின் அநீதி, பாழடைந்தத் தன்மை மற்றும் பரிதாபகரமான நிலைமைகளை அவன் இன்னும் காணவில்லை—அதனால், பேரழிவின் வருகைக்காக இல்லாவிடில், அநேக ஜனங்கள் இன்னும் இயற்கை அன்னையைத் தழுவிக் கொண்டுதான் இருந்திருப்பார்கள், இன்னும் "வாழ்க்கையின்" சுவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுதான் இருந்திருப்பார்கள். இதுதான் உலகின் யதார்த்தம் அல்லவா? இது மனுஷனிடம் நான் பேசும் இரட்சிப்பின் சத்தம் அல்லவா? ஏன், மனுஷரிடையே, யாரும் என்னை உண்மையாக நேசிப்பதேயில்லை? சிட்சை மற்றும் சோதனைகளுக்கு மத்தியில் மட்டுமே ஏன் மனுஷன் என்னை நேசிக்கிறான், ஏன் என் பாதுகாப்பில் இருக்கும்போது யாரும் என்னை நேசிப்பதில்லை? நான் என் சிட்சையை மனுக்குலத்திற்கு பல முறை வழங்கியிருக்கிறேன். அவர்கள் அதைப் பார்க்கிறார்கள், ஆனால் பின்னர் அவர்கள் அதைப் புறக்கணிக்கிறார்கள், இந்த நேரத்தில் அவர்கள் அதைப் படித்துச் சிந்திப்பதில்லை, எனவேதான் மனுஷனுக்கு வரும் அனைத்தும் இரக்கமற்ற நியாயத்தீர்ப்பாக இருக்கின்றன. இது எனது கிரியை செய்யும் முறைகளில் ஒன்றாகும், ஆனால் மனுஷனை மாறச் செய்து, அவனை என்னை நேசிக்க வைப்பதற்காகவே இது இன்னும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 29" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்