Tamil Sermon Series | கடைசி நாட்களின் மனுவுருவான தேவன் ஏன் பெண்ணாக இருக்கிறார்?
நவம்பர் 18, 2022
கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன், பல சத்தியங்களை வெளிப்படுத்தி முழு உலகத்தையும் அசைத்திருக்கிறார். மெய்யான வழியை ஆராயும்போது பலரும் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் அதிகாரமுள்ளவை, வல்லமையுள்ளவை, மற்றும் அதுவே சத்தியம் என்று கண்டு நம்பிக்கை கொள்ளுகிறார்கள். ஆனால் கடைசி நாட்களின் கிறிஸ்து ஒரு பெண் என்று கேட்கும்போது, அவர்கள் அவரை ஏற்க மறுக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு ஓர் ஆண் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், மேலும் கர்த்தராகிய இயேசுவை "நேச குமாரன்" என்று பரிசுத்த ஆவியானவரும் சாட்சி அளித்திருக்கிறார். ஆகவே, கர்த்தர் திரும்பி வரும்போது நிச்சயமாக ஓர் ஆணாகத்தான் இருப்பார் என்றும், அவர் ஒரு பெண்ணாக இருப்பதற்கு முற்றிலும் சாத்தியம் இல்லை என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இந்தப் பார்வை, வேதாகமத் தீர்க்கதரிசனங்களுக்கு ஏற்ப அமைகிறதா? தேவனுடைய வார்த்தையில் இதற்கு ஓர் ஆதாரம் இருக்கிறதா? தாம் திரும்பி வரும்போது ஒரு ஆணாக அல்லது ஒரு பெண்ணாக இருப்பேன் என்று கர்த்தராகிய இயேசு கூறினாரா? நிச்சயமாக இல்லை. ஆகவே, கடைசி நாட்களின் மனுவுருவான தேவன் ஏன் ஓர் ஆணாக இல்லாமல் ஒரு பெண்ணாக இருக்கிறார்? "மெய்யான விசுவாசத்தைத் தேடுதல்" என்ற இந்த அத்தியாயம், சத்தியத்தைப் புரிந்துகொள்ளுவதற்கும், தேவனின் தோற்றம் மற்றும் கடைசி நாட்களில் கிரியையைப் புரிந்துகொள்ளுவதற்கும் உங்களை வழிநடத்தும்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்